மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் ஏழு – மண்பாண்டங்களிலுள்ள பொக்கிஷம்

2 கொரிந்தியர் 4:7-9—இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; 9துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

2 கொரிந்தியர் 4:7இல், மண் பாத்திரங்களாகிய நம்மில் உள்வசிக்கும் இந்தப் பொக்கிஷமாகிய கிறிஸ்துவே, கிறிஸ்தவ வாழ்க்கைக்கான தெய்வீக நிரப்பீட்டின் ஊற்று. இந்தப் பொக்கிஷத்தின் மேன்மையான வல்லமையால்தான் புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாக அப்போஸ்தலர்கள் தாங்கள் ஊழியஞ்செய்த கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவன் வெளியரங்கமாக்கப்படுமாறு சிலுவையிலறையப்பட்ட ஜீவனை வாழ்வதற்குத் திறனுள்ளவர்களாயிருந்தனர். எனவே அவர்கள் சுவிசேஷத்தின் பிரகாசித்தலுக்காக…சத்தியத்தை வெளியரங்கமாக்கினர். (2 கொரி. 4:7, மீட்டுத்திருப்புதல் படிவம் அடிக்குறிப்பு 2)

மண்பாத்திரங்களில்
வெளியரங்கமாக்கப்படும் பொக்கிஷம்

ஒரு சீர்மையான கிறிஸ்தவன் என்றால் யார் என்பது பற்றிய கருத்து பலருக்கு இருக்கிறது. இந்தச் சீர்மை தேவனால் அல்ல நம்மால் உண்டாக்கப்பட்டது என்பதை தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வகையான சீர்மையான கிறிஸ்தவன் இல்லை, நாம் அவ்வாறாக இருப்பதை தேவன் விரும்பவும் இல்லை. இங்கு நாம் ஒரு மண்பாத்திரத்தைச் சந்திக்கிறோம், ஆனால் இந்த மண்பாத்திரத்திற்குள் ஒரு பொக்கிஷம் வைக்கப்பட்டிருப்பதே அதன் விசேஷ குணவியல்பு. பொக்கிஷம் மேலெழுந்து, மண்பாத்திரத்தை நிழலிடுகிறது, பாத்திரத்திற்குள்ளிருந்து தன்னையே வெளியரங்கமாக்குகிறது. இதுவே…ஒரு கிறிஸ்தவனாக இருப்பதின் அர்த்தம். பவுலில், ஒரு பயந்த, ஆயினும் பலமாயிருந்த ஒரு மனிதனை நாம் காண்கிறோம். அவன் தன் இதயத்தில் கலங்கினான், எனினும், நம்பிக்கையுள்ளவனாயிருந்தான். அவன் எதிரிகளால் சூழப்பட்டிருந்தும் கைப்பற்றப்படவில்லை. அவன் உபத்திரவத்தை எதிர்கொண்டாலும், தான் நிராகரிக்கப்பட்டதாகவோ ஒதுக்கப்பட்டதாகவோ நினைக்கவில்லை. அவன் அடித்துவீழ்த்தப்பட்டதுபோல் தோன்றியது, ஆனால் அவன் மரிக்கவில்லை (2 கொரி. 4:7-10). நாம் அவனது பலவீனங்களைப் பார்க்கிறோம், ஆனால் அவன் பலவீனமாக இருந்த போது, அவன் வல்லமையாயிருந்தான் (12:10). அவன், தன் சரீரத்தில் இயேசுவின் மரணத்துக்குட்படுத்துதலைச் சுமப்பதை நாம் பார்க்கிறோம், ஆனால் இயேசுவின் ஜீவன் அவனது சரீரத்தில் வெளியரங்கமாக்கப்பட்டது (4:10). அவன் பழித்துரைக்கப்பட்டத்தை நாம் பார்க்கிறோம், ஆனால் அவனுக்கு ஒரு நற்பெயர் இருந்தது. அவன் மற்றவர்களைத் திசைதிருப்பியதுபோல் தோன்றியது ஆனால், அவன் நேர்மையாக இருந்தான்…அவன் சாகும் தருவாயில் இருந்ததுபோல் தோன்றியது, ஆனால் அவன் வாழ்ந்தான். அவன் தண்டிக்கப்பட்டதுபோல் தோன்றியது, ஆனால் மரணத்திற்கேதுவாகத் தண்டிக்கப்படவில்லை. அவன் கவலையாக இருந்ததுபோல் தோன்றியது, ஆனால் அவன் எப்போதும் களிகூர்ந்தான். அவன் ஏழ்மையாக இருந்ததுபோல் தோன்றியது, ஆனால் அவன் பலரை ஐசுவரியமாக்கினான். அவனிடம் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றியது, ஆனால் அவனிடம் எல்லாம் இருந்தது (6:8-10). இதுவே ஒரு நிஜமான கிறிஸ்தவன்.

தேவனின் வல்லமை மனிதனின்
பலவீனத்தில் வெளியரங்கமாகுதல்

தன் மாம்சத்தில் ஒரு முள் இருந்தது என்று அப்போஸ்தலன் கூறினான் (12:7). இந்த முள் என்ன என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த முள் பவுலைப் பலவீனமாக்கியது என்று எனக்குத் தெரியும்…பவுல் அந்த முள்ளைக் குறித்து மூன்றுமுறை தேவனிடம் ஜெபித்தான், ஆனால் கர்த்தர் எதையும் செய்யச் சித்தமாக இல்லை. மாறாக, “என் கிருபை உனக்கு போதும்” [வ. 9] என்று அவர் கூறினார். முள்ளின் காரணமாக, கர்த்தர் தம் கிருபையை அதிகரித்தார்…பலவீனத்தின் காரணமாக கர்த்தர் தம் வல்லமையை அதிகரித்தார்.

நான் படுக்கையில் படுத்திருக்கையில், இவை யாவும் எதைப் பற்றியது என்று எனக்கு அதிகத் தெளிவாகக் காண்பிக்கும்படி நான் கர்த்தரிடம் கேட்டேன். உள்ளானவிதத்தில், ஓர் ஆற்றில் ஒரு படகு செல்லும் காட்சி தோன்றியது. அந்தப் படகு மிதந்து செல்ல பத்து அடி தண்ணீர் தேவை. எனினும், அந்த ஆற்றில் அந்த ஆற்றின் அடியிலிருந்து ஐந்து அடிக்குப் பாறைகள் இருந்தன. கர்த்தர் விரும்பினால், அந்தப் பெரும்பாறையை அகற்றி அந்தப் படகு கடந்துசெல்லும்படி செய்யமுடியும், ஆனால், உள்ளாக ஒரு கேள்வி எழுந்தது: “நான் பாறையை அகற்றுவதா, அல்லது நீர் மட்டத்தை ஐந்து அடி அதிகரிப்பதா, எது சிறந்தது?” தேவன் என்னிடம், அந்தப் பெரும்பாறையை அகற்றுவதா அல்லது நீர் மட்டத்தை ஐந்து அடி அதிகரிப்பதா, எது சிறந்தது என்று கேட்டார். நீர் மட்டத்தை ஐந்து அடி அதிகரிப்பது சிறந்தது என்று நான் கர்த்தரிடம் கூறினேன்.

முரண்பாடான ஆவிக்குரிய வாழ்க்கை

[ஒரு முறை சில சகோதரர்கள் என்னிடம்] தாங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப அங்கத்தினருக்காக, ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக, அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஜெபித்துவருவதாக அவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். அந்தக் காரியம் எப்படிப் போய்க்கொண்டிருந்தது என்று நான் அவர்களிடம் கேட்டேன். தேவன் தங்கள் நோய்களைச் சுகமாக்குவார் அல்லது தங்கள் மகன்களையும் வாழ்க்கைத் துணையையும் இரட்சிப்பார் என்று தாங்கள் விசுவாசித்ததாக அவர்களில் ஒவ்வொருவரும் என்னிடம் கூறினர். அவர்கள் எல்லாரும் அதிக நம்பிக்கையாக இருந்தனர், அதாவது, அவர்களுக்குத் துளியளவும் சந்தேகமில்லை என்ற அளவுக்கு அவர்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் நாம் காத்திருந்து, பார்க்க வேண்டும். சுகவீனமானவர்கள் இன்னும் சுகவீனமாகவே இருந்தனர், மகன்களும் வாழ்க்கைத் துணைகளும் இன்னும் மனந்திரும்பாதிருந்தனர், கடினமான காரியங்கள் இன்னும் அப்படியே இருந்தன. அவர்களின் விசுவாசம் மண்பாத்திரங்களுக்குரியதல்ல, தூதர்களுக்குரியது. அவர்களின் விசுவாசம் மிகவும் கோட்பாட்டளவானது; அது அளவுக்கதிகமாக நல்லதாயிருக்கிறது. உலகத்தில் எவருக்கும் இப்பேர்ப்பட்ட மாபெரும் விசுவாசம் இல்லை.

பொல்லாத மனிதர்களின் கரங்களிலிருந்து பேதுரு விடுவிக்கப்படுவதற்காக ஆதி சபை ஜெபித்ததைக் குறித்து நான் வாசிக்க விரும்புகிறேன். தேவன் அவர்களின் ஜெபத்தைக் கேட்டார். பேதுரு வீட்டிற்குத் திரும்பிவந்து, கதவைத் தட்டியபோதோ, அவர்கள் அது அவனது தூதனாக இருக்க வேண்டும் என்றனர் (அப். 12:12-15). இதுவே விசுவாசம், நிஜமான விசுவாசம் என்பதை நாம் பார்க்கிறோமா? தேவன் ஜெபங்களைக் கேட்டார், ஆனால் அதில் மனித பலவீனம் இருந்தது. அவர்கள் தங்கள் பலவீனங்களை மறைக்க எதையேனும் செய்கிறதை நாம் பார்க்கவில்லை. இன்று சிலருக்கு, மரியாள், மாற்கு ஆகியோரின் வீட்டில் இருந்தவர்களைவிட பெரிய விசுவாசம் இருக்கிறது. தேவன் ஒரு தூதனை அனுப்பி, சிறைக் கதவுகளிலுள்ள பூட்டை உடைப்பார் என்று இவர்கள் மிக உறுதியாயிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள், கர்த்தரின் நாளில் நாம் கொடுத்த உதாரணங்களில் உள்ளவர்களைப் போல் இருக்கக் கூடும். காற்று வீசினால், பேதுருதான் தட்டுகிறான் என்று இவர்கள் கூறுகின்றனர். மழை வீட்டின்மேல் பொழிந்தால், பேதுருதான் தட்டுகிறான் என்று இவர்கள் கூறுகின்றனர். இந்த மக்களுக்கு இப்பேர்ப்பட்ட மாபெரும் விசுவாசம் இருக்கிறது, ஆனால் இவர்கள் விசுவாசிப்பதோ நிகழ்வதில்லை. நான் வெளிப்படையாகக் கூறட்டும்: இவ்வகையான கிறிஸ்தவன் தானாக காரியங்களைச் செய்து, ஒரு கூட்ட ஏமாளிகளை ஏமாற்ற மட்டுமே முடியும். கிறிஸ்தவத்தில் ஒரு மண்பாத்திரம் இருக்கிறது என்று தேவனை அறிந்தவர்கள் கூறுவர். கிறிஸ்தவத்தில் பொக்கிஷமானது மண்பாத்திரங்களில் இருக்கிறது. மனித சந்தேகம் நிஜமாக ஓர் அருவருப்பாகும், அது பாவமும்கூட. மண்பாத்திரத்திலிருந்து மட்டும் வருகிற எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அதிமுக்கியமான காரியம் மண்பாத்திரமல்ல, மாறாக அதற்குள் ஒரு பொக்கிஷம் வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையாகும். நாம் மண்பாத்திரத்தை மேம்படுத்தவோ சரிசெய்யவோ தேவையில்லை. பொக்கிஷம் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
பல கிறிஸ்தவர்களுக்கு, எல்லாம் மிக செயற்கையாயிருக்கிற வாழ்க்கையும், நடையும் இருக்கின்றன; அவர்கள் பொக்கிஷத்தை வெளிக்காட்டுவதில்லை. இவர்களிடம் மனிதப் பிரயாசம், செயலாக்கம், புறம்பான நடத்தை ஆகியவை மட்டுமே இருக்கின்றன. எனினும் ஓர் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது, ஒருவன் தன் மாபெரும் நிச்சயத்தின் கணநேரங்களில்கூட சந்தேகிக்கக் கூடும் என்கிற ஒன்றாகும். இது, ஒருவன் தன் மாபெரும் பலத்தின் கணநேரங்களில்கூட தான் உள்ளாக பலவீனமாக இருப்பதை அறிவதும், தேவனுக்குமுன் நிஜமான தைரியத்தின் மத்தியில் உள்ளாக அச்சம்நிறைந்திருப்பதும், எழுச்சியூட்டும் சந்தோஷமான கணநேரங்களில் உள்ளாகச் சந்தேகிக்கிறதுமான ஒன்றாகும். இவ்விதமான முரண்பாடு, பொக்கிஷம் மண்பாத்திரத்தில் இருக்கிறது என்று நிரூபிக்கிறது.

மனித பலவீனம் தேவனின் வல்லமையை மட்டுப்படுத்தாதிருத்தல்

கடைசியாக, எந்த மனிதப் பலவீனமும் தேவனின் வல்லமையை மட்டுப்படுத்த முடியாது என்பதால் நான் விசேஷமாக தேவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூற விரும்புகிறேன்…மனுஷீகமான யாவும் தேவனின் பொக்கிஷத்தை உள்ளடக்கிக் கொள்வதற்கான மண்பாத்திரம் மட்டுமே என்பதை நாம் பார்க்கிற கட்டத்தை நாம் எட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்…மனுஷீகமான எதுவும் தேவனின் பொக்கிஷத்தைப் புதைக்க முடியாது. நாம் ஏமாற்றத்தைச் சந்திக்கும்போது, நாம் ஏமாற்றமடைய தேவையில்லை. நம்மால் முடியாவிட்டாலும், நேர்மறையான ஒன்று உள்ளே வர நாம் அனுமதிக்க வேண்டும், அது வரும்போது, அது சிறப்பாகவும், அதிகப் பிரகாசமாகவும், அதிக மகிமையாகவும் பிரகாசிக்கிறது. பல வேளைகளில், ஜெபித்த பிறகு நமக்குச் சந்தேகங்கள் எழுகின்றன, எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் நினைக்கிறோம். சந்தேகம் வட்டமிட்டுக்கொண்டே இருந்தாலும்கூட, விசுவாசம் வரும்போது, அது பொக்கிஷத்தைப் பெரிதாக்கிக் காண்பிக்கிறது. விசுவாசம் பொக்கிஷத்தை அதிக மகிமையாக்குகிறது. நான் நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு சிறந்த கருத்தைப் பேசவில்லை; நான் என்ன கூறுகின்றேன் என்று எனக்குத் தெரியும். தேவனின் பொக்கிஷம் மண்பாத்திரங்களில் வெளிக்காட்டப்பட முடியும். இது ஓர் ஆவிக்குரிய முரண்பாடு; இது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் விலையேறப்பெற்றது. இந்த ஆவிக்குரிய முரண்பாடு என்ற சூழலில்தான் நாம் வாழ்கிறோம், நம் தேவனை அறிய கற்கிறோம்.

நாம் இந்த வழியில் பயணம்செய்கையில், நாம் நம்முள் நிலவுகிற ஆவிக்குரிய முரண்பாட்டின் அளவற்றத்தன்மையைக் கண்டுபிடிப்போம். காலம் செல்லும்போது, இந்தப் பிளவு, அதாவது, இந்தப் பிரிக்கின்ற பிளவு, எப்போதும் விரிவடைந்துகொண்டே செல்வதை நாம் காண்கிறோம்; நம்முள் இருக்கிற முரண்பாடு நாளுக்கு நாள் கண்கூடாகத் தெளிவாகிறது. அதே நேரத்தில், இந்தப் பொக்கிஷம் எப்போதும் அதிகத் தெளிவாக வெளிக்காட்டப்படுகிறது. மண்பாத்திரம் ஒரு மண்பாத்திரமாகவே இருக்கிறது. இந்தச் சித்திரம் என்னே அற்புதமானது!…எவ்விதமான மண்பாத்திரம் நமக்கு இருக்கிறது என்பது அற்ப காரியம்; பொக்கிஷம் எப்போதும் உள்ளே செல்ல முடியும். மண்பாத்திரம் ஒரு மண்பாத்திரமாகவே இருக்கிறது, ஆனால் இப்போது அது நிரப்பப்பட்ட ஒரு பாத்திரமாகும். பலவீனமான மக்கள் எல்லாரும், தாங்கள் மிகவும் பூமிக்குரியவர்கள், தங்கள் பாத்திரங்கள் முழுவதும் களிமண்ணால் நிறைந்திருக்கின்றன, தாங்கள் நம்பிக்கையற்றவர்கள் என்று நினைக்கின்றனர். ஏமாற்றமடையவோ தொந்தரவுசெய்யப்படவோ நமக்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். ஆவிக்குரிய, பலமான, வல்லமையுள்ள, மற்றும் கர்த்தரிடமிருந்து வருகிறதெல்லாம் நம்மில் வெளியரங்கமாக்கப்பட முடியும், அது பிரகாசமாக ஜொலிக்கும், மண்பாத்திரத்தின் மூலம் பெரிதாக்கிக்காட்டப்படும். இதுவே காரியமாக இருப்பதால், நாம் பொக்கிஷத்தின் முக்கியத்துவத்தைப் பார்க்க முடியும்.

சகோதர சகோதரிகளே, எல்லாம் பொக்கிஷத்தைச் சார்ந்திருக்கிறது. நான் மீண்டும் கூற வேண்டும், எல்லாச் சூழ்நிலைகளும் இந்தக் காரியத்தைச் சுற்றிச் சுழல்கின்றன. ஒவ்வொரு விளைவும் நேர்மறையானது. யாருடைய கண்கள் எதிர்மறையான காரியங்களின் மேல் இருக்கிறதோ அவர்கள் முட்டாள்கள். கர்த்தர் தம்மையே ஒவ்வொருவர் மூலமாகவும் வெளிக்காட்ட முடியும். நம்மிடம் பொக்கிஷம் இருக்கும்போது, பலர் அதை அறிவார்கள். (CWWN, vol. 56, “The Treasure in Earthen Vessels,” pp. 449-457)
References: 2 Cor. 4:7, footnote 2, Recovery Version; CWWN, vol. 56, “The Treasure in Earthen Vessels,” pp. 449-457

நான் ஒரு மண் பாத்திரம்
கிறிஸ்துவை அனுபவித்தல்—
அவரை நம்முள் கொண்டிருத்தல்

548
1 நான் ஒரு மண் பாத்திரம்,
கிறிஸ்து என்னுள் பொக்கிஷம்;
அவருக்கு நான் கொள்கலம்,
அவரே நான் கொண்ட பொருள்.

2 கிறிஸ்துவைக் கொள்ள ஏற்றதாய்,
அவர் சாயலில் என்னை ஆக்கினார்;
அவர் பரந்து நிரம்பவே
ஏற்ற பாண்டமாய் வனைந்தார்.

3 என் ஆவியில் நிலைத்திருக்கிறார்,
பெலத்தால் அவர் ஆதரிக்கிறார்;
என்னுடன் ஒரே ஆவியாய்,
என் நிஜமாய் இருக்கின்றார்.

4 அனுதினம் என்னில் அசைகிறார்,
என்னில் எப்போதும் கலக்கிறார்,
என் நடைகளைச் சீராக்கி,
எல்லாப் பகுதியும் நிரப்புகிறார்.

5 உள்ளிருந்தவர் வெளிப்பட,
அவரையே பிறர் காணலாம்,
நான் மறைந்தென் மூலமாய்
அவரே வெளிப்பட வேண்டும்.

6 உடைத்து ரூபம் மாற்றுவார்,
வனைந்து மண்ணை ஆக்குவார்,
பொக்கிஷமாம் கிறிஸ்துவை,
ஒத்தசாயலாக்குவார்.

 

Jump to section