மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பதின்மூன்று – கர்த்தராகிய இயேசுவைப் பாராட்டுதல்

2 கொரி. 5:14-15—கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்று; 15பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

நம்மில் கிரியைசெய்கிற விசுவாசம்

நாம் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ…தேவனுடைய குமாரனின் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறோம் என்று கலாத்தியர் 2:20இல் பவுல் கூறுகிறான். நாம் பெளதிக மற்றும் ஆத்தும ஜீவனை பார்வை, உணர்ச்சி ஆகியன மூலம் வாழ்கிறோம், ஆனால், தெய்வீக ஜீவனை இவ்வாறு வாழ்வதில்லை. நம் ஆவியிலுள்ள ஆவிக்குரிய ஜீவனான தெய்வீக ஜீவன், ஜீவன்தரும் ஆவியின் பிரசன்னத்தினால் தூண்டப்படும் விசுவாசத்தைப் பயிற்சிசெய்வதன் மூலம் வாழப்படுகிறது.

விசுவாசத்தைப் பற்றி பேசுகையில், பவுல் “தேவனுடைய குமாரனின் விசுவாசத்தை” குறிப்பிடுகிறான். இங்கு குமாரனின் என்ற சிறிய வார்த்தையின் பொருள் என்ன? இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் விசுவாசம், தேவனுடைய குமாரன் மட்டுமே கொண்டிருக்கிற விசுவாசமாகிய, தேவ குமாரனின் விசுவாசமாகும் என்பதை இந்த வார்த்தை மறைவாகக் காட்டுகிறது. எனினும், இந்த வசனத்தை வியாக்கியானம் செய்வதில், நாமும் மற்ற பலரும் உண்மையில் இந்தச் சொற்றொடரின் பொருள் தேவனுடைய குமாரனிலுள்ள விசுவாசம் என்று கூறினோம். இருப்பினும், கிரேக்க மொழி இங்கு இல் என்ற வேற்றுமை உருபைப் பயன்படுத்தவில்லை. இந்தக் காரியத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் நான் அதிகமான நேரம் செலவழித்திருக்கிறேன். பல தலைசிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்த பிறகு, இங்கே பவுல் குமாரனின் விசுவாசத்தைப் பற்றி பேசாமல் குமாரனிலுள்ள விசுவாசத்தைக் குறித்து பேசுகிறான் என்று நான் முழுவதும் நம்பினேன். எனினும், ஏன் இந்த வசனத்திலும், 2:16 மற்றும் 3:22லும் பவுல் இல் என்ற வேற்றுமை உருபைப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் இன்னும் விவரிக்க வேண்டும். வெறுமனே கருப்பு, வெள்ளை எழுத்துக்களிலுள்ள வேதவாக்கியத்தை ஆய்வுசெய்வதன் மூலம் இதைக் குறித்த நேர்த்தியான புரிந்துகொள்ளுதலை நாம் அடைய முடியாது. நாம் நம் அனுபவத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்தப்படுதலும், நமக்குள் உட்செலுத்தப்படுதலும்

பவுல், கலாத்தியர் புத்தகத்தைச் சத்தியத்தின்படியும், தன் அனுபவத்தின் படியும் எழுதினான். நம் கிறிஸ்தவ அனுபவத்தின்படி, நம்மில் கிரியைசெய்கிற உண்மையான ஜீவிக்கிற விசுவாசமானது கிறிஸ்துவில் மட்டுமல்ல கிறிஸ்துவினுடையதும் ஆகும். எனவே, இங்கு உண்மையில் பவுல் கூறுவதன் அர்த்தம், “கிறிஸ்துவின் மற்றும் கிறிஸ்துவிலுள்ள விசுவாசம்.” இங்குள்ள விசுவாசம் கிறிஸ்து வின் விசுவாசம், மற்றும் கிறிஸ்துவில் விசுவாசிக்கும் விசுவாசம் என்பதே பவுலின் கருத்து.

விசுவாசம் என்பது, கர்த்தர் என்னவாக இருக்கிறாரோ, நமக்காக அவர் என்ன செய்திருக்கிறாரோ அதைப் பற்றிய நம் பாராட்டுதலாகும் என்று நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். மெய்யான விசுவாசம் என்பது, கிறிஸ்துவில் விசுவாசிப்பதற்கான நம் திறனாகும்படி நமக்குள் உட்செலுத்தப்படும் கிறிஸ்துவே என்பதையும் நாம் சுட்டிக்காட்டியிருக்கிறோம். கர்த்தர் நமக்குள் உட்செலுத்தப்பட்ட பிறகு, அவர் புறத்தூண்டுதலின்றி நம் விசுவாசமாக ஆகிறார். ஒரு புறம், இந்த விசுவாசம் கிறிஸ்து வின் விசுவாசம்; மறுபுறம், இது கிறிஸ்துவில் விசுவாசிக்கும் விசுவாசம் . எனினும், வெறுமனே இந்த விசுவாசம் கிறிஸ்துவே என்று கூறுவது அதை மிகவும் சாதாரணமாக்குவதாகும். இது நமக்கு வெளிப்படுத்தப்பட்டு, நமக்குள் ஊட்செலுத்தப்பட்ட கிறிஸ்துவே என்று நாம் கூற வேண்டும். விசுவாசம், நமக்குள் உட்செலுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவுடன் மட்டுமல்லாமல், தம்மையே நமக்குள் உட்செலுத்திக்கொண்டிருக்கும் கிறிஸ்துவோடும் தொடர்புடையது. கிறிஸ்து நம்மில் கிரியைசெய்கையில், அவர் நம் விசுவாசமாகிறார். இந்த விசுவாசம் அவருடையது, இது அவரிலும் இருக்கிறது.

விசுவாசம் கிறிஸ்துவைப்
பாராட்டுவதிலிருந்து வருதல்

கலாத்தியர் 2:20இல் உள்ள விசுவாசம், கிறிஸ்துவின் விசுவாசமாகவும், கிறிஸ்துவிலுள்ள விசுவாசமாகவும் உள்ளது என்பதற்கான நிரூபணம், அந்த வசனத்தின் முடிவில் பவுலின் வார்த்தைகளில் காணப்படுகிறது. “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தவர்” என்று தேவனின் குமாரனைக் குறிப்பிட்டு, அவன் இந்த வசனத்தை நிறைவுசெய்கிறான். இந்த வார்த்தைகளை எழுதுவதில், பவுல் கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய பாராட்டுதலால் நிறைந்திருந்தான். இல்லையெனில், இப்படிப்பட்ட ஒரு நீண்ட வசனத்தின் முடிவில், கிறிஸ்து தன்னை நேசிப்பதையும், தனக்காக தம்மையே ஒப்புக்கொடுத்திருப்பதையும் பற்றி அவன் பேசுவதற்கு அவசியமிருந்திருக்காது. தேவனுடைய குமாரனின் விசுவாசம் என்ற வார்த்தையுடன் அவன் முடித்திருக்கலாம். ஆனால் இப்போது, அவன் வாழ்கிற விதத்தைக் குறித்துப் பேசுகையில், அவனது இருதயம் நன்றியுணர்வினாலும், பாராட்டுதலாலும் நிறைந்திருந்தது. விசுவாசம், இப்படி கர்த்தராகிய இயேசுவைப் பாராட்டுவதிலிருந்து வருகிறது. கிறிஸ்துவில் விசுவாசிக்கும் விசுவாசமும், கிறிஸ்துவின் விசுவாசமும் கிறிஸ்துவைப் பாராட்டுவதிலிருந்து வருகின்றன.

விசுவாசமானது நாமும் கிறிஸ்துவும் உண்மையிலேயே ஒன்றாக இருக்கக்கூடிய ஒரு ஜீவாதார சேர்க்கையை உற்பத்திசெய்தல்

“கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்” என்று 2 கொரிந்தியர் 5:14 மற்றும் 15இல் பவுல் கூறுகிறான். இந்த வசனங்களை நாம் பரிசீலிக்கையில், பவுலின் விசுவாசம், கிறிஸ்துவின் நெருக்கும் அன்பிற்கான பாராட்டுதலிலிருந்து வந்தது என்பதை நாம் காண முடியும். கிறிஸ்துவின் நெருக்கும் அன்பை நாம் எவ்வளவாய்ப் பாராட்டுகிறோமோ, அவ்வளவாய் விசுவாசம் நமக்கு உண்டாகும். இந்த விசுவாசம் நம் சொந்தத் திறமையால் அல்லது செயல்பாட்டால் உற்பத்திசெய்யப்படுவதில்லை. மாறாக, இது நாம் பாராட்டுகிற சாட்சாத்து கிறிஸ்து நம்மில் அடித்துருவாக்கப்படுவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. கர்த்தராகிய இயேசுவை நாம் பாராட்டுவதில், “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மைப் பொக்கிஷமாகக் கருதுகிறேன்” என்று நாம் கூற வேண்டும். நாம் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கர்த்தரிடம் பேசும்போது, அவர் நமக்குள் செயல்பட்டு, நம் விசுவாசமாக ஆகிறார். இந்த விசுவாசமானது நாமும் கிறிஸ்துவும் உண்மையிலேயே ஒன்றாக இருக்கிற ஒரு ஜீவாதார சேர்க்கையைக் கொண்டுவருகிறது.

சீனாவில் பாக்ஸர் கலகத்தின்போது நடந்த
ஓர் உண்மைக் கதை

நம்மில் கிரியைசெய்கிற விசுவாசம், நாம் கர்த்தராகிய இயேசுவை நாம் பாராட்டுவதிலிருந்து வருகிறது என்ற குறிப்பை உறுதிப்படுத்துகிற ஓர் உண்மைக் கதையை நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். சீனாவில் பாக்ஸர் கலகத்தின் போது, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இரத்தசாட்சியாகக் கொல்லப்பட்டனர். சீனாவின் பழைய தலைநகரான பெகிங்கில் ஒரு நாள், பாக்ஸர்கள் தெருவில் அணிவகுத்து வந்தனர். ஒரு வண்டியின் பின் பக்கத்தில் ஓர் இளம் கிறிஸ்தவப் பெண் உட்கார்ந்திருந்தாள், அவள் கொல்லப்படுவதற்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருந்தாள். தங்கள் கைகளில் வாள் ஏந்திய கொலைகாரர்கள் அவளைச் சூழ்ந்திருந்தனர். அந்த பாக்ஸர்களின் கூச்சல் நிறைந்த அந்தச் சூழ்நிலை அச்சமூட்டுகிறதாக இருந்தது. இருப்பினும், அவள் கர்த்தருக்குத் துதிகளைப் பாடிக் கொண்டிருந்தாள், அவளது முகம் ஜொலித்துக்கொண்டிருந்தது. கலவரம் காரணமாக கடைகள் மூடப்பட்டன. எனினும், ஓர் இளைஞன் இந்தக் காட்சியைக் கடைக்கு முன் இருக்கும் கதவின் விரிசல்வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளம் பெண்ணின் ஜொலிக்கிற முகம், மகிழ்ச்சி, மற்றும் துதிப் பாடல்களால் ஆழமாகக் கவரப்பட்டவனாய், அவன் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய சத்தியத்தைக் கண்டறிய வேண்டும் என்று அந்தக் கணத்தில் தீர்மானித்தான். பின்னர், அவன் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு, கிறிஸ்துவில் விசுவாசிப்பவனான். இறுதியில், அவன் தனது தொழிலை விட்டுவிட்டு, ஒரு பிரசங்கியாக ஆனான். ஒரு நாள், அவன் என் சொந்த ஊருக்கு வந்தபோது, தான் எவ்வாறு ஒரு கிறிஸ்தவனானான் என்ற இந்தக் கதையை என்னிடம் கூறினான்.
இங்குள்ள குறிப்பு என்னவெனில், விசுவாசம் இந்த இளம் பெண்ணுக்குள் வேலைசெய்து கொண்டிருந்ததால் இப்படிப்பட்ட அச்சமூட்டும் சூழ்நிலையின் மத்தியிலும் அவள் துதிகளால் நிரம்பியிருக்க முடிந்தது என்பதே. அவள் கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய பாராட்டுதலால் நிறைந்திருந்தாள். அவள் அவரை இவ்வளவாய் நேசித்ததால், புறத்தூண்டுதலின்றி அவர் அவளுக்குள் விசுவாசமாக ஆனார். இந்த விசுவாசம் ஒரு ஜீவாதார சேர்க்கையை உற்பத்திசெய்தது, அதில் அவள் கர்த்தருடன் இணைந்திருந்தாள். இந்த ஜீவாதார சேர்க்கை, தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியின் அடிப்படையான, முக்கியமான அம்சமாகும். (Life-study of Galatians, pp. 90-92)

Reference: Life-study of Galatians, msg. 10

கர்த்தா, உம்மை நினைக்கையில்
கர்த்தரைத் துதித்தல்—அவரது அழகு

171
1 கர்த்தா, உம்மை நினைக்கையில்
இதயம் இனிக்கும்,
உம் ப்ரிய பிரசன்னத்துள்ளே
வர ஏங்குகிறேன்!

திராட்சத்தோட்டத்தில் மருதாணி
போல நீர் பூத்திருக்கின்றீர்;
ஒப்பில்லா உம் அழகை—எம்,
இதயம் நேசிக்கும்!

2 உம் கிருபையை முற்றிலும்
போற்ற இசை போதா,
உம் அன்பை, முற்றிலும் கொள்ள
இதயமும் போதா.

3 ஆனால் எம் இன்பம்—உம் அன்போ
கிருபையோ அல்ல;
மாறாக எம் திருப்தி என்றும்
உம் ப்ரிய நபரே.

4 அழகிலும் அழகு நீர்,
தேனிலும் இனியோர்;
வான், பூவில் நீரன்றி யாரும்
எம் வாஞ்சை ஈடேற்றார்

 

Jump to section