மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் ஐந்து – தேவன் சுற்றுச்சூழல்களை விசுவாசிகளுக்கு நன்மைக்கேதுவாக வேலைசெய்ய வைத்தல்

ரோ. 8:28—அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

தேவன், தம்மை நேசிக்கிறவர்களுக்குச் சகல காரியங்களையும் நன்மைக்கேதுவாக
சேர்ந்து வேலைசெய்ய வைத்தல்

ரோமர் 8:28 கூறுகிறது: “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” பரிசுத்த ஆவி நமக்காகப் பரிந்துபேசி, நமக்குள் தேம்புகிறார், பிதாவாகிய தேவன் சகல காரியங்களையும் நன்மைக்காக சேர்ந்து வேலைசெய்ய வைத்து இந்தப் பரிந்துபேசுதலுக்குப் பதிலளிக்கிறார். “சகல காரியங்கள்” என்று மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு கிரேக்கத்தில், “சகல விஷயங்கள், சகல நபர்கள், சகல காரியங்கள், எல்லாவற்றிலும் எல்லாம்” என்று பொருள். பிதாவாகிய தேவன் இறையாண்மையுள்ளவர், அவர் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறார். உங்களுக்கு எத்தனை முடிகள் தேவை என்றும், (மத். 10:30), உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். உங்கள் பிள்ளைகளைப் பற்றி புகார்செய்யாதீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தேவையானதைவிட அதிகமாகவோ குறைவாகவோ தேவன் தரமாட்டார். அவர் இறையாண்மையுள்ளவர். அவருக்குத் தெரியும். உங்களுக்குக் கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் தேவையா அல்லது குறும்புக்கார பிள்ளைகள் தேவையா என்பது அவருக்குத் தெரியும். உங்களுக்கு மகன்கள் தேவையா அல்லது மகள்கள் தேவையா என்பதும் அவருக்குத் தெரியும். மீண்டும் மீண்டும் கூறுகிறேன், அவருக்குத் தெரியும். அவர் சகல காரியங்களையும், சகல விஷயங்களையும், சகல மனிதரையும் உங்கள் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய வைக்கிறார். தேவன் உங்களுக்காக எல்லாரையும் தியாகம்செய்வதுபோல தோன்றுகிறது. மனைவிக்கு அவளது கணவன் ஒரு தியாகம், கணவனுக்கு அவனது மனைவி ஒரு தியாகம். குழந்தைகளுக்கு பெற்றோர் ஒரு தியாகம், பெற்றோருக்கு குழந்தைகள் ஒரு தியாகம். யார் இத்தகைய ஒரு வேலையைச் செய்ய முடியும்? தேவன் மட்டுமே. “கர்த்தாவே, நீர் ஏன் எல்லாரையும் எனக்காக தியாகம் செய்கிறீர்?” என்று நான் கர்த்தரிடம் கூறியிருக்கிறேன். நான் யாருடன் ஒருங்கிணைந்து சேவிக்கிறேனோ அந்தச் சகோதரர்கள் அனைவரும், சபைகள் அனைத்தும்கூட எனக்கான தியாகங்களாக உள்ளன என்ற உள்ளான உணர்வு எனக்கிருக்கிறது. இருப்பினும், நீங்கள் பாடனுபவிக்கும்போது, நான் அதிகமாய்ப் பாடனுபவிக்கிறேன். மனைவி பாடனுபவிக்கும்போது, கணவன் அதிகமாய்ப் பாடனுபவிக்கிறான், குழந்தைகள் பாடனுபவிக்கும் போது, பெற்றோர் இன்னும் அதிகமாய்ப் பாடனுபவிக்கின்றனர். தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுமாறு தம்மை நேசிக்கிறவர்கள் மற்றும் தம்மால் அழைக்கப்பட்டவர்களின் நன்மைக்காக சகல காரியங்களையும், சகல விஷயங்களையும், சகல மனிதரையும் முடிவுவரை ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய வைக்கிறார் என்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

தேவனின் இலக்கு அவரது குறிக்கோளை
நிறைவேற்றுவதாக இருத்தல்

தேவன் முன்னதாகவே நம் விதியைத் தீர்மானித்துவிட்டார், இந்த விதியானது, நமக்காக சகல காரியங்களையும் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய வைக்கிற தெய்வீக ஏற்பாடு இல்லாமல் ஒருபோதும் நிறைவேற்றப்பட முடியாது. நம் விதி, தேவனின் முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவதே. நாம் இன்னும் முழுவதுமாக தேவனின் முதற்பேறான குமாரனின் சாயலில் இல்லை, ஆனால் பிதாவாகிய தேவன் நன்மைக்காக சகல காரியங்களையும் ஒன்றுசேர்ந்து வேலைசெய்யவைத்து, திட்டமிடுகிறார், வனைகிறார், செயலாற்றுகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நாம் வளர்ந்துகொண்டிருக்கையில், அவர் வனைந்துகொண்டிக்கிறார்.

நாம் அனைவரும் தேற்றப்பட வேண்டும். உங்களுக்கு ஒரு நளினமான மனைவி இருந்தால், உங்கள் நளினமான மனைவிக்காக கர்த்தரைத் துதியுங்கள். உங்களுக்கு ஒரு கடினமான மனைவி இருந்தால், உங்கள் கடினமான மனைவிக்காக இன்னும் அதிகமாக கர்த்தரைத் துதியுங்கள். உங்களுக்கு, ஒரு நளினமான மனைவியோ கடினமான மனைவியோ, நளினமான கணவரோ கடினமான கணவரோ, கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளோ குறும்புக்கார பிள்ளைகளோ—உங்களுக்கு இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நீங்கள் தேற்றப்பட வேண்டும். “கர்த்தாவே, என்னால் பல தவறுகளைத்தான் செய்ய முடியும், நான் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், ஆனால் நீர் ஒருபோதும் தவறாக இருக்க முடியாது. என் தவறுகள் கூட உம் கரங்களில் உள்ளன. நீர் என்னை ஒரு தவறுசெய்ய அனுமதிக்காவிட்டால், நீர் உம் சுண்டுவிரலை நகர்த்தி, சூழ்நிலையை மாற்றும், அப்போது, நான் ஒரு தவறுகூட செய்யமாட்டேன். எல்லாம் உம் கரங்களில் உள்ளது” என்று நாம் அவரிடம் கூற வேண்டும். ஆகையால், நாம் அனைவரும் தேற்றப்பட வேண்டும்.

பாடுகளுக்காக ஒருபோதும் ஜெபிக்காதிருத்தல், மாறாக பிதா பாடுகளை
விலக்கிவைக்கும்படி ஜெபித்தல்

எனினும், நீங்கள் மிகையாகச் சென்று, பிதா உங்களுக்குப் பாடுகளைத் தரும்படி ஜெபிக்குமளவுக்கு அளவுக்கு அதிகமான விதத்தில் ஆவிக்குரியவர்களாய் இருக்காதீர்கள். பாடுகளுக்காக ஜெபிக்காதீர்கள். இதற்குப் பதிலாக, “பிதாவே, சோதனையிலிருந்து என்னை விடுவியும். சகலவித பாடுகளிலிருந்தும் என்னை விடுவியும். எல்லாவித தொந்தரவிலிருந்தும் என்னை விலக்கிக் காத்துக்கொள்ளும்” என்று நீங்கள் ஜெபிக்க வேண்டும். நீங்கள் இவ்விதத்தில் ஜெபித்தாலும், சில சிரமங்களும் துன்பங்களும் உங்களுக்கு வரும். அவை வரும்போது, புகார்செய்யாதீர்கள், தொந்தரவடையாதீர்கள், மாறாக, “பிதாவே, இதற்காக உமக்கு நன்றி. பிதாவே, கூடுமானால், இந்தப் பாத்திரத்தை என்னைவிட்டு அகற்றும். இருப்பினும், பிதாவே, என் சித்தமல்ல, உம் சித்தமே ஆகக்கடவது” என்று கூறுங்கள். இதுவே நேர்த்தியான மனப்பாங்கு. ஒருபோதும் பாடுகள் வரும்படி ஜெபிக்காதீர்கள், மாறாக உங்களிடமிருந்து பாடுகளை விலக்கிவைக்கும்படி பிதாவிடம் ஜெபியுங்கள். எனினும், பாடுகள் வரும்போது, சோர்ந்துபோகாதிருங்கள்; அவற்றை ஏற்றுக்கொண்டு, “பிதாவே, கூடுமானால் இதை எடுத்துப்போடும். ஒவ்வொரு தொந்தரவு மற்றும் திசைதிருப்பத்திலிருந்து என்னை விலக்கி, உம் பிரசன்னத்தில் காத்துக்கொள்ளும்” என்று தொடர்ந்து ஜெபியுங்கள். ஒரு பக்கம், நாம் இவ்விதத்தில் ஜெபிக்க வேண்டும்; மறுபக்கம், பிதா நமக்குத் தருகிற அனைத்துடனும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் அவரது முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுமாறு எல்லாம் அவரது கரங்களில் உள்ளது, நமக்கு ஏற்படுகிறது என்பதை நாம் அறிகிறோம். இந்த ஒத்தசாயலாகுதல் நம் மகிமைப்படுதலுக்கான ஆயத்தமாகும். (Life-study of Romans, pp. 247-249)

உபத்திரவம் என்பது நம்மைச் சந்திக்கும் கிருபையின் மாம்சமாகுதலாக இருத்தல்

நாம் உபத்திரவத்தையல்ல, கிருபையைப் பாராட்டுகிறோம் என்று நாம் கூறினால், இது நாம் இயேசுவையல்ல தேவனை நேசிக்கிறோம் என்று கூறுவதைப் போன்றது. எனினும், இயேசுவை நிராகரிப்பதென்றால் தேவனை நிராகரிப்பதாகும். அது போலவே, உபத்திரவத்தை நிராகரிப்பதென்றால் கிருபையை நிராகரிப்பதாகும். தேவன் ஏன் மாம்சமானார்? ஏனெனில் அவர் நம்மிடம் வர விரும்பினார். தேவனின் மாம்சமாகுதல் அவரது கிருபையான வருகையாக இருந்தது. நிச்சயமாக, நாமனைவரும் தேவனிடமிருந்து இப்படியொரு வருகையை விரும்புகிறோம். அவர் வருவதை நாம் நேசித்தால், நாம் அவரது மாம்சமாகுதலை நேசித்தாக வேண்டும். கிருபை மற்றும் உபத்திரவத்துடனும் காரியம் இதேதான். உபத்திரவம் என்பது நம்மிடம் வருகிற கிருபையின் மாம்சமாகுதலாகும். நாம் தேவனின் கிருபையை நேசித்தாலும், கிருபையின் இனிமையான வருகையாகிய கிருபையின் மாம்சமாகுதலாயிருக்கிற உபத்திரவத்தையும் நாம் முத்தமிட்டாக வேண்டும்.

மேடம் குயான் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலுவைகளைத் தான் முத்தமிட்டதாகக் கூறினார். சிலுவை ஒரு பாடாக, ஓர் உபத்திரவமாக இருப்பதால் பலர் அதை வெறுக்கின்றனர். இதற்கு மாறாக மேடம் குயான் ஒவ்வொரு சிலுவையையும் முத்தமிட்டு, அதிகமானவை வர காத்திருந்தார், ஏனெனில் சிலுவை தன்னிடம் தேவனைக் கொண்டு வந்தது என்று அவர் உணர்ந்தார். “தேவன் எனக்குச் சிலுவையைத் தருகிறார், சிலுவை எனக்குத் தேவனைக் கொண்டுவருகிறது” என்று மேடம் குயான் கூறினார். அவர் சிலுவையை வரவேற்றார், ஏனெனில் அவரிடம் சிலுவை இருந்தபோது, அவரிடம் தேவன் இருந்தார். உபத்திரவம் ஓர் சிலுவை, கிருபை என்பது நம் அனுபவமகிழ்ச்சிக்காக நம் பங்காக தேவனே. இந்தக் கிருபை பிரதானமாக உபத்திரவத்தின் உருவில் நம்மிடம் வருகிறது.

அங்கீகரிப்புத்தன்மை என்பது,
உபத்திரவம் மற்றும் சோதனையின்
சகிப்புத்தன்மையிலிருந்து விளைவுறும்
அங்கீகரிக்கப்பட்ட தரமாய் இருத்தல்

சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்படுதலை உண்டாக்குகிறது (ரோ. 5:3). அங்கீகரிக்கப்படுதல் என்பது உபத்திரவம் மற்றும் சோதித்தலின் சகிப்புத்தன்மையிலிருந்து விளைகிற ஓர் அங்கீகரிக்கப்பட்ட தரமாகும். எனவே, அங்கீகரிக்கப்படுதல் என்பது அங்கீகரிக்கப்படக்கூடிய ஒரு தன்மை அல்லது குணாம்சம் ஆகும். தற்போது, இளம் சகோதரர்கள் மற்றவர்களின் அங்கீகரித்தலைப் பெறுவது கடினம். மற்றவர்களால் எளிதாக அங்கீகரிக்கப்படும் ஒரு தரத்தை உற்பத்திசெய்கிற சகிப்புத்தன்மை அவர்களுக்குத் தேவை. உபத்திரவம் சகிப்புத்தன்மையை விளைவிக்கிறது, சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்படுதல் என்ற தன்மையை வெளிக்கொணர்கிறது. சில படிவங்கள் இங்குள்ள கிரேக்க வார்த்தையை “அனுபவம்” என்று மொழிபெயர்க்கின்றன. இது சரிதான், ஏனெனில் அங்கீகரிக்கப்படுதல் அனுபவத்தை உள்ளடக்குகிறது. எனினும், இது பிரதானமாக அனுபவம்தானே அல்ல, மாறாக பாடுபடுதல் என்ற அனுபவங்கள் மூலம் பெறப்படுகிற குணாம்சம் அல்லது நற்பண்பாகும். நீங்கள் எவ்வளவாய்ப் பாடுபடுகிறீர்களோ அவ்வளவாய் உங்களிடம் சகிப்புத்தன்மை ஏற்படுகிறது, அவ்வளவாய் அங்கீகரிக்கப்படுதல் எனும் நற்பண்பு உற்பத்திசெய்யப்படும். அங்கீகரிக்கப்படுதல் நம் இயற்கைப் பிறப்பால் நம்மிடம் இருக்கிற ஒரு குணாம்சமல்ல.

பதனிடப்படாத பொன்னின் எடுத்துக்காட்டைப் பரிசீலியுங்கள். அது உண்மையான பொன்னாக இருந்தாலும், அது பதனிடப்படாததும், கவர்ச்சியற்றதுமாகும். தூய்மையாக்கும் அக்கினி அதற்குத் தேவை. பொன் எவ்வளவாய் அக்கினியின் எரித்தலை அனுபவிக்கிறதோ அவ்வளவாய் அங்கீகரிக்கப்படும் தன்மை உற்பத்திசெய்யப்படும். எரித்தல் மற்றும் சோதனைக்குப் பிறகு, பொன் எல்லாராலும் எளிதாக அங்கீகரிக்கப்படும் ஒரு தரத்தைப் பெறுகிறது. ஒருவேளை, இளம் வாலிபர்களில் பலர் பதனிடப்படாத பொன்னைப்போல் இருக்கின்றனர். அவர்களுக்குப் பளபளப்பூட்டுதலோ வர்ணம்பூசுதலோ தேவையில்லை; அவர்களுக்கு எரித்தல் தேவை. கர்த்தரை நேசிக்கிற பரிசுத்தவான்களில் சிலருக்கு, ஓரளவு ஜீவனும் வெளிச்சமும் இருக்கிறது. அவர்களிடம் இந்தக் காரியங்கள் இருப்பதால், தாங்கள் கர்த்தருக்காக வேலைசெய்ய ஏற்றவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். எனினும், அவர்களுக்கு அங்கீகரிக்கப்படுதல் குறைவுபடுகிறது. ஒருபக்கத்தில், அவர்கள் செல்லுமிடமெங்கும் அவர்கள் செழிப்பானவர்களாக இருக்கக் கூடும்; மறுபக்கத்தில், அவர்கள் பக்குவமற்றவர்களாக இருக்கின்றனர், அதோடு மக்களை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும், சௌகரியமாகவும் ஆக்குகிற நற்பண்பு அவர்களிடம் குறைவுபடுகிறது. அவர்களிடம் இருப்பது அங்கீகரிக்கப்படுதலுக்கு எதிரானது, நாம் இதை அங்கீகரிப்பின்மை என்று அழைக்கலாம். உங்கள் சூழ்நிலை ஏன் துவக்கத்தில் மிகவும் நல்லதாகவும், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிக ஏழ்மையாகவும் ஆனது? உங்கள் வரம், மற்றும் உங்களிடம் இருந்த வெளிச்சத்தின் காரணத்தால் அது துவக்கத்தில் நல்லதாக இருந்தது. நீங்கள் அதிக பக்குவமற்றவர்களாக, அங்கீகரிக்கப்படுதல் என்ற தன்மையில் குறைவுபட்டதால், அது நன்றாகத் தொடரவில்லை. நம்மிடம் அங்கீகரிக்கப்படுதல் என்ற நற்பண்பு இருந்தால், நாம் மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கமாட்டோம். “கர்த்தாவே, எனக்கு அங்கீகரிக்கப்படுதலைத் தாரும்” என்று நாமெல்லாரும் ஜெபித்தாக வேண்டும். (Life-study of Romans, pp. 105-107)
Reference: Life-study of Romans, msgs. 21, 9

DOWN IN THE VALLEY WITH MY SAVIOR I WOULD GO

Consecration—Following the Lord – 461

1. Down in the valley with my Savior I would go,
Where the flowers are blooming and the sweet waters flow;
Everywhere He leads me I would follow, follow on,
Walking in His footsteps till the crown be won.

Follow! Follow! I would follow Jesus!
Anywhere, everywhere, I would follow on!
Follow! Follow! I would follow Jesus!
Everywhere He leads me I would follow on!

2. Down in the valley with my Savior I would go,
Where the storms are sweeping and the dark waters flow;
With His hand to lead me I will never, never fear,
Dangers cannot fright me if my Lord is near.

3. Down in the valley, or upon the mountain steep,
Close beside my Savior would my heart ever keep;
He will lead me safely in the path that He has trod,
Up to where they gather in the rest of God.

 

Jump to section