மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பொருளடக்கம்

  1. அவரிடம் சொல்
  2. நம் மனஉளைச்சலை தேவன்மீது வைத்தல்
  3. நம் முடிவு தேவனின் ஆரம்பம்
  4. ஏன் விசுவாசிகள் பாடனுபவிக்க வேண்டும்?
  5. தேவன் சுற்றுச்சூழல்களை விசுவாசிகளுக்கு நன்மைக்கேதுவாக வேலைசெய்ய வைத்தல்
  6. பேதுருவுக்கும்
  7. மண்பாண்டங்களிலுள்ள பொக்கிஷம்
  8. பசியுள்ளவர்களை நன்மைகளால் நிரப்பினார்
  9. கிறிஸ்துவை அனுபவித்துமகிழுதல்
  10. சாத்தானுக்கு எதிர்த்துநிற்றல்
  11. உண்மை, விசுவாசம், அனுபவம்
  12. விசுவாசமும் கீழ்ப்படிதலும்
  13. கர்த்தராகிய இயேசுவைப் பாராட்டுதல்
  14. உலகத்தை நேசிக்காதிருத்தல்
  15. தேவனின் காக்கும் வல்லமை
  16. கிறிஸ்தவ வாழ்க்கையின் நம்பிக்கை

 

முகவுரை

புதிய விசுவாசிகளை மேய்த்துப்பேணுவதற்கான அடிப்படை செய்திகளை வழங்கும் ஆறு சிறு புத்தகங்கள் கொண்ட தொடரில் இதுவும் ஒன்று. இந்தச் சிறு புத்தகம் முற்றிலும் வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ-யின் செய்திகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் சில புத்தகத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அந்தந்தக் கருப்பொருளைக் குறித்து இன்னும் அதிகம் இந்தப் புத்தங்களில் வாசிக்கலாம். கவனிக்கவும்: CWWN மற்றும் CWWL முறையே, வாட்ச்மேன் நீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், விட்னெஸ் லீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. வேத வசனங்களும் அடிக்குறிப்புகளும் இந்திய வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்- ளன. சில வசனங்கள் அதிக துல்லியமான புரிந்துகொள்ளுதலுக்காக மூல மொழிகளாகிய எபிரேயு கிரேக்கு ஆகியவற்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட வசனங்கள் பெரும்பாலும் (எபி.) அல்லது (கிரே.) என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எல்லா செய்தி குறிப்புகளும் விட்னெஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ-யின் எழுத்துவடிவ ஊழியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுக் கூறப்படாத பட்சத்தில், ஊழியத்தின் பகுதிகள் யாவும் விட்னெஸ் லீ-யின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை, இவை, லிவிங் ஸ்டீரிம் மினிஸ்டீரியால் வெளியிடப்பட்டவை. அடைப்புக்குக் குறிக்குள் இருக்கும் பகுதிகள் [ ] தொகுப்பாளர்களால் மொழிபெயர்ப்பாளர்களால் சேர்க்கப்பட்டவை.

 

Jump to section