மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் மூன்று – நம் முடிவு தேவனின் ஆரம்பம்

பிலி. 2:12-13—ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 13ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.

உயிர்த்தெழுதல் என்ற தளத்திலிருந்து பவுல் இவ்வாறு கூற முடியும்: “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்; ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி. 2:12, 13).

நம்மால் நாமே தேவனின் சித்தத்தைச்
செய்வதிலிருந்து விடுதலையாயிருத்தல்

தேவனே உங்களில் வேலைசெய்கிறார் என்று பிலிப்பியர் 2:12-13 கூறுகிறது. நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருத்தல் என்பதற்கு தேவனின் சித்தத்தைச் செய்வதிலிருந்து விடுவிக்கப்பட்டிருத்தல் என்று அர்த்தமல்ல. நாம் சட்டதிட்டமற்றவர்களாக ஆகப்போகிறோம் என்பது இதன் அர்த்தம் அல்லவே அல்ல. அதற்கு நேர் எதிரானதே உண்மை! நாம்தானே அந்த சித்தத்தைச் செய்வதிலிருந்து விடுதலையாயிருக்கிறோம் என்பதே இதன் பொருள். நாம் இதைச் செய்ய முடியாது என்று முழுவதுமாக உணர்ந்தபிறகு, பழைய மனிதன் என்ற தளத்திலிருந்து தேவனைப் பிரியப்படுத்த முயற்சிப்பதிலிருந்து நாம் ஓய்கிறோம். நாம் முயற்சிகூட செய்வதில்லை என்ற அளவுக்கு நம்மில் நாம் முற்றும்முடிய விரக்தியடைந்துவிட்ட கட்டத்தைக் கடைசியாக எட்டியபிறகு, நம்மில் அவர் தமது உயிர்த்தெழுந்த ஜீவனை வெளியரங்கமாக்க நாம் கர்த்தரில் நம் நம்பிக்கையை வைக்கிறோம்.

என் சொந்த நாட்டில் நான் பார்த்த ஒரு காரியத்தை எடுத்துக்காட்டாகக் கூறி இதை நான் உங்களுக்கு விளக்கட்டும். சீனாவில், பொதி சுமக்கும் பெரும்பாலானோர் 120 கிலோ எடையுள்ள உப்பு மூட்டையைச் சுமப்பதுண்டு, 250 கிலோ வரை கூட சுமக்கிறவர்கள் சிலர் உண்டு. 120 கிலோ மட்டுமே தூக்கக்கூடிய ஒருவன் வருகிறான், ஆனால் இங்கு இருப்பதோ 250 கிலோ மூடை. தன்னால் அதைச் சுமக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும், அவன் புத்திசாலியாக இருந்தால்: “நான் அதைத் தொடமாட்டேன்!” என்று கூறுவான். ஆனால் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற சபலம் மனித சுபாவத்திலேயே வேரூன்றியிருக்கிறது, எனவே அவனால் அதைச் சுமக்க முடியாது, இருப்பினும் அவன் முயன்று பார்க்கிறான். நான் ஓர் இளைஞனாக இருந்தபோது, இப்படிப்பட்ட பத்து அல்லது இருபது பேர் வந்து, தன்னால் அதைக் கையாளாத முடியாது என்று அறிந்திருந்தும், ஒவ்வொருவராக வந்து முயற்சிசெய்வதைக் கண்டு நான் ரசிப்பதுண்டு. இறுதியில் இவன் தன் முயற்சியைக் கைவிட்டு, அதைச் சுமக்க முடிகிற மனிதனுக்கு வழிவிட வேண்டும்.

[“நான் இதைச் செய்யமாட்டேன்; எனக்காக இதைச் செய்ய நான் கர்த்தரை நம்புவேன்”]

நாமும்கூட எவ்வளவு சீக்கிரம் நம் முயற்சியைக் கைவிடுகிறோமோ, அவ்வளவு சிறந்தது, ஏனெனில் இது நம் வேலை என்று நாம் உரிமை கொண்டாடினால், பரிசுத்த ஆவிக்கு எந்த இடமும் இருக்காது. ஆனால் நாம், “நான் அதைச் செய்ய மாட்டேன்; எனக்காக அதைச் செய்ய நான் உம்மை நம்புவேன்” என்று கூறினால், நம்மைவிட வலிமையான ஒரு வல்லமை நம்மை எடுத்துச்செல்வதை நாம் காண்போம்.

1923இல் புகழ்பெற்ற கனேடிய சுவிசேஷகர் ஒருவரை நான் சந்தித்தேன். மேற்கூறிய காரியங்களை ஒரு செய்தியில் நான் பகிர்ந்துகொண்டேன்; நாங்கள் அவரது வீட்டுக்குத் திரும்பிச்சென்ற போது அவர், “ரோமர் 7இன் தொனி இந்நாட்களில் அரிதாகவே ஒலிக்கிறது; அதை மீண்டும் கேட்பது நன்றாக இருக்கிறது. நியாயப்பிரமாணத்திலிருந்து நான் விடுவிக்கப்பட்ட நாள் நான் பூமியில் பரலோகத்தை அனுபவித்த நாள். பல ஆண்டுகள் கிறிஸ்தவனாக இருந்த பிறகு, இன்னும் தேவனைப் பிரியப்படுத்த என்னால் இயன்றதையெல்லாம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் எவ்வளவாய் முயற்சித்தேனோ அவ்வளவாய்த் தோல்வியடைந்தேன். தேவன்தான் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய கோரிக்கை விடுப்பவர் என்று கருதினேன், ஆனால் அவரது கோரிக்கைகளில் சின்னஞ்சிறியதைக் கூட நிறைவேற்ற இயலாதவனாக இருந்தேன். திடீரென ஒரு நாள், ரோமர் 7ஐ நான் வாசித்தபோது, வெளிச்சம் உதித்தது, நான் பாவத்திலிருந்து மட்டுமல்ல, நியாயப்பிரமாணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறேன் என்பதைக் கண்டேன். ஆச்சரியத்தில் நான் துள்ளிக் குதித்து: ‘கர்த்தாவே, நீர் என்மீது எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லையா? அப்போது உமக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை!’ என்றேன்” என்று கூறினார்.

[தேவன் சிங்காசனத்தில் பிரமாணம்
தருபவராகவும், என் இருதயத்தில் பிரமாணம் கைக்கொள்பவராகவும் உள்ளார்]

தேவனுடைய கோரிக்கைகள் மாறிவிடவில்லை, ஆனால் அவற்றைப் பூர்த்திசெய்வது நாம் அல்ல. தேவனுக்கு ஸ்தோத்திரம், சிங்காசனத்தில் அவர் பிரமாணம் தருபவராகவும், என் இருதயத்தில் அவர் அந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்பவராகவும் உள்ளார். பிரமாணத்தைத் தந்த அவரே, அதைக் கைக்கொள்கிறார். அவரே கோரிக்கைகள் விடுக்கிறார், அவரே அவற்றைப் பூர்த்தியும் செய்கிறார். அந்த என் நண்பர், தான் ஒன்றும் செய்யத் தேவையில்லை என்பதைக் கண்டபோது, துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தார், அவர் மட்டுமல்ல, இதைக் கண்டுபிடிக்கிற எல்லாரும்கூட இதே காரியத்தைச் செய்ய முடியும். எதையாவது செய்ய நாம் முயற்சிக்கும்வரை, அவர் எதையும் செய்ய முடியாது. நாம் முயற்சிப்பதால்தான், மீண்டும், மீண்டும், மீண்டும் தோல்வியடைகிறோம். நாம் எதையும் செய்ய முடியாது என்று தேவன் விளக்கிக்காட்ட விரும்புகிறார், இதை நாம் முழுமையாக அறிந்துகொள்ளாதவரைக்கும் நம் விரக்தியடைதலும் அதிருப்தியும் ஒழியப்போவதில்லை.

[“கர்த்தாவே, உமக்காக எதையும் செய்ய என்னால் முடியவில்லை,
ஆனால் என்னில் எல்லாவற்றையும் செய்ய நான் உம்மை நம்புகிறேன்”]

வெற்றிக்காகப் போராடி முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு சகோதரன் ஒருநாள் என்னிடம், “நான் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டான். நான் கூறினேன், “உன் பிரச்சினை” “தேவனின் சித்தத்தைச் செய்யமுடியாத அளவுக்கு நீ பலவீனமாக இருக்கிறாய், ஆனால் முற்றும் முடிய காரியங்களைக் கைவிட்டுவிடும் அளவுக்கு நீ பலவீனமாக இல்லை. நீ இன்னும் போதுமான அளவுக்குப் பலவீனமாக இல்லை. நீங்கள் முற்றும்முடிய பலவீனமாக்கப்பட்டு, உங்களால் எதுவும் செய்யமுடியாது என்பது உங்களுக்குத் தெள்ளத்தெளிவாகும்போது, தேவன் எல்லாவற்றையும் செய்வார்.” “கர்த்தாவே, உமக்காக எதையும் என்னால் செய்ய இயலாது, மாறாக என்னில் எல்லாவற்றையும் செய்ய நான் உம்மை நம்புகிறேன்” என்று நாம் கூறுகிற கட்டத்துக்கு நாமனைவரும் வரவேண்டும்.

ஒருமுறை சீனாவில் ஓர் இடத்தில் நான் சுமார் இருபது சகோதரர்களுடன் தங்கியிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த வீட்டில் குளிப்பதற்கு போதிய வசதி இல்லை, அதனால் நாங்கள் தினமும் ஆற்றில் குளிக்கச் சென்றோம். ஒரு சமயம் ஒரு சகோதரனுக்குக் காலில் சுளுக்கு ஏற்பட்டது, அவர் வேகமாக மூழ்கிக் கொண்டிருந்ததை திடீரென்று நான் கண்டேன், எனவே அவனைக் காப்பற்ற விரையும்படி நீச்சலில் வல்லவனாயிருந்த வேறொரு சகோதரனுக்கு நான் சைகை காட்டினேன். ஆனால் அந்தச் சகோதரனோ அவரைக் காப்பாற்ற அசையவே இல்லை, இதைக் கண்டு திகைத்தேன். “அந்த மனிதன் மூழ்கிப்போவதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று தவிப்புடன் நான் கூக்குரலிட்டேன்: மற்ற சகோதரர்களும், என்னைப் போல கிளர்ந்தெழுந்து, தீவிரமாகக் கூச்சலிட்டனர். ஆனால் அந்த நல்ல நீச்சல்வீரனோ இன்னும் அசையவே இல்லை. அவர் அமைதியாக, உணர்ச்சிவசப்படாமல், தான் இருந்த இடத்திலேயே இருந்தார், அது பார்ப்பதற்கு, ஒருவன் தான் செய்ய விரும்பாத ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதுபோல தோன்றியது. இதற்கிடையில், மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய சகோதரனின் குரல் தொய்வடைந்தது, அவரது முயற்சிகள் தளர்ந்துபோனது. நான் என் இருதயத்தில், “நான் அந்த மனிதனை வெறுக்கிறேன்! தன் கண்ணுக்கெதிரே ஒரு சகோதரனை மூழ்கவிட்டு, அவரைக் காப்பாற்றப் போகமாட்டேன் என்கிறாரே!” என்று கூறினேன்.

ஆனால் அந்த மனிதன் உண்மையில் மூழ்க ஆரம்பித்தபோது, இந்த நீச்சல்வீரர் வேகமாக நீந்திச்சென்று அவரருகில் சேர்ந்தார், சிறிது நேரத்திலேயே இருவரும் பாதுகாப்பாக கரைசேர்ந்தனர். இருப்பினும், எனக்கு வாய்ப்பு கிட்டியபோது, நான் என் கருத்தைத் தெரிவித்தேன். “தன் உயிரை இவ்வளவாய் நேசிக்கும் உங்களைப் போன்ற ஒரு கிறிஸ்தவனை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினேன். “நீங்கள் உங்களுக்கு அக்கறைப்படுவதைச் சற்று குறைத்து, அவருக்கு இன்னும் சிறிது அக்கறை காட்டியிருந்தால், அந்தச் சகோதரன்பட்ட வேதனையை எவ்வளவாய்க் குறைத்திருக்கலாம் என்று எண்ணிப்பாருங்கள்” என்றேன். ஆனால், நீச்சலைப்பற்றி நான் அறிந்ததைவிட அந்த நீச்சல்வீரர் நன்றாக அறிந்துவைத்திருந்தார் என்பதை விரைவிலேயே தெரிந்துகொண்டேன். அவர் என்னிடம், “நான் முன்பே போயிருந்திருந்தால், அவர் என்னை இறுகப் பிடித்திருப்பார், நாங்கள் இருவரும் மூழ்கியிருப்போம். மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் முற்றிலும் சோர்வடைந்து, தன்னைக் காப்பாற்ற தான் எடுக்கும் எல்லா முயற்சியையும் அவன் கைவிடும்வரை அவன் காப்பாற்றப்பட முடியாது” என்றார்.

[ஒரு காரியத்தை நாம் கைவிடும்நேரத்தில், தேவன் அதை எடுத்துக்கொள்வார்]

இந்தக் குறிப்பை நீங்கள் பார்க்கிறீர்களா? ஒரு காரியத்தை நாம் கைவிடும்போது, தேவன் அதை எடுத்துக்கொள்வார். நம் வாய்ப்பு வளங்கள் எல்லாம் காலியாகி, நமக்காக இனி நாம் எதுவும் செய்யமுடியாது என்று ஆகும்வரை அவர் காத்துக்கொண்டிருக்கிறார். பழைய சிருஷ்டிப்புக்குரிய எல்லாவற்றையும் தேவன் ஆக்கினைதீர்த்து, அதைச் சிலுவையில் வைத்துவிட்டார். மாம்சம் ஒன்றுக்கும் உதவாது! அது மரணத்திற்கு மட்டுமே தகுதியானதென்று தேவன் அறிவித்துவிட்டார். நாம் அதை மெய்யாகவே விசுவாசித்தால், தேவனைப் பிரியப்படுத்த நாம் எடுக்கும் எல்லா மாம்சப்பிரகாரமான முயற்சிகளைக் கைவிடுவதின்மூலம் தேவனின் தீர்ப்பை நாம் உறுதிப்படுத்துவோம். (CWWN, vol. 33, “The Normal Christian Life,” ch. 9)

Reference: CWWN, vol. 33, “The Normal Christian Life,” ch. 9

MAKE ME A CAPTIVE, LORD

Longings—For Freedom – 422

422

1. Make me a captive, Lord,
And then I shall be free;
Force me to render up my sword,
And I shall conq’ror be.
I sink in life’s alarms
When by myself I stand,
Imprison me within Thine arms,
And strong shall be my hand.

2. My heart is weak and poor
Until it master find:
It has no spring of action sure,
It varies with the wind;
It cannot freely move
Till Thou hast wrought its chain;
Enslave it with Thy matchless love,
And deathless it shall reign.

3. My power is faint and low
Till I have learned to serve:
It wants the needed fire to glow,
It wants the breeze to nerve;
It cannot drive the world
Until itself be driven;
Its flag can only be unfurled
When Thou shalt breathe from heaven.

4. My will is not my own
Till Thou hast made it Thine;
If it would reach the monarch’s throne
It must its crown resign;
It only stands unbent
Amid the clashing strife,
When on Thy bosom it has leant,
And found in Thee its life.

 

Jump to section