மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் நான்கு – ஏன் விசுவாசிகள் பாடனுபவிக்க வேண்டும்?

2 கொரி. 4:16-17—ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 17மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

இரண்டு சிருஷ்டிப்புகள்—
பழையது, புதியது

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் அனுபவமும், தேவன் ஜீவிக்கிற தேவன் என்பதற்கு குறைந்தபட்சம் ஏதோவொரு சான்றையாவது வழங்குகிறது, ஆனால் இதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், தங்களுக்குள் வசிக்கிற தேவன் உயிர்த்தெழுதலின் தேவன் என்று உணர்ந்தறிகிற இரட்சிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் சொற்பமே. ஜீவிக்கும் தேவனுக்கும், உயிர்த்தெழுதலின் தேவனுக்கும் இடையிலான வேறுபாடு நமக்குத் தெளிவாக இல்லையெனில், நாம் தொடர்ந்து முன்னேறிச்செல்ல நாடுகையில் நம் அனுபவத்தில் பல பிரச்சினைகள் எழும்.

இரண்டு சிருஷ்டிப்புகளைப் பற்றி வேதம் பேசுகிறது, ஒன்று பழையது, ஒன்று புதியது. தெய்வீக சுபாவம் பழைய சிருஷ்டிப்பில் உள்வசிக்கவில்லை, அதனால்தான் அது பழையதாகிவிட்டது. தேவன் எங்கிருக்கிறாரோ, அங்கு எப்போதும் புதுத்தன்மை உண்டு. மேலான எருசலேம் என்பது புதிய எருசலேம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது தேவனால் நிறைந்திருக்கிறது. முதலாம் சிருஷ்டிப்பை தேவன்தாமே உண்டாக்கியிருந்தாலும், அது உயிர்த்தெழுதலில் தேவனின் சுபாவத்தையும் மனிதனின் சுபாவத்தையும் இணைத்த ஓர் இரட்டை-சுபாவ சிருஷ்டிப்பாக மேலெழும்பும்படி அது மரணத்திற்குள் கடந்துசெல்ல தேவன்தாமே அனுமதிக்கிறார்.

பாடுகளினூடாகப் புதிய சிருஷ்டிப்பு கொண்டுவரப்படுதல்

ஜீவிக்கும் தேவனின் வல்ல கரத்தால் பழைய சிருஷ்டிப்பு உண்டானது என்றாலும், அவர்தாமே அதினுள் வசிக்கவில்லை. அது அவரால் சிருஷ்டிக்கப்பட்டது, அது அவரது பராக்கிரமத்தைக் காட்டுகிறது, ஆனால் அது அவரது பிரசன்னத்தைக் காட்சியாக்கவில்லை. எப்படி பழைய சிருஷ்டிப்பு புதிய சிருஷ்டிப்பாக மறுசாயலாக்கப்பட முடியும்? தேவன் உள்வருவதின்மூலமாகவே. ஆனால் அவரது உள்வருதல் எவ்வாறு கொண்டுவரப்பட முடியும்? இங்குதான் ஒரு பெரும் சிரமம் எழுகிறது. அவருக்கு வழியை உண்டுபண்ணும்படி பழைய சுபாவம் நொறுக்கப்பட்டாக வேண்டும். சகோதர சகோதரிகளே, உயிர்த்தெழுதலின் தேவனுக்கான வழியை உண்டுபண்ணும்படி, உங்கள் வாழ்கையிலுள்ள யாவும் மரணம் என்ற உச்சக்கட்ட சோதனையினூடாகக் கடந்துசென்றாக வேண்டும். நீங்கள் ஜீவிக்கும் தேவனை மட்டுமே அறிந்திருந்தால், உங்கள் அறிவு மிக புறம்சார்ந்ததாக இருக்கும். தேவன் தேவனாயிருப்பார், நீங்கள் நீங்களாக இருப்பீர்கள். நீங்கள் உயிர்த்தெழுதலின் தேவனை அறிய வேண்டும், அவர் மரணத்தினூடாக மட்டுமே உங்கள் வாழ்க்கைக்குள் தமக்காக ஒரு வழியை அமைக்க முடியும்.

பாடுகளினூடாக தேவனின் சாட்சாத்து சுபாவம் மனிதனுக்குள் அடித்துருவாக்கப்படுதல்

பாடுகளின் உட்கருத்து என்ன? பாடுகள் பழைய சிருஷ்டிப்புக்குள் கொண்டுவரும் பேரழிவானது, தேவனுடைய சிருஷ்டிப்புகள் தங்கள் ஆள்தத்துவத்தில் ஒரு தெய்வீக மூலக்கூறை உடையவையாய் மரணம் என்ற வழிமுறையிலிருந்து மேலெழும்பும்படியாக தேவன் அவற்றுக்குள் தம்மையே உட்பகிர உயிர்த்தெழுதலின் தேவனுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தில், குறிப்பாக தேவனுடைய பிள்ளைகளின் காரியத்தில், பாடுகளின் முக்கிய குறிக்கோள், அதன்மூலம் தேவனின் சாட்சாத்து சுபாவம் மனிதனின் சுபாவத்துக்குள் அடித்துருவாக்கப்படவேண்டும் என்பதே. “எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.” (2 கொரி. 4:16). புறம்பான அழிவு என்ற வழிமுறையினூடாக, நம் வாழ்க்கைக்குள் ஒரு புதிய ஆக்கக்கூறைக் கூட்டிச்சேர்க்கும் ஓர் உள்ளார்ந்த வழிமுறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பாடுகளினூடாக மனிதன் தனிநபர்ரீதியில் உயிர்த்தெழுதலின் தேவனை அனுபவமாக்குதல்

பிரிய சகோதர சகோதரிகளே, இன்னல் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் ஒரு தெய்வீக மூலக்கூறு நம் ஆள்தத்துவத்தின் அடிப்படை மூலப்பொருளுக்குள் அடித்துருவாக்கப்படுகிறது, இதன்மூலம் நாம் வெளிறிப்போன கிறிஸ்தவர்களாக இனிமேலும் இல்லாமல், முன்பு இல்லாதிருந்த ஒரு பரலோக நிறத்தை நம் வாழ்க்கைகளுக்குள் பெறுகிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் பாடுகள் ஏற்படுத்தும் வேறு எவ்வகையான விளைவும் இரண்டாம் பட்சமே; ஆனால், ஜீவிக்கும் தேவன் எவர்களைச் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் உடைமையாளர்களாக ஆக்கியிருக்கிறாரோ, அவர்களை உயிர்த்தெழுதலின் தேவனுடைய சிருஷ்டிக்கப்படாத ஜீவனுக்குள் கொண்டுவருவதே பிரதானமான விளைவு. பாடுகளின்வழியே வருகிற மரண அனுபவங்களில்தான், சிருஷ்டியின் ஜீவன் சிருஷ்டிகருடைய ஜீவனுடன் இழைத்திணைக்கப்படுகிறது. இத்தகைய கடுமையான அனுபவங்கள் இல்லாமல் நாம் ஜீவிக்கும் தேவனை அறியக்கூடும், ஆனால் மரணத்தினூடாக மட்டுமே நாம் உயிர்த்தெழுதலின் தேவனை அறியும் அனுபவரீதியான அறிவுக்கு வர முடியும். (CWWL, 1957, vol. 3, “The Living God and the God of Resurrection,” pp. 184, 188-190)
Reference: CWWL, 1957, vol. 3, “The Living God and the God of Resurrection,” ch. 3

Longings— For Fellowship with Christ – 377

1. If the path I travel
Lead me to the cross,
If the way Thou choosest
Lead to pain and loss,
Let the compensation
Daily, hourly, be
Shadowless communion,
Blessed Lord, with Thee.

2. If there’s less of earth joy,
Give, Lord, more of heaven.
Let the spirit praise Thee,
Though the heart be riven;
If sweet earthly ties, Lord,
Break at Thy decree,
Let the tie that binds us,
Closer, sweeter, be.

3. Lonely though the pathway,
Cheer it with Thy smile;
Be Thou my companion
Through earth’s little while;
Selfless may I live, Lord,
By Thy grace to be
Just a cleansed channel
For Thy life through me.

 

Jump to section