மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பதினைந்து – தேவனின் காக்கும் வல்லமை

யோசு. 14:11, 14—மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கும், போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கும் அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது…(எபி,) 14ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

“அந்நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது”

சில கிறிஸ்தவர்கள் தேவனின் இரட்சிக்கும் வல்லமையில் விசுவாசிக்கின்றனர், ஆனால் அவரது காக்கும் வல்லமையில் விசுவாசிப்பதில்லை என்பது ஒரு மனவேதனை அளிக்கும் உண்மை. அவர்கள் தேவனின் இரட்சிக்கும் கிருபையைப் பெற்றிருக்கின்றனர், ஆனால் அவருடைய காக்கும் கிருபையை இன்னும் பெறவில்லை. கிருபையைக் கொடுப்பவரே அவருடைய கிருபையில் நம்மைப் பராமரிக்கிறவராகவும் இருக்கிறார் என்று அவர்கள் உணரவில்லை. தேவனால் இரட்சிக்கப்பட்டிருக்கிற நாம் எவ்வாறு அவரால் காக்கப்பட முடியும் என்பதை வேதவாக்கியங்களிலிருந்து இப்போது பார்க்கலாம்.

“மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கும், போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கும் அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” என்று யோசுவா 14:11 கூறுகிறது. இது காலேபின் வார்த்தை. “போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு” என்பது அனுதின வாழ்க்கையைக் குறிக்கிறது; “யுத்தத்துக்கு” என்பது அசாதாரணமான சூழ்நிலைகளின் கீழ் இருக்கும் வாழ்க்கையைக் குறிக்கிறது. தினசரி வாழ்க்கையின் சாதாரணக் கோரிக்கைகளுக்கும், விசேஷமான இக்கட்டான நிலைமையின்கீழ் உள்ள வாழ்க்கையின் கோரிக்கைகளுக்கும்கூட ஈடுகொடுப்பதில் காலேபின் பலம், மோசேயுடன் அவன் பேசின நாளில் இருந்ததைப் போலவே இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நாற்பது ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், அவன் தன் ஆரம்ப நாட்களில் இருந்தது போலவே பலமாக இருந்தான். இங்கு தேவனின் காக்கும் வல்லமையை நாம் பார்க்கிறோம். காலேபின் பெலன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே, அந்த நாளிலும் இருந்தது. அவன் அப்போது இருந்தது போலவே இந்த நேரத்திலும் பலமானவனாய் இருந்தான். அவன் நாற்பது வயதில் இருந்ததை விட எண்பத்துஐந்து வயதில் வலிமை குறைந்தவனாக இருக்கவில்லை. இதற்கு ஒரு விளக்கம் மட்டுமே இருக்கிறது; அவன் தேவனால் காக்கப்பட்டிருந்தான். தேவனின் கிருபையில் நம்மைக் காத்துக் கொள்வதற்கு நாம் முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறோம். நாம் இரட்சிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு, நம் ஆரம்ப கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு இருந்த அதே விசுவாசத்தின் அளவில் இப்போதும் காணப்படுவோம் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நம் சொந்த முயற்சியால் நம்மால் தேவனுடைய கிருபையில் நிலைத்திருக்க முடியாது; அவர் மட்டுமே நம்மைத் தம் கிருபையில் பராமரிக்க முடியும்.

தேவனின் வாக்குத்தத்தங்கள்
நம்பகரமானவை என்று விசுவாசித்தல்

தேவனின் காக்கும் வல்லமையை அனுபவமாக்க காலேபிற்கான நிபந்தனை என்னவாக இருந்தது? நாம் இந்தக் காரியத்தை ஒரு நிமிடம் பரிசீலிக்கலாம். “காலேப் இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினான்” என்று யோசுவா 14:14 கூறுகிறது. அவன் எவ்வாறு கர்த்தரை முழுவதுமாக பின்பற்றினான்? எண்ணாகமம் 13, 14இல் இது நமக்குக் கூறப்படுகிறது. “அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்” என்று எண்ணாகமம் 13:30 கூறுகிறது. “நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்.” கர்த்தரை முழுவதும் பின்பற்றுகிற ஒரு நபர், தேவனின் வாக்குத்தத்தங்கள் நம்பத்தகுந்தவை என்றும், அவர் தம் மக்களோடு இருக்கிறார் என்றும், ஜெயங்கொள்ள அவர்கள் அதிக திறனுடையவர்கள் என்றும் விசுவாசிக்கிறவனாக இருக்கிறான். சகோதர சகோதரிகளே, நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? பலர் விசுவாசிக்கின்றனர், ஆனால் அவர்களது விசுவாசம் ஓர் ஊசலாடுகிற விசுவாசமாக இருக்கிறது. அவர்கள் மிகக் கோழையாக இருக்கின்றனர். அவர்கள் துதிப்பாடல் பாடுகின்றனர், ஆனால் வார்த்தைகள் சரியாயாக இருந்தாலும், தொனியில் ஏதோ தவறு இருக்கிறது. காலேபின் சம்பவத்தில் இது அப்படியில்லை; அவன் சரியான வார்த்தைகளைச் சரியான தொனியில் பாடினான். “நாம் உடனே போவோம்” என்று அவன் கூறினான். கர்த்தரை முழுவதும் பின்பற்றுகிற, அவர் நம்பத்தகுந்தவர் என்று எண்ணுகிற ஒரு நபர் தேவனுடைய சித்தத்தைச் செய்கிறவனும், அதை உடனே செய்கிறவனுமாய் இருக்கிறான்.

நம்மை நோக்கிப் பார்த்தல்
தோல்வியை விளைவித்தல்

பத்து உளவாளிகளைக் குறித்த காரியம் எப்படி? அவர்கள் தேசத்தின் குடிகளைப் பார்த்து, அவர்கள் உருவத்தில் “மிகவும் பெரிய ஆட்கள்,” அவர்களது நகரங்கள் “அரணிப்பானவைகளும், மிகப் பெரியவைகளுமாய் இருக்கிறது” என்று கண்டனர். அவர்கள் தங்களையும் பார்த்தனர், அவர்களது சொந்தப் பார்வையில் அவர்கள் “வெட்டுக்கிளிகளைப்போல்” இருந்தனர். அவர்களுடைய கண்கள் அவர்களுக்குமுன் இருந்த கஷ்டங்களின்மேல் பொருத்தப்பட்டிருந்தன…பல தோல்விகள், நாம் அவற்றை எதிர்பார்ப்பதால் வருகின்றன. நாம் மற்ற பிரச்சனைகளுடன் இடைபட முடியும் என்றும், ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையுடன் இடைபடுவதற்கு நமக்கு எந்த வழியும் இல்லை என்றும் நாம் நினைக்கக் கூடும். நாம் அப்படி நினைப்பதன்மூலம், அந்தப் பிரச்சினை நம்மிடம் வந்தவுடன் நாம் தோற்கடிக்கப்படுவதற்கான வழியை நாம் அமைத்துவிட்டோம். நம் கண்கள் நம்மீது பொருத்தப்பட்டவுடனேயே, நாம் நிச்சயமாகத் தோல்வியடைவோம். தேவன் நம்மை இரட்சிக்க வேண்டுமானால், நாம் நம்மைப் பார்ப்பதிலிருந்து அவரது வாக்குத்தத்தங்களைப் பார்க்கும்படி அவர் முதலில் நம் கண்களை இரட்சிக்க வேண்டும். நாம் தேவனின் வாக்குத்தத்தங்களைப் பார்வையில் வைத்திருக்கும்பட்சத்தில் மட்டுமே துணிவாக இருக்கிறோம். நாம் அவரது வாக்குத்தத்தங்களைப் பார்த்தவுடன், நாம் ஜெயங்கொள்ள முடியும் என்பதைப் பார்ப்போம்!

காலேபை வேறுபடுத்தி காட்டிய விசுவாசம் தேவனின் மக்கள் பலருக்கு இல்லை; அவர்கள் தங்களுடைய சுகவீனத்தின் கடுந்தன்மை, தங்களுடைய வடுக்களின் தீவிரம், தங்கள் சிரமங்களின் வெல்வதற்கரிய சுபாவம் ஆகியவற்றின்மீது தங்கள் எண்ணங்களைக் குவிக்கின்றனர். ஆயினும், தேவனின் வாக்குத்தத்தங்கள்மீது தங்கள் கண்களைப் பொருத்தியிருப்பவர் எத்தனை பேர்? “ஏனாக்கின் வம்வாவளிக்கு” அஞ்சாதவர்களே “எளிதில் மேற்கொள்ளத் திராணியுடையவர்கள்.”

நம் கஷ்டங்களையும்,
நம் சோதனைகளையும் நாம் உண்ணுதல்

காலேபுடன் தொடர்புடைய கவனிக்கத்தக்க இன்னொரு காரியமும் இருக்கிறது. எண்ணாகமம் 14:9இல், “யெகோவாவுக்கு விரோதமாக மாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்தத் தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு அப்பமாவார்கள்” (எபி.) என்று கூறி, அவன் முழு இஸ்ரயேல் மக்களின் கூட்டத்திற்கும் அறிவுறுத்தினான். அவன், தாங்கள் உடனே போகலாம் என்றும், தாங்கள் ஜெயங்கொள்ள முடியும் என்றும், தாங்கள் அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் “அவர்கள் நமக்கு அப்பமாவார்கள்” என்றும் இஸ்ரயேலரிடம் கூறினான். அப்பம் என்பது புசிக்கிற ஏதோவொன்று. அப்பம் என்பது பெலத்தை அதிகரிக்கிற ஒன்று, அது, ஒருவன் அதனைப் புசித்த பிறகு அவனை வலிமையாக்குகிற ஒன்று. அந்த தேசத்தின் குடிகள், உருவத்தில் “மிகவும் பெரிய ஆட்கள்” ஆனால், காலேபின் பார்வையிலோ, அவர்கள் தேவனின் மக்களுக்கான உணவாக இருந்தனர். அவன் தேவனின் வாக்குத்தத்தங்களைக் கனப்படுத்தியது மட்டுமல்லாமல், அவன் எல்லாச் சிரமங்களையும் அற்பமாய் எண்ணினான். மெய்யான விசுவாசமுடைய ஒவ்வொருவனும் தேவனைக் கனப்படுத்தி, எல்லாச் சிரமங்களையும் இலேசாக எண்ணுகிறான். ஆனால் இது கர்வத்துக்கு எந்த இடமும் தருவதில்லை, ஏனென்றால் தேவனுக்கு முன்பாகத் தங்களைத் தாழ்த்துகிறவர்கள் மட்டுமே அவரது வெற்றியின்மீது நிற்க இயலும்.

ஆவிக்குரிய மண்டலத்திலும் இது உண்மையே. சில சகோதர சகோதரிகள் சந்தித்திருக்கும் சிரமங்கள் சொற்பமே, ஆனால் அவர்களது வாழ்க்கைகளில் பல பெலவீனங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் போதுமான அளவு ஏனாக்கியரைப் புசித்திராததால் அவர்கள் கர்த்தருக்கு முன்பாக பெலவீனமாக இருக்கின்றனர். எனினும், இடையூறுக்குமேல் இடையூறையும், சோதனைக்கு மேல் சோதனையையும் சந்தித்து ஜெயங்கொண்டிருக்கிறவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் ஏனாக்கியரை நன்றாகப் புசித்திருப்பதால் அவர்கள் துடிப்புமிக்கவராய் இருக்கின்றனர். நாம் நம் சிரமங்களையும், நம் சோதனைகளையும் புசிக்க வேண்டும். சாத்தான் நம் வழியில் வைக்கிற ஒவ்வொரு சிரமமும், ஒவ்வொரு சோதனையும் நமக்கான உணவாக இருக்கிறது. இது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காக தேவன்-நியமித்த ஒரு வழிவகையாகும். ஏதாவது தொல்லையைக் கண்டாலே, அது விசுவாசமற்றவர்களின் இருதயத்திற்குள் பேரச்சத்தை ஏற்படுத்துகிறது, ஆனால், அவரில் திடநம்பிக்கையாயிருக்கிறவர்களோ, “என் உணவு இங்கு இருக்கிறது!” என்று கூறுகின்றனர். கர்த்தரைத் துதித்து அவருக்கு நன்றிசெலுத்துங்கள், எந்த விதிவிலக்குமின்றி நம் எல்லாச் சோதனைகளும் நமக்கான அப்பமாக இருக்கின்றன. ஒவ்வொரு சோதனையும் நாம் புசித்த பிறகு, அது நமக்கு வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. நாம் ஒன்றன்பின் ஒன்றாக சோதனையை ஏற்றுக்கொள்ளும் போது, நாம் அதிகமதிகமாய் ஐசுவரியமாகப் போஷிக்கப்படுகிறோம்.

விசுவாசத்தின் மூலம்
தேவனின் வல்லமையால் பாதுகாக்கப்படுதல்

ஒன்று பேதுரு 1:5, “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்படுதல்” குறித்து பேசுகிறது. தம்மில் விசுவாசம் உடையவர்களைத் தேவன் பாதுகாக்கிறார். நாம் சோதனைகளோடு கட்டிப்புரண்டு அவற்றை ஜெயங்கொள்ள முயற்சிக்க வேண்டியதில்லை; தேவனின் காக்கும் வல்லமை அதினூடாய்க் கடந்துவரச் செய்யும், நாம் பாவத்திற்கு வழிகொடுப்பதிலிருந்து நம்மை இரட்சிப்பதற்கான அவரது திறனை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் முழுமனதுடன் அவரைச் சார்ந்துகொண்டால், எதிர்பாராதவிதமாக சோதனைகளால் நாம் தாக்கப்படும்போதுகூட, அதிசயமான ஒரு காரியம் நிகழும். நாம் எண்ணாத ஒரு வழியில், பொல்லாங்கனின் எல்லா அக்கினி அம்புகளையும் ஏதோவொன்று அணுகவிடாமல் தடுக்கும். இதுவே விசுவாசத்தின் கேடகமாகும். அவனது அக்கினி அம்புகள் நம்மை அணுக முடியாதபடி, இது நமக்கும் சாத்தானுக்கும் இடையில் வரும். நம்மைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, அவை விசுவாசத்தின் கேடகத்தின்மீது மோதி சாத்தான்மீதே பின்னோக்கிப் பாயும்.

கர்த்தர் திரும்பிவரும் நாளுக்கென்று
கர்த்தரால் காக்கப்படுதல்

உங்களது வாழ்க்கை மெய்யாகவே அவரது கரங்களில் இருந்தால், யூதா 24இல் உள்ள “வழுவாத படி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்” என்ற வாக்குத்தத்தம், உங்களில் நிறைவேற்றப்படும். இடறுவதென்றால் வழுவுவதும், வழியிலுள்ள தடையைக் குறித்து நாம் அறியாமல் ஏதோவொன்றின்மீது மோதுவதுமாகும். தேவனைத் துதியுங்கள், விழுவதிலிருந்து மட்டுமல்லாமல், சின்னஞ்சிறு வழுவுதலிலிருந்தும் அவர் நம்மைப் பாதுகாப்பார். கர்த்தருக்கு நன்றி செலுத்தி அவரைத் துதியுங்கள், அவரது காக்கும் கிருபை, நமது உணர்வுநிலையின் மண்டலத்தையும் தாண்டி கிரியை செய்கிறது. சகோதர சகோதரிகளே, எதையும் பிடித்துவைத்துக் கொள்ளாமல் நம்மையே அவரது கரிசனைக்குள் நாம் ஒப்புக்கொடுத்தால், நாம் எவ்விதமாகக் காக்கப்படுகிறோம் என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சோதனை திடீரென்று தாக்கி, அன்பு தேவைப்படும்போது, உள்ளிருந்து அன்பு புறத்தூண்டுதலின்றி பொங்கி வருவதை நாம் காண்போம். ஒரு திடீர் சோதனையை எதிர்கொள்ள பொறுமை தேவைப்படும் போது, ஒரு கணம்கூட அதைக் குறித்து எண்ணாமல், தேவையைச் சந்திக்க நம் பொறுமை மேலெழும்பும். தேவனைத் துதியுங்கள், ஆதாமிலிருந்து நாம் பெற்ற ஜீவன் தன்னையே புறத்தூண்டுதலின்றி வெளிக்காட்டுவதுபோல, கிறிஸ்துவிடமிருந்து நாம் பெறும் ஜீவனும் தன்னையே வெளிக்காட்டுகிறது. ஆதாமிடமிருந்து நாம் நம் கெட்ட கோபத்தைச் சுதந்தரித்துக்கொண்டோம், சித்தத்தின் சிறு முயற்சியுமின்றி நாம் கோபப்பட முடிகிறது. நாம் ஆதாமிடமிருந்து கர்வத்தைச் சுதந்தரித்துக்கொண்டோம், சிந்தித்துத் தீர்மானிக்கத் தேவையில்லாமலேயே நாம் பெருமைப்பட முடியும். அதே விதத்தில், கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்று அவரது பாதுகாப்புக்குள் தங்களையே ஒப்புக்கொடுத்திருக்கிறவர்கள், சாந்தமாயிருக்க வேண்டும் என்று தங்கள் மனதைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே சாந்தமாக இருக்க முடியும், தாழ்மையாக இருப்பதற்கான எந்த முயற்சியுமின்றி தாழ்மையாக இருக்க முடியும். புறத்தூண்டுதலற்ற வெளியரங்கம் எனும் குணாம்சமானது ஆதாமிடமிருந்து நாம் பெற்றிருக்கும் ஜீவனின் இயல்பாக இருப்பதுபோலவே, கிறிஸ்துவிடமிருந்து நாம் பெற்றிருக்கும் ஜீவனின் இயல்பாகவும் இருக்கிறது. கர்த்தராகிய இயேசு நமக்குக் கொடுத்திருப்பதை நிறைவேற்றுவதற்கு, நம் பக்கத்தில் எந்த முயற்சியும் தேவையில்லை. நாம் அவரது வாக்குத்தத்தங்களில் திடநம்பிக்கை கொண்டு, நம்மையே அவருக்கு முழுவதும் ஒப்புக்கொடுத்தால், இந்த நாளிலிருந்து அவர் திரும்பிவரும் நாள்வரை நாம் காக்கப்படுவோம், நாம் பழுதற்றவர்களாகக் காக்கப்படுவோம். தேவனுக்கு நன்றி, நம் திடநம்பிக்கைக்குப் பாத்திரமானதும், எல்லாச் சோதனையையும் எதிர்த்து நிற்கக்கூடியதுமான ஓர் இரட்சிப்பு நமக்கு இருக்கிறது. (CWWN, vol. 37, “God’s Keeping Power,” pp. 13-18)

Reference: CWWN, vol. 37, “God’s Keeping Power,” ch. 3

I KNOW NOT WHY GOD’S WONDROUS GRACE

Assurance and Joy of Salvation— Secured by Divine Provisions – 333

1. I know not why God’s wondrous grace
To me He hath made known,
Nor why, unworthy, Christ in love
Redeemed me for His own.

But “I know Whom I have believed
And am persuaded that He is able
To keep that which I’ve committed
Unto Him against that day.”

2. I know not how this saving faith
To me He did impart,
Nor how believing in His word
Wrought peace within my heart.

3. I know not how the Spirit moves,
Convincing men of sin,
Revealing Jesus through the Word,
Creating faith in Him.

4. I know not what of good or ill
May be reserved for me,
Of weary ways or golden days,
Before His face I see.

5. I know not when my Lord may come,
At night or noon-day fair,
Nor if I’ll walk the vale with Him,
Or “meet Him in the air.”

 

Jump to section