மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் இரண்டு – நம் மனஉளைச்சலை தேவன்மீது வைத்தல்

1 பேது. 5:7—அவர் உங்களைக் குறித்து அக்கறை கொள்கிறபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் [மனஉளைச்சலையெல்லாம்] அவர்மேல் வைத்துவிடுங்கள் (கிரே.).

நம் மனஉளைச்சலை தேவன்மீது வைத்தல்

1 பேதுரு 5:7, “அவர் உங்களைக் குறித்து அக்கறை கொள்வதால், உங்கள் கவலைகளையெல்லாம் [மனஉளைச்சலையெல்லாம்] அவர்மேல் வைத்து விடுங்கள்” என்று கூறுகிறது. வைத்துவிடு என்று இங்கேயுள்ள இந்த வார்த்தைக்கு, “எறிந்துவிடு”, அதாவது, “ஒப்படைத்துவிடு, கொடுத்துவிடு” என்று பொருள். இங்குள்ள வினைச்சொல் ஒரேமுறையாக செய்துமுடிக்கும் செயலைக் குறிக்கிறது. உங்கள் மனஉளைச்சலை எல்லாம் என்ற வார்த்தைகள், நம் வாழ்க்கை முழுவதிலும் உள்ள நம் மன உளைச்சல் முழுவதும், அதாவது நம் முழு வாழ்க்கை, அதின் மனஉளைச்சலோடுகூட கர்த்தர்மீது வைக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது. நம் மனஉளைச்சல் என்ற பாரத்தை தேவன்மீது தூக்கியெறிவது எவ்வாறு என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது இப்போது நம் சொந்தத் தோள் மீது இருக்கக் கூடும், ஆனால் அது நம் தோள்களிலிருந்து தேவனிடம் வைக்கப்பட வேண்டும்.

வைத்துவிடு என்ற வினைச்சொல் ஒரே முறையாகச் செய்துமுடிக்கும் செயலைக் குறிக்கிறது என்றாலும், நாம் பலவீனமாக இருப்பதால், நம் மன உளைச்சல்களை மீண்டும் மீண்டும் தேவன்மீது வைக்க வேண்டியதிருக்கலாம். சில நேரங்களில் நாம் நம் மனஉளைச்சல்களை அவர்மீது வைத்துவிட்டு, சற்றுநேரம் கழித்து அவற்றை இரகசியமாக எடுத்துக் கொள்கிறோம். இது என் அனுபவமாக இருந்திருக்கிறது. நான் என் மன உளைச்சலைக் கர்த்தர்மீது வைக்கக்கூடும். ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, நானே அந்த மனஉளைச்சலை மீண்டும் எடுத்துக்கொண்டேன் என்று உணரக் கூடும், ஆகையால், “கர்த்தாவே, இந்த மன உளைச்சலை நான் உம்மிடமிருந்து மீண்டும் எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னியும். இப்போது மீண்டும், நான் உம்மீது என் மனஉளைச்சல்களை வைத்து விடுகிறேன்” என்று நான் ஜெபிக்க வேண்டும்.

மனஉளைச்சல் என்பதற்கான கிரேக்க வார்த்தை கவலை அல்லது “கரிசனை” என்பதாகும். உபத்திரவத்தில் விசுவாசிகளுக்கு ஏற்படும் பாடுகள் அவர்களுக்குக் கவலை மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்கள் தாழ்மையாக்கப்பட, அதாவது தங்கள் பெருமையிலிருந்து, இறுமாப்பிலிருந்து தாழ்த்தப்பட வேண்டியது மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையை அதன் கவலையுடன் தேவன்மீது தூக்கியெறியவும் வேண்டும், ஏனெனில் அவர் வல்லவர் மற்றும் நியாயமானவர் மட்டுமல்ல, அதோடு அவர் அவர்களை நேசிக்கிறவர் மற்றும் அவர்களுக்கு உண்மையுள்ளவரும் கூட.

நம் பரபரப்பான வாழ்க்கையில் சமாதானத்தைக் கண்டடைதல்

நமக்கு மனஉளைச்சல் ஏற்படுவதை விளக்க, பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதை ஓர் உதாரணமாக நாம் பயன்படுத்தலாம். விமானங்கள் தரையிறங்க வருவதை நீங்கள் கவனித்தால், அவை, வழக்கமாக, ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன என்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் சில நேரங்களில், அவை ஜோடி ஜோடியாக அல்லது ஓர் அணிவகுப்பாகக்கூட வருகின்றன. தரையிறங்கும் நேரத்திற்காகக் காத்துக்கொண்டு விமான நிலையத்தின்மேலே வட்டமிடும் ஒரு விமானத்தைப் போல மனஉளைச்சல் நம்மைச் சுற்றி வட்டமிடக்கூடும்.

வழக்கமாக, மக்களுடன் தொடர்புடையவர்கள் தனியாக வாழ்கிறவர்களைவிட அதிக மனஉளைச்சலடைவார்கள். உதாரணத்திற்கு, திருமணமாகி பல பிள்ளைகள் பெற்ற ஒரு சகோதரனைவிட ஒரு திருமணமாகாத சகோதரனுக்கு ஒருவேளை மிகக் குறைவான மனஉளைச்சலே இருக்கும். திருமணமான சகோதரன் தன் மனைவி மற்றும் பிள்ளைகள்மீது கொள்ளும் கரிசனை அவனை மனஉளைச்சல் அடையச்செய்கிறது. முதலாவது, அவனது மனைவி மனஉளைச்சலின் ஓர் ஊற்றாகிறாள். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், மனஉளைச்சலடைவதற்கு அவனுக்கு இன்னொரு காரணம் உண்டாகிறது. பிள்ளைகள் வளர்ந்து, திருமணமாகி, அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கும்போது, மன உளைச்சலுக்கான காரணங்கள் அதிகரிக்கக்கூடும், ஏனென்றால் இப்போது பேரப்பிள்ளைகள் மன உளைச்சலுக்கான ஊற்றாகிவிடுன்றனர்.

அனுபவத்திலிருந்து என்னால் சாட்சியிட முடியும், என்னிடம் எவ்வளவு காரியங்கள் இருக்கிறதோ, அவ்வளவு மனஉளைச்சல் எனக்கு ஏற்படுகிறது, அத்தனை “மனஉளைச்சல்-விமானங்கள்” என் தலைக்குமேல் வட்டமிடுகின்றன.

நாம் எல்லோரும் கர்த்தர்மீது நம் மன உளைச்சல் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனஉளைச்சலை அவர்மீது வைத்து விடவில்லை என்றால், நமக்குச் சமாதானம் இருக்காது. நான்கு வயதிற்கு உட்பட்ட சிறு குழந்தைகளுக்கு எந்த மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கக் கூடும். ஆனால் நமக்கு எவ்வளவு வயதாகிறதோ, நம்மிடம் அவ்வளவு மனஉளைச்சல் ஏற்படுகிறது, ஏனெனில் அத்தனை மன உளைச்சல்-விமானங்கள் நம் “விமானநிலையத்தில்” தரையிறங்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியானால், நாம் என்ன செய்வது? இது எளிதானதல்ல என்றாலும், நாம் நம் மனஉளைச்சலை கர்த்தர்மீது வைத்துவிட வேண்டும். நாம் கர்த்தரிடம் கொடுத்துவிட்ட அந்த மனஉளைச்சலை நாமே திரும்ப எடுப்பதாகக் கண்டால், நாம் அதை மீண்டும் அவர்மீது வைத்துவிட வேண்டும்.

“அவர் உங்களைக் குறித்து அக்கறை கொள்கிறார்” (கிரே.)

நம் மனஉளைச்சலையெல்லாம் கர்த்தர்மீது நாம் வைத்துவிடுவதற்கான காரணம், அவர் நம்மைக் குறித்து “அக்கறைகொள்கிறார்” என்று ஒன்று பேதுரு 5:7 கூறுகிறது. உங்களைக் குறித்து அவர் அக்கறைகொள்கிறார் என்ற வார்த்தைகள் “அவருக்கு உங்களைக் குறித்து அக்கறை இருக்கிறது” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். சிட்சித்து, நியாயந்தீர்க்கும் தேவனுக்கு விசுவாசிகளைக் குறித்து, விசேஷமாக துன்புறுத்தப்படுகிறவர்களைக் குறித்து ஒரு நேசிக்கும் கரிசனை உள்ளது. அவர் உண்மையுடன் அவர்களுக்குக் அக்கறை கொள்கிறார். விசேஷமாக தாங்கள் துன்புறுத்தப்படும் நேரத்தில், அவர்கள் தங்கள் கவலையை அவர்மீது வைத்துவிட முடியும். (Life-study of 1 Peter, pp. 301-302)
References: Life-study of 1 Peter, msg. 33; CWWN, vol. 18, pp. 255-265

Comfort in Trials— By the Lord’s Mercy-Seat – 684

1. Come, ye disconsolate, where’er ye languish;
Come to the mercy-seat, fervently kneel;
Here bring your wounded hearts, here tell your anguish,
Earth has no sorrow that heaven cannot heal.

2. Joy of the comfortless, light of the straying,
Hope of the penitent, fadeless and pure;
Here speaks the Comforter, tenderly saying-
Earth has no sorrow that heaven cannot cure.

3. Here see the Bread of Life; see water flowing
Forth from the throne of God, pure from above;
Come to the feast of love; come, ever knowing
Earth has no sorrow but heaven can remove.

 

Jump to section