மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பதினாறு – கிறிஸ்தவ வாழ்க்கையின் நம்பிக்கை

எபே. 1:18—தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்…நீங்கள் அறியும்படிக்கு, உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டும்.

மனிதனின் வீழ்ச்சியின் காரணமாக, விழுந்துபோன மனித இனத்திற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவிசுவாசிகளுக்கு இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, மரணமே. மரணமே அவர்களது சேருமிடம். தினந்தோறும், அவர்கள் தங்கள் மரணத்தை நோக்கியே வாழ்ந்துவருகின்றனர், அவர்கள் மரணத்திற்குச் செல்லும் வழியில் இருக்கின்றனர். ஆகவே, மரணமே அவர்களது எதிர்காலம்.

கிறிஸ்துவில் விசுவாசிப்பவர்களாக நமக்கு நம்பிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கை இருக்கிறது. நம் நம்பிக்கை கர்த்தரின் திரும்பி வருதலாகும். மேலும், நம் நம்பிக்கையில் உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும் உள்ளடங்கியுள்ளது. உயிர்த்தெழுதல் ஜீவனைப் பற்றிய காரியம் மட்டுமல்லாமல், ஜீவன் மரணத்தை ஜெயங்கொள்வதைப் பற்றிய காரியமும் கூட. ஜீவன் மரணத்தை ஜெயங்கொள்ளும்போது, அதுவே உயிர்த்தெழுதல். எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது உயிர்த்தெழுதலைத் தாண்டிச்செல்லும் ஒன்றாகும். ஒரு நபர் உயிர்த்தெழுப்பப்படக்கூடும், ஆயினும் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கக்கூடும்.
உயிர்த்தெழுதலும் எடுத்துக்கொள்ளப்படுதலும்

சபை வாழ்க்கைக்கான பரிசுத்த வாழ்க்கை என்பது ஓர் எதிர்காலத்தை உடைய வாழ்க்கையாகும், அதாவது அந்த வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை கர்த்தரின் திரும்பி வருதல் மட்டுமல்ல; அது உயிர்த்தெழுதல் மற்றும் எடுத்துக்கொள்ளப்படுதலுடன் கர்த்தரின் திரும்பி வருதலாகும். கர்த்தராகிய இயேசுவின் திரும்பி வருதல் உயிர்த்தெழுதலையும் எடுத்துக்கொள்ளப்படுதலையும் நிகழச்செய்யும். நாம் இப்போது குறிப்பிட்டிருக்கிறதுபோல், உயிர்த்தெழுதலும், எடுத்துக் கொள்ளப்படுதலும் ஜீவனுக்குக் கூடுதலாக இருக்கின்றன. இன்று ஜீவன் நம் உடைமை. நமக்கு ஜீவன் இருக்கிறது, நாம் ஜீவனில் இருக்கிறோம், நாம் ஜீவனை அனுபவித்துமகிழ்கிறோம். எனினும், நாம் கர்த்தரின் திரும்பிவருதலுக்காய்க் காத்திருக்கிறோம், அவரது வருகை உயிர்த்தெழுதலையும் எடுத்துக்கொள்ளப்படுதலையும் கொண்டுவரும். நிச்சயமாக, உயிர்த்தெழுதல் என்பது மரித்தோருக்காக இருக்கிறது. இன்று நாம் சபைக்காக ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தர் தம் திரும்பி வருதலைத் தாமதித்தால், நாமெல்லாரும் இறுதியில் “நித்திரை” அடைவோம், அதாவது பெளதிகமாக மரிப்போம். மரித்திருக்கும் எல்லா விசுவாசிகளும் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கின்றனர். கர்த்தராகிய இயேசுவின் திரும்பி வருதல்வரை நாம் வாழ்ந்தால், நமக்கு உயிர்த்தெழுதல் தேவைப்படாது. எனினும், நமக்கு இன்னும் எடுத்துக்கொள்ளப்படுதல் தேவைப்படும். மேலும், மரித்திருக்கிறவர்களுக்கு உயிர்த்தெழுப்பப்படுவதும், எடுத்துக்கொள்ளப்படுவதும்கூட தேவைப்படும். எல்லா விசுவாசிகளுக்கும், அதாவது மரித்தவர்கள் மற்றும் வாழ்கிறவர்களுக்கும் எடுத்துக்கொள்ளப்படுதல் தேவை. எனவே, எடுத்துக்கொள்ளப்படுதலே உண்மையில் பூமியில் நம் வாழ்க்கையின் முடிவாகும். நம் வாழ்க்கையின் முடிவு மரணமும் அல்ல, உயிர்த்தெழுதலும் அல்ல, அது எடுத்துக்கொள்ளப்படுதல் என்பதே இதன் அர்த்தம். (Life-study of 1 Thessalonians, pp 139-140)
நம்பிக்கையில் காக்கப்படுதலும், மேன்மைபாராட்டுதலும்

கிறிஸ்து இல்லாதிருக்கிற அவிசுவாசிகளுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை (எபே. 2:12, 1 தெச. 4:13). ஆனால் கிறிஸ்துவில் விசுவாசிகளாகிய நாம் நம்பிக்கையுடைய மக்கள். தேவனிடமிருந்து நாம் பெறுகிற அழைப்பு நமக்கு நம்பிக்கையைத் தருகிறது (எபே. 1:18, 4:4). ஒரு ஜீவிக்கிற நம்பிக்கைக்கென்று நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் (1 பேது. 1:4). நம்மில் இருக்கிற நம் கிறிஸ்து மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார் (கொலோ. 1:27; 1 தீமோ. 1:1), இது மகிமையில் நம் சரீர மீட்பை, உருமாற்றத்தை விளைவிக்கும் (ரோ. 8:23-25). இதுவே இரட்சிப்பின் நம்பிக்கை (1 தெச. 5:8), ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கை (தீத்து 2:13), ஒரு நல்ல நம்பிக்கை (2 தெச. 2:16), நித்திய ஜீவனின் நம்பிக்கை (தீத்து 1:3; 3:6); இது தேவனுடைய மகிமையின் நம்பிக்கை (ரோ. 5:2), சுவிசேஷத்தின் நம்பிக்கை (கொலோ. 1:22-23), பரலோகத்தில் நமக்காக வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை (வ. 4-6). நாம் எப்போதும் இந்த நம்பிக்கையைக் காத்துக்கொள்ள வேண்டும் (1 யோ. 3:3), இதில் மேன்மைபாராட்ட வேண்டும் (ரோ. 5:2). நம் தேவன் நம்பிக்கையின் தேவன் (15:13), வேதவாக்கியங்களின் ஊக்கப்படுத்துதல் மூலம் நாம் எந்நேரமும் தேவனில் (1 பேது. 1:21) நம்பிக்கையாக இருக்க முடியும் (ரோ. 15:4), அதில் களிகூர முடியும் (ரோ. 12:12). முடிவு வரைக்கும் நம்பிக்கையின் மேன்மைபாராட்டுதலை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும் (3:6), முடிவுவரைக்கும் நம் நம்பிக்கையின் முழு நிச்சயத்தின் சிரத்தையைக் காண்பிக்கவும் (6:11), நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவும் (வ. 18) [எபிரெயர் புத்தகம்] நமக்குக் கட்டளையிடுகிறது. (எபி. 11:1, footnote 2, Recovery Version)

References: Life-study of 1 Thessalonians, msg. 16; Heb. 11:1, footnotes 1—4, Recovery Version

கிறிஸ்து மகிமை நம்பிக்கை
மகிமையின் நம்பிக்கை—கிறிஸ்து மகிமைப்படுதல்

949
1 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, அவர் என் ஜீவன்,
மீண்டும் ஜெநிப்பித்தென்னைப் பூர்த்தியாய் நிரப்பினார்;
மேலோங்கும் தம் ஆற்றலால் தம்
மகிமை தேகம்போல்
என் தேகம் மாமகிமையாக்க வருகிறார்!

வருகின்றார், மகிமைப்படுத்திட!
என் தேகத்தை உம் தேகம்போல் உருமாற்றுவீர்.
வருகின்றார், மீட்பை நிறைவேற்ற!
மகிமையின் நம்பிக்கையாய் மகிமைப்படுத்தி.

2 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, தேவ இரகசியம்;
தேவ பூரணம் பகிர்ந்து, அவரை என்னுள் கொணர்கிறார்.
அவர் மகிமையில் பங்கடைந்து, அவருடன்
என்னை முற்றும் ஒன்றாய்ப் பிணைக்க வருகிறார்.

3 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, பூரண மீட்பு:
மீட்பார் சரீரம், இல்லை மரணம், எனக்கு விடுதலை.
அற்பமான என் தேகம் மகிமையாக்குவார்,
மரணத்தை ஜெயமாய் விழுங்க வருகிறார்.

4 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, என் சரித்திரம்:
என்னோடவர் ஒன்று, அவர் வாழ்வென் அனுபவம்;
அவரோடென்றும் முற்றும் ஒன்றாக வாழ்ந்திட,
மகிமை விடுதலை கொண்டு வருகிறார்.

Jump to section