மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் ஒன்பது – கிறிஸ்துவை அனுபவித்துமகிழுதல்

யோ. 6:35—இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

கர்த்தரைப் புசித்தல், குடித்தல், அனுபவித்துமகிழுதல்

அனுபவித்துமகிழ் என்ற வார்த்தையைப் புதிய ஏற்பாடு பயன்படுத்தவில்லை என்று சிலர் கூறக்கூடும். ஆனால் வேதம் புசித்தல், குடித்தல் என்ற காரியத்தைப் பற்றி பேசுகிறது. புசிப்பதோடும் குடிப்பதோடும் சம்பந்தப்பட்ட எதுவுமே அனுபவமகிழ்ச்சியைப் பற்றிய காரியமாகத்தான் இருந்தாக வேண்டும். “ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ. 6:35) என்று கர்த்தர்தாமே கூறினார். “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” (7:37-38) என்றும் அவர் கூறினார். இதற்குக் கூடுதலாக, அப்போஸ்தலனாகிய பவுல், வனாந்தரத்தில் மோசேயைப் பின்தொடர்ந்த இஸ்ரயேலர், “எல்லாரும் ஒரே ஆவிக்குரிய போஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஆவிக்குரிய பானத்தைக் குடித்தார்கள்” (1 கொரி. 10:3-4) என்று கூறினான். அதன்பின், யோவானால் எழுதப்பட்ட வெளிப்படுத்தல் புத்தகத்தில், “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு…ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன்” (2:7) என்று கர்த்தராகிய இயேசு வாக்குத்தத்தம் செய்தார். “ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக் கொடுப்பேன்” (வ. 17) என்றும் அவர் கூறினார். இந்த வசனங்கள் புசித்தல் குடித்தல் ஆகிய காரியங்களைக் குறிப்பிடுகின்றன, இவை நிச்சயமாக அனுபவ மகிழ்ச்சிக்கான காரியங்கள்.

புசித்தல் என்ற காரியத்தைப் பற்றி

தேவன் மனிதனைச் சிருஷ்டித்த பிறகு அவர் செய்த முதல் காரியம், மனிதனுக்குப் பத்துக் கட்டளைகளைத் தருவதோ, “ஆதாமே, நீ என்னை ஆராதிக்க வேண்டும், உன் ஊற்றை மறந்துவிடாதே. மேலும், நான் நீதியான, ஒழுக்கமுள்ள, பரிசுத்தமான, ஒளியால் நிறைந்த ஒரு நேர்த்தியான தேவன், எனவே நீ அதன்படி நடக்கவும், கீழ்ப்படியவும் வேண்டும்” என்று மனிதனிடம் கூறுவதோ அல்ல என்பதை ஆரம்பத்திலிருந்தே ஆதியாகமம் நமக்குக் கூறுகிறது. இவ்விதமான கருத்து மனிதக் கலாச்சாரத்திலிருந்து முளைத்தெழும்பிய ஒரு தயாரிப்பு; அது மனிதனுக்கான தேவனின் வெளிப்பாடு அல்ல. தேவன் மனிதனைச் சிருஷ்டித்த பிறகு, அவர் செய்த முதல் காரியம், மனிதனை ஜீவ விருட்சத்திடம் கொண்டு வந்து, “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” (2:16-17) என்று அவனிடம் கூறியதே ஆகும். இங்கே தேவன் மனிதனுடன் ஓர் உடன்படிக்கை செய்தார், இந்த உடன்படிக்கை புசித்தல் என்ற காரியத்தைப் பற்றியதாக இருந்தது. வேறு வார்த்தைகளில், புசித்தலே மனிதனின் இருத்தலுடன் தொடர்புடைய அதி முக்கியக் காரியமாகும்; மனிதன் சரியான காரியங்களைப் புசித்தால் அவன் நீண்ட காலம் வாழ்வான், அவன் தவறான காரியங்களைப் புசித்தாலோ, அவன் தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து, மரணத்தை வரவழைத்துக்கொள்வான். இந்தக் காரணத்திற்காக, தேவன் மனிதனைச் சிருஷ்டித்து முடித்த பிறகு, அவர் உடனடியாக புசித்தல் என்ற காரியத்தைப்பற்றி மனிதனிடம் பேசினார். எனினும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனி புசிப்புக்கு நல்லது என்று ஏவாள் கண்டபோது, அவள் தூண்டப்பட்டு, தவறான விதத்தில் புசித்தாள். இது மனிதனின் வீழ்ச்சியை விளைவித்தது.

மனிதன் விழுந்துபோனபின், அவனை இரட்சிக்கவும், புசித்தல் என்ற காரியத்திற்கு மீண்டும் அவனைக் கொண்டுவரவும் தேவன் வந்தார். இஸ்ரயேல் புத்திரர் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மூலம் தேவனுடைய மீட்பைப் பெற்றது மட்டு மல்லாமல், ஆட்டுக்குட்டியின் மாம்சத்தையும், புளிப்பில்லாத அப்பத்தையும் புசிப்பதன் மூலம் எகிப்தை விட்டு வெளியேற பலப்படுத்தப்படவும் பட்டனர் என்று யாத்திராமம் நமக்குக் காட்டுகிறது. அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்பு, வனாந்தரத்திற்குச் சென்றனர், அவர்கள் கானான்தேசத்தில் பிரவேசிக்கும்வரை, ஒவ்வொரு நாளும் மன்னாவைப் புசித்தனர். கானானுக்குள் நுழைந்த பிறகு, புசித்தல் என்ற காரியம் இன்னமும் தொடர்ந்தது. அவர்கள் தேசத்திலிருந்து விளைந்த தங்கள் உற்பத்திப் பொருட்களுள் பத்தில் ஒரு பங்கை, தலைசிறந்த பங்கை எடுத்துக்கொண்டு, எருசலேமுக்கு ஆண்டுக்கு மூன்று முறை பண்டிகைகளுக்காக வந்து, தமக்கு முன் புசித்து, குடித்து, அனுபவித்துமகிழும்படி தேவன் விரும்பினார் (உபா. 14:22-23). (CWWL, 1983, vol 3, “Abiding in the Lord to Enjoy His Life,” pp 301-303)

கர்த்தரைப் புசித்தல் நமக்கு
தேவனின் நியமனமாக இருத்தல்

தினமும் கர்த்தரைப் புசிப்பதே நமக்கான விதியாக, நம் எதிர்காலமாக இருக்கும் என்பதை உலகத் தோற்றத்துக்கு முன்பே கூட தேவன் நியமித்தார். கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும்? கர்த்தரைப் புசிக்க வேண்டும்! நீங்கள் எவ்விதமான கிறிஸ்தவன்? நாம் கர்த்தரைப் புசிக்கிற கிறிஸ்தவர்கள். உங்கள் சபை எப்படிப்பட்டது? கர்த்தரைப் புசிக்கிற ஒரு சபை. கிறிஸ்தவர்கள் கர்த்தரைப் புசிக்கிற மக்கள். (CWWL, 1972, vol 1, “Eating the Lord,” p 25)

References: CWWL, 1983, vol. 3, “Abiding in the Lord to Enjoy His Life,” ch. 1; CWWL, 1972, vol. 1, “Eating the Lord,” chs. 1, 2

சிங்காசனத்தினின்றோடும் ஆற்றில் பருகு!
கிறிஸ்துவை அனுபவித்தல்—உணவாகவும், பானமாகவும்
1151

1 சிங்காசனத்தினின்றோடும் ஆற்றில் பருகு!
கனிவளம் நிறை ஜீவ தருவில் புசி!
பிரகாசிக்க சூரியன் சந்திரன், விளக்கு
வேண்டாம், அங்கே இராக்காலம் இல்லை!

ஆவி, மணவாட்டி,
“வா” என்கிறார்கள்;
கேட்போனும் “வா” என்பானாக
நீர் வாரும்;
தாகம், விருப்பம்
உள்ளோன் ஜீவத்தண்ணீர்
இலவசமாய்க் கொள்ளட்டுமே!

2 கிறிஸ்து நம் நதி, கிறிஸ்து நம் நீர்,
உள்ளில் பொங்குவார்,
கிறிஸ்து நம் தரு, கிறிஸ்து நம் கனி,
உண்டு மகிழ்கின்றோம்;
கிறிஸ்து நம் பகல், கிறிஸ்து நம் ஒளி,
கிறிஸ்து விடிவெள்ளி;
நமக்கெல்லாம் கிறிஸ்துவே!

3 ஜீவத்தருவை உண்ண நம் உடை
தோய்த்துக் கழுவுகிறோம்;
“இயேசுவே, ஆமென், அல்லேலூயா!”—
இயேசு இனியவர்!
நம் ஆவியை இயக்கி நாம் அனுபவிக்கின்ற
கிறிஸ்துவை நாம் என்னென்போம்!

4 சூரியப் பிரகாசம் வீசும் இல்லம் ஒன்றுண்டு,
சகோதரர் இங்கே மெய்யாய் ஒன்றாய் வாழ்கின்றார்,
இயேசு நம்மைக் கூட்டுகின்றார், உள்ளூர் சபையில்
அவரைக் காண்பிக்கின்றோம்.

Jump to section