மேய்த்துப்பேணுதல்
திரட்டு 1
உயர்வான சுவிசேஷம்
பாடம் எட்டு – கிறிஸ்து ஜீவனே
கொலோ. 3:4—நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
ஆவிக் கிறிஸ்து நமக்குத் தந்துள்ள ஜீவன்
[வேதம் கூறுகிறது,] “ஆவியானவரே ஜீவனைத் தருகிறார்” (யோ. 6:63, கிரே.). ஆனால், ஆவியானவர் தருகிற ஜீவன் என்ன? பல வகையான ஜீவன் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்த உலகத்தில் தாவர ஜீவன் இருக்கிறது, விலங்கு ஜீவன் இருக்கிறது. தாவர ஜீவன் தாழ்வானது, விலங்கு ஜீவன் அதைவிட உயர்வானது. இந்த இரண்டு வகையான ஜீவனைவிட இன்னும் உயர்வானது மனித ஜீவன்.இந்த எல்லா விதமான ஜீவனும் அற்புதமானவை; ஆனால், ஒரு நான்காவது வகையான ஜீவன்—தேவனின் சிருஷ்டிக்கப்படாத ஜீவனான, தெய்வீக ஜீவனும்—உள்ளது.
அதிஉயர்ந்த ஜீவன்
இந்த அதிஉயர்ந்த ஜீவனின் குணாதிசயங்கள் யாவை? முதலாவதாக, தேவனின் இந்த ஜீவன் தெய்வீகமானது. தெய்வீகமாக இருப்பதென்றால் தேவனின் சுபாவத்தை உடையதாகத் தேவனுக்கு உரியதாக, மற்ற எல்லாவற்றிலிருந்தும் விஞ்சியும், வேறுபட்டும் இருப்பதாகும். தேவன் மட்டுமே தெய்வீகமானவர், எனவே அவரது ஜீவன் தெய்வீகமானது. மேலும், தேவனுடைய ஜீவன் நித்தியமானது. தேவனின் ஜீவன் சிருஷ்டிக்கப்படாதது; இதற்குத் துவக்கமுமில்லை, முடிவுமில்லை. நாம் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்தோம், நம் மனித ஜீவன் மரணத்தில் நிச்சயமாக முடிவடையப் போகிறது என்பதையும் நாம் எல்லாரும் உணர்ந்துள்ளோம். ஆயினும், தேவனுடைய ஜீவனுக்கு ஆரம்பமில்லை, அது நிரந்தரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். நூற்றாண்டுகளாக மனிதர்கள் தங்கள் வாழ்நாளை நீட்டிக்கும் இயந்திரங்களை உருவாக்க முயற்சி செய்திருக்கின்றனர், ஆனால் ஒருவரும் வெற்றி பெறவில்லை. ஆனால், தேவன் தாமாக-இருக்கிறவர், என்றென்றும்-இருக்கிறவர். அவரது ஜீவன் தோற்றுப்போகாது, மாறாதது. தேவனின் நித்திய ஜீவன் என்றென்றும் நிலைத்திருப்பது மட்டுமல்ல, அது குறைவோ பழுதோ இல்லாமல், தரத்தில் முற்றுமுடிய பூரணமாகவும், முழுமையாகவும் இருக்கிறது. (Christ Is Spirit and Life, pp. 9-11)
தேவனின் நித்திய ஜீவன்
அவரது குமாரனில் இருத்தல்
“தேவன் நமக்கு நித்திய ஜீவனை தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” என்று 1 யோவான் 5:11-12 கூறுகிறது. இந்த நித்தியத்திற்குரிய ஜீவன் குமாரனில் இருக்கிறது என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது வேறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
தேவ குமாரன் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினூடாய்க் கடந்து சென்று பரிசுத்த ஆவியாக மாறின பின்னர், அவர் இனியும் காலத்தாலும், இடத்தாலும் மட்டுப்படுத்தப்படவில்லை. இப்போது, நாம் அவரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நேரம் வரை, தேவனின் குமாரனைப் பெற்றுக்கொண்டவர்கள் தேவனைப் பெற்றிருக்கின்றனர். அது போலவே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்பவர்கள் குமாரனைப் பெற்றுக்கொள்கின்றனர். “கடைசி ஆதாம் ஜீவன்தரும் ஆவியானார்” என்று 1 கொரிந்தியர் 15:45 கூறுகிறது. இது கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்ட யாவரும் ஒரு புதிய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு திறனளிக்கிறது. அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, அவர்கள் தேவனிடத்திலிருந்து நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக் கொள்கின்றனர்.
கிறிஸ்துவை ஜீவனாகப் பெற்றுக்கொள்ளுதல் சுவாசித்தலைப் போல எளிமையாக இருத்தல்
திரு. F. B. மேயர் என்பவர் கர்த்தரால் மிகவும் பயன்படுத்தப்பட்ட [ஒரு நபர்]. ஒரு கால கட்டத்தில் பரிசுத்த ஆவியில் கிறிஸ்து நமக்கு எப்படி ஜீவனாக இருக்க முடியும் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளவும் முடியவில்லை, இந்த ஜீவனை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதை அறியவும் முடியவில்லை. ஒரு நாள் அவர், தான் தேவ குமாரனை ஜீவனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன், ஒரு மலையின் மேல் ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் எளிமையாக விசுவாசிப்பதே என திடீரென்று அவருக்குத் தோன்றியது. அவர் ஆழமாகச் சுவாசித்துவிட்டு, “கர்த்தாவே நான் இந்தக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிற இதே விதத்தில், நான் உம்மை எனக்குள் எடுத்துக்கொள்வதற்கு என் விசுவாசத்தைப் பயிற்சிசெய்கிறேன்” என்று ஜெபித்தார். அவர் மலையிலிருந்து கீழே இறங்கிய பிறகு, அவர் மற்றவர்களிடம், “நான் தேவ குமாரனைச் சுவாசித்த அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது” என்று சாட்சி கூறினார். தேவ குமாரனை ஜீவனாகப் பெற்றுக்கொள்வது மிக எளிமையான காரியம். இது உங்களுக்குள் காற்றைச் சுவாசிப்பதுபோல எளிமையானது. (CWWN, vol. 27, “The Normal Christian Faith,” pp. 143-144)
புசித்தல் மற்றும் பருகுதல் மூலம் வளருதல்
தெய்வீக ஜீவன் நமக்குள் வரும்போது, நாம் மறுபடிஜெநிப்பிக்கப்படுகிறோம்; நாம் தேவனின் ஜீவனைப் பெறுகிறோம், தேவனின் குமாரர்களாகிறோம்…நம் மனித வாழ்க்கையில், நாம் பிறந்த பிறகு, புசித்தல், பருகுதல் மூலம் நாம் தொடர்ந்து வளர்கிறோம். அது போலவே, கிறிஸ்துவை ஆவிக்குரிய உணவாகப் புசிப்பதன்மூலமும், ஆவியானவரை ஜீவத் தண்ணீராகப் பருகுவதன்மூலமும் நம் ஆவிக்குரிய ஜீவன் வளரும். நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைப் புசித்துப் பருகும்போது, நாம் தெய்வீக ஜீவனில் வளருவோம். இவ்விதமாய், நாம் தேவனைக் கொண்டு நிரப்பப்பட்ட மக்களாயிருப்போம், இறுதியாக நம் வாழ்வில் நாம் தேவனை வெளிக்காட்டுவோம். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அர்த்தம். (Christ Is Spirit and Life, p 17)
References: Christ Is Spirit and Life; CWWN, vol. 27, “The Normal Christian Faith,” ch. 12; CWWL, 1983, vol. 1, “The Five Great Mysteries in the Bible,” ch. 3
8380 –LIFE OF GLORY— OH, WHAT GLORY!
Experience of Christ— As Life
- Life of glory—oh, what glory!
Christ is glorious life to me;
Perfect, righteous, pure, and holy,
Life and light so rich is He!
All the glory of God’s nature
Dwells within Him hiddenly,
But as life is He imparted,
Me supplying inwardly. - Life divine—oh, joy to know it!
Christ is life divine to me;
He’s the consummated Spirit
Who has come to dwell in me.
Touching, moving, shining, teaching,
He’s th’anointing soothing me,
Filling, drenching, and refreshing,
Me supplying inwardly. - Life of power—oh, what power!
Christ’s the life of pow’r in me;
Crucified with Christ the Savior,
No more slave of sin I’ll be.
With Him I’ve been resurrected,
I in Him and He in me;
Resurrection pow’r I’ve tasted,
Me supplying inwardly. - Life of vict’ry—oh, what vict’ry!
Christ’s victorious life to me;
On the cross He won the vict’ry;
I’ll no more a captive be.
Satan, demons, world, and passions—
He has conquered all for me;
Now His life of victory is
Me supplying inwardly. - Life of glory—power, vict’ry!
Life divine is Christ to me!
He gives vict’ry, power; gives me
Growth unto maturity;
To His image He transforms me,
Makes me all transcendent, free;
Till I’m raptured, glorified, He’s
Me supplying inwardly.