மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பன்னிரண்டு – அன்புகூரும் தகப்பன்

லூக். 15:20-24—எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்தான். 21குமாரன் தகப்பனை நோக்கி, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். 22அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி, நீங்கள் அந்த உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்கு பாதரட்சைகளையும் போடுங்கள். (கிரே.) 23கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 24என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

மனிதன் தேவனைவிட்டு நீங்கி
வெகுதூரமாகச் செல்லுதல்

லூக்கா 15:11-24இலுள்ள இந்த உவமை மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள உறவை ஒரு குமாரனுக்கும் அவனது தகப்பனுக்கும் இடையே உள்ள உறவுடன் ஒப்பிடுகிறது. ஒரு மகன் தன் தகப்பனிலிருந்து வருகிறதைப் போல் மனிதன் தேவனிலிருந்து வருகிறான் என்று இது சுட்டிக்காட்டுகிறது. மனிதன் தேவனால் உண்டாக்கப்பட்டான். மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெறாதபோதுகூட, இன்று மனிதனுடைய ஜீவன் தேவனிடமிருந்தே வருகிறது. ஆகவே, சிருஷ்டிப்பின் அம்சத்தில், மனிதன் தேவனுடைய குமாரன்.

இரண்டு குமாரர்களில் இளையவன் ஒருநாள் தன் தகப்பனின் சொத்திலிருந்து தன் பங்கை எடுத்துக்கொண்டு, தன் தகப்பனை விட்டு, தூர தேசத்திற்குச் சென்றான். இது, மனிதன் தேவனிடமிருந்து தன் இயற்கை ஆற்றல் யாவற்றையும் பெற்றுக்கொண்ட பிறகு, தேவனிடமிருந்து வெகு தூரம் போகிறான் என்று காட்டும் ஒரு சித்திரம்.

தன் தகப்பனிடமிருந்து வெகு தூரத்திலுள்ள ஒரு தேசத்திலே, இந்த இளைய குமாரன் தன் முறைகேடான வாழ்க்கையால் தன் சொத்து முழுவதையும் வீணாக்கினான். இதன் விளைவாக, அவன் ஏழையாகி பன்றி மேய்த்துப் பிழைப்பு நடத்தினான். மனிதன் தேவனை விட்டு விலகும்போது, அவன் ஒரு பாவகரமான வாழ்க்கை வாழத் தொடங்குகிறான் என்பதை இது காண்பிக்கிறது. தன்னிடம் இருக்கும் யாவற்றையும் வீணாக்கிவிட்டு, அவன் பாவத்தில் விழுகிறான். பன்றிகள் அழுக்கானவை என்பதால், பன்றி மேய்ப்பது பாவமான வாழ்க்கை வாழ்வதை அடையாளப்படுத்துகிறது. நீங்கள் திரையரங்குகளுக்குச் செல்லும்போது அல்லது நீங்கள் நடனமாடச் செல்லும்போது, நீங்கள் பன்றி மேய்க்கப் போகிறீர்கள்.

மனிதன் தேவனிடம் திரும்புதலும்,
தேவனுக்காக வேலைசெய்ய விரும்புதலும்

அந்த இளைய குமாரன் தன் தரித்திரமான நிலையில் இருக்கும்போது, அவன் விழித்துக்கொண்டான். அவன் புத்தி தெளிந்து, தன் தகப்பன் வீட்டிலுள்ள நன்மைகளை நினைக்கத் தொடங்கினான். பாவத்திலிருக்கும் ஒரு மனிதன், அதாவது, பாவங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவன், தன் முடிவுக்கு வரும்போது, தேவனையும் அவருடைய ஆசீர்வாதத்தையும் நினைக்கிறான் என்பதை இது காண்பிக்கிறது. மனிதன் விழித்துக்கொள்ள தரித்திரம் உதவுகிறது. சிலர் முற்றுமுடிய பாவம் செய்யும்வரை, அவர்கள் விழித்துக்கொள்வது கடினம். அவர்கள் நடனம் அல்லது சூதாட்டத்தின் முடிவை வந்தடையும்போது, அவர்கள் விழித்துக்கொள்கின்றனர்.

இளைய குமாரன் தன்னுணர்வடைந்து, தன் தகப்பனை நினைவுகூர்ந்து, தன் தகப்பனிடம் திரும்பிச்செல்லத் தீர்மானித்தான். ஒரு மனிதன் பாவத்திலிருந்து விழித்துக்கொள்ளும்போது, அவன் தேவனை நினைப்பதும் அவரிடம் திரும்புவதும் இயற்கையானது என்று இது காண்பிக்கின்றது.

அந்தக் குமாரன் திரும்ப வரவிருந்தபோது, அவன் தன் பாவங்களை நினைத்து, இனி தன் தகப்பனுக்கு மகனாயிருக்கத் தான் பாத்திரன் அல்ல என்பதை உணர்ந்தான். இதற்குப் பதிலாக, அவன் ஒரு வேலைக்காரனாக இருக்கச் சித்தமாயிருந்தான், தன்னைக் கூலிக்காரனாகச் சேர்த்துக்கொள்ளும் படி தன் தகப்பனிடம் வேண்டிக்கொள்ளச் சென்றான். ஆகவே, அவன் தன் தகப்பனைச் சந்திக்க நான்கு வாக்கியங்களைத் தயாரித்தான்: ஒன்று, “நான் பரத்துக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்”; இரண்டு, “நான் உமக்கு முன்பாகப் பாவம் செய்தேன்”; மூன்று, “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல”; நான்கு, “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” (வ. 18-19).

ஒரு பாவி விழித்துக்கொண்டு தேவனிடம் திரும்பும்போது, தான் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததையும், தான் தேவனின் ஆசீர்வாதத்திற்குப் பாத்திரன் அல்ல என்றும் உணர்வது இயற்கையானதே என்பதை இது காண்பிக்கிறது. வேறு வார்த்தைகளில், தான் தேவனிடமிருந்து எதையும் இலவசமாகப் பெறத் தகுதியற்றவன் என்று அவன் உணருகிறான். இதன் கார           ணமாக, தன் வேலையையும் நன்நடத்தையையும் தேவனின் நன்மைக்கு ஈடாகத் தருவதை அவன் சார்ந்துகொள்கிறான். இவ்வாறு, தேவனுக்கு முன்பாக தன்னைத்தான் முன்னேற்றிக்கொள்ள அவன் எதிர்நோக்குகிறான். இப்படி ஒரு குமாரனாயிருப்பதற்குப் பதிலாக ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பது, மனம்திரும்பும் ஒவ்வொரு பாவியின் தவறான கருத்தாகும். இந்தக் கருத்தின் காரணமாக, மனிதன் தன்னுடைய சொந்தத் தகுதிகளைத் தேவனுடைய நன்மைகளுக்கு ஈடாகக் கொடுக்க அவற்றை நிலைநாட்ட எப்போதும் முயற்சிக்கிறான்.

மனிதன் தேவனுடைய இருதயத்தை
உணராமல் இருத்தல்

தான் ஒரு குமாரனாயிருக்கத் தகுதியற்றவன் என்று உணர்வதில், ஒரு வேலைக்காரனாக இருக்க விரும்புவதில், அந்த இளைய குமாரனிடம் ஒரு தாழ்மையான இருதயம் இருந்தபோதும்கூட, தன் தகப்பனின் இருதயத்தை அவன் உணரவில்லை. அவனுடைய தகப்பனின் இருதயத்திலோ தன் குமாரனின் மீதான ஏக்கம் இருந்தது. பல பாவிகளிடம் இப்படிப்பட்ட ஒரு தாழ்மையான இருதயம் இருக்கக்கூடும், ஆனால், அவர்கள் தேவனின் இருதயத்தை உணருவதில்லை. மனந்திரும்புகிற பாவிகள் தமக்காக வேலை செய்வார்கள் என்பதல்ல, மாறாக, தம் குமாரர்களாக இருப்பார்கள் என்பதே தேவனின் இருதயமாக இருக்கிறது. ஒரு கூலிக்காரன் என்பவன் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப சம்பாதித்துக்கொடுக்க வேண்டும், தான் பெற்றுக்கொள்வதற்காக வேலைசெய்தாக வேண்டும், இப்படியிருக்க, ஒரு குமாரன் தன் தகப்பனிடமிருந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெறுகிறான்.

தேவன் மனிதனைப் பெற்றுக்கொள்ளுதல்.

இளைய குமாரன் தன் தகப்பனிடம் திரும்பிச்செல்கையில், தன் தகப்பன் தன்னைப் பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் சிறிதும் அவனிடம் இல்லை. தான் அநேக நேரம் கதவைத் தட்ட வேண்டியிருக்கும் என்றும், தன் தகப்பன் இறுதியில் கதவைத் திறக்க ஒருவரை அனுப்புவார் என்றும் அந்தக் குமாரன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். குமாரன் திரும்பி வந்து கொண்டிருக்கையிலேயே, இன்னும் தூரத்தில் இருக்கையில், அவனது தகப்பன் அவன் வருவதைக் கண்டு, அவனைச் சந்திக்க ஓடினான். இது தன் தகப்பனிடம் தான் திரும்பிச் செல்லும் காரியம் என்று அந்தக் குமாரன் நினைக்கையில், அது இன்னும் அதிகமாக, தன்னைப் பெற்றுக்கொள்ள தன் தகப்பன் காத்திருக்கும் ஒரு காரியமாக இருந்தது.

தகப்பன் குமாரனைப் பார்த்தபோது மனதுருகினான். அவனது இருதயம் அசைக்கப்பட்டதால், அது அவன் ஓடிப்போய், தன் குமாரனின் கழுத்தைக் கட்டிப்பிடித்து, முத்தமிட வைத்தது. இந்த ஓட்டம், நேரத்தையும் அவர்களுக்கிடையே உள்ள தூரத்தையும் குறைத்தது. ஓடுதல் கால்கள் சம்பந்தப்பட்டது. குமாரனுடைய கழுத்தைக் கட்டிப்பிடித்தல் கைகள் சம்பந்தப்பட்டது; முத்தமிடுதல், வாய் சம்பந்தப்பட்டது, இது உணர்ச்சியை வெளிக்காட்டக்கூடியது. எனவே, தன் குமாரனுக்காகத் தகப்பனுடைய முழு ஆள்தத்துவமும் அசைக்கப்பட்டது என்று நாம் பார்க்க முடிகிறது. ஒரு பாவி மனந்திரும்புவதைப் பரலோகத்தில் உள்ள தேவன் பார்க்கும் போது, அவர் மனதுருகி அவனைச் சந்திக்க ஓடுகிறார் என்பதை இது அடையாளப்படுத்துகிறது. மனம்திரும்புகிற ஒரு பாவியைத் தம் முழு இருதயத்தோடும் அவர் அணைத்துக்கொள்கிறார். மனம் திரும்புவதற்கு முன், தேவன் பயங்கரமானவர் அச்சம்தரக் கூடியவர் என்று பலர் நினைக்கின்றனர், ஆனால் மனந்திரும்பிய பின், தேவன் மிகப் பிரியமானவர், மிக நெருக்கமானவர் என்பதை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.

தேவன் மனிதனை நீதிப்படுத்துதல்

தகப்பன் அவனை முத்தமிட்ட பின், குமாரன் தான் ஆயத்தம் செய்த பேச்சை உடனே பேசத் தொடங்கினான். ஆனால், அவன் தன் முதல் மூன்று வாக்கியங்களை முடித்ததுமே, தகப்பன் அவனைக் குறுக்கிட்டான். “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்குப் பாத்திரன் அல்ல” என்று குமாரன் கூறினான், அப்போது, தகப்பன் வேலைக்காரரை நோக்கி, “நீங்கள் அந்த அதிஉயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்துங்கள்” (கிரே.) என்றார் (வ. 21-22). தன் குமாரன் என்று சொல்லப்படுவதற்குத் தகுதியற்றவன் என்று அந்தக் குமாரன் சொல்வதை, அந்தத் தகப்பனின் இருதயம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, அந்த அதிஉயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவரும்படி அவன் தன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டான். இதில் அந்த என்ற வார்த்தை ஒரு முக்கியமான வார்த்தை. அந்த அதிஉயர்ந்த வஸ்திரம் நீண்ட நாட்களுக்கு முன்பே ஆயத்தமாக்கப்பட்டிருந்த வஸ்திரமாக இருந்தது. தகப்பன் பேசியபோது, வேலைக்காரர்கள் அது எது என்பதை அறிந்துகொண்டனர். தகப்பன், “அந்த அதிஉயர்ந்த வஸ்திரம்” என்று மட்டுமே சொல்ல வேண்டியிருந்தது, வேலைக்காரர்கள் உடனே புரிந்துகொண்டனர். தகப்பன் குமாரனின் கைக்கு மோதிரத்தையும், அவனது பாதத்திற்குக் காலணியையும் அணிவித்தான், கொழுத்த கன்றையும் அடித்தான். இவை யாவும் குமாரனின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது.

அந்தக் குமாரன் செய்தது போல், நாம் ஒரு பேச்சை ஆயத்தம்செய்கிறோம், ஆனாலும் தேவன் அந்த அதிஉயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவருகிறார். ஆனால்என்ற வார்த்தை வலியுறுத்தப்பட வேண்டும். இது புதிய ஏற்பாட்டில் ஒரு பெரிய வார்த்தை. இந்த ஆனால் நம்மை இரட்சிக்கிறது…நாம் ஆக்கினைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள், ஆனாலும் தேவன் நம்மை நீதிப்படுத்தினார்; நாம் நரகத்திற்குப் போயிருக்க வேண்டியவர்கள், ஆனால் நாம் அதற்குப் பதிலாக பரலோகத்திற்குச் செல்கிறோம். அங்கியை அணிவிப்பது நம் நீதியாகிய கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. ஒரு பாவி கிறிஸ்துவை அணியும்போது, அவன் தேவனுக்குப் பொருந்துகிறான், நீதிப்படுத்தப்படுகிறான்.

தகப்பன் குமாரனுடைய பாதங்களுக்குக் காலணியை அணிவிக்கிறார். காலணிகள் மனிதனைப் பூமியிலிருந்து வேறுபிரிக்கிறது. ஒரு மனிதன் தேவனிடம் திரும்பி வந்து நீதிப்படுத்தப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்படுகிறபோது, அவன் பூமியிலிருந்து வேறுபிரிக்கப்பட முடியும். அவனது கால்களில் காலணிகளை அணிவித்தபின், தகப்பன் கொழுத்த கன்றை அடித்தான். கொழுத்த கன்றை அடிப்பது, நம் ஜீவனாகவும் அனுபவ மகிழ்ச்சியாகவும் நமக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே, நாம் நிரப்பப்படவும், சந்தோஷமாயிருக்கவும் முடியும்.

தேவனும் மனிதனும் சேர்ந்து சந்தோஷப்படுதல்

இந்த நேரத்தில்தான், தகப்பனும் மகனும் சேர்ந்து புசித்தனர், குடித்தனர், சந்தோஷமாக இருந்தனர். குமாரன் திரும்பி வருவதற்கு முன்பு தகப்பனுக்கு எந்தச் சந்தோஷமும் இல்லை. குமாரன் வீட்டை விட்டு அலைந்துதிரிந்து துன்பப்படுகையில், வீட்டில் தகப்பனும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்…பாவிகள் தேவனை விட்டு, அலைந்து துன்பப்படும்போது, தேவன் சந்தோஷமற்றவராக இருக்கிறார். பாவிகள் தேவனுடன் வீட்டில் இருந்து, புசித்து சந்தோஷமாயிருக்கும்போது மட்டுமே தேவன் மகிழ்ச்சியாயிருக்கிறார்.

[ஒரு பாவி] தேவனிடம் திரும்பும் போது, அவன் அவரால் பெற்றுக்கொள்ளப்பட்டு, நீதிப்படுத்தப்படுகிறான். வேறு வார்த்தைகளில், அவன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டான், அவன் உயிரோடிருக்கிறான். (CWWL, 1954, vol. 3, “Gospel Outlines,” pp. 191-195)

References: CWWL, 1954, vol. 3, “Gospel Outlines,” Subject 91; Life-study of Luke, msg. 34

I’VE WANDERED FAR AWAY FROM GOD

Gospel—Coming to the Lord

1052

  1. I’ve wandered far away from God,
    Now I’m coming home;
    The paths of sin too long I’ve trod,
    Lord, I’m coming home.
  2. Coming home, coming home,
    Nevermore to roam;
    Open wide Thine arms of love;
    Lord, I’m coming home.
  3. I’ve wasted many precious years,
    Now I’m coming home;
    I now repent with bitter tears,
    Lord, I’m coming home.
  4. I’m tired of sin and straying, Lord,
    Now I’m coming home;
    I’ll trust Thy love, believe Thy word;
    Lord, I’m coming home.
  5. My soul is sick, my heart is sore,
    Now I’m coming home;
    My strength renew, my hope restore:
    Lord, I’m coming home.
  6. My only hope, my only plea,
    Now I’m coming home;
    That Jesus died, and died for me;
    Lord, I’m coming home.
  7. I need His cleansing blood, I know,
    Now I’m coming home;
    O wash me whiter than the snow;
    Lord, I’m coming home.