மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் நான்கு – வேதாகமம்

2 தீமோ. 3:16—வேதவாக்கியங்களெல்லாம் தேவனால் சுவாசித்து ஊதப்பட்டிருக்கிறது…அவை உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்துதலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது (கிரே.).

வேதாகமம், உலகத்திலுள்ள மற்ற எல்லாப் புத்தகங்களையுவிட மேலானதாக விளங்குகிறது. இது ஓர் ஒப்பற்ற புத்தகம். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை, “தேவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் அதிசிறந்த பரிசு வேதமே. உலகத்திற்கு இரட்சகர் தந்த நன்மைகள் யாவும், இந்தப் புத்தகத்தின் மூலம் பகரப்படுகின்றன” என்று கூறினார். இது, உலகத்திலுள்ள வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிகமாக உலகம் முழுவதும் மிகப் பரவலாக வாசிக்கப்படும் புத்தகமாகும், அதோடு, இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எண்ணற்ற மக்கள் குழப்பம்நிறைந்த மற்றும் நிச்சயமற்ற நேரங்களில் ஆறுதல், நம்பிக்கை, மற்றும் வழிகாட்டுதலுக்காக வேதத்திடம் திரும்பியுள்ளனர். வேதம் என்ற வார்த்தை “புத்தகம்” என்னும் பொருள் கொண்ட பிப்லோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. உலகத்தில் உள்ள மற்ற எல்லா புத்தகங்களையும்விட வேதம் ஓர் ஒப்பற்ற புத்தகமாக நிலைத்துள்ளது என்பதே இதன் பொருள்.

வேதம் உயர்தரமான புத்தகங்களின் மத்தியில் அதிஉயர்வாக இருத்தல்

வேதம் அதின் பதிவேட்டில் உயர்வாக இருத்தல்

முதல் உண்மை என்னவென்றால், எல்லாப் புத்தகங்கள் மத்தியில் வேதம் நம்பகத்தன்மையுள்ள அதன் பதிவேட்டில் தனித்து நிற்கிறது. வேறு மதங்களின் பல இலக்கியத் தொகுதிகள் கட்டுக்கதைகளாலும், புராணக்கதைகளாலும் நிறைந்துள்ளன. ஆனால், வேதத்தின் பக்கங்களில் உண்மை சம்பவங்கள், மக்கள், இடங்கள் ஆகியவை குறித்த எண்ணற்ற குறிப்புகள் இருப்பதை நாம் காண்கிறோம். தொல்லியல் விஞ்ஞானம், உலக சம்பந்தமான வரலாற்றுப் பதிவேடுகளை வைத்து, வேதம்சார்ந்த பல்வேறு புத்தகங்களில் உள்ள குறிப்புகளின் துல்லியத்தன்மையை உறுதி செய்கிறது.

வானங்கள், பூமி, சிருஷ்டிக்கப்பட்ட எல்லாப் பொருட்கள் உட்பட, இப்பிரபஞ்சத்தை ஒன்றும் இல்லாமையிலிருந்து சிருஷ்டித்த ஒரு சர்வவல்ல, நித்திய சிருஷ்டிகரைக் குறித்து வேதம் கூறுகிறது. சிருஷ்டிப்பைக் குறித்த ஆதியாகமத்தின் பதிவு, தன்னில்தானே அறிவியல் வருணனையாக இல்லாதிருக்கையில், அது அறிவியல் சான்றுகளுடன் முழுவதும் ஒத்திருக்கிறது.

வேதம் அதன் ஞானத்திலும் ஆழத்திலும்
உயர்வாக இருத்தல்

இரண்டாவது, வேதம் தேவனுடனான மனிதனின் உறவு, சக மனிதனோடுள்ள அவனது உறவு, அவனது எண்ணம், அவனது நோக்கம், அவனது நடத்தை, மற்றும் அவனது அனுதின வாழ்க்கை ஆகியவற்றைக் குறித்த மிக மேன்மையான ஞானத்தை உள்ளடக்கியுள்ளது. பழைய ஏற்பாட்டு காலத்தில் பூமியில் இருந்த பெரும்பாலான கலாச்சாரங்கள், பல கடவுள் கொள்கையை நம்புகிறதாக, அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை நம்புவதாக இருந்தன. தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டவை பெரும்பாலும் கொடுமையாக, ஆக்ரோஷமாக, அல்லது ஒழுக்கக்கேடானதாகக்கூட இருந்தன. ஆனால், வரம்பற்றவரும் நபர்ரீதியானவரும், ஒரு தகப்பனாகவும் கணவனாகவும் மனிதர்களுக்கு அக்கறைகொள்கிறவரும், அன்பு, மரியாதை, நீதி, மற்றும் இரக்கமே உருவானவருமான ஓர் ஒப்பற்ற தேவனை வேதம் வெளிப்படுத்துகிறது.

இறையியல், மனிதப் பண்பியல், வானியல், நிலவியல், அறிவியல், தத்துவம், சமூகவியல், அரசாங்கம், கல்வி, கலாச்சாரம், மற்றும் காலயியல் போன்ற எல்லா விதமான தகவல்களையும் வேதம் வழங்குகிறது.

வேதம் அதன் நீதிநெறியிலும், ஒழுக்க
நெறியிலும் அதிஉயர்வாக இருத்தல்

வேதத்தின் அளவுக்கு ஓர் உயர்ந்த நீதிநெறி மற்றும் ஒழுக்கநெறியின் தரம், வேறு எந்தப் புத்தகத்திலும் இல்லை. நீடிய சாந்தமுள்ள, தயவுள்ள, பொறாமையில்லாத, தன்னைப் புகழாத, இறுமாப்பாய் இராத ஒரு மனித நற்பண்பாகவுள்ள நேர்த்தியான அன்பை இது விளக்குகிறது (1 கொரி. 13:4). இது, ஒருவனது சத்துருவுக்கும்கூட மன்னிப்பை வழங்கும் அன்பை வரையறுக்கிறது (மத். 5:44). மனிதனுக்காக தம் ஒரேபேறான குமாரனைக் கொடுத்த தேவனின் சொந்த செயலில் அன்பை இது எடுத்துரைக்கிறது (யோ. 3:16). கிறிஸ்தவர்கள் அன்பில் நடப்பவர்கள் (எபே. 5:2), சபை அன்பில் கட்டியெழுப்பப்படும் ஒரு சமூகம் (4:16).

வேதம் அதின் ஆதிக்கத்தில்
உயர்வாக இருத்தல்

வரலாறு முழுவதும் பல புகழ்பெற்ற மனிதர்கள், வேதத்தைப் படித்ததின் மூலமாக கிறிஸ்துவில் விசுவாசிப்பதற்கு ஏவப்பட்டிருக்கின்றனர். பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு புனித எலீனா தீவுக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர், அவன், தானும் மற்ற மாபெரும் தலைவர்களும் தங்கள் இராஜ்ஜியங்களைப் படை வலிமையின்மேல் நிறுவிய போதும், இயேசு கிறிஸ்துவோ தம் இராஜ்ஜியத்தை அன்பினால் கட்டினார் என்று அறிக்கை செய்தான். தன் இலக்கிற்காக மரிப்பதற்கு மனிதர்களை தன்னால் ஒன்றுகூட்ட முடிந்தது என்றாலும், தான் அவர்களிடம் முகமுகமாய் பேசுவதன் மூலமே அவ்வாறு செய்ய முடிந்தது என்றும், அப்படியிருக்க, இயேசு கிறிஸ்துவை ஒருமுறைகூட பார்க்காமல் இருந்தும் கடந்த பதினெட்டு நூற்றாண்டுகளாகக் கணக்கிலடங்காத ஆண்களும், பெண்களும் தங்கள் வாழ்க்கைகளை மகிழ்ச்சியுடன் அவருக்காக தியாகம்செய்ய விருப்பமாக இருந்து வந்தனர் என்றுகூட அவன் அறிக்கைசெய்தான். கிறிஸ்துவைப் பின்பற்ற எல்லாவற்றையும் விட்டுவிடவும், அவருக்காக இரத்தசாட்சியாக மரிக்கவும் இத்தனைப் பேர் விரும்பியதற்குக் காரணம், அவர்கள் வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவைப் பார்த்திருக்கின்றனர் என்பதே.

வேதம் தேவனின்
பரிசுத்த வார்த்தையாக இருத்தல்

வேதம் அதன் சுபாவத்தில் தெய்வீகமாக இருப்பதே, அது மற்ற எல்லாப் புத்தகங்களிலிருந்து வேறுபடுவதற்குக் காரணம். வேதவாக்கியம் தேவனால்-சுவாசித்து ஊதப்பட்டது (2 தீமோ. 3:16). வேதவாக்கியம் மனிதனின் எண்ணத்திலிருந்து, மனிதனின் மனதிலிருந்து வரவில்லை, மாறாக அது, எழுத்தாளர்களுக்குள்ளும் அவர்களிலிருந்தும் தேவன் தம் ஆவியின்மூலம் தம் எண்ணத்தையும், தம் வார்த்தையையும் சுவாசித்து ஊதுதலாக இருந்தது என்று இது நமக்குக் கூறுகிறது. ஆகவே, வேதம் தேவனின் மூலக்கூறை உள்ளடக்கியுள்ளது, அதின் சுவையைக் கொண்டுள்ளது. தேவனின் சுவாசத்தின் வார்த்தையின் மூலம் தினமும் தேவனைத் தொடர்புகொள்ளவும், அவரை ருசிக்கவும் முடிவதே, ஒரு கிறிஸ்தவனின் அதிபெரிய மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதம்.

வேதவாக்கியம், தேவன் தம் ஆவியின்மூலம் தம் வார்த்தையை மனிதர்களிலிருந்து சுவாசித்து ஊதுதலாக இருப்பதால், வேதவாக்கியத்தின் எந்த ஒரு வார்த்தையும் மனிதனின் சித்தத்தினால் உண்டாயிருக்க முடியாது; மாறாக, மனிதர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டு, தேவனிடமிருந்து பேசினர். “மனுஷர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு தேவனிடமிருந்து பேசினார்கள்” (2 பேது. 1:21, கிரே.) என்ற வார்த்தைக்கு, இருமடங்கு அர்த்தம் உள்ளது: முதலாவது, மனிதர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டனர்; இரண்டாவது, மனிதர்கள் தேவனிடமிருந்து பேசினர். அசல் கிரேக்க மொழியில், பரிசுத்த ஆவியால் ஏவப்படுதல் என்பது, காற்றால் ஒரு பாய்மரக் கப்பல் இழுத்துச்செல்லப்படுவதைப் போல இழுத்துச் செல்லப்படுவதைக் குறிக்கிறது. வேதத்தை எழுதியவர்கள் தேவனின் தூண்டுதலைப் பெற்றனர், அவர்கள் தேவனின் வார்த்தையைப் பேச பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் இருந்தனர். அதோடு, அவர்கள் பேசிய போது, அவர்கள் தேவனுக்குள்ளிருந்து பேசினர். இது தேவ ஆவியானவர் மனிதர்களைப் பேசுவதற்காக ஏந்திச் செல்வதாகும், அதோடு இது மனிதர்கள் தேவனுக்குள்ளிருந்தும் பேசுவதாக இருந்தது. வேறு வார்த்தைகளில், இது மனிதர்களுக்குள்ளிருந்து அவர்களது வாயின்மூலம் தேவன் தம் சொந்த வார்த்தையைப் பேசியதாக இருந்தது.

வேதத்தின் முக்கியக் கருப்பொருட்கள்

1.வேதம் என்பது தேவனும்
அவருடைய திட்டமுமே

வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவன், ஞானம் மற்றும் குறிக்கோளுடைய தேவன். அறிவுக் கூர்மையாகவும் குறிக்கோளுள்ளவனாகவும் இருக்கிற எந்த நபரும் திட்டங்களால் நிறைந்திருப்பதைப்போலவே, மிக ஞானமுள்ள நம் தேவனிடம், ஒரு நித்திய திட்டம் உள்ளது, இந்தத் திட்டம் மனிதனோடும் உலகத்தோடும் அதிகம் தொடர்புடையது.

2.மனிதனும், அவனுக்கு விதிக்கப்பட்ட விதியும்

மனிதன் எங்கிருந்து வந்தான், எப்படி உண்டாக்கப்பட்டான் மற்றும் அவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்பதை வேதம் நமக்குக் கூறுகிறது. மனிதனுக்கான தேவனின் திட்டத்தைப் பற்றியும் இது கூறுகிறது.

3.கிறிஸ்து

கிறிஸ்துவே வேதத்தின் மைய நபர். பழைய ஏற்பாடு அவரைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனமாகும், புதிய ஏற்பாடு இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும். மனுக்குலத்திற்கான மீட்பு மற்றும் இரட்சிப்பை இந்தக் கிறிஸ்து எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை வேதம் நமக்குக் கூறுகிறது.

4.பரிசுத்த ஆவி

[பரிசுத்த ஆவி] தேவனின் மூன்றாவது நபர். தேவனைப்பற்றிய மனிதனின் அனுபவத்தோடுள்ள தொடர்பில் இவர் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறார்.

5.தெய்வீக ஜீவன்

[தெய்வீக ஜீவன்] என்பது ஒரு நபர் கிறிஸ்துவில் விசுவாசிக்கிறபோது அவன் பெறுகிற தேவனின் ஜீவனாகும். இந்தத் தெய்வீக ஜீவன் கிறிஸ்துவில் விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் வாழ்கிறது, அவர்களை நடத்துகிறது, அவர்களின் வாழ்க்கையை மறுசாயலாக்குகிறது.

6.கிறிஸ்துவில் உள்ள விசுவாசிகள்

கிறிஸ்துவில் ஒரு விசுவாசியாக இருப்பதின் அர்த்தத்தையும், ஒரு நேர்த்தியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கான வழியையும் புதிய ஏற்பாடு நமக்குக் கூறுகிறது.

7.சபை

[சபை] இன்று பூமியில் விசுவாசிகளாலான தேவனின் சமுதாயமாக உள்ளது. சபை என்னவாக இருக்கிறது, எவ்வாறு விசுவாசிகள் சபையாகக் கூடிவர வேண்டும் என்று வேதம் விளக்குகிறது.

8.தேவனுடைய இராஜ்ஜியம்

[தேவனுடைய இராஜ்ஜியம்] என்பது இந்த யுகத்திலும், வருகிற யுகங்களிலும் தேவன் தம் ஆளுகையையும் அதிகாரத்தையும் பயிற்சிசெய்கிற ஒரு மண்டலம்.

9.புதிய வானம் புதிய பூமி

[புதிய வானம் புதிய பூமி] என்பது எதிர்காலத்திலே நித்தியத்தில் நிகழப்போகும் காரியங்களைப் பற்றிப் பேசுகிறது.

வேதத்தை வாசிப்பதன் மூலம்
இயேசு கிறிஸ்துவைச் சந்தித்தல்

நீங்கள் சத்தியத்தை நாடுகிற, உங்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிற நபராக இருந்தால், நீங்கள் வேதத்தை வாசிக்க வேண்டும், வேதத்தில் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவை நீங்கள் நோக்கிக் கூப்பிட வேண்டும். ஒவ்வொரு நபரும் தேவனின் காரியங்களைப் புரிந்துகொள்ளவும், அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் கூடுமாறு தேவன் ஒவ்வொருவருக்கும் ஓர் ஆவியைத் தந்திருக்கிறார் (யோபு 32:8). புதிய ஏற்பாட்டை வாசிப்பதன்மூலம், இந்த அற்புதமான புத்தகமாகிய வேதத்தை நீங்கள் வாசிக்க ஆரம்பிப்பீர்கள் என்று நம்புகிறோம், அதோடு, இந்தப் புத்தகத்திலுள்ள இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதன்மூலம் நீங்கள் ஒரு கனிகொடுக்கிற, நிறைவான வாழ்வை இன்று தொடங்குவீர்கள் என்றும் நம்புகிறோம். (The Bible, pp. 1-2, 6-8, 11-18)

References: The Bible; On Knowing the Bible; CWWL, 1985, vol. 4, “The Full Knowledge of the Word of God”

ALL SCRIPTURE IS THE VERY BREATH OF GOD

Study of the Word—The Function of the Word

799

  1. All Scripture is the very breath of God,
    And by His Spirit into words was breathed;
    By godly men the words were written down,
    With all God’s fulness unto man bequeathed.
  2. It is the breath of God as light to man,
    With rays divine man to illuminate;
    It shines in darkness and to man reveals
    What is his truest need and actual state.
  3. It is the breath of God as life to man,
    Nature divine to man it doth impart;
    The dead it quickens and regenerates,
    Transforms the soul-life and renews the heart.
  4. It is the breath of God as wisdom too,
    Knowledge divine to man it has to teach;
    Th’ eternal purpose of the Lord it shows,
    And leadeth man God’s final goal to reach.
  5. It is the breath of God as strength to man,
    Power divine to man it doth transmit,
    Strength’ning the weak, empowering the faint,
    Enabling man God’s purpose full to fit.
  6. It is the breath of God for us to breathe,
    That as our portion God we may enjoy;
    Receiving it by spirits exercised,
    Our need is met, His wealth we may employ.