மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் மூன்று – சபை வாழ்க்கை நிஜமான சமுதாய வாழ்க்கையாக இருத்தல்

யோ. 13:34-35—நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள்.

ஒரு சமுதாய வாழ்க்கை வாழ்வதற்கான,
தேவன்-சிருஷ்டித்த வாஞ்சை

[மக்கள்] ஒரு வகையான சமுதாய வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். இந்த வாஞ்சை நம் பிறப்பின் கட்டமைப்பிலிருந்து வருகிறது. நம் பிறப்பின் கட்டமைப்பில், நம் இயற்கை ஜீவனில், நாம் மற்றவர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு சமூகத்தைப் பெற வேண்டும் என்கிற ஒரு வகையான வாஞ்சை இருக்கிறது.

ஆதியாகமம் 1:26இல் “மனிதனை உண்டாக்குவோமாக” என்று தேவன் முதலில் கூறினார், பின்பு அவர் “அவர்கள்…ஆளக்கடவர்கள்” என்றார். மனிதன் என்பது ஒருமை, ஆனால் மனிதன் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிரதி பெயர்ச்சொல்லான அவர்கள் என்பது பன்மை. தேவன் ஒரு மனிதனை உண்டாக்கினாரா, பல மனிதர்களை உண்டாக்கினாரா?…தேவன் ஏன், மனிதன் என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லையும், அவர்கள் என்ற பன்மைப் பிரதிபெயர்ச்சொல்லையும் பயன்படுத்தினார்? அவர் ஒரு மனிதனை உண்டாக்கினாரா, பல மனிதர்களை உண்டாக்கினாரா? பதில் என்னவென்றால்: தேவன் ஒரு மனிதனில் பல மனிதர்களை உண்டாக்கினார். அல்லது, தேவன் பல மனிதர்களைக் கொண்ட ஒரு மனிதனை உண்டாக்கினார் என்றும் நீங்கள் கூறலாம். தேவனின் நோக்கத்தில், மனிதன் கூட்டானவன் என்பதே இதன் பொருள். தேவன் ஓர் ஆதாம், பின்பு ஓர் ஆபிரகாம், பின்பு ஒரு தாவீது, இன்னும் பலர் என்று சிருஷ்டிக்கவில்லை. தேவன் ஒரு கூட்டு மனிதனை—எல்லா மனிதர்களையும் உடைய ஒரு மனிதனைச் சிருஷ்டித்தார். தேவனின் நோக்கத்தில், அவர் செய்தது ஒரு கூட்டு காரியமாகும். எனவே, ஒரு சமுதாய வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற வாஞ்சையானது தேவனால் மனித சுபாவத்தில் சிருஷ்டிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் எல்லாரும் உணர வேண்டும்.

சபை வாழ்க்கை நிஜமான சமுதாய
வாழ்க்கையாக இருத்தல்

கிறிஸ்துவில் நம் எல்லாருக்கும் ஒரே ஜீவன் உள்ளது, இந்தப் பொதுவான ஜீவனுடன் நமக்கு ஒரு பொதுவான சுபாவமும், ஒரு பொதுவான வாஞ்சையும் உள்ளது. நாம் இரட்சிக்கப்பட்ட உடனே, ஐக்கியங்கொள்வதற்காக சில உண்மையான கிறிஸ்தவர்களைத் தொடர்புகொள்ளும் ஒரு வாஞ்சை நமக்குள் ஏற்பட்டது. இது, ஒரு சமூக, ஒரு சமுதாய வாழ்விற்கான வாஞ்சை. சபை வாழ்க்கையே நிஜமான சமுதாய வாழ்க்கை.

நாம் ஒருவரையொருவர் நேசிப்பதற்கான நம் பொதுவான மூலக்கூறு, ஜீவன், மற்றும் நபராக கிறிஸ்து இருத்தல்

நமக்கு ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இருக்க வேண்டுமானால், நமக்கு ஒரு குறிப்பிட்ட ஜீவன் தேவை என்பதை நாம் அறிய வேண்டும். ஒரு சமூகத்தில் இருக்க வாஞ்சிக்கும் ஜீவனுடன் தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார், ஆனால், அந்த ஜீவன் சேதப்படுத்தப்பட்டு, விஷமாக்கப்பட்டது…ஆகவே, ஒரு பக்கத்தில், நம்மிடம் தேவன்-சிருஷ்டித்த சுபாவம் இருப்பதால், மற்றவர்களோடு சேர்ந்து வாழ்வதற்கான வாஞ்சை நம்மிடம் இருக்கிறது; மறு பக்கத்தில் நம் மனித ஜீவன் சாத்தானால் சேதப்படுத்தப்பட்டு, சீரழிந்து போனதால், நம் விழுந்துபோன சுபாவத்தில், நம்மிடம், சமுதாய வாழ்விற்கான நேர்த்தியான ஜீவன் இல்லை.

ஆனால், இப்போது நம்மிடம் கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்து அற்புதமானவர். நாம் ஒருவரோடொருவர் அன்புடன் சமுதாய வாழ்வில் ஒன்றாக இருப்பதற்காக, அவரே பொதுவான காரணியாக, பொதுவான மூலக்கூறாக இருக்கிறார் (ரோ. 12:10). எனக்கு எல்லாச் சகோதரர்களின் பெயர்களும் தெரியாது, ஆனால், நான் இன்னும் அவர்களை மிகவும் நேசிக்கிறேன், காரணம் அவர்கள் கர்த்தரில் சகோதரர்களாக உள்ளனர். எல்லாச் சகோதரர்களுக்குள்ளும் ஒரு பொதுவான மூலக்கூறு இருக்கிறது, அந்த மூலக்கூறு கிறிஸ்துவே. இந்தக் கிறிஸ்துவே, நாம் ஒருவரையொருவர் நேசிக்கச் செய்யும் மூலக்கூறு. மேலும், நமக்குள்ளே இருக்கும் கிறிஸ்துவே, நாம் ஒருவரையொருவர் நேசிப்பதற்கான ஆற்றலை உடைய ஜீவன். (CWWL, 1971, vol. 1, “The Life for the Preaching of the High Gospel,” pp. 447-449)

Reference: CWWL, 1971, vol. 1, “The Life for the Preaching of the High Gospel,” ch. 6

கிறிஸ்துவின் மகிமையான சபையில்
சபை—கிறிஸ்துவின் சரீரமாக – 1226

1.கிறிஸ்துவின் மகிமையான சபையில்
நாம் அங்கங்கள்—
கர்த்தர் நம்மை ஒன்றாக்கினார் மகிழ்கிறோம்.
பூவில் ஒரேவோர் சரீரம் உண்டு
நாம் அதில் உள்ளோம்—
அல்லேலூயா, கர்த்தர் ஒன்றாக்கினார்!
அல்லேலூயா, ஓர் சரீரம்!
நாம் சரீரத்தின் அங்கங்கள்!
நாம் முற்றும் சரீரத்திற்கே!
அல்லேலூயா, கர்த்தர் ஒன்றாக்கினார்!

2.தேவை, தனித்தனி கிறிஸ்தவர் அல்ல,
கூட்டுக் கிறிஸ்துவே—
தேவனை முற்றும் வெளிப்படுத்திட;
தேவை, தனித்தனிச் சபைகளல்ல,
கூட்டு சரீரம்—
அல்லேலூயா நாம் சரீரத்தில் உள்ளோம்!
அல்லேலூயா நாம் சரீரம்!
பேய்நடுங்கும் சரீரத்தால்!
வெல்கிறோம் நாம் சரீரத்தில்!
அல்லேலூயா நாம் சரீரத்தில் உள்ளோம்!

3.தெய்வ சுபாவமான பொன்விளக்குத் தண்டுகள் ஏழு—
ஜென்ம சுபாவம் இல்லை சரீர வாழ்வில்
தெய்வ சுபாவம் கொண்டு ஒருமை
காத்தால் பொன்விளக்குகள்
அல்லேலூயா மின்னி ஜொலிக்கின்றதே!
அல்லேலூயா, சரீரத்தின்!
பொன்விளக்குத் தண்டுகட்காய்!
பொன்னாய் ஜொலிக்கும் சரீரம்!
அல்லேலூயா மின்னி ஜொலிக்கின்றதே!

4.தெய்வீகம், ஒளி, ஒருமை, வெளியாக்கும்வழி—
நாம் இயேசுவை உண்பதே அல்லேலூயா!
இயேசு ஜீவதரு, மன்னா, புத்தம்புது விருந்து—
நாளும் இயேசுவை உண்போம் அல்லேலூயா!
இயேசுவை உண்டால் ஒன்றாவோம்!
இயேசுவை உண்டால் தெய்வீகம்!
இயேசுவை உண்டால் ஜொலிப்போம்!
நாளும் இயேசுவை உண்போம்
அல்லேலூயா!