மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பதினைந்து – ஞானஸ்நானம்

மத். 28:19—ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்.

ஞானஸ்நானம் என்றால் என்ன?

விசுவாசிப்பதென்றால்…பாவமன்னிப்புக்காக (அப். 10: 43) மட்டுமல்லாமல், மறுபடிஜெநிப்பித்தலுக்காகவும் (1 பேது. 1:21, 23) அடிமை-இரட்சகரைப் பெற்றுக்கொள்வதாகும் (யோ. 1:12). இவ்வாறு விசுவாசிப்பவர்கள், மூவொரு தேவனுடனான ஒரு ஜீவாதார சேர்க்கையில் (மத். 28:19), தேவனின் பிள்ளைகளாகவும் (யோ. 1:12-13) கிறிஸ்துவின் அவயவங்களாகவும் (எபே. 5:30) ஆகின்றனர். நானஸ்நானம் பண்ணப்படுவதென்றால், அடிமைஇரட்சகரின் மரணத்தின்மூலம் பழைய சிருஷ்டிப்பை முடிவுகட்ட அடக்கம்பண்ணப்படுவதாலும், அடிமை-இரட்சகரின் உயர்த்தெழுதல் மூலம், தேவனின் புதிய சிருஷ்டியாக இருக்க எழுப்பப்படுவதாலும் இதனை உறுதிப்படுத்துவதாகும்…விசுவாசிப்பதும், ஞானஸ்நானம் பண்ணப்படுவதும் தேவனின் முழு இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரு முழுப் படியின் இரண்டு பகுதிகளாகும். விசுவாசியாமல் ஞானஸ்நானம் பண்ணப்படுதல் ஒரு வெறுமையான சடங்காச்சாரம் மட்டுமே; ஞானஸ்நானம் பண்ணப்படாமல் விசுவாசித்தல், உள்ளார்ந்த இரட்சிப்பின் ஒரு புறம்பான உறுதிப்படுத்துதல் இல்லாமல் உள்ளார்ந்தரீதியில் மட்டுமே இரட்சிக்கப்படுவதாகும். இவை இரண்டும் சேர்ந்தே செல்ல வேண்டும். மேலும், இஸ்ரயேல் மக்கள் கடலிலும் (தண்ணீர்) மேகத்திலும் (ஆவியானவர்) (1 கொரி. 10:2; 12:13) ஞானஸ்நானம் பண்ணப்பட்டதுபோல, தண்ணீர் ஞானஸ்நானம் ஆவியானவரின் ஞானஸ்நானத்தோடு சேர்ந்தே செல்ல வேண்டும்—1 கொரி. 10:2; 12:13. (மாற்கு 16:16, அடிக்குறிப்பு 1, மீட்டுத்திருப்புதல் படிவம்)

ஞானஸ்நானம் ஒரு முறைமையோ, சடங்கோ அல்ல; இது கிறிஸ்துவுடனான நம் ஒன்றித்துக்காணப்படுதலை அடையாளப்படுத்துகிறது. ஞானஸ்நானத்தின் மூலம், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் அவரோடு ஒன்றாக இணைக்கப்படுமாறு, நம் மண்டலமாக அவரை எடுத்துக்கொண்டு அவருக்குள் நாம் மூழ்கடிக்கப்படுகிறோம். (ரோ 6:3, அடிக்குறிப்பு 1, மீட்டுத்திருப்புதல் படிவம்)

முதல் மனிதனாகிய ஆதாமின் மண்டலத்தில் நாம் பிறந்தோம் (1 கொரி. 15:45,47), ஆனால் ஞானஸ்நானத்தின் மூலம், இரண்டாம் மனிதனாகிய (1 கொரி 15:47) கிறிஸ்துவின் மண்டலத்திற்குள்ளாக நாம் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டோம் (1 கொரி 1:30; கலா. 3:27). (ரோ 6: 3, அடிக்குறிப்பு 2, மீட்டுத்திருப்புதல் படிவம்)

நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறபோது, நாம் அவரது மரணத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். அவருடைய மரணம் உலகத்திலிருந்தும், இருளின் சாத்தானிய வல்லமையிலிருந்தும் நம்மைப் பிரித்துவிட்டது, நம் இயற்கை ஜீவன், நம் பழைய சுபாவம், நம் சுயம், நம் மாம்சம், மற்றும் நம் முழு வரலாற்றையும் கூட தீர்த்துக்கட்டிவிட்டது. (ரோ 6:3, அடிக்குறிப்பு 3, மீட்டுத்திருப்புதல் படிவம்)

ஞானஸ்நானத்தின் உட்கருத்து

விசுவாசிப்பதென்றால் கிறிஸ்துக்குள் விசுவாசிப்பதாகும் (யோ. 3:16), ஞானஸ்நானம் பண்ணப்படுவதென்றால் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுவதாகும். விசுவாசம் மற்றும் ஞானஸ்நானம் ஆகிய இவ்விரண்டின்மூலம் நாம் கிறிஸ்துவுக்குள் நுழைந்துவிட்டோம், இதன் மூலம் நாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டோம், அவருடன் ஒன்றித்துக் காணப்படுகிறோம். ஒரு நேர்த்தியான, உண்மையான, ஜீவிக்கும் விதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஞானஸ்நானம், விசுவாசிகள் கிறிஸ்துவோடு ஒரு ஜீவாதார சேர்க்கைக்குள் மட்டுமல்லாமல், அவரது சரீரத்திற்குள்ளும் நுழையுமாறு, தெய்வீக நாமமாகிய மூவொரு தேவனின் நாமத்திற்குள்ளாகவும் (மத். 28:19), ஜீவிக்கும் நபராகிய கிறிஸ்துவுக்குள்ளாகவும் (கலா 3:27), வீரியமுள்ள மரணமாகிய கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாகவும் (ரோ. 6:3), ஒரு ஜீவிக்கும் உயிரியாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாகவும் (1 கொரி. 12:13) விசுவாசிகளை வைக்கிறது. அதோடு, ஞானஸ்நானமானது, விசுவாசிகள் மூவொரு தேவனின் மூலக்கூறுகளாலான ஓர் உயிரியான கிறிஸ்துவின் சரீரத்தில் வாழுமாறு, அவர்களது பழைய ஜீவனை முடிவுகட்டி, கிறிஸ்துவின் புதிய ஜீவனைக் கொண்டு அவர்களை ஜெநிப்பித்து, விசுவாசிகளை அவர்களது பழைய நிலையை விட்டு ஒரு புதிய நிலைக்குள் கொண்டுவருகிறது. (கலா. 3:27, அடிக்குறிப்பு 1, மீட்டுத்திருப்புதல் படிவம்)

செங்கடலைக் கடப்பது ஞானஸ்நானத்தை அடையாளப்படுத்துதல்

தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கான தேவனின் முழு இரட்சிப்பானது பஸ்கா, எகிப்திலிருந்து யாத்திரை, செங்கடலைக் கடத்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பஸ்கா மீட்பை அடையாளப்படுத்துகிறது, யாத்திரை உலகத்திலிருந்து பிரிந்துசெல்லுதலை அடையாளப்படுத்துகிறது, செங்கடலைக் கடத்தல், ஞானஸ்நானத்தை அடை யாளப்படுத்துகிறது.

செங்கடலைக் கடப்பதன்மூலம், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து இரட்சிக்கப்பட்டனர், ஒரு சுதந்தரமான மண்டலத்திற்குள்ளும் கொண்டுவரப் பட்டனர். என்னே ஓர் இரட்சிப்பு! கோட்பாட்டில், இன்றும் ஞானஸ்நானம் நமக்கு அதைப்போலவே இருக்கிறது. இது நம்மை அடிமைக்கட்டிலிருந்து இரட்சித்து, கிறிஸ்துவில் முற்றும்முடிவான விடுதலைக்குள் நம்மைக் கொண்டுவருகிறது. (Life-study of Exodus, pp. 319, 338)

விசுவாசமும் ஞானஸ்நானமும் சேர்ந்து
ஒரு முழுமையான படியாகுதல்

நாம் கர்த்தரில் விசுவாசித்து ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்குமுன், நாம் பாவிகளாக இருந்தோம். ஆனால், சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதின் மூலம் நாம் பிரகாசிக்கப்பட்டபோது, நாம் மிகப் பாவகரமாக இருப்பதை உணர ஆரம்பித்தோம். தேவனுக்கு முன்பாகவும், மனிதனுக்கு நேராகவும் நாம் பல அக்கிரமங்களையும், மீறுதல்களையும், குற்றங்களையும் செய்திருந்தோம், மேலும் நமக்கு, பெருமளவு குற்றஉணர்வு இருந்தது. அப்போது நாம் மனந்திரும்பி, கர்த்தரில் விசுவாசித்து, அவருடைய மன்னிப்பைப் பெற்று, இரட்சிக்கப்பட்டோம். ஆனால், நம் மனந்திரும்புதலுக்கும், விசுவாசித்தலுக்கும் ஒரு புறம்பான வெளியாக்கம் தேவை. இந்த வெளியாக்கமே ஞானஸ்நானம். எனவே, ஞானஸ்நானமும் நம் விசுவாசித்தலும், அதாவது, நம் விசுவாசமும் ஒரே காரியத்தின் இரண்டு அம்சங்கள். இந்தக் காரணத்தினால்தான், விசுவாசித்து ஞானஸ்நானம் பண்ணப்படுவதைப் பற்றி புதிய ஏற்பாடு கூறுகிறது (மாற்கு 16:16). விசுவாசித்தலும் ஞானஸ்நானம் பண்ணப்படுதலும் நாம் ஒரு படியை எடுத்து வைப்பதற்காக நம் இரண்டு பாதங்களையும் பயன்படுத்துவதற்கு ஒப்பிடப்படலாம். முதலில், நாம் விசுவாசிக்கிறோம், நம் இந்த விசுவாசித்தல் ஒரு பாதத்தை முன் வைப்பதால் எடுக்கப்படும் பாதி படிக்கு ஒப்பிடப்படலாம். பிறகு, நாம் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். நம் ஞானஸ்நானம் மற்றொரு பாதத்தை எடுத்துவைப்பதினால் அந்தப் படியை முழுமை செய்வதற்கு ஒப்பிடப்படலாம். விசுவாசித்தலும் ஞானஸ்நானமும் சேர்ந்து ஒரு முழுப் படியை நிறைவு செய்கிறது. (Life-study of 1 Peter, p 224)

References: CWWN, vol. 48, “Messages for Building Up New Believers,” ch. 1; Life-study of Exodus, msgs. 28, 29; Life-study of 1 Peter, msg. 25

LORD, WHEN BY BAPTISM WE CONFESS

Baptism—Buried and Risen

937

  1. Lord, when by baptism we confess
    Our oneness in Thy death,
    Oh, by Thy mercy and Thy grace,
    May Thou reveal its worth.
  2. By baptism in Thy death we’re one
    And buried too with Thee;
    Thus we’re forever dead to sin
    And from its bondage free.
  3. By baptism in Thy death we’re one
    And buried too with Thee;
    Thus to the world we bid farewell,
    From Satan’s slavery free.
  4. We’re resurrected with Thee too,
    From death’s great pow’r set free;
    Now fruit of holiness we bear
    In our new life with Thee.
  5. We’re baptized unto Thy dear name,
    No more our own are we;
    Thy steps we’d follow, for Thee live,
    And e’er be one with Thee.