மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் ஒன்பது – கிறிஸ்துவின் மீட்பு

எபி. 9:12—வெள்ளாட்டுக்கடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

எபே. 1:7—அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

தேவனுடைய மீட்பின் வழி
மரணத்தினூடாக இருத்தல்

வேதத்தின்படி, எல்லாப் பாவங்களும் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் என்று தேவனுடைய நீதி கோருகிறது. பாவம் நீதியாக நியாயந்தீர்க்கப்படக்கூடிய ஒரே ஒரு வழி, மரணம் என்ற வழி மட்டுமே. “இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது” என்று எபிரெயர் 9:22 கூறுகிறது. நம் பாவங்களை நியாயந்தீர்த்து, பின்னர் அவற்றை மன்னிக்க இரத்தஞ்சிந்துதல் இருந்தாக வேண்டும்; அதாவது, இதற்கு மரணத்தின் தேவை இருக்கிறது. மரணம் இல்லாத மீட்பின் எந்த வழியும் தேவனுடைய நீதியான கோரிக்கையைச் சந்திக்க முடியாது; மாறாக அது தேவனின் தரத்திலிருந்து குறைவுபடுகிறது.

பஸ்கா செம்மறிக்குட்டியாகிய கிறிஸ்து

மீட்பின் வேலையைக் குறித்த அதிசிறந்த சித்திரம் கிறிஸ்து தேவனின் பஸ்கா செம்மறிக் குட்டியாவதில் காணப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் சிறையிருப்பு மற்றும் அடிமைத்தனத்தின் தேசமான எகிப்தில் இருந்தனர் (யாத். 1:8-14). தம் ஜனமாகிய இஸ்ரயேலரை விடுவிக்கும்படி எகிப்து ராஜாவை பலவந்தப்படுத்த, தேவன் அந்தத் தேசத்தினூடாய்க் கடந்துவந்து ஒவ்வொரு வீட்டிலும் முதற்பிறப்பை அழிக்க உத்தேசித்தார்.

ஓர் செம்மறிக்குட்டியைக் கொன்று, அதின் இரத்தத்தை வீடுகளின் நிலைக்கால்களின்மேல் பூசும்படி அவர் இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டார். இரவில் தேவனுடைய தூதன் தேசத்தினூடாய்க் கடந்துசென்று, நியாயத்தீர்ப்பை அந்தத் தேசத்தின்மேல் செயல்படுத்தினான். நிலைக்கால்களின்மேல் இரத்தம் பூசப்படாத வீடுகளிலெல்லாம், தலைப்பிள்ளை கொல்லப்பட்டது; ஆனால், இரத்தத்தின் மூடுதலின்கீழ் மறைந்திருந்தவர்கள் இரட்சிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டனர்…கிறிஸ்து “உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று வேதம் கூறுகிறது (யோ. 1:29).

பாவத்தின்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைச் சுமக்கும்படி சிலுவையில் மரித்தல்

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவர் தேவனால் கைவிடப்பட்டார். இதன் காரணமாகவே, அவர் “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறினார். (மத். 27:46). அவர் தேவனின் பாவமில்லாத குமாரன், எனினும், அவர் தேவனால் கைவிடப்பட்டார். அவர் தம் சொந்தப் பாவங்களுக்காக அல்ல, மாறாக, முழு மனுகுலத்தின் பாவங்களுக்காகவே தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டார் (1 யோ. 2:2).

கிறிஸ்துவின் இரத்தம் மனிதனுக்காகப் பேசுதல் மற்றும் மனிதனுக்குச் சமாதானத்தைத் தருதல்

ஒரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதிவாதிக்காக வழக்காடுவதைப்போல, கிறிஸ்துவின் இரத்தம் நமக்காகப் பேசுகிறது (எபி. 12:24) என்று வேதம் கூறுகிறது. இந்த இரத்தத்தின் மூலம், தேவனுடைய நீதியான கோரிக்கை திருப்திப்படுத்தப்படுவதால், தேவன் சமாதானம் அடைகிறார் (ரோ. 5:9). தேவன் சமாதானமாக இருக்கும் போது, நம் மனசாட்சியும் சமாதானமாக இருக்கிறது.

எவ்வாறு கிறிஸ்துவின் மீட்பு தேவனைப் பூரணமாகத் திருப்திப்படுத்தியிருக்கிறது என்பதை நீங்கள் பார்த்தால், நீங்கள் தேவனுடன் சமாதானமாக இருப் பீர்கள். கிறிஸ்துவின் மீட்பின் மூலம், தேவன் மனிதனுடைய பாவங்களை மன்னித்திருக்கிறார் (எபே. 1:7). தேவன் மனிதனுடைய பாவங்களை மன்னிக்கும்போது, அவர் மனிதனுடைய பாவங்களை மறந்து விடுகிறார் (எபி. 8:12). அவர் மன்னிப்பதென்றால் அவர் மறப்பதாகும். தேவனால் எல்லாம் செய்யக்கூடும், ஆனால், கிறிஸ்துவினுடைய மீட்பில் விசுவாசித்திருப்பவர்களின் பாவங்களை அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்துவின் மீட்பில் விசுவாசிக்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக, சுத்திகரிக்கப்பட்டும், நீதியாக்கப்பட்டும், தூய்மையாக்கப்பட்டும், குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டும், கறையற்றவர்களாக்கப்பட்டும், பழுதற்றவர்களாக்கப்பட்டும் இருக்கின்றனர். (Christ’s Redemption and Salvation, pp. 6-11)

References: Christ’s Redemption and Salvation; CWWN, vol. 27, “The Normal Christian Faith,” ch. 10; CWWL, 1983, vol. 1, “The Five Great Mysteries in the Bible,” chs. 2, 3

என்னே அற்புதம் உம் மீட்பு,
கர்த்தரைத் துதித்தல்—அவரது மீட்பு – 116

1 என்னே அற்புதம் உம் மீட்பு,
க்ருபை கர்த்தா உம்மில்!
கண்டு, கேட்டறிந்ததில்லை
எனக்குச் செய்தவை!
சொல்லிமுடியாத திவ்ய,
புதிரானவர் நீர்!
சர்வ துதிக்கும் மேலான,
உம் மீட்பு ஆச்சர்யம்!

2 குத்துண்டீர் க்ருசில் எமக்காய்,
இரத்தம், தண்ணீர் பாய;
எம்மை மீட்டிட, எமக்கு
திவ்ய ஜீவன் தர;
இரத்தம் கழுவினதினால்,
உகந்தவரானோம்;
பிறந்தோம் மீண்டும் ஜீவனால்
உம்மோடு ஒன்று யாம்.

3 மாண்ட தெய்வீக மணி நீர்,
பல மணி பெற,
இழைந்தன உம் உடலாய்,
உம் ஸ்பாவம் பங்குற.
யாம் உந்தன் அதிகரிப்பு,
நீர் எம் உள்ளடக்கம்;
எம்மூலம் வாழ்ந்தசைந்தென்றும்
வெளிப்படுகின்றீர்.

4 யாம் உம் சரீரமானதால்,
வந்தெம்மில் வசியும்;
உம் வீட்டை எம்மில் கட்டும், யாம்
உம் நம்பிக்கையாவோம்.
உம் இதயம் மகிழ்ந்தோய,
யாமே உம் நேர்பாதி,
ஓர் சரீரத்தில் உம்மோடே
உம்மில் இன்புறுவோம்.

5 உம்மை நினைத்திங்கு கூடி,
சின்னங்கள் காண்கையில்;
மா, நிறைவான மீட்பிற்காய்
துதியால் நிறைந்தோம்.
யாம் உம் சரீரம், வாழ்விடம்,
மணாளியானதால்,
நன்றி, ஆராதனை செய்து,
துதியில் நிலைப்போம்.