மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பதினான்கு – மனந்திரும்புதலும் பாவ அறிக்கையும்

மத். 3:2—மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித் திருக்கிறது.

1 யோ. 1:9—நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

மனிதனின் மனந்திரும்புதல்

மனிதனின் மனந்திரும்புதல் ஆவியானவரின் பரிசுத்தமாக்கும் வேலையின் விளைவாகும். ஆவியானவர் மனிதனைப் பிரகாசிப்பிக்க, தேட, பாவத்தைக் குறித்தும் நீதியைக் குறித்தும், நியாயத்தைக் குறித்தும் கண்டித்துணர்த்த வரும்போது, அவர் மனிதன் மனந்திரும்பி தேவனிடம் திரும்பும்படி செய்கிறார்.

மனந்திரும்புதலின் அர்த்தம்

மனந்திரும்புதல் என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம், மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருந்து, அது வருந்துதலை விளைவித்து, குறிக்கோளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாகும்.” எனவே, வேதத்தில் போதிக்கப்பட்டுள்ளபடி, மனந்திரும்புவதென்றால் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருப்பதாகும். அது பொதுவாக மக்கள் நம்புவதுபோல, ஒருவர் தன்னைத்தான் மேம்படுத்துவதோ, சீரமைப்பதோ, அல்லது, தீமையைப் புறக்கணித்து நன்மைக்குத் திரும்புவதோ அல்ல. மனிதனின் வீழ்ச்சி முதல், மனிதனின் மனம் தேவனுக்கு விரோதமாகத் திருப்பப்பட்டு, பல நபர்கள், பொருட்கள், தேவன் அல்லாத மற்ற காரியங்கள் ஆகியவற்றுக்கு நேராக நடத்தப்பட்டிருக்கிறது. அதோடு, மனிதன் தன் மனதினால் கட்டுப்படுத்தப்பட்டு, எண்ணங்களின் வாஞ்சைகளைச் செய்து கொண்டிருக்கிறான் (எபே. 2:3). மனிதனின் எண்ணங்களின் வாஞ்சைகள், அவை நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி, அவை எப்போதும் தேவனுக்கு விரோதமாயிருக்கிறது, தேவனைத் தவிர மற்ற நபர்கள், பொருட்கள், மற்றும் காரியங்களுக்கு நேராக நடத்தப்படுகிறது. இதன் விளைவாக, மனிதனும் தேவனுக்கு விரோதமான வழியில் தன்னை நடத்திக்கொண்டு, இவ்வாறு, நபர்கள், பொருட்கள், மற்றும் தேவன் அல்லாத காரியங்களுக்கு நேராக நடத்தப்படுகிறான். எனவே, மனிதன் மனந்திரும்பி தன் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும், இதன் மூலம் அவனது நடத்தையும் நடவடிக்கையும்கூட அதன்படி மாறும். (Truth Lessons— Level One, vol. 3, lsn. 29)

மனந்திரும்புதலுக்கு தேவனின்
பிரகாசிப்பித்தல் தேவைப்படுதல்

நீங்கள் ஒவ்வொருவரும் தேவனால் முழுவதும் பிரகாசிப்பிக்கப்பட்டிருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் சென்றால், அவர் உங்கள்மீது ஒளி வீசுவார். அவர் உங்களைப் பிரகாசிப்பிப்பார். அவர் உங்களை வெளிச்சத்திற்குள்ளாகக் கொண்டுவருவார். அவர் உங்களை முற்றுமுடிய அம்பலமாக்குவார். அப்போது, நீங்கள் முற்றுமுடிய மனந்திரும்பி, கர்த்தருக்கு முன்பாக தேம்பி அழவும்கூட செய்வீர்கள். நீங்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நான் மிகவும் அழுக்கானவன், பாவமானவன். நான் அழுகியவனாக, கறைப்பட்டவனாக இருக்கிறேன்” என்று கூறுவீர்கள். புறத்தூண்டுதலின்றி, நீங்கள் கர்த்தரிடம் ஒரு முழுமையான பாவ அறிக்கை செய்வீர்கள். நீங்கள் உணவு உண்பதை மறந்துவிடும் அளவுக்குக்கூட, நீங்கள் பாவ அறிக்கை செய்வீர்கள். நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு வாகனம் ஒட்டிச் செல்லும் வேளையிலும், நீங்கள் இன்னும் கண்ணீருடன் கர்த்தரிடத்தில் மனந்திரும்பிக் கொண்டிருக்கக்கூடும். நம்மில் எத்தனை பேர் இந்தக் கட்டத்தைக் கடந்துசென்றிருக்கிறோம் என நான் வியக்கிறேன்! (CWWL, 1993, vol. 2, “The Training and the Practice of the Vital Groups,” pp. 325-326)

அறிக்கையிடுதலின் இரண்டு அம்சங்கள் தேவனிடம் பாவத்தை அறிக்கையிடுதல்

பாவத்துடன் இடைபடுவதில் பல காரியங்கள் உள்ளன. முதலில், நாம் தேவனிடமும் மனிதனிடமும் நம் பாவங்களை அறிக்கையிட வேண்டும். தேவனிடம் நம் பாவங்களை அறிக்கையிடுவதென்றால், நாம் அவருக்கு முன்பாக வந்து, நாம் அவரைப் புண்படுத்தும்படி செய்த யாவற்றையும் அறிக்கையிடுவதாகும். நாம் செய்கிற ஒவ்வொரு பாவமும், அந்தப் பாவம் தேவனுக்கு எதிராக இருந்தாலும் சரி, மனிதனுக்கு எதிராக இருந்தாலும் சரி, அது தேவனைப் புண்படுத்துகிறது…இவ்விதமாக, நாம் நம் பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிடும்போது, நாம் பொதுவானரீதியில் அதைச் செய்ய முடியாது; பெரிய அளவில் பாவம் செய்திருக்கிறோம் என்று நாம் கோட்பாட்டின்படி மட்டும், அறிக்கையிட முடியாது. நாம் குறிப்பாக இருக்க வேண்டும், நம் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கையிட வேண்டும். நாம் தேவனிடம் ஒரு பெரிய பாவ மூட்டையை எடுத்து வந்து, அவர் முன் கீழே எறிந்து விட்டு, அதை அப்படியே மறந்துவிட முடியாது. நாம் அந்தப் பாவ மூட்டையைத் தேவன் முன்பாக அவிழ்த்து, ஒவ்வொரு பாவத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்; நாம் அந்த மூட்டையை அவிழ்த்து, பாவங்களை ஒவ்வொன்றாக முற்று முடிய அறிக்கையிட வேண்டும்.

மனிதனிடம் பாவத்தை அறிக்கையிடுதல்

நம் பெரும்பாலான பாவங்கள் மற்றவர்களைப் புண்படுத்துகின்றன, எனவே, நாம் நம் பாவங்களைத் தேவனிடம் மட்டுமல்லாமல் மனிதனிடமும் அறிக்கை செய்ய வேண்டும். நாம் செய்கிற ஒவ்வொரு பாவமும் தேவனைப் புண்படுத்துவதால், நாம் நம் பாவங்களை தேவனிடம் அறிக்கையிடுகிறோம். எனினும், நாம் செய்யும் பாவங்கள் தேவனை மட்டுமல்லாமல் மனிதனையும் புண்படுத்துகின்றன. நாம் தேவனைப் புண்படுத்தினால், நாம் நம் பாவங்களை அறிக்கையிடுகிறபோது, அவர் அதை உடனே மன்னித்து விடுகிறார். ஆனால், தேவனின் மன்னிப்பு, நாம் புண்படுத்தியிருக்கும் நபர்களை சமாதானப்படுத்த முடியாது. (CWWL, 1932-1949, vol. 3, “Crucial Truths in the Holy Scriptures,” vol. 2, pp. 415-416)

மனந்திரும்புதலின் விளைவு பாவ மன்னிப்பைப் பெறுதல்

கர்த்தரின் சுவிசேஷம் மனிதன் மனந்திரும்பி, பாவமன்னிப்பைப் பெறும்படிச் செய்கிறது (லூக். 24:47; 3:6; அப். 2:38). மனிதனுக்கு மன்னிப்பின் கிருபையை அளிப்பதற்காக, தேவன் முதலில் அவனுக்கு மனந்திரும்பும் இருதயத்தைத் தர வேண்டும் (அப். 5:31). ஒரு மனிதன் தேவனுக்கு எதிராக இருக்கும் தன் பாவத்திலிருந்து மனந்திரும்பி, தன் இருதயத்திற்குள்ளிருந்து தேவனிடம் திரும்பாத வரை, அவன் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிக்கவும் மாட்டான், அவனால் தேவனுடைய மன்னிக்கும் கிருபையைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஒரு மனிதன் மன்னிக்கப்பட விரும்பினால், அவன் மனந்திரும்பியாக வேண்டும். அவன் தன் செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்பி, தேவனிடம் திரும்பியாக வேண்டும் (எபி. 6:1).

ஜீவனைப் பெற

கர்த்தரின் சுவிசேஷத்தில், அவருடைய ஜீவனை மனிதன் பெற்றுக்கொள்வதே, மனிதன் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவதன் குறிக்கோளாகும் (கொலோ. 2:13). எனவே, ஒரு மனிதன் கர்த்தரின் ஜீவனைப் பெற்றுக்கொள்ள வாஞ்சித்தால், அவன் மனந்திரும்ப வேண்டும் (அப். 11:8). மனிதன், தன் ஜீவன் கறைப்படுத்தப்பட்டதென்றும், தேவனுக்கு வெளியே இருக்கிற அவனுடைய வாழ்க்கை பொல்லாததென்றும் பார்த்தாக வேண்டும். இதைப் பார்க்கையில், அவன் உணர்த்தப்பட்டு, தன்னை வெறுக்கிறான். அவன் மனந்திரும்பி தேவனிடம் திரும்பும்போது, அவன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; இதன்மூலம் அவன் தேவனின் ஜீவனைப் பெற்றுக்கொள்கிறான்.

பரிசுத்த ஆவியின் கொடையையும் தெய்வீக
சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ளுதல்

கர்த்தரின் சுவிசேஷத்தில், மனிதர்கள் பாவ மன்னிப்பைப் பெறுவதற்கான குறிக்கோள், அவர்கள் பரிசுத்த ஆவியின் கொடையையும் (அப். 2:38) தெய்வீக சுதந்திரத்தையும் (அப். 26:18) பெற்றுக்கொள்வதும் ஆகும். தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுமாறு, மனிதர்கள் மனந்திரும்பி, தேவனிடம் திரும்பும்போது, அவர்கள் பரிசுத்த ஆவியின் கொடையையும், தெய்வீகச் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவி-யாக ஆகின்ற பதனிடப்பட்ட மூவொரு தேவனாகிய பரிசுத்த ஆவி, மனிதர்கள் மூவொரு தேவனின் சகல ஐசுவரியங்களையும் அனுபவித்துமகிழுமாறு, தேவனுடைய முழு சுவிசேஷத்தின் சகலத்தையும்உள்ளடக்கிய ஆசீர்வாதமாயிருக்கும்படி (கலா. 3:14), மனிதர்கள் மனந்திரும்பும் நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிறார். தம் மீட்கப்பட்ட மக்களுக்காக தாம் என்னவெல்லாம் வைத்திருக்கிறாரோ, தாம் என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ, என்னவெல்லாம் செய்வாரோ, அவை யாவற்றோடும்கூட மூவொரு தேவனே, இந்தத் தெய்வீகச் சுதந்திரம். இந்த மூவொரு தேவன் பரிசுத்தவான்களின் பங்காயிருக்கும்படி (கொலோ. 1:12) சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவில் ஊனுருகொண்டிருக்கிறார் (கொலோ. 2:9). பரிசுத்தவான்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவி, இந்தத் தெய்வீகச் சுதந்தரத்தின் (எபே. 1:14) முன்ருசியாகவும், அச்சாரமாகவும், உத்தரவாதமாகவும் இருக்கிறார், இதை நாம் தேவனின் புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியில் ஒரு முன்ருசியாக இன்று பகிர்ந்துகொள்கிறோம், அனுபவித்துமகிழ்கிறோம், வருகின்ற யுகத்திலும் நித்தியத்திலும் இதை முற்றும்முடிய பகிர்ந்துகொள்வோம், அனுபவித்துமகிழ்வோம் (1 பேது. 1:4). (Truth Lessons— Level One, vol. 3, pp. 47-48)

References: Truth Lessons—Level One, vol. 3, lsn. 29; CWWL, 1932-1949, vol. 3, “Crucial Truths in the Holy Scriptures,” vol. 2, ch. 24; CWWL, 1993, vol. 2, “The Training and the Practice of the Vital Groups,” msg. 8

I HEAR THY WELCOME VOICE

Gospel—Coming to the Lord

1051

  1. I hear Thy welcome voice,
    That calls me, Lord, to Thee,
    For cleansing in Thy precious blood
    That flowed on Calvary.
  2. I am coming, Lord,
    Coming now to Thee:
    Wash me, cleanse me in the blood
    That flowed on Calvary.
  3. Though coming weak and vile,
    Thou dost my strength assure;
    Thou dost my vileness fully cleanse,
    Till spotless all, and pure.
  4. ‘Tis Jesus who confirms
    The blessed work within,
    By adding grace to welcomed grace,
    Where reigned the power of sin.
  5. And He the witness gives
    To loyal hearts and free,
    That every promise is fulfilled,
    If faith but brings the plea.
  6. All hail, redeeming blood!
    All hail, life-giving grace!
    All hail, the gift of Christ our Lord,
    Our strength and righteousness.