மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பதினாறு – துன்புறுத்தலைச் சந்தித்தல்

1 பேது. 4:14—நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். (கிரே.)

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நிந்திக்கப்பட்டால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருத்தல்

“நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்” (1 பேது. 4:14). “கிறிஸ்துவின் நாமத்தில்” என்றால், உண்மையில் கிறிஸ்துவின் நபரில், சாட்சாத்து கிறிஸ்துவில் என்று அர்த்தம், ஏனென்றால் நாமம் நபரைக் குறிக்கிறது. விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் விசுவாசித்திருக்கும் நிலையில் (யோ. 3:15), அவருடைய நாமத்துக்குள், அதாவது, அவருக்குள்ளாக (கலா. 3:27) ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கும் நிலையில் (அப். 19:5), அவர்கள் கிறிஸ்துவில் இருக்கின்றனர் (1 கொரி. 1:30) அவரோடு ஒன்றாகவும் இருக்கின்றனர் (1 கொரி. 6:17). அவர்கள் அவருடைய நாமத்தில் நிந்திக்கப்படுகிறபோது, அவர்கள் அவரோடு நிந்திக்கப்படுகின்றனர் அவரது பாடுகளின் ஐக்கியத்தில் அவரது பாடுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர் (பிலி. 3:10).

நாம் அனுபவிக்கும் உபத்திரவங்கள் கிறிஸ்துவின் பாடுகளாக இருக்கின்றன, காரணம் நாம் அவரது நாமத்தில் பாடுபடுகிறோம். 14ஆம் வசனத்தில் உள்ள பேதுருவின் வார்த்தையின்படி, கிறிஸ்துவின் நாமத்தில் நாம் நிந்திக்கப்பட்டால், நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் நாமத்தில் நிந்திக்கப்படுதல் ஒரு சாபம் என்று நினைக்காதீர்கள். இது ஆசீர்வதிக்கப்படுவதாகும். எனினும், மக்கள் நம்மை மிக உயர்வாகப் பாராட்டினால், அது ஒரு சாபமாக இருக்கக்கூடும். இந்தக் காரியத்தைப் பொறுத்தவரை, நமக்குக் கருத்து மாற்றம் தேவை.

நாம் அதிகம் பாடுபட்டு, அதிகமாய் உபத்திரவப்படும்போது
அதிக மகிமை நம்மீது இருத்தல்

நாம் எவ்வளவாய் பாடுபட்டு, உபத்திரவப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவாய் மகிமை நம்மீது தங்கும். இது உண்மையில் ஓர் ஆசீர்வாதம். நான் எவ்வளவாய் உபத்திரவப்பட்டேனோ, தீமையாகப் பேசப்பட்டேனோ, அவ்வளவாய் நான் பலப்படுத்தப்பட்டேன் என்று என்னால் சாட்சி பகிர முடியும். உபத்திரவமும், நிந்தையும் என்னைக் கீழ்ப்படுத்துவதில்லை. இதற்கு மாறாக, அவை என்னை உயர்த்துகிறது. ஆகவே, நாம் கிறிஸ்துவின் நாமத்தில் நிந்திக்கப்படுகிறபோது, மகிழ்ந்து களிகூர வேண்டும், ஏனென்றால் மகிமையின் ஆவியானவர் நம்மேல் தங்குகிறார். (Life-study of 1 Peter, pp. 250-251)

ஒரு நபர் தேவனிடம் திரும்பியதுமே அவனை உபத்திரவப்படுத்த சாத்தான்
மற்றவர்களைத் தூண்டிவிடுதல்

முழு உலகமும் தீயவனான சாத்தானுக்குள் கிடக்கிறது (1 யோ. 5:19): ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் சாத்தான் தேவனைத் தொடர்ச்சியாக எதிர்க்கிறான். மக்கள் தேவனிடம் திரும்பும்போதெல்லாம் சாத்தான் அதிருப்தியடைகிறான், அவன் இதைச் சகித்துக்கொள்ள மாட்டான். ஒரு நபர் தேவனிடம் திரும்பியவுடனே, அவனை உபத்திரவப்படுத்த சாத்தான் மற்றவர்களைத் தூண்டிவிடுவான். கிறிஸ்தவர்களாகிய நாம், உபத்திரவத்தை அனுபவிக்க நியமிக்கப்பட்டுள்ளோம் என்று பவுல் ஒருமுறை கூறினான் (பிலி. 1:29). எனவே, உபத்திரவம் கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாக நமக்கு நியமிக்கப்பட்ட பங்கு. எனவே, நடைமுறை கிறிஸ்தவ பூரணத்தின் முதல் அம்சம், பாடுகளைச் சகிப்பது, இதில் உபத்திரவப்படுத்தப்படுதலும் உள்ளடக்கம்.

உபத்திரவம் ஒரு துன்பம். சோதனைகள் வெறும் துன்பம் மட்டுமல்ல, ஏனென்றால் சோதனைகள் நம்மைப் பரிசோதிக்கும் அல்லது நிரூபிக்கும் குறிக்கோளுக்குப் பயன்படும் ஒரு துன்பம். பள்ளி இறுதித் தேர்வுகளை ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தலாம். இறுதித் தேர்வுகள் ஒரு நிஜமான துன்பமாகவும் சோதனையாகவும் இருக்கக்கூடும் என்று மாணவர்களுக்குத் தெரியும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு சோதனை, உண்மையில் மாணவர்களுக்கு ஓர் உதவி. பள்ளியில் இறுதித்தேர்வு இல்லையென்றால், மாணவர்கள் ஒருவேளை தங்கள் படிப்பைக் குறித்து அக்கறை இல்லாமல் இருப்பார்கள். ஆனால், ஓர் இறுதித் தேர்வு வருகிறதென்று அவர்கள் அறியும்போது, மிகச் சிரத்தையாக தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். எனவே, ஓர் இறுதித் தேர்வு ஒரு மாணவன் அவசியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இதன் காரணமாக, மாணவர்களின் பெற்றோர், தங்கள் பிள்ளை கல்வியிலிருந்து பயனடைய இறுதித் தேர்வு உதவுகிறது என்பதை அறிந்து, அந்தத் தேர்வுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

“ஆவிக்குரிய கல்விக் கூடத்தில்” கூட, “இறுதி” தேர்வுகளும் வேறு வகையான “தேர்வுகளும்” இருக்கின்றன. இந்தப் பள்ளிக்கூடத்தின் “முதல்வர்” நம் பரலோகப் பிதா. அவர் நமக்காக வெவ்வேறு சோதனைகளை, வெவ்வேறு தேர்வுகளை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த எல்லாச் சோதனைகளும் நமக்கு நன்மையானவை. தேர்வுகள் மாணவர்களுக்கு நன்மையாக இருப்பது போலவே, கிறிஸ்தவர்களாக நாம் சந்திக்கும் பவ்வேறு சோதனைகள் நமக்கு ஓர் இலாபம்.

ஓர் இறுதித் தேர்வு ஒரு மாணவனைச் சோதிக்கிற, பரிசோதிக்கிற, நிரூபிக்கிற மும்மடங்கு குறிக்கோளுக்கு உதவுகிறது. அது போலவே, விசுவாசிகளாக நாம் கடந்தாக வேண்டிய பல்வேறு சோதனைகள் நம்மைச் சோதிக்கிற, பரிசோதிக்கிற, மற்றும் நிரூபிக்கிற குறிக்கோளுக்கு உதவுகிறது. இந்தச் சோதனைகள் நம் நடைமுறை கிறிஸ்தவ சீர்பொருந்துதலுக்கு நிச்சயம் ஓர் உதவியாக உள்ளன, ஏனென்றால் தேவன் நம்மைச் சீர்பொருத்த இவற்றைப் பயன்படுத்துகிறார். (Life-study of James, pp. 6-7)

சந்திப்பின் நாளில் எதிர்ப்பாளர்கள்
தேவனை மகிமைப்படுத்துதல்

1 பேதுரு 2:12-ல், தேசங்கள் மத்தியில் நம்மிடம் ஒரு மேன்மையான வாழ்க்கை முறை இருந்தால், சந்திப்பின் நாளில் நம் நிமித்தம் அவர்கள் தேவனை இறுதியில் மகிமைப்படுத்துவார்கள் என்று பேதுரு கூறுகிறான். இந்த வசனத்தில், பேதுரு “எதிர்ப்பாளர்கள் இப்போது உங்களுக்கு விரோதமாக தீமையாகப் பேசுகின்றனர். ஆனால் நீங்கள் அவர்கள் நடுவே ஓர் அற்புதமான வாழ்க்கை வாழும்போது, தரத்தில் அழகும் நடக்கையில் மேன்மையுமான ஒரு வாழ்க்கை வாழும்போது, அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, சந்திப்பின் நாளில் தேவனை மகிமைப்படுத்துவார்கள். அவர்கள் உங்களைப் பார்க்கையில், நீங்கள் தேவனின் சந்தித்தலின்கீழ் இருப்பதை உணருவார்கள். இறுதியில், இதன் விளைவு தேவனுக்கு மகிமையாக இருக்கும், காரணம் எதிர்ப்பாளர்கள் சந்திப்பின் நாளில் தேவனை மகிமைப்படுத்துவார்கள்” என்று பரிசுத்தவான்களிடம் கூறுவதுபோல் தோன்றுகிறது.

பேதுருவின் வார்த்தை கடந்த ஆண்டுகளில் பலமுறை நிறைவேறியுள்ளதை நான் பார்த்திருக்கிறேன் என்று என்னால் சாட்சிபகிர முடியும். தேவன் பரிசுத்தவான்களைச் சந்திப்பதை அவர்கள் பார்த்த காரணத்தால், பல எதிரிகள் தாங்கள் செய்த காரியத்திற்காக வருந்தி, மனந்திரும்பினார்கள். அவருடைய சந்திப்பின் நாளில் பரிசுத்தவான்கள் தேவனின் அன்பான கரிசனையின்கீழ் இருந்தனர். இந்தப் பரிசுத்தவான்கள் தீமையாகப் பேசப்பட்டபோதுகூட, அவர்கள் தேவனுடைய கிருபையுள்ள கரிசனையின்கீழ் ஆச்சரியமான, மேன்மையான வாழ்வை வாழ்ந்தனர். ஆகவே, தேவன் மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்தார். அவர்களுடைய மேன்மையான வாழ்க்கை முறை மற்றும் தேவனின் சந்தித்தல், இறுதியில் எதிர்ப்பாளர்கள் மனந்திரும்பி, தேவனுக்கு மகிமை செலுத்தச் செய்தது.

நம் வாழ்க்கை மறுசாயலாக்கப்படுவதன் காரணமாக எதிர்ப்பாளர்கள் தங்களது
மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுதல்

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள சில வாலிபர்கள் தங்கள் பெற்றோரால் எதிர்க்கப்பட்டிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட வாலிபரின் பெற்றோர் அவனைப் பலமாக எதிர்த்திருக்கக் கூடும். அவன் ஏன் சபை மற்றும் ஊழியக் கூடுகைகளில் கலந்துகொண்டு இவ்வளவு நேரம் செலவிடுகிறான் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எனினும், அவனுடைய வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை, ஒரு மறுசாயலாகுதலை அவர்கள் படிப்படியாக பார்க்கத் தொடங்கினார்கள். இதை விளக்க அவர்களிடம் வார்த்தை இல்லாதபோதுகூட, அவர்கள் தங்கள் மகனில் கர்த்தரின் மறுசாயலாக்கும் வேலையைக் குறித்து சாட்சி பகிர்ந்தனர். இறுதியில் அவர்கள், அவன் தேவனின் கரிசனையின்கீழ் இருந்த நபர், தேவனின் சந்திப்பின்கீழ் இருந்த நபர் என்பதை உணர ஆரம்பித்தனர்.

சமீபத்தில், ஒரு கூடுகையில் பல பரிசுத்தவான்கள் இந்த மாற்றத்திற்குச் சாட்சி பகிர்ந்தனர். முன்னர் அவர்கள் தங்கள் பெற்றோரால் எதிர்க்கப்பட்டனர், சிலரின் சம்பவங்களில், அவர்கள் பெற்றோரால் உபத்திரவப்படுத்தவும்பட்டனர். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய பெற்றோரின் மனப்பான்மை மாற ஆரம்பித்தது. குடும்பத்தினரைச் சந்திக்க வாலிபர்கள் வீட்டிற்குச் சென்றபோது, அவர்களது பெற்றோர் அவர்களைத் தொடர்ந்து எதிர்த்தனர். ஆனால், அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கருத்தாய் உற்றுக்கவனித்தும் வந்தனர். சிறிது சிறிதாக, எதிர்ப்பு குறைந்து உற்றுக்கவனித்தல் அதிகரித்தது. இறுதியில், அந்தப் பெற்றோரின் மனப்பான்மையில் ஒரு முழுமையான மாற்றம் ஏற்பட்டது, சில சம்பவங்களில், அவர்களும்கூட சபை வாழ்க்கைக்குள் வந்தனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளின் மேன்மையான வாழ்க்கை முறையை உற்றுக்கவனித்தனர், சந்திப்பின் நாளில் தேவனை மகிமைப்படுத்தினார்கள். (Life-study of 1 Peter, pp. 169-170)

References: Life-study of 1 Peter, msgs. 28, 19; Lifestudy of James, msg. 1; Life-study of Matthew, msg. 30; Life-study of Galatians, msg. 31

VIA BETHLEHEM WE JOURNEY

The Way of the Cross—

The Way of Following the Lord – 628

  1. Via Bethlehem we journey,
    We whose hearts on God are set;
    Babelike souls of Jesus learning,
    While our cheeks with tears are wet;
    For the manger and the stable
    Are not pleasant to our eyes,
    But our feet must follow Jesus,
    If our hands would grasp the prize.
  2. Via Nazareth! The pathway
    Narrows still as on we go,
    Years of toil none understanding,
    Yet God teaches us to know
    That the servant is not greater
    Than the Lord, who through long years
    Hid Himself from this world’s glory,
    Follow Him! Count not the tears.
  3. Via Galilee, we see Him!
    Stones are hurled, and cursed hissed
    By the men who gather round Him,
    Has He not the pathway missed?
    No! Unharmed the Savior passes,
    And this rough bit of the way
    We must travel, since like Jesus,
    Nothing can our purpose stay.
  4. Via too, the awful anguish
    Of the hours beneath the trees,
    Where the hosts of Satan linger,
    Awful hours of anguish these!
    Yet we fail not, for God’s angels
    Minister to us, and say,
    “Look, beloved, at the glory,
    Conflict is but for a day!”
  5. Then the Cross! For via Calvary
    Every royal soul must go;
    Here we draw the veil, for Jesus
    Only can the pathway show;
    “If we suffer with Him,” listen,
    Just a little, little while,
    And the memory will have faded
    In the glory of His smile!
  6. Then the grave, with dear ones weeping,
    Knowing that all life had fled;
    (Fellow-pilgrims, art thou numbered
    With the men the world calls dead?)
    Thence we rise, and live with Jesus,
    Throned above the world’s mad strife,
    Gladly forfeiting forever,
    All that worldlings count as life.
  7. On we press! And yonder gleaming,
    Nearing every day, we see
    The great walls of that fair city,
    God has built for such as we;
    And we catch the tender music
    Of the choirs that sing of One
    Who once died to have us with Him
    In His kingdom, on the throne.
  8. Just a few more miles, beloved!
    And our feet shall ache no more;
    No more sin, and no more sorrow,
    Hush thee, Jesus went before;
    And I hear Him sweetly whispering,
    “Faint not, fear not, still press on,
    For it may be ere tomorrow,
    The long journey will be done.”