மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் பதினொன்று – விசுவாசத்தின் மூலம் ஜீவன்

யோ. 3:16—தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகா-மல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்.

மரணம் ஜீவனை விடுவித்தது

கர்த்தர் தம்மை ஒரு கோதுமை மணியோடு ஒப்பிட்டார் (யோ. 12:24). ஒரு விதையில் ஜீவன் ஊனுரு கொண்டிருக்கிறது. அந்தக் கோதுமை மணி நிலத்தில் விழுந்து மரிக்கும்போது, அதற்குள் உள்ள ஜீவன் விடுவிக்கப்படுகிறது, அப்போது, அதிகக் கனி கொடுக்கப்படுகிறது.

ஆகவே, தேவன் மாம்சமாகுதலோடு நின்றுவிடவில்லை. தம் ஜீவன் மாம்சத்திலிருந்து விடுபட்டு, பரிசுத்த ஆவிக்குள் விடுவிக்கப்படும்படி அவர் மரணத்தினூடாகச் சென்றார். இப்போது இனியும் அவர் காலத்தாலும் இடத்தாலும் வரம்புக்குட்படவில்லை. இப்போது, விசுவாசிக்கிற அனைவருக்கும் அவருடைய ஜீவன் தடையின்றி பகிர்ந்தளிக்கப்பட முடியும். சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் பாவத்தின் மீட்புக்காக மட்டுமல்லாமல், தெய்வீக ஜீவனின் விடுவித்தலுக்காகவும் இருந்தது.

இரட்சிப்பின் உச்சம்—
மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்

பாவமன்னிப்பைப் பெறுதல், ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்னுள்ள நிலைக்கு நம்மைத் திரும்ப மீட்டுக்கொள்வதை மட்டும் செய்கிறது. அவன் வெறுமனே ஒரு மனிதனாக இருந்தான், அவனுடைய ஜீவன் ஒரு நேர்த்தியான நிலையில் உள்ள ஒரு மனித ஜீவனாக மட்டுமே இருந்தது. ஆனால் நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, தேவன் தம் ஒரே பேறான குமாரனை நமக்குக் கொடுக்க உத்தேசிக்கிறார். இதுவே தேவனுடைய இரட்சிப்பின் உச்ச நிலை…ஆதாம் ஜீவ விருட்சத்தைப் புசிக்கவில்லை. அவன் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், அவன் ஒரு மனிதனாக மட்டுமே இருந்திருப்பான். தேவனுடைய ஜீவனுடன் அவனுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஆனால், நாம் கிறிஸ்துவில் மிக மேன்மையான ஒன்றைச் சுதந்தரித்துள்ளோம். ஒரு மனித ஜீவனுக்குக் கூடுதலாக, நமக்கு ஒரு புதிய ஜீவன், தேவனிடமிருந்து வந்த ஒரு ஜீவன் இருக்கிறது, இது சாட்சாத்து தேவனின் குமாரனே. இதுவே நித்திய ஜீவன்.

மனித ஜீவனுக்கான தேவனுடைய தீர்வு, திருத்துதல் அல்ல, மாறாக சிலுவை மரணமே. தேவன் நம் பழைய மனிதனைக் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் ஆணி அடித்தார்; அவன் தீர்த்துக்கட்டப்பட்டான். இப்போது நாம் கிறிஸ்துவோடுகூட சேர்ந்து உயிரோடிருக்கிறோம்; கிறிஸ்து நம் புதிய ஜீவனாகிவிட்டார். நாம் ஒரு புதிய மனிதன்; நமக்கு ஒரு புதிய ஆரம்பம் இருக்கிறது, நாம் ஒரு புதிதான வழியில் வாழ்க்கை நடத்த முடியும். இவை யாவும் கிறிஸ்துவில் தேவனால் நிறைவேற்றப்பட்ட வேலைகளாகும்…மனிதனால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது. அவன் செய்ய முடிந்ததெல்லாம், விசுவாசிப்பதும் ஏற்றுக்கொள்வதுமே ஆகும்.

சந்தேகமின்றி பெற்றுக்கொள்ளுங்கள்

யோவான் 3:16ஐ அதே புத்தகத்தின் 1:12 உடன் சேர்த்து வாசிக்க வேண்டும். தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை மனிதனுக்குத் தந்தருளினார் என்று யோவான் 3:16 கூறுகிறது, “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரைப் பெற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று 1:12 கூறுகிறது. நாம் எப்படி இந்த ஜீவனைப் பெறுகிறோம்? இது மிக எளிமையானது. தேவன் கொடுத்தார், நாம் பெற்றுக்கொள்கிறோம்; அவ்வளவுதான். தேவன் கொடுத்திருப்பதை சந்தேகமோ பயமோ இல்லாமல் எளிமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் எவ்வளவு எளிமையாக இருக்கிறோமோ அவ்வளவு சிறந்தது.

திரு. C. H. ஸ்பர்ஜன் என்பவர் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு சுவிசேஷகர். ஒருநாள் அவர் தனது மாணவர்களிடம் ஜெபத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அவர்களில் ஒருவன், ஜெபங்கள் பதிலளிக்கப்படுகின்றனவா என்பதைத் தான் எவ்வாறு அறிந்துகொள்வது என்று கேட்டான். அவர் தன் பையிலிருந்து ஒரு தங்கக் கைக்கடிகாரத்தை எடுத்து, மேஜையின் மேல் வைத்தார். அதன் பிறகு, விரும்புகிறவர்கள் அதை எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.

மாணவர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட ஆரம்பித்தனர். இவ்வளவு நல்ல ஒரு கைக்கடிகாரம் இலவசமாகக் கொடுக்கப்படுமா என்று ஒரு சிலரால் நம்ப முடியவில்லை. மற்றவர்களோ, “நான் அதை எடுக்க என் கையை நீட்டும்பொழுது அதை அவர் திரும்ப எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தால் அது சங்கடமாக இருக்காதா?” என்று நினைத்தனர். வேறு சிலர், “திடீரென அவர் தன்னுடைய மனதை மாற்றினால் என்னவாகும்?” என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு சிறுமி, திரு ஸ்பர்ஜனிடம் வந்து “எனக்கு அது வேண்டும்” என்று கூறினாள். உடனே அவர் அந்தக் கைக்கடிகாரத்தை அந்தச் சிறுமியின் சிறிய கையில் அணிவித்து, அதைப் பத்திரமாகக் காத்துக்கொள் என்று கூறினார். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுடைய தயக்கத்தைக் குறித்து வருத்தப்படத் தொடங்கினபோது, திரு. ஸ்பர்ஜன் அவர்கள், “நான் அதைத் தரப்போவதாக கூறியபோது, அதை உண்மையாகவே சொன்னேன். நீங்கள் ஏன் நம்பவில்லை? தேவன் நமக்குக் கொடுத்திருப்பது கைக்கடிகாரத்தைவிட மிக மதிப்புள்ளது; நம்முடைய ஜீவனாகும்படி அவர் தம் குமாரனையே நமக்குக் கொடுத்திருக்கிறார். தேவன் கொடுப்பதற்கு இவ்வளவு மனதுள்ளவராக இருக்கும்போது, அதைப் பெற்றுக்கொள்ள நாம் இன்னும் தயங்குவது ஏன்” என்று கூறினார். எளிதாக விசுவாசித்துப் பெற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்.

உணர்ச்சியினால் அல்ல, விசுவாசத்தினால்

என்னுடைய நண்பன் ஒருமுறை, “வாட்ச்மேன் நீ அவர்களே, என்னுடைய வாழ்வில் தேவ குமாரனைப் பெற்றுக்கொள்ள நான் உண்மையாகவே விரும்புகிறேன். நான் தேவனிடம் ஜெபித்து, எனக்குள் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். கிறிஸ்து எனக்குள் வரும்போது, எனக்குள் ஏதோ எரிவது போன்ற ஓர் உணர்வு ஏற்படும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் முழங்கால்படியிட்ட போதோ, என் இருதயம் ஒரு பாறையைப் போல உணர்வற்றதாக இருந்தது. நான் ஜெபித்த பிறகும், ஒன்றும் மாறியதுபோல தோன்றவில்லை. தேவ குமாரனை என்னுடைய ஜீவனாக எனக்குள் உண்மையாகவே பெற்றிருக்கிறேனா என்பதை நான் எப்படி அறிந்துகொள்ளவது?” என்று கேட்டார்.

“ஒரு மனிதன் தேவ குமரனைப் பெற்றுக்கொள்ளும்போது அவன் ஓர் எரியும் உணர்வைப் பெறுவான் என்றோ அவன் குளிர்ந்து போனவனாக இருப்பான் என்றோ வேதம் கூறவில்லை. அது கூறுவதெல்லாம், விசுவாசிக்க வேண்டும் என்பதே. இது விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, உணர்வின்மூலமாக அல்ல. நீங்கள் உங்களுடைய உணர்வைச் சார்ந்துகொண்டால், தேவனுடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிப்பதில்லை; நீங்கள் தேவனை ஒரு பொய்யர் ஆக்குகிறீர்கள். தேவன் கொடுத்திருக்கின்றேன் என்று சொன்னால், அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் உங்கள் உணர்வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று நான் கூறினேன்.

விசுவாசத்தைத் தொடர்ந்து உணர்வு வருதல்

நான் ஓராண்டு காலமாக சீபூவில் தங்கியிருந்தேன். அங்கே ஒரு சகோதரன் என்னிடம், “என் ஜீவனாக இருக்கும்படி, நான் தேவ குமாரனை விசுவாசித்திருக்கிறேன். ஆனால், அதைக் குறித்து எனக்கு ஒரு மகிமையான உணர்வு இல்லை. நான் அவரை நிஜமாகவே பெற்றுக்கொண்டிருக்கிறேனா?” என்று கேட்டார். நான் அவரிடம் ஓர் உவமையைக் கூறினேன்: “மூன்று பேர் ஒரு மதிலின் மேல் நடந்து கொண்டிருக்கின்றனர். முன்னால் நடந்துகொண்டிருக்கும் நபர், கிறிஸ்து நம் ஜீவனாக இருப்பதன் உண்மையைப் பிரதிநிதிப்படுத்துகிறான். நடுவில் உள்ளவன் நம் விசுவாசத்தை அடையாளப்படுத்துகிறான். அது எப்போதும் தேவன் செய்துமுடித்திருக்கும் உண்மைகளைப் பின்தொடருகிறது. கடைசி நபர் நம் மகிமையான உணர்வைப் பிரதிநிதிப்படுத்துகிறான். இந்த உணர்வு, ஒரு மனிதன் விசுவாசித்தபிறகு வருகிறது. இது மூன்று காரியங்களில் கடைசியான காரியமாகும்.

மூன்று நபர்கள் மதிலின்மேல் நடக்கும்போது, நடுவில் உள்ள நபர் முன்பக்கம் மட்டும் பார்க்க முடியும். தேவன் செய்துமுடித்த வேலையை உறுதியாகப் பார்க்கும்போதே நம் விசுவாசம் உதயமாகிறது. நம் ஜீவனாக இருக்குமாறு, தேவன் தம் குமாரனை நமக்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறார். நாம் இந்த உண்மையைக் காணும்போது, நமக்கு விசுவாசம் இருக்கிறது. இரண்டாம் நபர் எப்போதுமே முதல் நபரைப் பின்தொடர்கிறான்.

விசுவாசத்திற்குப் பின்னால்தான் மகிமையின் உணர்ச்சி வருகிறது. மூன்றாம் நபர் காணமுடிவதெல்லாம் இரண்டாம் நபரே; இப்படியிருக்க, இரண்டாம் நபர் மூன்றாம் நபரைப் பார்க்கும்படி திரும்ப முயற்சித்தால், அவன் அந்த மதிலிலிருந்து உடனே விழுந்துவிடுவான். உண்மையின் மேல் பொருத்தப்படாத ஒரு விசுவாசம் தள்ளாடுகிற விசுவாசமாகும். இரண்டாவது மனிதன் விழுகின்ற அந்த நிமிடமே, மூன்றாம் மனிதனும் விழுந்தாக வேண்டும். அப்போது, மகிமையான எல்லா உணர்வுகளும் தொலைந்துபோய்விடும். எனவே, மகிமையான உணர்வைத் தேட திரும்பிப் பார்க்காதீர்கள். எளிமையாக, உண்மைகளைப் பின்பற்றுங்கள்.

தேவன் கிறிஸ்துவுக்குள் யாவற்றையும் செய்துமுடித்திருக்கிறார். அவர் மரித்தார், உயிர்த்தெழுந்தார், அவர் பரிசுத்த ஆவியாக உருமாற்றமடைந்திருக்கிறார். அவர் இப்போது உங்களுக்குள் வர ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் விசுவாசிப்பதே. தேவன் இந்த எல்லா வேலைகளையும் செய்திருப்பதால், ஒளிவீசுவதாக ஜொலிப்பதாக நீங்கள் உணர்ந்தாலும்கூட, அது ஒன்றுமே இல்லை.

கிறிஸ்து நம் ஜீவனாயிருக்க நமக்குள் வந்த பிறகு, ஒவ்வொரு வழியிலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் சட்டதிட்டத்தின் கட்டுப்படுத்துதலின்மூலமோ, ஒழுக்க நெறியைக் கற்பிப்பதன் மூலமோ, அல்லது, மேம்படுத்தல்கள் மற்றும் ஒழுக்கத்தைத் திணிப்பதன்மூலமோ ஒருபோதும் தூண்டப்பட முடியாது. தாங்கள் கிறிஸ்துவை ஜீவனாக ஏற்றுக்கொண்டபின், பெரிதும் மாறிய முப்பது, நாற்பது மிகக் கொடிய பாவிகள் உடனே என் நினைவுக்கு வருகின்றனர். ஆனால், நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான மற்ற கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர், இவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், ஒழுக்கம் மற்றும் ஒடுக்குதல் மூலமாக அல்லாமல், தங்களுக்குள் வேலைசெய்துகொண்டிருக்கும் கிறிஸ்துவின் இந்த அற்புதமான வல்லமையுள்ள ஜீவன் மூலமாகவே ஆரம்பிக்கப்படுகிற இந்த ஆச்சர்யமான மாற்றத்தைக் குறித்து சாட்சி பகிர முடியும். (CWWN, vol. 27, “The Normal Christian Faith,” pp. 139-140, 142-145)

References: CWWN, vol. 27, “The Normal Christian Faith,” ch. 12; Life-study of Galatians, msg 14

1014

VERILY, VERILY

Gospel—Life

  1. Oh, what a Savior that He died for me!
    From condemnation He hath made me free;
    “He that believeth on the Son” saith He,
    “Hath everlasting life.”
  2. “Verily, verily, I say unto you;”
    “Verily, verily,” message ever new!
    “He that believeth on the Son”-’tis true!-
    “Hath everlasting life!”
  3. All my iniquities on Him were laid,
    All my indebtedness by Him was paid;
    All who believe on Him, the Lord hath said,
    “Hath everlasting life.”
  4. Though poor and needy, I can trust my Lord;
    Though weak and sinful, I believe His word;
    Oh, glad message; every child of God
    “Hath everlasting life.”
  5. Though all unworthy, yet I will not doubt;
    For him that cometh He will not cast out:
    “He that believeth”-oh, the good news shout!
    “Hath everlasting life.”