மேய்த்துப்பேணுதல்
திரட்டு 1
உயர்வான சுவிசேஷம்
பாடம் பத்து – கிறிஸ்துவின் இரட்சிப்பு
யோ. 3:16—தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகா-மல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்.
ரோ. 5:10—நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால் ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
உலக மக்கள் நித்திய ஜீவனைப் பெறும்படி தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தருமளவுக்கு அவர்கள்மேல் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்று [யோவான் 3:16 நமக்குக் கூறுகிறது]. மனிதனோடு ஒன்றாயிருக்க வேண்டுமென்ற, மனிதன் தம் இனமாக இருக்க மனிதனைத் தாம் இருக்கும் வண்ணமாகவே ஆக்க வேண்டுமென்ற ஒரு நல்லின்பம், இருதய வாஞ்சை தேவனுக்கு நித்தியத்தில் இருந்தது. எனவே, அவர் மனிதனை சிருஷ்டிக்கையில் மனிதன் தம்மை உள்ளடக்க ஒரு பாத்திரமாக ஆகும்படி அவர் மனிதனைத் தமது சாயலிலும், தமது ரூபத்தின்படியும் சிருஷ்டித்தார். சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம்…தேவனின் சாயலையும், தேவனின் ரூபத்தையும் பெற்றிருந்தான். எனவே, சிருஷ்டிப்பின் நேரத்திலேயே, தேவ-மனிதனைக் குறித்த எண்ணம் ஏற்கனவே இருந்தது.
புதிய ஏற்பாட்டில்,தேவன் தம்மையே ஜீவனாகக் கொண்டு மனிதனை மறுபடிஜெநிப்பிக்க வந்தார். “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை பெற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” என்று யோவான் 1:12 கூறுகிறது. நாம் தேவனின் பிள்ளைகளாக மாறுகிறபோது, நமக்குத் தேவனுடைய ஜீவனும், சுபாவமும் இருக்கிறது…பெற்றெடுக்கப்பட்டது அதனைப் பெற்றெடுத்தவரைப் போலவே இருந்தாக வேண்டும். மாடு கழுதைக் குட்டியைப் பெற்றெடுப்பதோ, ஆடு நாய்க்குட்டியைப் பெற்றெடுப்பதோ போன்றதொரு காரியம் இல்லை. உள்ளான சாயலிலும் புறம்பான ரூபத்திலும் மட்டுமல்லாமல், தம் ஜீவனிலும் சுபாவத்திலும்கூட துல்லியமாக அவரைப்போலவே இருக்குமாறு, தாம் இருக்கும்வண்ணமாகவே நம்மை ஆக்குவதே தேவனின் இருதய நோக்கம்.
தம் ஜீவனால் மனிதனைத் தாம் இருக்கும் வண்ணமாகவேகூட ஆக்க விரும்பும் அளவு, தேவன் உலக மக்களை இவ்வளவாய் நேசித்தார். ஆயினும், மனிதன் சாத்தானால் மயக்கப்பட்டு, பாவம் செய்து விழுந்துபோனான்; இவ்வாறு, மனிதன் தேவனுடைய நீதியை மீறினான்…எனவே, நாம் இங்கு இரண்டு காரியங்களைப் பார்க்கிறோம்: தேவனுடைய அன்பு மற்றும் தேவனுடைய நீதி. தம் அன்பின்படி, தேவன் மனிதனைத் தாம் இருக்கும் வண்ணமாகவே ஆக்க விரும்புகிறார். எனினும், மனிதன் பாவஞ்செய்து தேவனுடைய நீதியை மீறினான்.
ஆகையால்,…தேவன் தம் ஜீவனின்படி மனிதனுக்காக ஜீவாதாரமாக செய்ய விரும்புவதையெல்லாம் செய்வதற்கு, தம் நீதியுள்ள கோரிக்கையின்படி, தேவன் விழுந்துபோன பாவிகளைச் சட்டரீதியாகத் திரும்ப மீட்பது தேவை. தேவன் பாவிகளை மீட்பதை தேவனின் நீதி கோருகிறது. “ஆ தேவனே, நீர் அவர்களை நேசிப்பது நல்ல காரியம், ஜீவாதார ரீதியில் அவர்களில் பல காரியங்களைச் செய்ய நீர் வாஞ்சிப்பதும் நல்ல காரியம். உம் நீதியுள்ள நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்ய முதலாவது நீர் அவர்களை மீட்டுக்கொள்ள வேண்டும்” என்று தேவனின் நீதி தேவனிடம் கூறுவதுபோல் தோன்றுகிறது. இதுதான் மீட்பு. பாவிகளைச் சட்டரீதியாக மீட்பதன்மூலம், தேவன் தம் இருதய வாஞ்சையின்படி ஜீவாதாரரீதியாக தம் ஜீவனால் தாம் விரும்புகிறதைச் சுதந்திரமாகச் செய்யலாம். இவ்வாறு, தேவனுடைய முழு இரட்சிப்பு, சட்டரீதியாகத் தேவைப்பட்ட மீட்பையும், ஜீவாதாரமாக தேவனின் ஜீவன் மூலம் நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பையும் உள்ளடக்குகிறது.
தேவனின் சட்டரீதியான கோரிக்கையை நிறைவேற்றுதல் என்பது செயல்முறையாக இருத்தலும், தேவன் ஜீவாதாரமாக நிறைவேற்ற விரும்புவது குறிக்கோளாக இருத்தலும்
தேவனின் முழு இரட்சிப்பில், சட்டரீதியான அம்சத்தில் அவர் செய்வது செயல்முறையாக உள்ளது, ஜீவாதார அம்சத்தில் அவர் செய்வது குறிக்கோளாக உள்ளது.
தேவனின் சட்டரீதியான கோரிக்கை
செயல்முறை என்ற அம்சத்தில் தம் சட்டரீதியான கோரிக்கையின்படி தேவன் நிறைவேற்றியிருப்பது, பாவ மன்னிப்பு, பாவங்களைக் கழுவுதல், நீதிப்படுத்துதல், தேவனிடம் ஒப்புரவாகுதல், நிலையில் பரிசுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய மீட்பாக உள்ளது.எனினும், தேவனுடைய முழு இரட்சிப்பு இந்த அளவு மட்டுமே அல்ல…தேவனுடைய முழு இரட்சிப்பின் முதல் அம்சம், சட்டரீதியான அம்சமாகும்…இந்தக் காரியங்கள் யாவும் வழிமுறை, தகுதி, மற்றும் நிலை இவற்றைப்பற்றிய காரியமாகும். குறிக்கோள் என்ற அம்சத்தில், ஜீவாதாரமாக தம் ஜீவனின்படி தேவன் நமக்காகச் செய்துமுடித்திருக்கும் இரட்சிப்பை அனுபவித்துமகிழ தேவனின் கிருபைக்குள் நுழையும்படி, சட்டரீதியான அம்சம் பாவிகளான நம்மைத் தகுதிப்படுத்துகிறது, அந்த நிலையில் நம்மை வைக்கிறது (ரோ. 5:10).
தேவனின் ஜீவாதார இரட்சிப்பு
தேவனுடைய முழு இரட்சிப்பின் இரண்டாம் அம்சம் குறிக்கோள் என்ற அம்சமாகும். குறிக்கோள் என்ற அம்சத்தில், தேவன் தம் ஜீவனால் ஜீவாதாரமாக நிறைவேற்றியிருப்பது இரட்சிப்பாகும், இது (1) மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்…, (2) மேய்த்துப்பேணப்படுதல்…, (3) நம் குணத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், (4) நம் மனதில் புதிதாக்கப்படுதல், (5) நம் சாயலில் மறுசாயலாக்கப்படுதல், அதன் விளைவாக (6) தேவனின் கட்டிடம், (7) தேவனின் முதற்பேறான குமாரனுடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுதல்…, (8) மகிமைப்படுத்தப்படுதல்…(ரோ. 8:30) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சட்டரீதியாகச் செய்துமுடிக்கப்படுவது ஐந்து காரியங்களை உடைய மீட்பு என்னும் ஆரம்ப படியாகும், இப்படியிருக்க, ஜீவாதாரமாக நிறைவேற்றப்படுவது, மீட்பிலிருந்து வேறுபட்டதும், எட்டு காரியங்களை உள்ளடக்கியதுமான இரட்சிப்பு என்னும் ஒரு மேலான படியாகும். மீட்பு சட்டரீதியாகச் செய்துமுடிக்கப்படுகிறது, இப்படியிருக்க, இரட்சிப்பு ஜீவாதாரமாக நிறைவேற்றப் படுகிறது. ஜீவாதார அம்சத்திலுள்ள இந்த எட்டு காரியங்களும் தேவனின் நித்திய பொருளாட்சியின் உச்சநிலை இலக்காகிய, அதாவது, நித்தியத்தில் தேவனின் பெரிதாக்கமாகவும் வெளியாக்கமாகவும் இருக்கும்படி, ஒன்றாக இணைக்கப்பட்டு, கலந்திணைக்கப்பட்ட பதனிடப்பட்ட மூவொரு தேவனையும் அவரது மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்டவர்களையும் கொண்டு கட்டியமைக்கப்பட்ட ஓர் உயிரியாகிய புதிய எருசலேமை முழுநிறைவாக்கப்போகும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியமைக்க தேவனுடைய சபையை விளைவிக்கின்றன.
சட்டரீதியான அம்சமாகவுள்ள மீட்பு, தேவனின் இரட்சிப்பின் குறிக்கோளை நிறைவேற்ற முடியாது, ஏனெனில் அது வெறுமனே செயல்முறை மட்டுமே, குறிக்கோள் அல்ல. உதாரணத்திற்கு, ஒரு சமை யற்காரர் ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுவதற்கு சமையலறையில் சமைக்க அதிக நேரம் செலவு செய்கிறார். எனினும், சமைப்பது அவரது குறிக்கோள் அல்ல, அது வெறுமனே ஒரு செயல் முறை மட்டுமே. பின்னர், விருந்தினர் விருந்தை அனுபவித்துமகிழ அழைக்கப்படுகிறபோது, அதுவே சமையலின் குறிக்கோளாக உள்ளது. அது போலவே, தேவனின் இரட்சிப்பில், செயல்முறை என்ற அம்சத்தில், அதாவது, சட்டரீதியான அம்சத்தில் நாம் தங்கிவிடக் கூடாது; இதற்கு மாறாக, குறிக்கோள் என்ற அம்சத்திற்கு, அதாவது, ஜீவாதார அம்சத்திற்கு நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 375-379, 381)
லூக்கா 15இலுள்ள வஸ்திரமும் கன்றுக்குட்டியும் தேவனுடைய சட்டரீதியான கோரிக்கையையும், தேவனின் ஜீவாதாரமான இரட்சிப்பையும் உதாரணப்படுத்துதல்
லூக்கா 15ஆம் அதிகாரம், வீட்டை விட்டுச் சென்று, அந்திய தேசத்தில் சுற்றித்திரிந்து, ஒரு கெட்ட குமாரனாக ஆன ஒரு குமாரனைக் குறித்துப் பேசுகிறது. ஒரு நாள் அந்தக் கெட்ட குமாரன் கந்தை துணி உடுத்தியவனாய் வீட்டுக்குத் திரும்பிவந்தான். அவன் இன்னும் தன் தகப்பனின் மகனாக இருந்த போதும்கூட, அவன் புறம்பாக ஒரு கெட்ட குமாரனாகத் தோற்றமளித்தான். அவன் இன்னும் மிக தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே, அவனது தகப்பன் அவனைக் கண்டு, அவனிடம் ஓடி, அவனைக் கட்டியணைத்து, முத்தமிட்டான். அதற்குப்பின், உடனே அவனது தகப்பன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் அந்த அதி சிறந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்துங்கள்” (வ. 22) என்று கூறினான்…அந்தக் குமாரன் வீட்டைவிட்டுச் சென்று, அந்நிய தேசத்தில் அலைந்துதிரிந்தபோது, அவன், குமாரன் என்ற தன் அந்தஸ்தை இழந்து, கெட்ட குமாரனாக ஆனான். அந்தத் தகப்பன் வஸ்திரத்தை அவன்மேல் உடுத்தியபோது, அவன் உடனே மீண்டும் குமாரனாக ஆனான். இது தேவனுடைய இரட்சிப்பின் சட்டரீதியான அம்சத்தைக் குறிக்கிறது.
எனினும், ஒரு வஸ்திரத்தைக் கொண்டு உடுத்து விக்கப்பட்டு, குமாரனாக ஆவது மட்டுமே போதுமானதல்ல. இந்த நேரத்தில், ஒருபக்கம், அந்தக் குமாரன் சந்தோஷமாக இருந்தான், ஆனால், மறுபக்கம் அவன், “தகப்பனே, இப்போது என் தேவை புறம்பான ரீதியில் ஒரு வஸ்திரத்தால் உடுத்துவிக்கப்படுதல் அல்ல. உள்ளார்ந்தரீதியில் நான் உணவூட்டப்படவில்லை. பல ஆண்டுகளாக உலர்ந்த அவரைக்காய் மட்டுமே உண்டு வந்தேன். இன்று நான் வெறும் வயிற்றுடன் திரும்ப வந்திருக்கிறேன். தயவுசெய்து, சீக்கிரமாக எனக்கு ஏதாவது உணவு தாருங்கள்” என்று தன் இருதயத்தில் கூறியிருக்க வேண்டும். ஒருவேளை அந்தக் குமாரன் இதைச் சொல்ல வெட்கப்பட்டிருக்கலாம், ஆனால், தகப்பனோ இதைத் தொடர்ந்து, “கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்” (வ. 23) என்றான். அந்த நேரத்தில் அந்தக் குமாரன் மகிழ்ச்சியுடன் நடனமாடியிருந்திருக்க வேண்டும். கொழுத்த கன்றைப் புசித்தபின், குமாரன் திருப்தியடைந்தான், அவன் இனியும் பசியாய் இல்லை. ஆகவே, அந்த வஸ்திரம் தேவனுடைய இரட்சிப்பின் சட்டரீதியான அம்சத்தை அடையாளப்படுத்துகிறது, அந்தக் கன்றுக்குட்டி தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதார அம்சத்தை அடையாளப்படுத்துகிறது.
கிறிஸ்துவின் இரட்சிப்பின் தேவை
சட்டரீதியான பக்கத்திலுள்ள ஐந்து காரியங்களைக் குறித்து நாம் நன்று அறிந்திருக்கிறோம். நாம் பாவமுள்ளவர்கள் என்றும், நாம் மனந்திரும்பி நம் பாவங்களைத் தேவனுக்கு முன் அறிக்கை செய்து கர்த்தரில் விசுவாசிக்கும்போது, நாம் பாவமன்னிப்பைப் பெறுகிறோம், நம் பாவங்கள் கழுவி நீக்கப்படுகின்றன, நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்படுமாறு, நாம் தேவனால் நீதிப்படுத்தப்படுகிறோம், நாம் நிலையில் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்றும் நாம் அறிந்திருக்கிறோம். இவை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, ஒரு சிலர், “நாம் பரலோகத்திற்குப் போக இந்த ஐந்து காரியங்கள் போதுமானவை. தேவன் நம்மை ஒருக்காலும் மறுபடியும் ஆக்கினைத்தீர்ப்பு செய்யமாட்டார். அவர் என்றென்றைக்கும் நம்மை மன்னித்திருக்கிறார், எனவே நாம் சமாதானத்துடன் வாழ்வோம்” என்று கூறுகின்றனர். எனவே, அவர்கள் “சமாதானமாயிருங்கள், இயேசுவை நம்பி சந்தோஷமாயிங்கள். ஒரு நல்ல நபராக இருக்க முயற்சிசெய்யுங்கள், மற்றவர்களுக்கு உதவ முயற்சிசெய்யுங்கள், பின்னர், ஒருநாள் நீங்கள் பரலோகத்திற்குப் போவீர்கள்” என்று கூறி மற்றவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கின்றனர். ஆனால், இது போதுமானதல்ல என்று வேதம் கூறுகிறது. இந்த ஐந்து காரியங்களுக்குக் கூடுதலாக, வேதம் வேறு எட்டு காரியங்களைக் கூறுகிறது: மறுபடிஜெநிப்பிக்கப்படுதல், மேய்த்துப் பேணுதல், குணத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், புதுப்பிக்கப்படுதல், மறுசாயலாக்கப்படுதல், கட்டியெழுப்பப்படுதல், ஒத்தசாயலாக்கப்படுதல், மகிமைப் படுத்தப்படுதல்.
சட்டரீதியான பக்கத்தில் அந்த ஐந்து காரியங்களை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது, இன்னும் அதிகமாக, ஜீவாதார பக்கத்தில் இந்த எட்டு காரியங்களையும் நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. அந்த ஐந்து காரியங்களாலான முதல் குழு ஒரு வீட்டின் அஸ்திபாரத்தைப்போன்று அடித்தளமாக இருக்கிறது. இந்த ஜீவாதாரமான எட்டு காரியங்களைக் குறித்து இன்னுமதிக முழுமையான அறிவும், அனுபவமும் நமக்கு இருக்குமாறு, அந்த ஐந்து காரியங்களாலான முந்தைய குழுவின் அஸ்திபாரத்தின்மேல் இந்த எட்டு காரியங்களாலான அடுத்த குழுவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 387-391)
Reference: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” chs. 1, 2
“அப்பா பிதாவே,” இரட்சகர்
பிதாவைத் தொழுதுகொள்ளுதல்— அவரது மீட்பு – 43
1 “அப்பா பிதாவே,” இரட்சகர்
நாமத்தில் வருகின்றோம்.
உம் பிள்ளைகள் கூடினோமே,
ஆசீர்வாதம் கோரினோம்.
அவர் இரத்தம் சுத்தம் செய்ய,
உம்மிடம் ஈர்க்கப்பட்டோம்,
ஆவியானவர் போதித்தார்
“அப்பா பிதா” அழைப்போம்.
2 உம்மை விட்டு தூரமாக,
ஊதாரியாய் அலைந்தோம்;
க்ருபையாய் பாவத்தினின்று,
எம்மை தப்புவித்தீரே.
இரட்சிப்பின் உடை உடுத்தி
உம் பந்தி இடம் பெற்றோம்;
உம் க்ருபையின் செல்வங்களில்,
நீரும் யாமும் மகிழ்ந்தோம்.
3 ஊதாரியை மன்னித்தீரே,
தந்தை அன்பால் “முத்தமிட்டீர்;”
உம் திட்டத்தில் யாம் பொருந்த
“கன்றைக் கொன்றீர்” எமக்காய்.
“உண்டு களிகூர்ந்திடுங்கள்”
என்ற சத்தம் கேட்கின்றோம்;
“தொலைந்த என் மகன் கண்டேன்,
மரித்தவன் உயிர்த்தான்”
4 “அப்பா பிதா,” போற்றுகின்றோம்,
வான சேனை நடுவில்
உம் ஞானம் கிருபை அன்பு
அற்புதங்கள் கற்கின்றோம்.
ஆசனம் முன்பு கூடும்போழ்,
நாங்கள் பறைசாற்றுவோம்
மீட்பில் அப்பா அன்பு கண்டோம்,
அப்பா பேர் மாநிறைவு!