மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் எட்டு – புதிய வழியின் நடைமுறைப் பயிற்சியில் உயிர்நாடி—வீடு
அப். 5:42—தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று சுவிசேஷமாய் பிரசங்கித்தார்கள் (கிரே.)
சபை வாழ்க்குக்கு மிகப் பலமான
ஒரு வீட்டுச் சூழல் இருத்தல்
தேவனுடைய வார்த்தையின்படி, தேவனுடைய சபை முதலில் மூவொரு தேவனின் வீடு, வீட்டார் அல்லது இல்லம் ஆகும் (1 தீமோ. 3:15). அதன் பிறகு அது தேவனுடைய இராஜ்ஜியம் (ரோ. 14:17). வீடுகள் இல்லாமல் தேவனுடைய இராஜ்ஜியம் இருப்பது கடினம். வீடு என்ற அடிப்படையான காரியம் இல்லாமல், தனிப்பட்டவர்கள் வாழ்வதும் கடினம், ஒரு தேசம் அல்லது இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுவதும் கடினம்.
கிறிஸ்தவம் சாத்தானின் சூதுக்கு விழுந்துபோய் இரையாகிவிட்டது; அது வீடுகளை முழுவதும் உதாசீனப்படுத்திவிட்டது. கிறிஸ்தவத்தில் வீட்டுக் கூடுகைகளைப் பற்றிய எந்த எண்ணமும் இன்றி, பெரிய கூடுகைகளுக்கு மட்டுமே அக்கறைசெலுத்தப்படுகிறது. கிறிஸ்தவத்திலுள்ள ஒரு நபருக்கு, அவரது அனுபவத்தை ஒன்றாகத் தாங்கிப்பிடிப்பதற்கான ஒரு பாத்திரம் இல்லை. அங்கு சாட்சியைத் தாங்கிப்பிடிக்க எந்தப் பாத்திரமும் இல்லை, சத்தியத்தைக் காக்கவும் பராமரிக்கவும் எந்தப் பாத்திரமும் இல்லை. ரோமர் 16ஐப் பரிசீலியுங்கள். எந்தச் சந்தேகமுமின்றி, அப்போஸ்தலர்களின் காலத்தில், சபையானது விசுவாசிகளின் வீடுகளில் கட்டப்பட்டது. ரோமர் புத்தகம் விசேஷமாகக் கிறிஸ்துவில் ஆவிக்குரிய ஜீவனுடனும், சபையில் ஆவிக்குரிய வாழ்க்கையுடன் இடைபடுகிற ஒரு புத்தகம் என்பது நமக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தின் முடிவில், பவுல் பரிசுத்தவான்களை வாழ்த்துவதற்கு ஒரு முழு அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவனது வாழ்த்துதல்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வீடுகள் சபைக்காகத் திறந்திருந்தன என்பதை நாம் காண முடியும். அப்போஸ்தலர் காலத்திலுள்ள சபை வாழ்க்கைக்கு ஒரு பலமான வீட்டுச் சூழல் இருந்தது என்பதை இது காட்டுகிறது.
இந்தக் காரணத்தால்தான் வீடுகளின் நேர்த்தியான சூழலை மீட்டுத்திருப்ப கர்த்தர் நமக்குத் தந்திருக்கிற எல்லா ஆற்றல், பலம், மற்றும் நேரத்துடன் நாம் பிரயாசப்பட வேண்டும். ஒவ்வொரு பரிசுத்தவானின் வீட்டையும், கூடுகைக்கான ஓர் இடமாக ஆக்குவதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். (CWWL, 1986, vol. 2, “Crucial Words of Leading in the Lord’s Recovery, Book 1: The Vision and Definite Steps for the Practice of the New Way,” pp. 212-213)
சுவிசேஷத்திற்கான ஒரு வடிகால்
சுவிசேஷத்திற்கான வாய் மனிதனே. அதோடு, சுவிசேஷத்திற்கான வடிகால் வீடுகளே. நாம் சுவிசேஷத்திற்கான வாயாக இருக்கிறோம், நம் வீடுகள் சுவிசேஷத்திற்கான வடிகால்களாக இருக்கின்றன. உங்கள் வீடு கர்த்தருடைய பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்படாமல், நீங்கள் மட்டுமே தனிப்பட்டவிதத்தில் சுவிசேஷம் பிரசங்கித்தால், ஒரு வாய் இருக்கும் ஆனால் ஒரு வடிகால் இருக்காது. பேதுருவின் காலத்தில் சீஷர்கள் “வீடுகள் தோறும்” அப்பம் பிட்டது மட்டுமல்லாமல் (2:46) அவர்கள் “வீடுகள் தோறும்” இயேசு கிறிஸ்துவை சுவிசேஷமாகவும் பிரசங்கித்தனர் (5:42) என்று நடபடிகள் நமக்குக் காட்டுகிறது. கிரேக்க மொழியில் அறிவி என்ற வார்த்தை சுவிசேஷம் என்ற வார்த்தையின் வினை வடிவமாகும், அவர்கள் இயேசுவைக் கிறிஸ்துவாக சுவிசேஷம் அறிவித்தனர் என்பதே இதன் பொருள்.
வீடுகளில் சுவிசேஷம் பிரசங்கித்தல்
லூக்கா 5 நமக்கு ஒரு மேன்மையான உதாரணத்தைத் தருகிறது. பணத்திற்கு அடிமையாயிருந்த லேவி என்ற பெயரையுடைய ஒரு வரிவசூலிப்பவனை கர்த்தராகிய இயேசு பார்த்து, தம்மைப் பின்பற்றும்படி அவனை அழைத்தார். கர்த்தருடைய அழைப்பைக் கேட்டவுடன், லேவி எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, கர்த்தரைப் பின்பற்றினான். இவ்விதத்தில் அவன் இரட்சிக்கப்பட்டான். அவன் இரட்சிக்கப்பட்டவுடன், அவன் தன் வீட்டில் கர்த்தராகிய இயேசுவுக்காக ஒரு மாபெரும் விருந்து கொடுத்தான். அவன் பல வரி வசூலிப்பவர்களையும் பாவிகளையும் அழைத்தான் (வவ. 32-29). அவன்தானே ஒரு கொடும் பாவியாக இருந்ததால், நல்ல மனிதர்கள் அவனுக்கு நண்பர்களாக இல்லை, மாறாக பொல்லாத மனிதர்களின் ஒரு கூட்டமே அவனது நண்பர்களாக இருந்தனர், கர்த்தருடன் பந்தியில் அமரும்படி அவர்கள் யாவரையும் அவன் அழைத்தான். இது சுவிசேஷப் பிரசங்கத்திற்காக வீடுகளைத் திறப்பதின் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாம் நம் வீடுகளைத் திறந்தவுடன், சுவிசேஷத்திற்கு ஒரு வடிகால் உண்டாகும்.
ஒரு திறந்த வீட்டின் ஆசீர்வாதங்கள்
ஆகையால், நீங்கள் பாவிகளுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கக் கூடுமாறு உங்கள் விருந்தினராக “பாவிகளை” அழைத்து இயேசுவுக்கு ஒரு மாபெரும் விருந்து கொடுக்க நீங்கள் எல்லாரும் உங்கள் வீடுகளைத் திறப்பீர்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். நீங்கள் உங்கள் வீடுகளைத் திறந்தால், அது உங்களுக்கு ஓர் இழப்பாக அல்ல, மாறாக ஓர் ஆசீர்வாதமாக இருக்கும். தம்மை நேசிக்கிறவர்களுக்கு ஆயிரக்கணக்கான தலைமுறைகள் தாம் தயைக்காட்டுவதாக கர்த்தர்தாமே கூறினார் (யாத். 20:6). எனவே, நித்தியத்தின் நிமித்தமாக, நாம் எல்லாரும் நம் வீடுகளைத் திறந்து, கர்த்தரின் சுவிசேஷத்திற்கான ஒரு வடிகாலை வழங்க வேண்டும். இவ்விதத்தில் ஆசீர்வாதம் நமக்கு மட்டுமல்லாமல், தலைமுறை தலைமுறையாக நம் மகன்களுக்கும் மகள்களுக்கும்கூட வரும். (CWWL, 1984, vol. 4, “Rising Up to Preach the Gospel,” pp. 387-388, 390)
References: CWWL, 1986, vol. 2, “Crucial Words of Leading in the Lord’s Recovery, Book 1: The Vision and Definite Steps for the Practice of the New Way,” ch. 12; CWWL, 1984, vol. 4, “Rising Up to Preach the Gospel,” ch. 4
ஜீவனின் பாய்ந்தோடுதலே
சுவிசேஷம் பிரசங்கித்தல்—
ஜீவனின் பாய்ந்தோடுதலால்
925
1 ஜீவனின் பாய்ந்தோடுதலே
நற்செய்தி அறிவித்தல்;
நம் சாட்சியால்தான் அடைவோம்
தொலைந்த பாவிகளை.
எம்மூலம் உம் ஜீவன் பாய,
காணட்டும் பிறர், தேவா!
உம் பாத்திரமாம் எம்மூலம்
உயிர்ப்பியும் மக்களை.
2 ஜீவன் உணர்த்துவதால் தான்
மக்கள் விசுவாசிப்பர்;
ஜீவன் உட்பகிர்வதால்தான்
மக்கள் ஜீவன் பெறுவர்.
3 கனி தரும் கிளைகளாய்,
கர்த்தரில் வசிப்போமே;
உள்ளான ஜீவன் பாய்ந்தோடி,
கிறிஸ்துவை அளிப்போமே.
4 நம் வாழ்க்கையே அறிவிப்பாய்,
கிறிஸ்துவைக் காண்பிக்கட்டும்;
போதகப் பிரசங்கம் அல்ல,
ஜீவ விதை தூவட்டும்.