மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் ஏழு – ஒப்பற்றரீதியில் சுவிசேஷத்திற்காக வாழ்தல்
அப். 8:4-5—சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள். 5அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குப் பிரசங்கித்தான்.
1 தீமோ. 2:4—எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
சுவிசேஷத்தின் வரையறை
சுவிசேஷம் என்பது பதனிடப்பட்ட மூவொரு தேவனின் சாட்சாத்து ஊனுருவாக இருக்கிற கிறிஸ்து நம் அனுபவமகிழ்ச்சிக்காக மூவொரு தேவனின் முழுநிறைவாகிய முழுநிறைவடைந்த ஆவியாக நம்மை வந்தடைவதாகும். சத்தியத்தின்படி, சுவிசேஷம் என்பது முழுப் புதிய ஏற்பாடும் ஆகும். நான்கு சுவிசேஷங்கள் உள்ளன என்று கூற கிறிஸ்தவர்கள் பழக்கப்பட்டுள்ளனர், ஆனால் முழு ரோமர் புத்தகமும் தேவனுடைய சுவிசேஷம் என்று பவுல் நமக்குக் கூறுகிறான் (1:1, 15). இது தேவனுடைய பிரசங்கத்தையும், விழுந்துபோன மனிதன் மீது தேவனின் ஆக்கினைத்தீர்ப்பையும், அதிகாரம் 16இல் உள்ள உள்ளூர் சபைகள் உட்பட சரீர வாழ்க்கையையும் உள்ளடக்குகிறது. சுவிசேஷத்தின் வரையறையைப் பற்றிய இப்படிப்பட்ட ஒரு விசாலமான பார்வையை நீங்கள் எப்போதாவது பெற்றதுண்டா? தனிநபர்ரீதியில் சுவிசேஷம் என்பது ஓர் அற்புதமான நபர், சத்தியத்தின்படி, சுவிசேஷம் என்பது புதிய ஏற்பாட்டின் இருபதேழு புத்தகங்களின் முழுமையான தெய்வீக வெளிப்பாடாகும். தேவனுடைய புதிய ஏற்பாட்டு பொருளாட்சியே சுவிசேஷம். நாம் இத்தகைய சுவிசேஷத்தில் விசுவாசிக்கவும், இத்தகைய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், இத்தகைய சுவிசேஷத்திற்காக ஒப்பற்றரீதியில் வாழவும் வேண்டும். தேவன் நம்மை வந்தடைவதாகிய முழுநிறைவடைந்த ஆவியானவர் இறுதியாக வெளிப்படுத்தலில் ஏழு ஆவிகளாகிவிட்டார் (1:4, 4:5: 5:6). ஏழு ஆவிகளும்கூட இந்தச் சுவிசேஷத்தின் ஒரு பகுதியே.
ஒப்பற்றரீதியில் சுவிசேஷத்திற்காக வாழ்தல்
பிரபஞ்சத்திலும், இன்று இந்தப் பூமியிலும் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் ஒன்று இருக்கிறது, அதற்காக வாழும்படி நாம் நினைவுபடுத்தப்பட்டு, கட்டளையிடப்படுகிறோம் என்பதை உங்களில் பதியச் செய்வதே என் நோக்கம். ஒப்பற்ற விதத்தில் இந்தச் சுவிசேஷத்திற்காக வாழ கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். நாம் இந்தப் பூமியில் எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் நம் தொழிலுக்காக வாழ்கிறோமா? அல்லது அதிக பணம் சம்பாதிக்க நம் வேலைக்காக வாழ்கிறோமா? மனிதன் எதற்காக வாழ்ந்துகொண்டிருக்கிறான்? ஏழ்மையான மனித சமுதாயத்தில் பல நடவடிக்கைகள் இருக்கின்றன, ஆனால் எந்த இலக்கும் இல்லை. நமக்கு ஓர் இலக்கு இருக்கிறதா? நம் இலக்கு சுவிசேஷமே; நம் சுவிசேஷம் நம் இரட்சிப்பாகவும், நம் ஜீவனாகவும், நம் ஜீவ நிரப்பீடாகவும், நம் சகலத்தையும்-உள்ளடக்கிய அனுபவமகிழ்ச்சியாகவும் நம்முள் சாட்சாத்து ஆவியானவராக இருக்கும்படி பதனிடப்பட்ட மூவொரு தேவனே.
இப்படிப்பட்ட ஒரு சுவிசேஷத்திற்காக ஒப்பற்றவிதத்தில் வாழ்வது என்னே ஓர் ஆச்சர்யம், என்னே ஒரு மகிமை! நான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சுவிசேஷத்திற்காக ஒப்பற்ற விதத்தில் வாழ்ந்துவருகிறேன். இதற்காக அல்லேலூயா! இது இதற்குத் தகுந்ததே. நான் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது, என் முழு மாகாணத்திற்குக் கூட அல்ல, எங்கள் பகுதியிலிருந்த கிராமங்கள் அனைத்திலும் மட்டுமே பிரசங்கிக்கவும் போதிக்கவும் செல்ல தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்பதே நான் சிந்தனையாக இருந்தது. என் வாழ்நாள் முழுவதும் நான் அதைச் செய்திருந்தாலும், நான் நிச்சயமாக மகிழ்ச்சியாகதான் இருந்திருப்பேன். நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், உலகத்தின் மற்ற பகுதிகளிலும் சர்வதேச மக்களுக்குப் பேசுவேன் என்பதை நான் ஒருபோதும் நினைத்துப்பார்த்ததில்லை. கர்த்தருடைய இரக்கத்தால், நான் சுவிசேஷத்திற்காக ஒப்பற்றவிதத்தில் வாழ்கிறேன்.
கிறிஸ்துவின் அதிகாரத்துடன் செல்லுதல்
மத்தேயு சுவிசேஷத்தின் முடிவில், கர்த்தர் பதனிடப்பட்ட மூவொரு தேவனின் சாட்சாத்து ஊனுருவாக உயிர்த்தெழுதலில் வந்து, வானத்திலும், பூமியிலிலும் சகல அதிகாரமும் தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நம்மிடம் கூறினார் (28:18). அமெரிக்காவின் ஜனாதிபதி முழு அதிகாரத்துடன் தன்னைப் பிரதிநிதிப்படுத்துகிற பல நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்புகிறார், ஆனால் வானத்திலும் பூமியிலுமுள்ள சகல அதிகாரமான இந்த வகையான அதிகாரம் நமக்கு ஏன் தேவை? தேசங்களைச் சீஷராக்க நமக்கு இந்த அதிகாரம் தேவை. நாம் எத்தனை பேரைச் சீஷராக்கியிருக்கிறோம் என்று நாமெல்லாரும் நம்மையே கேட்க வேண்டும். நீங்கள் அவரில் விசுவாசித்திருக்கிறீர்களா? நீங்கள் அவரைப் பெற்றுக்கொண்டீர்களா? அவர் உங்களில் வாழ்கிறாரா? நீங்கள் அவருடன் ஒரே ஆவியாக இருக்கிறீர்களா? நீங்கள் அவரில் நிலைத்திருக்கிறீர்களா? இப்போது அவர் உங்களில் நிலைத்திருக்கிறாரா? நீங்களும் அவரும் ஒன்றா? நீங்கள் இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று கூறினால், செல்வதற்கு வானத்திலும் பூமியிலும் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. செல் என்ற வார்த்தையின் மதிப்பும் முக்கியத்துவமும் அளவிடப்பட முடியாது. செல், செல், செல்! முதலாவது, எருசலேமுக்கும், பின்பு, யூதேயாவுக்கும், அதன்பின் சமரியாவுக்கும், அதன்பின் பூமியின் கடைமுனைவரைக்கும் செல்லுங்கள் (அப். 1:8). எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா வீடுகளுக்கும் செல்லுங்கள். உங்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லுங்கள், உங்கள் வாழ்க்கைத் துணையின் உறவினர் வீடுகளுக்குச் செல்லுங்கள். தேசங்களைச் சீஷராக்கச் செல்லுங்கள்.
கனிகொடாதிருத்தலின் அபாயம்
பல ஆண்டுகள் மலடாக இருப்பது உங்களுக்கு சந்தோஷமா? நாம் வீணராகவும், கனியற்றவர்களாகவும், மலடாகவும் இருப்பது சாத்தியம் என்று 2 பேதுரு சுட்டிக்காட்டுகிறது (1:8). நாளை காலையில் கர்த்தர் திரும்பிவருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் மத்தேயு 25இல் உள்ள அவரது வார்த்தையின்படி, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதன் ஒரு கணக்கை நீங்கள் அவருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் அவரிடம் என்ன சொல்வீர்கள்? உங்கள் உள்ளூர் தளத்தில் உங்களுக்கு ஒரு நல்ல சபை வாழ்க்கை இருந்தது என்றும், அவர் உங்களுக்குக் கொடுத்ததெல்லாம் இன்னும் இங்கிருக்கிறது என்றும் அவரிடம் கூறுவீர்களா? அவர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேகரிக்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அவரிடம் கூறுவீர்களா? கர்த்தர் என்ன சொல்வார்? “நல்லது, அருமையான, உத்தமமுள்ள அடிமையே…உன் எஜமானின் சந்தோஷத்தில் பிரவேசி” என்று கர்த்தர் கூறுவாரா (வவ. 21, 23)? அல்லது, அவர் பொல்லாதவனும் சோம்பேறியுமான அடிமையே என்று உங்களை அழைப்பாரா (வ. 26)? மத்தேயு 25இன்படி, அவர் உங்களை எங்கே போடுவார்? புறம்பான இருளில் தள்ளப்படுகிறவன் ஒரு நிஜமான வரத்தை, ஒரு தாலந்தைப் பெற்றவன் என்பதை மறந்துவிடாதீர்கள். இவன் இரட்சிக்கப்பட்டவன் மட்டுமல்ல, வரம்பெற்றவனும் கூட. கர்த்தர் நிஜமானவர், அவர் நிஜமாகத் திரும்பிவருவார், மத்தேயு 25இல் பேசப்பட்ட அவரது வார்த்தை நிறைவேறும். இது ஒரு தீவிரமான மற்றும் பயபக்திக்குரிய காரியம்.
நாம் புறப்பட்டுச்செல்லவும் கனிகொடுக்கவும் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருத்தல்
“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;…நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று யோவான் 15:16 கூறுகிறது. இந்த வசனத்தில் மிக முக்கியமான சில வார்த்தைகள் உள்ளன. முதல் வார்த்தை ஏற்படுத்தினேன். நாம் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். திராட்சைச் செடியாகிய கிறிஸ்துவின் ஒரு கிளையாக இருத்தல் என்ற காரியத்தில், நமக்கு எந்தத் தெரிந்தெடுப்பும் இல்லை, ஏனெனில் அவரே நம்மைப் பிடித்தார். அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார், கனிகொடுக்கும்படி அவரே நம்மை ஏற்படுத்தினார், நம்மை நியமித்தார். கனிகொடுப்பது கர்த்தரின் ஏற்படுத்துதல், அதாவது அவரது நிர்ணயம். அவர் நம்மை வேறெதனையும் செய்ய ஏற்படுத்தவில்லை. கனிகொடுக்கும்படியே அவர் நம்மை ஏற்படுத்தினார். புறப்பட்டுச்சென்று, கனிகொடுக்கும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். ஒரு கிளையால் செல்ல முடியுமா? ஒரு பெளதிகமான மரத்தின் கிளைகள் எங்கும் செல்வதில்லை. ஆனால் நாம் ஜீவிக்கிற கிளைகள் மட்டுமல்ல, நாம் நகர்கின்ற கிளைகளும் கூட. நாம் சென்றாக வேண்டும். நாம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. (CWWL, 1987, vol. 1, “Being Desperate and Living Uniquely for the Gospel,” pp. 47-49, 51, 58)
எல்லா மனிதருக்கும் கடனாளிகளாயிருத்தல்
பவுல் தான் எல்லா மனிதருக்கும் ஒரு கடனாளியாக இருந்ததாகக் கூறுகிறான் (ரோ. 1:14). நாம் சுவிசேஷத்திற்குக் கடன்பட்ட கடனாளிகள் என்பதைக் காண்பதற்கான அதே ஆவி நமக்கு இருக்க வேண்டும் என்று நான் எதிர்நோக்குகிறேன். தான் சுவிசேஷம் அறிவிக்காவிட்டால் தனக்கு ஐயோ என்றும், சுவிசேஷம் பிரசங்கித்தால் தனக்கு வெகுமதியளிக்கப்படும் என்றும் பவுல் கூறுகிறான் (1 கொரி. 9:16-17). சுவிசேஷத்திற்காக நமக்கு வெகுமதியளிக்கப்படுமாறு கர்த்தரின் சாட்சிகளாக இருக்கும்படி நாம் எல்லாரும் எழும்புவோம் என்று நான் எதிர்நோக்குகிறேன். (CWWL, 1984, vol. 4, “Rising Up to Preach the Gospel,” p. 362)
References: CWWL, 1987, vol. 1, “Being Desperate and Living Uniquely for the Gospel,” ch. 3; CWWL, 1984, vol. 4, “Rising Up to Preach the Gospel,” chs. 1—5
ஜீவனின் பாய்ந்தோடுதலே
சுவிசேஷம் பிரசங்கித்தல்—
ஜீவனின் பாய்ந்தோடுதலால்
925
1 ஜீவனின் பாய்ந்தோடுதலே
நற்செய்தி அறிவித்தல்;
நம் சாட்சியால்தான் அடைவோம்
தொலைந்த பாவிகளை.
எம்மூலம் உம் ஜீவன் பாய,
காணட்டும் பிறர், தேவா!
உம் பாத்திரமாம் எம்மூலம்
உயிர்ப்பியும் மக்களை.
2 ஜீவன் உணர்த்துவதால் தான்
மக்கள் விசுவாசிப்பர்;
ஜீவன் உட்பகிர்வதால்தான்
மக்கள் ஜீவன் பெறுவர்.
3 கனி தரும் கிளைகளாய்,
கர்த்தரில் வசிப்போமே;
உள்ளான ஜீவன் பாய்ந்தோடி,
கிறிஸ்துவை அளிப்போமே.
4 நம் வாழ்க்கையே அறிவிப்பாய்,
கிறிஸ்துவைக் காண்பிக்கட்டும்;
போதகப் பிரசங்கம் அல்ல,
ஜீவ விதை தூவட்டும்.