மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் ஆறு – கர்த்தரைச் சேவித்தல்

எபே. 4:16—அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குக் கட்டியெழுப்புதலை உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது (கிரே.).

கர்த்தரைச் சேவிப்பது எப்படி

நம் முழு ஆள்தத்துவத்தோடும் சேவித்தல்

நம் ஆள்தத்துவம் மூன்று பகுதிகளால் ஆனது: ஆவி, ஆத்துமா, சரீரம். நம் முழு ஆள்தத்துவத்தோடு கர்த்தரைச் சேவிப்பதென்றால் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் கர்த்தருக்கான சேவையில் பங்குபெறுகின்றன என்று பொருள் (ரோ. 12:1, 2, 11). முதலாவது, நாம் நம் சரீரங்களைக் கர்த்தருக்கு ஏறெடுக்கவேண்டும்; இரண்டாவது, நம் ஆத்துமாவின் பிரதான பகுதியான மனம் புதிதாக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட வேண்டும்; மூன்றாவது, நம் ஆவி அனலாயிருக்க வேண்டும். இவ்வாறு, நம் ஆள்தத்துவத்தின் மூன்று பகுதிகளும் கர்த்தரைச் சேவிப்பதில் பங்குபெறுகின்றன.

கர்த்தரைப் பின்பற்றுதல்

கர்த்தரைச் சேவிப்பதற்கு, நாம் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும் (யோ. 12:26). கர்த்தரைச் சேவிக்கிறவர்கள் அவர் எடுத்த வழியை எடுக்க வேண்டும். கர்த்தர் நகரும் இடங்களுக்குக்கெல்லாம் நாம் அவரைப் பின்பற்ற வேண்டும். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு நாமும் இருக்க வேண்டும். அவர் சிலுவையைத் தெரிந்தெடுத்து, தமக்கும் யாவற்றுக்கும் மரித்து, சிலுவையின் வழியை எடுக்கச் சித்தமாயிருந்தார். கர்த்தரைப் பின்பற்றுகிற நாம் அதுபோலவே இருக்க வேண்டும். இவ்வாறு நாம் அவரைச் சேவிக்க இயலும்.

தேவனுடைய ஆலோசனையின்படி

கர்த்தருக்கான நம் சேவை, தாவீதினுடையதைப்போல, தேவனுடைய ஆலோசனையின் படியும் தேவனுடைய ஆலோசனையிலும் இருக்க வேண்டும் (அப். 13:36).
கேட்பதற்குக் காதைக் கொண்டிப்பதற்கான தேவை

பழைய ஏற்பாட்டில், சேவிக்க விரும்புகிற ஒருவனின் காதை எஜமான் துளையிட்டான் (யாத். 21:6), இது, அவன் கீழ்ப்படிபவனாகவும் பணிந்தடங்குபவனாகவும் இருக்குமாறு அவனது காதுகளுடனான ஓர் இடைபடுதலை அடையாளப்படுத்துகிறது. இன்று கர்த்தரைச் சேவிக்க, கேட்கிற காதுகள் நமக்கு இருக்குமாறும், கர்த்தருக்குக் கீழ்ப்படிகிற பணிந்தடங்குகிற நபர்களாய் இருக்குமாறும், நமக்கும் கர்த்தரின் இடைபடுதல் தேவை.
கர்த்தரைச் சேவிப்பதின் இலக்கு—கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புதல்

பரிசுத்தவான்களுடனான நம் ஒருங்கிணைதலும், சேவையும் கிறிஸ்துவின் சரீரத்தின் வளர்ச்சியை உண்டாக்கி, அன்பில் அதனைக் கட்டியெழுப்பும்படி இருக்கிறது என்று எபேசியர் 4:16 நமக்குக் காட்டுகிறது. அவரது அடிமைகளாக நாம் கர்த்தரைச் சேவிப்பது, பாவிகளை இரட்சித்தல், பரிசுத்தவான்களைச் சீர்பொருத்துதல் மற்றும் தேவனை மகிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக மட்டுமல்லாமல் (1 கொரி. 10:31), இன்னும் அதிகமாக, கிறிஸ்துவின் சரீரத்தை வளரச்செய்து கட்டியெழுப்பும்படி இருக்கிறது.

கர்த்தரைச் சேவிப்பதற்கான வெகுமதி
பிதாவாகிய தேவனால் கனப்படுத்தப்படுதல்

“ஒருவன் எனக்கு [கர்த்தராகிய இயேசு] ஊழியஞ்செய்தால்…அவனைப் பிதாவானவர் [தேவன்] கனம்பண்ணுவார்” என்று யோவான் 12:26 கூறுகிறது. கர்த்தருக்கான நம் சேவைக்காக, நாம் பிதாவினால் கனப்படுத்தப்படுவோம். என்னே வெகுமதி இது!

பந்தியில் அமரும்படி ஆசீர்வதிக்கப்பட்டு,
கர்த்தரின் சேவித்தலை அனுபவித்துமகிழ்தல்

கர்த்தரைச் சேவிக்க விழிப்பாக இருந்துவருகிற அடிமைகள், கர்த்தர் திரும்பிவரும்போது, விருந்தில் அமரும்படி ஆசீர்வதிக்கப்பட்டு, கர்த்தர் சேவிப்பதை அனுபவித்து மகிழ்வார்கள் (லூக். 12:37). கர்த்தரைச் சேவிக்கிறவர்களுக்கு இதுவும் கர்த்தரிடமிருந்து வரும் ஒரு மாபெரும் வெகுமதி.

கர்த்தரோடு ஆளுகைசெய்தலும்,
கர்த்தரின் சந்தோஷத்தை அனுபவித்துமகிழ்தலும்

கர்த்தரைச் சேவிக்கிற உண்மையும் உத்தமுமான அடிமை பல காரியங்கள் மீது அதிகாரியாக நியமிக்கப்படுவதோடு, வருகிற இராஜ்ஜியத்தின் வெளியரங்கத்திற்குள்ளும், கர்த்தரின் சந்தோஷத்துக்குள்ளும் நுழைவான் (மத். 25:21, 23). நிச்சயமாக இது ஒரு மாபெரும் வெகுமதி, இதை நாம் பாராட்ட வேண்டும், இதற்காக ஏங்க வேண்டும். (Life Lessons, vol. 2, pp. 91-94)

Reference: Life Lessons, vol. 2, lsn. 23

O HOW BLESSED IS THE PRIEST’S LIFE

Service—Enjoying Christ as Everything – 911

1. O how blessed is the priest’s life,
Christ to him is all in all:
All His clothing, food, and dwelling,
And His portion therewithal.

O how blessed is the priest’s life,
Christ to him is all in all:
All his clothing, food, and dwelling,
And his portion therewithal.

2 All the clothing of his service
Is the beauty of the Lord;
Glorious splendor do his garments,
Breast and shoulder-piece afford.

3 When in sacrifice he offers
Christ to God as God has willed,
Then as food he doth enjoy Him
And is with His riches filled.

4 Putting on the Lord as clothing,
Christ without he doth express;
Eating, drinking, with Him mingled,
Christ within doth him possess.

5 Holy, glorious is their dwelling,
’Tis the increase of the Lord;
Here the priests built up together
Unto God a house afford.

6 All his portion, all his living,
Everything the priests possess-
All is Christ and Christ forever,
In His all-inclusiveness.

 

Jump to section