மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் நான்கு – நாம் யார்?

யோ. 1:22—நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்? என்று கேட்டார்கள்.

1 பேது. 1:12—இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.

தற்போதைய சத்தியத்தில் நிலைநாட்டப்படுதல்

தேவன் நமக்கு ஒரு விசேஷித்த அழைப்பைத் தந்திருக்கிறார் என்பதே நாம் இங்கு இருப்பதற்கான காரணம்….இரண்டு பேதுரு 1:12, இப்பொழுது அறிந்திருக்கிற [தற்போதைய] சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும் என்ற வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது. தற்போதைய சத்தியம் என்பது, “இன்று வரையிலான சத்தியம்” என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.”தேவனே, தற்போதைய சத்தியம் என்பது என்ன?” என்று நாம் கேட்க வேண்டும்.

பதினாறாம் நூற்றாண்டின்போது
மீட்டுத்திருப்பப்பட்ட சத்தியம்

பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி, தேவன் வெவ்வேறு சத்தியங்களை மீட்டுத்திருப்பிவருகிறார். பதினாறாம் நூற்றாண்டு, சீர்திருத்தத்தின் யுகமாக இருந்தது. அது மதத்தில் மகத்தான மாற்றத்திற்கான ஒரு காலமாக இருந்தது…நாம் சீர்திருத்தத்தின் காலத்திலிருந்து வரலாற்றை நான்கு காலகட்டங்களாகக் பரிசீலிக்க வேண்டும். முதலாவது காலகட்டம், சீர்திருத்தத்தின் காலகட்டம். இரண்டாவது காலகட்டம், பதினாறாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையுள்ள சீர்திருத்தத்திற்கு அடுத்துள்ள காலம். மூன்றாவது கால கட்டம், பத்தொன்பதாம் நூற்றாண்டாகும், கடைசி கால கட்டம், தற்போதைய இருபதாம் நூற்றாண்டாகும்.
முதலாவது, நாம் லூத்தரின் சீர்திருத்தத்தைப் பரிசீலிப்போமாக….விசுவாசத்தினால் நீதிப்படுத்தப்படுதல் என்ற சத்தியத்தை அவர் மீட்டுத்திருப்பியதே அவரைப் பற்றிய அதிசிறந்த காரியம். இதுவே லூத்தரின் குறிப்பிட்ட மீட்டுத்திருப்புதல்.

பதினாறு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை சத்தியத்தின் மீட்டுத்திருப்புதல்

இதைத் தொடர்ந்து, நாம் பதினாறிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்திற்கு வருகிறோம். 1524இல், குழந்தைதெளிப்பு ஞானஸ்நானத்திற்குப் பிறகு மறுஞானஸ்நானத்தைப் பரிந்துரைத்த ஒரு கூட்ட விசுவாசிகளான ஆனாபாப்டிஸ்ட்கள் ஜெர்மனியில் எழுப்பப்பட்டனர். அவர்கள் விசுவாசிகளின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கித்தவர்களாகிய லோட்டாவிலிருந்த முந்தைய சகோதரர்களைப் பின்பற்றினவர்கள்…பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, 1536இல், ஜான் கால்வின் தேவனால் எழுப்பப்பட்டார். அவர், தான் சென்ற இடமெல்லாம் துன்புறுத்தலையும், நாடு கடத்தப்படுதலையும் சந்தித்தார். இறுதியாக, ஸ்காட்லாந்தில் அவர் ஒரு பசுமையான ஆரம்பத்தைப் பெற்று, ஸ்காட்டிஷ் பிரெஸ்பிட்டேரியன் சபையை நிறுவினார்.

இந்தக் காலத்தின்போது, தேவன் ஜெர்மனியில் ஃபிலிப் ஜேக்கப் ஸ்பெனரை எழுப்பினார். அவர் 1670இல் ஃபிரான்க்ஃபர்ட்டில், ஒரு லூத்தரன் சபையின் போதகரானார். அந்தக் காலத்திற்குள்ளாக, லூத்தரன் ஸ்தாபனம், ஒரு வகையான சம்பிரதாய மத்திற்குள் விழுந்துவிட்டிருந்தது. தன் வேதத்தை வாசிப்பதின் மூலம் ஸ்பெனர், தன் காலத்திலிருந்த சபை தேவனால் தடைசெய்யப்பட்ட, மனித அபிப்பிராயங்களால் நிறைந்திருந்ததைக் கண்டார். விசுவாசிகள் புதிய ஏற்பாட்டின் போதனைக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவர் கண்டார். இதன் காரணமாக, அவர் மற்றவர்களை 1 கொரிந்தியர் 14இன் நடைமுறைக்குள் வழிநடத்தத் துவங்கினார்.

1732க்குள், மொரேவியன் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட, உலகிலேயே மிக முந்தையதான மிஷனரிக் குழு உருவானது….அவர்களே முழு உலகமெங்கும் சுவிசேஷத்தைப் பரப்பச் சென்ற சகோதரர்களின் முதல் குழு.

அதே சமயம், கத்தோலிக்க சபையினுள் ஒரு புதிய கண்டுபிடிப்பு உண்டானது. ஒரு கூட்ட ஆவிக்குரிய மக்கள் கர்த்தரால் எழுப்பப்பட்டனர்….மேடம் குயான் 1648இல் பிறந்து, 1717இல் மரித்தார். இவர் தேவனின் சித்தத்துடன் சேர்ந்திணைதல், சுயத்தை மறுதலித்தல் ஆகிய காரியங்களில் இன்னும் அதிக அறிவுடையவராக விளங்கினார்.

பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தங்கள் உலகத்தை ஆவிக்குரியரீதியில் மட்டுமல்லாமல், அரசியல்ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பாதித்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் அந்தச் சீர்திருத்தங்கள், பிரதானமாக ஆவிக்குரிய பக்கத்தில் ஆதிக்கம் செய்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் எல்லா இயக்கங்களுக்கிடையே மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது “பிலதெல்பியா” சபையின் சாட்சியாகும். அவர்கள் முற்காலத்தில் நிகழ்ந்த பிரதான மீட்டுத்திருப்புதல்கள் எல்லாவற்றையும் சுவீகரித்துக்கொண்டனர். அவர்கள் மத்தியில் நாம் எல்லாப் பிரதானமான சத்தியங்களையும் காண முடியும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தேவனின் சத்தியத்தின் கண்டுபிடிப்பு

1827இல், அயர்லாந்திலுள்ள டுப்ளினில், ஒரு கூட்ட மக்கள் எழுப்பப்பட்டனர்….சபையிலுள்ள அநேகக் காரியங்கள் செத்ததாகவும், உயிரற்றதாகவும், சடங்காகவும் இருந்ததை அவர்கள் பார்த்தனர். வேதத்தின் வெளிப்பாட்டின்படியான சபையை அவர்களுக்குக் காட்டும்படி அவர்கள் கர்த்தரைக் கேட்கத் துவங்கினார்கள். அவர்கள் எழும்பி, 1 கொரிந்தியர் 14இன் கோட்பாட்டின்படி கூடிவரவேண்டும் என்பதை ஜெபம், மற்றும் ஐக்கியத்தின் மூலம் உணர்ந்தனர். இதன் விளைவாக, அவர்கள் ஒரு சகோதரனின் வீட்டில் அப்பம்பிட்கத் துவங்கினார்கள். ஒரு குறுகிய காலத்திற்குப் பின்பு, முன்னாள் ஆங்கிலிகன் ஊழியரான ஜான் நெல்சன் டார்பி, அவர்களின் கூடுகையில் சேர்ந்து, அவர்கள் மத்தியில் வேதத்தை விளக்கத் துவங்கினார். படிப்படியாக,…அவர்கள் மத்தியில் வேதவிரிவுரையாளர்கள் பலர் எழுப்பப்பட்டனர்.தேவனின் சித்தத்தில், சபை மனிதனின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கக் கூடாது; அது, பரிசுத்த ஆவியால் மட்டும் வழிகாட்டப்பட வேண்டும். கர்த்தருக்குரிய எல்லாரும், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படக் கற்றுக்கொள்ள வேண்டும், மனிதனின் வழிகாட்டுதலைப் பின்பற்றக் கூடாது. இவை யாவும் பிரதரனால் திரைநீக்கப்பட்ட சத்தியங்கள்.

பிற்பாடு, தேவன் இங்கிலாந்தில் ஜார்ஜ் முல்லரை எழுப்பினார். ஜெபத்தைக் குறித்தும், தேவனின் வார்த்தையில் விசுவாசத்தைக் குறித்தும், அநேக மேன்மையான பாடங்களை அவர் கற்றார்.

தேவன் திருமதி. ஜெஸ்ஸி பென்லூயிஸ் என்ற இன்னொரு சகோதரியை ஆதாயப்படுத்தினார்….திருமதி. பென்லூயிஸ், உண்மையாகவே சிலுவை சுமந்த ஒரு நபர். அவரது அனுபவங்களின் மூலம், அநேக விசுவாசிகள் சிலுவையைக் குறித்ததான சத்தியத்தைப் பின்பற்ற கவர்ந்திழுக்கப்பட்டனர்….தேவனுடைய சத்தியத்தின் திரைநீக்குதல் முன்னேறுகிற ஒன்று என்பதை நாம் காண முடியும்; அது எந்த அளவுக்கு முன்னேறுகிறதோ, அந்த அளவுக்கு முழுமையாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, கிட்டத்தட்ட எல்லாச் சத்தியங்களும் மீட்டுத்திருப்பப்பட்டுவிட்டன.

இருபதாம் நூற்றாண்டில்
சத்தியத்தின் முன்னேற்றம்

[1904இன் மாபெரும் வெல்ஷ் எழுப்புதலின்போது,] இரட்சிக்கப்பட இனி ஆன்மாக்கள் இல்லை என்கிற அளவுக்கு, அநேகப் பட்டணங்களில் முழு மக்கள் தொகையும் இரட்சிக்கப்பட்டது. பெந்தெகொஸ்தேயின் அநேகக் குறிப்பிடத்தக்கக் கூறுகள் அவர்களிடையே வெளியரங்கமாயின.
அவர்களிடமிருந்து, நாம் இரண்டு சத்தியங்களைக் கற்றுள்ளோம்: முதலாவது, வளைக்கப்பட்டு, கீழ்ப்படுத்தப்பட்ட ஒரு கூட்ட மக்களின் மூலமாகவே பரிசுத்த ஆவியின் எழுப்புதல் வேலை கொண்டு வரப்படுகிறது…இரண்டாவது, இந்தக் காலத்திலிருந்து அநேகர் பொல்லாத ஆவிகளின் வேலையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.

இன்று தேவனின் வேலை மற்றும் தேவனின் அடுக்கடுக்கான வெளிப்பாடுகள்

தேவனின் சத்தியங்கள் படிப்படியாகச் சேர்க்கப்பட்டு ஒன்றுதிரட்டப்படுபவை என்பது நமக்குத் தெரியும்; பின்னுள்ள சத்தியங்கள் முன்சென்றவற்றை அவமாக்குவதில்லை. தேவனின் கடந்தகால சத்தியங்கள் யாவும் இன்றைய சத்தியங்களுக்கு அடித்தளத்தை அமைக்கின்றன. நாம் இன்று காண்பது, தேவனின் படிப்படியாகச் சேர்க்கப்பட்டு ஒன்றுதிரட்டப்பட்ட வெளிப்பாடுகளாகும்.

1926லிருந்து, நாம் இரட்சிப்பு, சபை, மற்றும் சிலுவையைக் குறித்து அநேக செய்திகளை விடுவிக்கத் துவங்கியதுடன், இந்தக் காரியங்களைக் குறித்து அதிகமாக சாட்சிபகர்ந்தோம். 1927க்குள், சிலுவையின் அகம்சார்ந்த வேலைக்கு நம் கவனத்தை ஒருமுகப்படுத்தினோம். இன்று நாம் பேசுவது, ஜீவனின் ஒரு கோட்பாடாக உயிர்த்தெழுதலாகும். அது வெறுமனே ஓர் உபதேசம் அல்ல, மாறாக ஓர் ஆவிக்குரிய உண்மை. இதற்குப் பின்பு, தேவன் நமக்குக் கிறிஸ்துவின் சரீரம் என்ன என்பதையும், இந்தச் சரீரத்தின் நிஜம் எங்கே உள்ளது என்பதையும் காண்பித்தார். கிறிஸ்துவின் ஜீவன் ஒன்று மட்டுமே இருப்பதால், ஒரே ஒரு சபை மட்டுமே இருக்கிறது என்பதை நாம் உணரத் துவங்கினோம்.

1928ன் பிப்ருவரிக்குள், தேவனின் நித்திய குறிக்கோள் குறித்து நாம் சில காரியங்களைக் குறிப்பிடத் துவங்கினோம்….1934வரை தேவனோடு தொடர்புடைய யாவற்றின் மையத்துவம் கிறிஸ்துவே என்பதை நாம் உணராமலிருந்தோம். கிறிஸ்துவே தேவனின் மையத்துவமும், தேவனின் பிரபஞ்சத்துவமாகவும் இருக்கிறார்.
முழு சபையாரின் சார்பாக, மரணம் என்ற இடத்தில் நிற்க முன்னணி எடுக்கிற ஒரு கூட்ட மக்களே தேவனின் ஜெயங்கொள்பவர்கள். சபையுடனான அவர்களது தொடர்பு, எருசலேமுடனான சீயோனின் தொடர்பைப்போல் இருக்கிறது. தேவனின் எல்லாக் கோரிக்கைகளும் சீயோனின்மீது விழுகின்றன. சீயோன் ஆதாயமாக்கப்படும்போது, எருசலேம் ஆதாயமாக்கப்படுகிறது. சீயோன், எருசலேம் ஆகிய இரண்டுமே ஆதாயமாக்கப்படுகிறபோது, தேவனின் குறிக்கோள்

நிறைவேற்றப்படுகிறது.
ஓர் அறைகூவல் விடுத்தல்

தேவனின் மைய குறிக்கோளுக்கும், கிறிஸ்துவை எல்லாக் காரியங்களின் மையமாக எடுத்துக்கொள்வதற்கும், அவரது மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் பரமேறுதலை எல்லாவற்றின் அடிப்படையாக எடுத்துக்கொள்வதற்கும் திரும்பும்படி தேவனின் பிள்ளைகளுக்கு அறைகூவல் விடுப்பதே நம் வேலை. இதுவே, கொலோசெயர் 1 மற்றும் 3இன் செய்தி. நமக்கு, புதிய ஏற்பாட்டில் சபையின் நிலை தெரியும். இந்த நிலை உன்னதமானது, ஆவிக்குரியது என்று நாம் உணருகிறோம். மேற்கத்திய மிஷனரிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட உதவிக்காக நாம் தேவனுக்கு நன்றிசெலுத்துகிறோம். ஆனாலும், எல்லாவற்றையும் தேவனின் மைய குறிக்கோளுக்கு நாம் திரும்பக்கொண்டுவர வேண்டும் என்று தேவன் இன்று நமக்குக் காட்டுகிறார். சபையைப் பற்றிய வேதத்திற்குரிய தளத்திற்குத் திரும்புவதே இன்று நம் வேலை.

தேவனின் எல்லாச் சத்தியமும், சபையையே துவங்குமிடமாகக் கொண்டுள்ளது. பவுல் முதலில் அந்தியோகியாவிலுள்ள சபையில் வைக்கப்பட்டான். பிற்பாடு, அவன் அந்தியோகியாவிலுள்ள சபையிலிருந்து அனுப்பப்பட்டான். நாம் இன்று பிரசங்கிக்கிறதான சத்தியங்கள் அனைத்தும், சபையைத் துவங்குமிடமாகக் கொண்டுள்ளன. இதுவே நம் வேலை, இதுவே நம் சாட்சி.

இன்றுள்ள நான்கு பொறுப்புகள்

நமக்கு இன்று நான்கு பொறுப்புகள் உள்ளன: (1) பாவிகளைப் பொருத்தவரை, நாம் சுவிசேஷம் பிரசங்கித்தாக வேண்டும். (2) சாத்தானைப் பொருத்தவரை, ஓர் ஆவிக்குரிய யுத்தம் உள்ளது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். (3) சபையைப் பொருத்தவரை, இன்று நாம் காண்பதை உறுதியாய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். (4) கிறிஸ்துவைப் பொருத்தவரை, எல்லாக் காரியங்களிலும் அவரது முதன்மை என்ற உண்மையை நாம் சாட்சிபகர வேண்டும். (CWWN, vol. 11, “What Are We?” pp. 843-848, 850-859).

Reference: CWWN, vol. 11, “What Are We?”

ஸ்தல சபையைக் கர்த்தர்
சபை—கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல்
1255

1 ஸ்தல சபையைக் கர்த்தர் மீட்டுத்
திருப்புதற்காய் உள்ளோம்;
நகர் புவியில் கர்த்தர் மீட்டுத்
திருப்புதற்காய் உள்ளோம்.
கர்த்தரில் ஒருமை என்னும்,
தளத்தில் நின்று,
மகிமை கர்த்தர் ஆலயத்தைக்
கட்டிக் கொண்டுள்ளோம்.

கர்த்தருக்காய்,
கர்த்தருக்காய்,
கர்த்தரின் மீட்டுத்திருப்புதற்காய்!
கர்த்தருக்காய்,
கர்த்தருக்காய்,
கர்த்தரின் மீட்டுத்திருப்புதற்காய்!

2 நம் இதயம் கர்த்தர் மீட்டுத்
திருப்புதலில் உள்ளது;
ஆவியை இயக்கும்போழ்,
நம் தரிசனம் தெளிகிறது.
மா பாபிலோன் விழுந்தது, கீழ்
சாத்தான் தள்ளுண்டான்,
உள்ளூர் தளத்தில் உள்ளூர் சபை
கட்டப்படுகிறது.

 

Jump to section