மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் மூன்று – கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல்

1 யோ. 1:1—ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப் பார்த்ததுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

2:24—ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் அர்த்தம்

மீட்டுத்திருப்புதல் என்ற வார்த்தையின் அர்த்தம், ஆதியில் ஏதோவொன்று இருந்தது, அதன்பின் அது தொலைந்துவிட்டது. எனவே, அந்தக் காரியத்தை அதன் ஆதிநிலைக்குக் கொண்டுவருவதற்கான தேவை இருக்கிறது என்பதாகும். மீட்டுத்திருப்புதல் என்ற வார்த்தை சற்று எளிமையானது, அதிக கருத்தாழமிக்கது இல்லை, ஆனால் நாம் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலைப் பற்றிப் பேசும்போது, முழு வேதத்தின் வெளிப்பாட்டுக்கும் நாம் இதைப் பிரயோகிக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தின்படி கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலானது அதிஆழமான, மிக முக்கியமான காரியமாகும். ஓர் அர்த்தத்தில், முழு வேதத்தின் வெளிப்பாடும் மீட்டுத்திருப்புதல் என்பதன் ஒரு வெளிப்பாடாகும். (CWWL, 1983, vol. 2, “Concerning the Lord’s Recovery,” p. 5)

முதலில் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல், தேவனுடைய பரிசுத்த வார்த்தையாகிய பரிசுத்த வேத வாக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறபடி தெய்வீக சத்தியங்களின் மீட்டுத்திருப்புதலாகும் (2 தீமோ. 3:16)….வேத வாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியங்கள் காலப்போக்கில் தவறவிடப்பட்டன, தொலைந்துபோயின, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன, தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டன, தவறாக போதிக்கப்பட்டன. எனவே, கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலுக்கான தேவை இருக்கிறது. ஆரம்ப அப்போஸ்தலர்களின் யுகத்திலும், சபை பிதாக்களின் யுகத்திலும், சபை சங்கங்களின் யுகத்திலும், போப் முறையைக் கொண்ட கத்தோலிக்கத்தின் யுகத்திலும், புரோட்டஸ்டன்ட் நடைமுறையின் யுகத்திலும் கர்த்தரையும் அவரது பரிசுத்த வார்த்தையையும் நேசித்த அவரது பரிசுத்தவான்களுள் சிலர் மூலம் தொலைக்கப்பட்ட, தொலைந்துபோன, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, தவறாக வியாக்கியானிக்கப்பட்ட, தவறாகப் போதிக்கப்பட்ட சத்தியங்களுள் சிலவற்றைக் கர்த்தர் எப்போதும் மீட்டுத்திருப்பியிருக்கிறார். (CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need, pp. 9-10)

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் முதல் அம்சம்—தேவனைப் பற்றிய வெளிப்பாடு

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலுக்கு மூன்று அம்சங்கள் உள்ளன. முதல் அம்சம் தேவனைப் பற்றிய வெளிப்பாடு. தேவனைப் பற்றிய வெளிப்பாடு தேவனின் பேசுதலாகும். பழைய ஏற்பாட்டில் மோசே முதல் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலன் யோவான் வரை, ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தேவன் பேசினார். அவரது பேசுதல் மொத்தமாக இன்று நம் கரங்களில் இருக்கிற முழுமையான வேதாகமாக ஆனது. எனவே, வேதத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தல், அதன் முடிவில் ஒருவரும் இந்த வார்த்தைகளுடன் எதனையும் கூட்டவோ அதிலிருந்து எதனையும் நீக்கவோ கூடாது என்று கூறுகிறது (22:18-19).

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின்
இரண்டாம் அம்சம்—தேவ-மனித வாழ்க்கை

இப்போது நாம் கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் இரண்டாம் அம்சத்திற்கு, அதாவது, விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய ஒரு வித வாழ்க்கையான தேவ-மனித வாழ்க்கைக்கு வருகிறோம். உலகப்பிரகாரமான மக்கள் ஒழுக்கநெறியான, நன்நெறியான வாழ்க்கையையும், மதரீதியான வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றனர், ஆயினும் இவை தேவன் விரும்புவதல்ல. தேவன் விரும்புவது, தேவனும் மனிதனும் சேர்ந்து வாழ்கிற தேவ-மனித வாழ்க்கையாகும்.

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின்
மூன்றாம் அம்சம்—சபையின் நடைமுறைப் பயிற்சி

இறுதியில், கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் மூன்றாம் அம்சத்தை, அதாவது, சபையின் நடைமுறைப் பயிற்சியை நாம் பார்க்க வேண்டும்….சபை கிறிஸ்துவின் பிரபஞ்சளாவிய சரீரமாக தேவனின் பிரபஞ்சளாவிய வீடும், தேவனின் இராஜ்ஜியமும் ஆகும் (எபி. 1:23, 1 தீமோ. 3:15-16, மத். 16:18-19). இந்த மூன்றும்—கிறிஸ்துவின் சரீரமும், தேவனுடைய வீடும், தேவனின் இராஜ்ஜியமும்—ஒன்றே. கிறிஸ்துவின் சரீரம் தேவனுடைய வீடாகும், தேவ- னுடைய வீடு தேவனுடைய இராஜ்ஜியமாகும்.
கிறிஸ்துவின் பிரபஞ்சளாவிய சரீரம் தேவனுடைய வீடாகும், அதாவது, உள்ளூர் சபைகளாக பல உள்ளூர்களில் தோன்றும் தேவனுடைய இராஜ்ஜியமாகும். ஒருமையைக் காத்துக்கொள்ளவும், பிரிவினையைத் தடுக்கவும் ஒரு நகரத்தில் ஒரே ஒரு சபை இருக்க வேண்டும் என்று வேதம் காட்டுகிறது (அப். 8:1, 13:1; வெளி. 1:4, 11). இஸ்ரயேலர் நல்ல தேசத்தை வந்தடைந்தபோது, தாங்கள் விரும்பியபடி அவர்கள் ஆராதனைக்கான ஓர் இடத்தைத் தெரிந்தெடுக்க முடியாது என்பதை உபாகமம் 12:5-18 நமக்குத் தெளிவாகக் கூறுகிறது. தேவன் தம் நாமத்தை ஏற்படுத்தியிருக்கிற இடத்திற்கு அவர்கள் போக வேண்டும், அது அவர் தம் வசிப்பிடத்தைக் கட்டப்போகும் இடமாக இருந்தது. இஸ்ரயேலர் அங்குதான் தேவனை ஆராதிக்க வேண்டியிருந்தது.

கோட்பாட்டில், இன்று தேவன் வாஞ்சிக்கிற சபையின் நடைமுறை அதைப் போன்றதுதான், அதாவது, ஒருமையைக் காத்துக்கொள்வதற்காக ஒரே ஒரு சபையைக் கொண்ட ஒரு நகரம் (அப். 8:1; 13:1; வெளி. 1:4, 11).

பல்வேறு உள்ளூர்களிலுள்ள உள்ளூர் சபைகள் புவியியல் ரீதியாக வெவ்வேறு இடங்களில் பரம்பியுள்ளன, ஆயினும் அவை எந்த உபதேசத்தாலோ, காரியத்தாலோ பிரிந்திருக்கவில்லை (1 கொரி. 1:10-13).

சபையின் நடைமுறையில், தேவனுடைய ஒப்பற்ற சபையானது, முழுப் புவி முழுவதிலும் பல உள்ளூர் சபைகளாக வெளிக்காட்டப்பட்டாலும், சபைகள் இன்னும் கிறிஸ்துவின் ஒப்பற்ற பிரபஞ்சளாவிய சரீரமாக இருக்கின்றன, அவை உட்பிரிவுகள் அல்லது ஸ்தாபனங்களாகப் பிரிக்கப்படக் கூடாது (1 கொரி. 10:16-17). (CWWL, 1994-1997, vol. 2, “The Issue of the Union of the Consummated Spirit of the Triune God and the Regenerated Spirit of the Believers,” pp. 235, 240, 243-245)

References: CWWL, 1983, vol. 2, “Concerning the Lord’s Recovery,” ch. 1; CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” ch. 1; CWWL, 1994-1997, vol. 2, “The Issue of the Union of the Consummated Spirit of the Triune God and the Regenerated Spirit of the Believers,” ch. 6

ஸ்தல சபையைக் கர்த்தர்
சபை—கர்த்தருடைய மீட்டுத்திருப்புதல்
1255

1 ஸ்தல சபையைக் கர்த்தர் மீட்டுத்
திருப்புதற்காய் உள்ளோம்;
நகர் புவியில் கர்த்தர் மீட்டுத்
திருப்புதற்காய் உள்ளோம்.
கர்த்தரில் ஒருமை என்னும்,
தளத்தில் நின்று,
மகிமை கர்த்தர் ஆலயத்தைக்
கட்டிக் கொண்டுள்ளோம்.

கர்த்தருக்காய்,
கர்த்தருக்காய்,
கர்த்தரின் மீட்டுத்திருப்புதற்காய்!
கர்த்தருக்காய்,
கர்த்தருக்காய்,
கர்த்தரின் மீட்டுத்திருப்புதற்காய்!

2 நம் இதயம் கர்த்தர் மீட்டுத்
திருப்புதலில் உள்ளது;
ஆவியை இயக்கும்போழ்,
நம் தரிசனம் தெளிகிறது.
மா பாபிலோன் விழுந்தது, கீழ்
சாத்தான் தள்ளுண்டான்,
உள்ளூர் தளத்தில் உள்ளூர் சபை
கட்டப்படுகிறது.

Jump to section