மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் இரண்டு – சபையின் இரண்டு அம்சங்கள்

மத். 16:18—மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

18:16-17—அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ 17அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து.

பிரபஞ்சளாவிய அம்சம்

பிரபஞ்சளாவிய அம்சத்தில் சபை ஒப்பற்றரீதியில் ஒன்று. எபேசியர் 1இன் முடிவில் சபையானது எல்லாவற்றையும் முற்றுமுடிய நிரப்புகிறவருடைய நிறைவாகிய கிறிஸ்துவின் சரீரம் என்று பவுல் கூறுகிறான். இது பிரபஞ்சளாவிய அம்சத்திலுள்ள சபை, ஏனெனில் இந்தப் பிரபஞ்சத்தில் ஒப்பற்ற ஒரே ஒரு சரீரம் கிறிஸ்துவுக்கு இருக்கிறது.

பிரபஞ்சளாவிய சபை

பிரபஞ்சளாவிய சபை என்பது ஜீவிக்கிற தேவனுடைய வீடும், கிறிஸ்துவின் சரீரமும், மணவாளனாகிய கிறிஸ்துவுக்குப் பொருந்துகிற மணவாட்டியும், புதிய மனிதனும் ஆகும்.

மத்தேயு 16:18இல் கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டபடி

மத்தேயு 16:18இல் முதன்முறையாக கர்த்தர் சபையைக் குறிப்பிடுதல் இருக்கிறது. இந்த வசனத்தில் “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்” என்று அவர் கூறுகிறார். இங்கு வெளிப்படுத்தப்படுவது, இந்தப் பிரபஞ்சத்தில் கர்த்தரின் ஒப்பற்ற சாட்சிக்கான பிரபஞ்சளாவிய சபை.
பிரபஞ்சளாவிய சபை கிறிஸ்து என்ற சகலத்தையும்-உள்ளடக்கிய நபரிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரே பிரபஞ்சளாவிய சபையின் உருவாகுதலுக்கான காரணியாகவும், மூலக்கூறாகவும், ஆக்கக்கூறாகவும் இருக்கிறார். ஆகையால், சபையானது ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாகவில்லை, மாறாக அற்புதமான ஏதோவொன்றிலிருந்து உருவாக்கப்பட்டது. இது ஆதாமிலிருந்து வெளிவந்த ஏவாள் உருவாக்கப்படுதலால் மாதிரியாகக் காட்டப்படுகிறது. ஏவாளை உற்பத்திச்செய்வதற்கான காரணியாகவும், மூலக்கூறாகவும், ஆக்கக்கூறாகவும் ஆதாம் இருந்தான். அது போலவே, ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டான சிருஷ்டிப்பிலிருந்து வேறுபடும் விதத்தில், சபையானது, பதனிடப்பட்ட மூவொரு தேவனின் ஊனுருவும், ஓர் ஒப்பற்ற பூரணமான மனிதனுமாகிய கிறிஸ்து என்ற அற்புதமான நபரின் மூலம் உண்டானது. கிறிஸ்துவின் சரீரமாகிய பிரபஞ்சளாவிய சபை, ஜீவிக்கிற தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற அற்புத- மான, மேன்மையான, சகலத்தையும்-உள்ளடக்கிய நபரைக் குறித்த வெளிப்பாடு என்ற பாறையின் மீது கட்டப்படுகிறது. (The Conclusion of the New Testament, pp. 2139-2140, 2142-2143)

உள்ளூர் அம்சம்

பிரபஞ்சளாவியரீதியில் சபை ஒப்பற்றவிதத்தில் ஒன்று. எனினும், உள்ளூர்ரீதியில், சபையானது பல உள்ளூர்களில் வெளிக்காட்டப்படுகிறது. ஆகையால், ஒரே பிரபஞ்சளாவிய சபை பல உள்ளூர் சபைகளாகிறது. தேவன் கிறிஸ்துவில் வெளிக்காட்டப்படுகிறார், கிறிஸ்து சபையில் வெளிக்காட்டப்படுகிறார், சபை உள்ளூர் சபைகளில் வெளிக்காட்டப்படுகிறது.

உள்ளூர் சபைகள்

உள்ளூர் அம்சத்தில், சபை பல உள்ளூர்களில் பல உள்ளூர் சபைகளாக வெளிக்காட்டப்படுகிறது. பூமியிலுள்ள பல இடங்களில் வெளிக்காட்டப்படுகிற ஒரே பிரபஞ்சளாவிய சபை பல உள்ளூர் சபைகளாகிறது. ஓர் உள்ளூரில் அந்த சபையின் வெளியாக்கம் அந்தக் குறிப்பிட்ட உள்ளூரிலுள்ள உள்ளூர் சபையாகும்.
கிறிஸ்துவின் சரீரமாக, பிரபஞ்சளாவிய சபை உள்ளூர் சபைகள் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்தின் வெளியாக்கங்களாக உள்ளூர் சபைகள் உள்ளூர்ரீதியில் ஒன்று. உள்ளூர் சபைகள் இல்லாமல், பிரபஞ்சளாவிய சபையின் நடைமுறையாக்கமும் யதார்த்தமும் இருக்காது. பிரபஞ்சளாவிய சபை உள்ளூர் சபைகளில் உணர்ந்தறியப்படுகிறது. பிரபஞ்சளாவியரீதியில் சபையை அறிவது, உள்ளூர்ரீதியில் சபையை அறிவதில் முழுமைபெற வேண்டும். நாம் உள்ளூர் சபைகளை அறிந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்.
சபையானது உள்ளூர் சபையில் மட்டுமே நடைமுறையானதாக இருக்க முடியும். உள்ளூர் சபையிலும், உள்ளூர் சபையாலும் மட்டுமே சபையின் நடைமுறை நம்மிடம் இருக்க முடியும். உள்ளூர் சபை இல்லாவிட்டால், சபையைப் பொருத்தவரை நடைமுறைக்குரிய எதுவும் நம்மிடம் இல்லை. இறுதியில், வேதம் ஏழு உள்ளூர் சபைகளுடன் முடிவடைகிறது (வெளி. 1:10-13).

மத்தேயு 18:17இல் கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டபடி

பிரபஞ்சளாவிய சபை மத்தேயு 16:18இல் கர்த்தரால் வெளிப்படுத்தப்பட்டது, ஆனால் உள்ளூர் சபை அவரால் மத்தேயு 18:17இல் வெளிப்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் சபை ஓர் உள்ளூர் சபையாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் அது நாம் செல்லக்கூடிய ஓர் இடமாகும். ஒரு சகோதரனுடன் உனக்குப் பிரச்சினை இருந்தால், நீ முதலில் அவனிடம் செல்ல வேண்டும் என்று கர்த்தர் கூறினார். அவன் உனக்குச் செவிகொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. ஆனால் அவன் செவிகொடுக்காவிட்டால், ஒருவர் அல்லது இருவரை, அவர்களுக்கு அவன் செவிகொடுப்பான் என்று எதிர்பார்த்து, அவனிடம் சாட்சிபகரும்படி உன்னுடன் அழைத்துவர வேண்டும். அவன் இன்னும் செவிகொடுக்காவிட்டால், அப்போது நீ அந்தப் பிரச்சினையை சபையிடம் கொண்டுவர வேண்டும். இது நிச்சயமாக உள்ளூர் சபையாகத்தான் இருக்க வேண்டும். இது பிரபஞ்சளாவிய சபையாக இருக்க முடியாது, ஏனெனில் நாம் ஒரு பிரச்சினையைப் பிரபஞ்சளாவிய சபையிடம் அல்ல, உள்ளூர் சபையிடம் மட்டுமே கொண்டுவர முடியும்.

ஒவ்வோர் உள்ளூர் சபையின் எல்லையாகவும்
தளமாகவும் ஒரு நகரத்தை எடுத்துக்கொள்ளுதல்

ஒவ்வோர் உள்ளூர் சபையின் எல்லையாகவும், தளமாகவும் ஒரு நகரத்தை எடுப்பதன் மூலம் சபைகள் வெவ்வேறு நகரங்களில் ஸ்தாபிக்கப்படுகின்றன. வெளிப்படுத்தல் 1:11 இதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இந்த வசனத்தில், “நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி…எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு” என்று அந்தக் குரல் யோவானிடம் கூறியது. இந்த வசனம் மிக முக்கியமான விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகச் சுருளை ஏழு சபைகளுக்கு அனுப்பு வது, அதை ஏழு நகரங்களுக்கு அனுப்புவதற்குச் சமம் என்பதை நாம் இங்கு பார்க்கிறோம். ஆரம்ப நாட்களில் சபை வாழ்க்கையின் நடைமுறையானது, ஒவ்வோர் உள்ளூர் சபையின் எல்லை மற்றும் தளமாக ஒரு நகரத்தைக் கொண்டு ஒரு நகரத்திற்கு ஒரு சபை, ஒரு சபையைக் கொண்ட ஒரு நகரம் என்பதாக இருந்தது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எந்த நகரத்திலும் ஒரு சபைக்கு அதிகமாக இல்லை. இது ஒரு தெருவையோ, ஒரு பகுதியையோ பொருத்தவரையில் அல்ல, நகரத்தைப் பொருத்தவரையில் உள்ளூருக்குரியதான உள்ளூர் சபையாகும்.

வெளிப்படுத்தல் 1:11 நடபடிகள் 14:23க்கும், தீத்து 1:5க்கும் ஒத்திருக்கிறது. ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமிப்பது, ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிப்பதாகும், ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிப்பது, ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை நியமிப்பதாகும் என்பதை இந்த இரண்டு வசனங்களில் நாம் காண்கிறோம். ஒரு சபையின் மண்டலமும் வரம்பும், துல்லியமாக அது இருக்கிறதான நகரத்தினுடையதைப் போன்று இருக்க வேண்டும் என்பதை இது பெரிதும் தெளிவாக்குகிறது. வேறு வார்த்தைகளில், சபையின் எல்லையும், ஆட்சிவரம்பும் அது ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதான நகரத்தினுடையதோடு ஒத்திருக்கிறது.

எல்லா உள்ளூர் சபைகளும் பிரபஞ்சத்தில்
கிறிஸ்துவின் ஒப்பற்ற ஒரே சரீரமாக இருத்தல்

எல்லா உள்ளூர் சபைகளும் இந்தப் பிரபஞ்சத்தில் கிறிஸ்துவின் ஒப்பற்ற சரீரமாக இருக்கின்றன (எபே. 4:4). ஒவ்வோர் உள்ளூர் சபையும் இந்தப் பிரபஞ்சளாவிய சரீரத்தின் ஒரு பகுதியாகும், இந்த ஒப்பற்ற சரீரத்தின் ஓர் உள்ளூர் வெளியாக்கமாகும். ஒரே சரீரமாகிய இந்த ஒரே பிரபஞ்சளாவிய சபை எல்லா உள்ளூர் சபைகளாலும் தொகுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான உள்ளூர் சபைகள் இருக்கக் கூடும், ஆனால் அவை சேர்ந்து ஒரே பிரபஞ்சளாவிய சபையைக் கட்டியமைக்கின்றன. பிரபஞ்சளாவிய சபை கிறிஸ்துவின் ஒப்பற்ற சரீரமாகும், எல்லா உள்ளூர் சபைகளும் இந்த ஒரே சரீரத்தின் உள்ளூர் வெளியாக்கங்களாகும். (The Conclusion of the New Testament, pp. 2149-2150, 2153-2154, 2156)

Reference: The Conclusion of the New Testament, msgs. 199, 200

கிறிஸ்துவின் சரீரம்
சபை—அவளுடைய பொதுவான வரையறை
824

1 கிறிஸ்துவின் சரீரம்
பிதாவின் வாழ்விடம்;
அழைக்கப்பட்டோர் கூட்டம்
தேவமனு இனம்,
படைப்பின்முன் தெரிந்தார்
கல்வாரியில் மீட்டார்
சபையின் சுபாவம் நிலை
பூமியல்ல பரம்.

2 உயிர்ப்பின் புது சிருஷ்டி,
புதிய மனிதன்,
ஆவியில் ஸ்நானம் செய்து
வாக்கால் சுத்தம் செய்தார்.
கிறிஸ்துவே அவள் ஜீவன்
தலை, உள்ளடக்கம்,
பகைவர் பாதங்கள்கீழ்,
பரமேறினாள்.

3 கிறிஸ்துவல்லால் வேறு
அஸ்திபாரம் இல்லையே;
கிறிஸ்துபோல் அவளுடைய-
தெல்லாம் தெய்வீகம்;
கல்வாரியில் ஆவியால்
அங்கங்கள் பங்குற்று,
உயிர்ப்பில் கட்டப்படுவார்,
பொன், வெள்ளி, மணியாய்.

4 தேவன் கர்த்தர் ஆவி ஒன்றே-
சாராம்சம் ஒன்றே;
விஸ்வாசம், நம்பிக்கை,
ஸ்நானம், சரீரம் ஒன்றே;
அவளுள் மூவோர் தேவன்,
அங்கங்கள் ஓர் மெய்யே;
விஸ்வாசத்தால் ஒன்றானோம்,
நம்பிக்கை காண்பிப்போம்.

5 தேசங்கள் கோத்திரங்கள்
எங்கிலுமிருந்து
அங்கங்கள் நாம் ஒன்றானோம்,
வேற்றுமையின்றியே;
உயர்ந்தான் தாழ்ந்தான் இல்லை,
யூதன் கிரேக்கன் இல்லை;
ஆண்டான் அடிமை இல்லை;
கிறிஸ்துவே எல்லாமும்.

6 உலகளாவியது
ஓர் சரீரம், ஐக்கியம்;
ஊர் ஒன்றுக்கு ஒரே
வெளியாக்கமே உண்டு;
ஒருமை காக்க உள்ளூர்
தளத்தில் நிற்கின்றோம்,
ஓர் மனம் காக்க சரீர
ஐக்கியத்தில் உள்ளோம்.

7 புது எருசலேமின்
மாதிரி சபைகள்;
அம்சங்கள், விவரங்கள்
ஒன்றாகக் காண்கின்றோம்;
விளக்குத் தண்டுகளில்,
தேவன் ஒளி உள்ளே;
கிறிஸ்து விளக்காய்,
மகிமை சாயல் வீசுவார்.

Jump to section