மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் பதினாறு – கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புதல்
எபே. 4:12, 16—பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது கட்டியெழுப்பப்படுவதற்கென்றும். 16அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குக் கட்டியெழுப்புதலை உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதல் அந்தச் சரீரத்தின் வளர்ச்சியின் மூலம் ஏற்படுகிறது. சரீரம் கட்டப்படுமாறு நாம் எல்லாரும் வளர வேண்டும். நாம் வளர்ந்தால், சரீரம் வளர்கிறது, சரீரம் அதன் கட்டியெழுப்புதலுக்காக வளர்கிறது.
அதன் அவயவங்கள் புதிய ஏற்பாட்டு
ஊழியத்தின் வேலையைச் செய்ய
சீர்பொருத்தப்படுவதன் மூலம்
சரீர வளர்ச்சி புதிய ஏற்பாடு ஊழியத்தின் வேலையை—கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புதலை—செய்ய சரீரத்தின் அவயவங்கள் சீர்பொருத்தப்படுவதன் மூலம் ஏற்படுகிறது (எபே. 4:12). கிறிஸ்தவத்தில் மட்டுமல்ல, நம்மத்தியிலும் கூட பலமுறை கூடுகைகளில் பரிசுத்தவான்களால் செயல்பட முடியவில்லை. நாம் வளர்ச்சியில் குறைவு படுகிறோம் என்பதே இதற்கான காரணம். நாம் தினந்தோறும் வளர்ந்தால், நாம் ஜீவிக்கிறவர்களாக இருப்போம். பின்பு நாம் கூடுகைகளுக்கு வரும்போது, நாம் ஒரு ஜெபத்தை ஏறெடுப்போம் அல்லது நாம் “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று கூறுவோம். நாம் ஜீவிக்கிறோம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலை பெரும்பாலான பகுதியில் இதுபோன்று இல்லை. நான் கலந்துகொண்ட சில ஜெபக்கூட்டங்களில், பரிசுத்தவான்களும், இன்னும் வழிநடத்துபவர்களும் கூட, சரியான நேரத்திலிருந்து ஐந்து, பத்து, அல்லது பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததுண்டு. இதன் விளைவாக முழுக் கூடுகையும் மரித்தநிலையில் இருந்தது. இந்த நிலைமையில் ஒரு சபை கட்டப்படுவது சாத்தியமல்ல. நாம் எல்லாரும் தினந்தோறும் ஜீவிக்கிறவர்களாகவும், வளர்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போது முழுச் சபையும் வளரும், இந்த வளர்ச்சி கட்டிடத்திற்குச் சமம்.
சரீர வளர்ச்சியின் மூலம் புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் வேலையைச் செய்ய எல்லா அவயவங்களும் சீர்பொருத்தப்படுகின்றனர். இந்த வேலையானது அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்-போதகர் ஆகியோரால் அல்லாமல், கிறிஸ்துவின் சரீரத்தின் சாதாரண, பொதுவான அவயவங்களால் செய்யப்படுகிறது. புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் வேலையைச் செய்வதற்கு, ஒவ்வோர் அவயவமும் சீர்பொருத்தப்படும்போது, சரீரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்று எல்லா அவயவங்களும் அறிவர். கட்டியெழுப்புதல் புதிய ஏற்பாட்டு வேலையாகும். எல்லாப் பரிசுத்தவான்களும் ஊழியத்தின் வேலையை நிறைவேற்றினால், கூடுகைகள் ஜீவிக்கிறதாக ஆகும்.
தேவனுடைய ஜீவனில்
சரீரத்தின் கட்டியெழுப்புதல் தேவனுடயை ஜீவனில் சரீரத்தின் வளர்ச்சியால் ஏற்படுகிறது (கொலோ. 2:18). ஆகையால், இது ஜீவாதாரமானது.
மறுசாயலாகுதல் என்ற வழிமுறையில்
சரீரத்தின் கட்டியெழுப்புதல் மறுசாயலாகுதல் என்ற வழிமுறையிலும் நடைபெறுகிறது (1 கொரி. 3:12). இன்று நாம் வளர்கையில், நாம் மறுசாயலாகுதலின் வழிமுறையில் இருக்கிறோம். புறத்தூண்டுதலின்றி, நாம் மறுசாயலாக்கப்படுகிறோம். மறுசாயலாக்கப்படுவதென்றால், நம்மை மாற்றுவதோ, சீர்செய்வதோ, நம்மைச் சரிசெய்வதோ அல்ல. இவை வெறும் புறம்பான மாற்றங்கள். மறுசாயலாகுதல் வளர்சிதை மாற்றத்திற்குரியது, இது ஜீவனுக்குள் உள்ள ஏதோவொன்று.
ஒவ்வோர் உணவு வேளையின்போது, நாம் உணவை நம் வயிற்றினுள் எடுத்துக்கொள்கையில், ஜீரணித்தல் என்ற ஒரு வளர்சிதை மாற்றம் உடனடியாக நடைபெறத் துவங்குகிறது. வயிறு வளர்சிதை மாற்றமுறையில் நகர்வதற்கு, அது ஏதோவொரு மூலக்கூறைக் கொண்டு நிரப்பப்பட்டாக வேண்டும். உணவு உண்ணுதல் என்ற இந்த வளர்சிதை வழிமுறையை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். ஒருநாள் ஒரு கூடுகையில் பேசிய பிறகு, நான் உடல்ரீதியாக சோர்ந்துவிட்டேன். சிறிது உணவை உட்கொண்டு இருபது நிமிடங்களுக்குப் பிறகு, நான் உயிர்த்துடிப்பாக்கப்பட்டேன். என்னுள் தொடரும்படி ஒரு வளர்சிதை வழிமுறை துவங்கியது. இன்னொரு பத்து நிமிடங்களுக்குப் பிறகு, நான் இன்னும் அதிகமாக உயிர்த்துடிப்பாக்கப்பட்டேன். நான் உயிர்த்துடிப்பாக்கப்பட்டது மட்டுமல்ல; என்னுள் உள்ள வளர்சிதை வழிமுறையின் மூலம் நான் மறுசாயலாக்கப்பட்டேன். இது மறுசாயலாகுதல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நாம் மறுசாயலாக்கப்படுவதற்கு நாம் வளர வேண்டும். நாம் மறுசாயலாக்கப்பட்ட பிறகு, நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்கு ஏற்றவர்களாக இருக்கிறோம்.
அது தன்னையே கட்டியெழுப்பவதன் மூலம்
சரீரம் தன்னையே கட்டியெழுப்புவதற்கென்று வளர்கிறது என்று எபேசியர் 4:16 கூறுகிறது. சரீரத்தின் வளர்ச்சி சரீரம் தன்னையே கட்டியெழுப்புவதாகும் என்பதே இதன் பொருள்.
ஐசுவரியமான நிரப்பீடளிக்கும்
ஒவ்வொரு கணுவின் மூலம்
ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம்
சரீரமானது, ஐசுவரியமான நிரப்பீடளிக்கும் ஒவ்வொரு கணுவின் மூலம் ஒன்றாக இணைக்கப்படுவதால் தன்னைத்தானே கட்டியெழுப்புகிறது (வ. 16). ஐசுவரியமான நிரப்பீட்டின் இந்தக் கணுக்கள் எபேசியர் 4:13இல் குறிப்பிடப்படுகிறபடி, அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர் போதகர் போன்ற வரம் பெற்ற நபர்களாகும். இந்த வரம் பெற்ற நபர்கள் ஜீவ நிரப்பீடாகிய கிறிஸ்துவால் நிறைந்த ஐசுவரியமான கணுக்களாக இருக்கின்றனர். அவர்கள் பரிசுத்தவான்களை ஒன்றாக இணைப்பதற்கான ஒரு காரணியாக இருக்கின்றனர். இது முதல்வகையான இணைத்தலாகும்.
ஒவ்வோர் அவயவமும் தன் தன் அளவில் கிரியைசெய்வதன் மூலம் ஒன்றாகக் பின்னிப் பிணைக்கப்படுவதால்
ஒவ்வோர் அவயவமும் தன் தன் அளவில் கிரியை செய்வதால் ஒன்றாகப் பின்னிப் பிணைக்கப்படுவதன் மூலமும் சரீரம் தன்னைத் தான் கட்டியெழுப்புகிறது (வ. 16). இது இரண்டாவது வகையான இணைத்தல். ஐசுவரியமான நிரப்பீட்டின் கணுக்கள் மூலமுள்ள இணைத்தலாகிய முதல் வகை இணைத்தல் ஒரு கட்டிடத்தின் புறச் சட்டதை உருவாக்க துண்டுகளை ஒன்றாக வைப்பதைப் போன்றது. ஒரு கட்டிடத்தின் புறச்சட்டத்தை அமைத்த பிறகு, அதில் நிரப்பப்பட வேண்டிய பல வெற்றிடங்கள் உள்ளன. ஒவ்வோர் அவயவத்தின் கிரியைசெய்தல் மூலமுள்ள பின்னிப் பிணைக்கப்படுதலாகிய இரண்டாம் வகை இணைத்தல், ஒரு கட்டிடம் கட்டியமைக்கப்பட்ட பின் எல்லா வெற்றிடங்களையும் நிரப்புவதைப் போன்றது. பின்னுதல் என்றால், எல்லா வெற்றிடங்களும் நிரம்பும்வரை நெய்வதாகும். ஒன்றாகப் பின்னப்பட்ட அல்லது நெய்யப்பட்ட சரீரத்தின் இந்த அவயவங்கள் வரம்பெற்ற நபர்களல்ல, மாறாக சரீரத்தின் பொதுவான அவயவங்கள்.
வரம்பெற்ற நபர்கள் புறச்சட்டத்தை உருவாக்க ஒன்றாக இணைக்கப்படுகின்றனர்; எல்லாத் துளைகளையும் நிரப்ப பொதுவான அவயவங்கள் பின்னப்படவும் நெய்யப்படவும் தங்கள் தங்கள் அளவில் செயல்படுகின்றனர். இது வெறுமேன ஓர் உபதேசமல்ல; நான் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன், நான் இதைப் பார்த்திருக்கிறேன், நான் இதை அனுபவித்திருக்கிறேன். இது சாத்தியம். உங்களுக்கு அதற்கான ஓர் இருதயம் இருந்தால், “கர்த்தாவே என்மீது இரக்கமாயிரும், எனக்குப் போதுமான கிருபை அருளும். நான் ஜீவாதாரரீதியில் உம்மை வாழ விரும்புகிறேன்” என்று கர்த்தரிடம் ஜெபியுங்கள். அதன்பின்பு சென்று, உங்கள் இடத்திலுள்ள பரிசுத்தவான்களுடன் கூடிவாருங்கள். நீங்கள் இருக்கும் வண்ணமாகவே இருக்கிற மற்ற பல பரிசுத்தவான்கள் இருக்கக் கூடும். நீங்கள் ஒன்றாகக் கூடிவருகையில், உங்கள் மத்தியில் ஓர் வளர்ச்சி ஏற்படும். இந்த வளர்ச்சி கட்டிடத்திற்குச் சமம். சில வரம்பெற்ற நபர்கள் புறச்சட்டத்தை அமைக்க ஒன்றாக இணைக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் தங்கள் அளவில் செயல்படுவதன் மூலம் தங்கள் பங்கைச் செய்வார்கள். இவ்விதமாக சபை கட்டியெழுப்பப்படும்.
அன்பில்
கிறிஸ்துவின் சரீரம் அன்பிலும் தன்னைத்தானே கட்டியெழுப்புகிறது (வ. 16). அன்பில் என்ற சிறிய சொற்றொடர் எபேசியர் புத்தகத்தில் ஆறு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (1:4; 3:17; 4:2, 15-16; 5:2). தேவன் நித்தியத்தில் நம்மை அன்பில் தெரிந்தெடுத்தார் (1:4). கடந்த நித்தியத்தில் குமாரத்துவத்திற்கென்று நம்மை அவர் முன்குறித்ததும் அன்பில்தான் (வ. 6). அன்பு இல்லாமல் தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கவோ முன்குறித்திருக்கவோ மாட்டார். இன்று நாம் அன்பில் வளர வேண்டும், நாம் அன்பில் சரீரத்தைக் கட்டியெழுப்பவும் வேண்டும். நாம் கர்த்தரை நேசிக்கிறோம், நாம் சபையை நேசிக்கிறோம், நாம் ஒவ்வோர் அவயவங்களையும் நேசிக்கிறோம். சில அவயவங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி அல்லது அவர்கள் எவ்வளவு தீமையாக இருந்தாலும் சரி, அவர்கள் அவயவங்களாக இருப்பதால் நாம் அவர்களை நேசிக்கிறோம். நாம் அவர்களை அம்பலப்படுத்த விரும்பவில்லை என்பதே நம் மனப்பாங்காக இருக்க வேண்டும். இதற்குப் பதிலாக அன்பில் நாம் அவர்களை மூட விரும்புகிறோம். இதுவே வளர்ச்சி, இதுவே கட்டிடம். (CWWL, 1993, vol. 2, “The Organic Union in God’s Relationship with Man,” pp. 438-440)
References: CWWL, 1993, vol. 2, “The Organic Union in God’s Relationship with Man,” ch. 5; CWWL, 1991-1992, vol. 4, “The Constitution and the Building Up of the Body of Christ,” chs. 3—6
சுயம், ஆதாமின் ஸ்பாவம்
சபை—அவள் கட்டப்படுதல்
840
1 சுயம், ஆதாமின் ஸ்பாவம், என்
சுயாதீன வழிகள்,
விநோத வழிகள் வேண்டாம்,
விடுவியும், கர்த்தாவே!
உம் மகிமை நாங்கள் காணும்,
உம் ஆலயமாகவே,
கட்டுமே சுத்தரோடென்னை,
உம் வாசஸ்தலம் ஆவோம்.
2 பாய்ந்தோடும் உம் ஜீவனால் நான்
வளர்வேன், சாயல் மாறும்,
சுத்தரோடொருங்கிணைக்கும்,
கட்டும், உம் சாயல் போல;
சரீரத்தில் கிரமம் காப்பேன்,
சேவித்து, உதவி, உம்
சித்தத்தில் செயல்படுவேன்,
உம் நோக்கம் நிறைவேற.
3 என் அனுபவம் அறிவில்
வீண் மேன்மை நான் கொண்டிடேன்;
சரீரம் சமன் செய்யட்டும்
என்னை ஏற்பேன், பணிவேன்;
தலையைப் பற்றிக்கொண்டதின்
வளர்ச்சியால் வளர்வேன்,
நாண், கணுக்கள் நிரப்பீட்டால்
நாளும் பின்னிப் பிணைவேன்.
4 உள் மனிதனை உம் ஆவி
நாளும் ஆற்றலூட்ட, உம்
அகலம், நீளம், உயரம்,
விஞ்சும் அன்பு, அறிவேன்;
உம் வளம் எப்போதும் துய்ப்பேன்,
உம் நிறைவாய் நிறைவேன்,
உம் சரீரம் நீர் கட்டிட
வளர்வேன் முதிர்ச்சிக்காய்.
5 உம் சரீரம், தேவன் வீடு,
இதில் என்னைக் கட்டுமே;
கூட்டுப் பாத்ரம் இதில் யாரும்
காணட்டும் உம் மகிமை;
உம் மணாளி, மாட்சி நகர்,
தோன்றட்டும் இப் பூமியில்;
மின்னும் விளக்காய், யாவர்க்கும்
சாற்றட்டும் உம் அருமை.