மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் பதினைந்து – கிறிஸ்துவினுடைய சரீரத்தின் இழைந்திணைதல்
1 கொரி. 10:17—அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
12:24—நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.
இழைந்திணைதலின் தேவை
இழைந்திணைதல் என்ற எண்ணம் வேதத்தில் மிகப் பலமானது. பழைய ஏற்பாட்டில், தேவனுடைய பொருளாட்சியின் நிறைவேற்றத்திற்காக இழைந்திணைதலின் ஓர் மாதிரி இருக்கிறது. எனினும், நாம் பழைய ஏற்பாட்டை எழுத்துக்களாக மட்டுமே வாசித்தால், நம்மால் அதைக் காண இயலாது. இவ்விதமான இழைந்திணைதல் அப்போஸ்தலனாகிய பவுலால் பலமாகக் குறிப்பிடப்படுகிறது. “அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” என்று 1 கொரிந்தியர் 10:17இல் பவுல் கூறுகிறான். சபை ஒரே அப்பமாக இருப்பதைப் பற்றிய பவுலின் எண்ணம் அவனது சொந்தக் கண்டு பிடிப்பல்ல; மாறாக இது பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டது. லேவியராகமம் 2:4இல் உள்ள போஜன பலியில் எண்ணெயுடன் கலந்திணைக்கப்பட்ட மெல்லிய மாவால் செய்யப்பட்ட அதிரசங்களும் உண்டு. அந்த மாவின் ஒவ்வொரு பகுதியும் எண்ணெயுடன் கலக்கப்பட்டது, அல்லது கலந்திணைக்கப்பட்டது. அதுதான் இழைந்திணைதல். சபை மெல்லிய மாவால் செய்யப்பட்ட ஒரு அப்பம், ஓர் அதிரசம் என்று பவுல் நமக்குக் கூறுகிறான். இந்த மெல்லிய மாவு கோதுமை மணிகளிலிருந்து வருகிறது, அந்தக் கோதுமை மணிகள் கிறிஸ்துவாகிய ஒரே கோதுமை மணியிலிருந்து வருகின்றன. பல மணிகளை அதாவது, தம் விசுவாசிகளான நம்மை உற்பத்திசெய்ய நிலத்தில் விழுந்து, மரித்து, உயிர்த்தெழுதலில் வளர்ந்த கிறிஸ்துவே அந்த ஒரே கோதுமை மணி என்று யோவான் 12:24 கூறுகிறது. சபை என்ற அதிரசத்தை, அதாவது அப்பத்தை உருவாக்குவதற்காக நாம் மெல்லிய மாவாக அரைக்கப்படுமாறு நாம் பல மணிகளாக இருக்கிறோம். இங்கு வேதத்திலுள்ள இழைந்திணைதல் என்ற எண்ணத்தை நாம் பார்க்க முடியும். (CWWL, 1994-1997, vol. 1, “The Practical Points concerning Blending,” p. 112)
சபைகளைக் கொத்தாகத் திரட்டுவதன் மூலம் இழைத்திணைத்தல்
கர்த்தராகிய இயேசு ஆசியாவில் ஏழு அருகமைந்த சபைகளை கொத்தாகத் திரட்டியதுபோல, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பரஸ்பர கட்டியெழுப்புதலில் ஆவிக்குரிய நலனுக்காக அருகாமையிலுள்ள உள்ளூர் சபைகள் இழைந்திணைதல் என்ற வழியில் கூடுமானவரை கொத்தாகத் திரட்டப்பட வேண்டும். (CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” p. 19)
கிறிஸ்துவினுடைய பிரபஞ்சளாவிய
சரீரத்தின் இழைந்திணைதல்
தேவன் சரீரத்தை ஒன்றாக இழைத்திணைத்திருக்கிறார் (1 கொரி. 12:25). இழைத்திணை என்ற வார்த்தையின் பொருள் “சரிசெய்,” “இசைவி,” “இணக்குவி,” மற்றும் “கலந்திணை” ஆகும். தேவன் சரீரத்தை இழைத்திணைத்திருக்கிறார், சரீரத்தைச் சரிப்படுத்தியிருக்கிறார், சரீரத்தை இசைவித்திருக்கிறார், சரீரத்தை இணக்குவித்திருக்கிறார், சரீரத்தைக் கலந்திணைத்திருக்கிறார். இழைத்திணைக்கப்படு என்பதற்கான கிரேக்க வார்த்தை தனித்தன்மைகளை இழப்பதை மறைவாகக் காட்டுகிறது. ஒரு சகோதரனின் தனித்தன்மை துரிதத்தன்மையாக இருக்கலாம், இன்னொருவருடையது மெதுவானதாக இருக்கலாம். ஆனால் சரீர வாழ்க்கையில், மெதுவானத்தன்மை காணாமல் போகிறது, துரிதத்தன்மை நீக்கப்படுகிறது. இத்தகைய தனித்தன்மைகள் யாவும் போய்விடுகின்றன. வெவ்வேறு இன, வெவ்வேறு நிற விசுவாசிகள் எல்லாரையும் தேவன் இழைத்திணைத்திருக்கிறார். யாரால் கறுப்பர்களையும் வெள்ளையர்களையும் அவரவர்களின் தனித்தன்மைகளை இழக்க வைக்க முடியும்? தேவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஒரு கணவனும் மனைவியும் தங்கள் தனித்தன்மைகளை இழப்பதன் மூலம் மட்டுமே தங்கள் திருமண வாழ்க்கையில் இசைவைக் கொண்டிருக்க முடியும்.
சரீர வாழ்க்கையில் இசைவிக்கப்பட்டு, இழைத்திணைக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு, கலந்திணைக்கப்பட்டு, இணக்குவிக்கப்படுவதற்கு, நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் நிமித்தமாக சிலுவையினூடாகச் செல்லவும், ஆவியானவரால் இருக்கவும், கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் வேண்டும். உடன்-வேலையாட்களும் மூப்பர்களும் வெட்டிநீக்கப்பட கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்வதெல்லாம் கிறிஸ்துவைப் பகிர்ந்தளிக்க ஆவியானவரால் இருக்க வேண்டும். அதோடு நாம் செய்வது நம் ஆவலுக்காகவும் நம் சுவையின்படியும் இருக்கக் கூடாது, மாறாக சபைக்காக இருக்க வேண்டும். இந்தக் குறிப்புகளை நாம் பயிற்சிசெய்கின்ற வரை, நம்மிடம் இழைந்திணைதல் இருக்கும்.
ஐக்கியமின்றி எதையும் செய்யாதிருத்தல்
ஐக்கியம் நம்மை இணக்குவிக்கிறது, ஐக்கியம் நம்மைச் சரிசெய்கிறது, ஐக்கியம் நம்மை இசைவிக்கிறது, ஐக்கியம் நம்மைக் கலந்திணைக்கிறது. நாம் மெதுவானவர்களா அல்லது விரைவானவர்களா என்பது குறித்து நாம் மறந்துவிட்டு, மற்றவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். நம்முடன் ஒருங்கிணைகிற மற்ற பரிசுத்தவான்களுடன் ஐக்கியப்படாமல் நாம் எதையும் செய்யக் கூடாது. நாம் ஏதோவொன்றைச் செய்யவிருக்கும்போது, நிறுத்தும்படி ஐக்கியம் நம்மிடம் கோருகிறது. சபை வாழ்க்கையிலும் கர்த்தருடைய வேலையிலும் உள்ள நம் ஒருங்கிணைதலில், ஐக்கியமின்றி எதையும் செய்யாதிருக்க நாம் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் மத்தியில் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் எல்லா தனிப்பட்ட அவயவங்களின் இழைந்திணைதலும், சில மாவட்டங்களிலுள்ள எல்லா சபைகளின் இழைந்திணைதலும், எல்லா உடன்-வேலையாட்களின் இழைந்திணைதலும், எல்லா மூப்பர்களின் இழைந்திணைதலும் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் ஐக்கியப்படும்படி நாம் எப்போதும் நிறுத்த வேண்டும் என்பதே இழைந்திணைதலின் பொருள். அப்போது நாம் பல நலன்களைப் பெற்றுக்கொள்வோம். நாம் நம்மைத் தனிமைப்படுத்தி, பிரித்துக்கொண்டால், நாம் அதிக ஆவிக்குரிய லாபத்தை இழப்போம். ஐக்கியப்பட கற்றுக்கொள்ளுங்கள். இழந்திணைய கற்றுக்கொள்ளுங்கள். இப்போதிலிருந்து, இழந்திணையும்படி சபைகள் அடிக்கடி ஒன்றாகக் கூடிவர வேண்டும். நாம் அதற்குப் பழக்கப்படாதவர்களாக இருக்கலாம், ஆனால் இழைந்திணைவதை ஒரு சில முறை நடைமுறைப்படுத்த நாம் துவங்கிய பிறகு, நாம் அதற்கான சுவையைப் பெறுவோம். கிறிஸ்துவின் பிரபஞ்சளாவிய சரீரத்தின் ஒருமையைக் காத்துக்கொள்வதில் இது அதிஉதவிகரமான காரியம். நவீன வசதிகள் நிறைந்த இந்த நவீன யுகத்தின் காரணமாக இன்று நாம் ஒருவரோடொருவர் இழைந்திணைவதற்கு மிகுந்த வசதிகள் உள்ளன.
கிறிஸ்துவின் சரீரத்தின்நிமித்தமாக
அவரைப் பகிர்ந்தளிக்க சிலுவையின் மூலம்
ஆவியானவரால் இருத்தல்
நாம் ஒன்றாக இழைந்திணையும்போது, நம்மிடம் சிலுவையும் ஆவியானவரும் உண்டு. சிலுவையும் ஆவியானவரும் இல்லாமல், நம்மிடம் இருப்பதெல்லாம் பிரிவினை நிறைந்த மாம்சம் மட்டுமே. நம்மில் நாமே சிலுவையில் அறையப்படுவதும், எல்லாக் காரியங்களையும் ஆவியானவரால் செய்வதும் எளிதல்ல. இதனால்தான் நாம் இழைந்திணைய கற்றுக்கொள்ள வேண்டும். இழைந்திணைதலுக்கு நாம் வெட்டப்பட வேண்டும். இழைந்திணைதல் நாம் கிறிஸ்துவைப் பகிர்ந்தளிப்பதற்காக ஆவியானவரால் இருப்பதையும், அவரது சரீரத்தின் நிமித்தமாக எல்லாவற்றையும் செய்வதையும் கோருகிறது.
எல்லாரும் தங்களிலேயே இருப்பதால், நாம் கூடிவரக் கூடும் ஆனால் அதிக இழைந்திணைதல் இருக்காது. அவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்திவிடுவோமோ, தவறுகள் செய்துவிடுவோமோ என்று பயப்படுகின்றனர், எனவே, அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். இது மாம்சத்தின்படி மனிதனின் பழக்க முறையாகும். நாம் கூடிவரும்போது, நாம் சிலுவையின் தீர்த்துக்கட்டுதலை அனுபவிக்க வேண்டும். அதன் பின், ஆவியானவரைப் பின்பற்றுவது எவ்வாறு, கிறிஸ்துவைப் பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்பதையும், சரீரத்தின் நலனுக்காக ஏதோவொன்றைக் கூறுவதும் செய்வதும் எவ்வாறு என்பதையும் நாம் கற்க வேண்டும். அது அந்தக் கூடுகையின் முழுச் சூழலையும் மாற்றி, அந்தச் சூழலை இணக்குவிக்கும். இழைந்திணைதல் என்பது அமைதியாகவோ வாயாடித்தனமாகவோ இருப்பதைப் பற்றிய காரியமல்ல, மாறாக இணக்குவிக்கப்படுவதைப் பற்றிய ஒரு காரியமாகும். நாம் இணக்குவிக்கப்பட்டிருப்பதால், நாம் இசைவாக இருக்க முடியும். காலப்போக்கில், தனித்தன்மைகள் எல்லாம் போய்விடும். இழைந்திணைதல் என்றால் தனித்தன்மைகளை இழத்தல் என்று பொருள். இழைந்திணைதலை நடைமுறைப்படுத்த நாம் எல்லாரும் ஒரு விலைசெலுத்த வேண்டும்.
கிறிஸ்துவின் பிரபஞ்சளாவிய
சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக
இந்த இழைந்திணைதல் தேவனுடைய நல்லின்- பத்தின்படி தேவனுடைய பொருளாட்சியின் இறுதி இலக்காகிய (எபே. 3:8-11; 1:9-10) புதிய எருசலேமை முழுநிறைவாக்க (வெளி. 21:2) கிறிஸ்துவின் பிரபஞ்சளாவிய சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கிறது (எபே. 1:23). (CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” pp. 159-162)
References: CWWL, 1994-1997, vol. 1, “The Practical Points concerning Blending,” ch. 2; CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” msg. 2; CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” ch. 6
AS MEMBERS OF THE BODY
Meetings—Functioning – 867
1 As members of the Body
Christ we would manifest,
Each learning how to function
His fulness to express;
We would not be spectators
But each as members move,
None bringing death or damage
But each our profit prove.
2 As in a team we’d never
Act independently,
But in coordination,
Each would dependent be;
Not acting by our choosing
But following the flow,
Distraction never bringing,
The Spirit’s way we’d know.
3 On Christ we here would focus,
No other center make;
With Christ in sweet communion
His riches to partake.
He is our Head and content,
His Body we express;
Whate’er we do while meeting
Himself must manifest.
4 Built up in love together,
Not one would criticize;
To perfect one another,
We all would exercise.
Each one from self delivered,
The natural life forsakes;
In grace each trained in spirit
The Body-life partakes.