மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் பதினான்கு – பொருட்செல்வத்தைக் காணிக்கையாக்குதல்
லூக். 6:38—கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
வீழ்ச்சியின் காரணத்தால் மனிதன் தேவனோடு பிரச்சனை வளர்த்துக்கொண்டு, தேவனை எல்லாமுமாக எடுத்துக்கொண்ட அந்த நிலையை விட்டு விட்ட அந்த நேரத்திலிருந்து, விழுந்துபோன மனிதனின் வாழ்க்கையில் பொருட்செல்வம் ஓர் அத்தியாவசிய காரியமாகிவிட்டது….தேவனின் எதிரி, அதாவது பிசாசாகிய சாத்தான், உள்ளே நுழைந்து,…விக்கிரகங்களை ஆராதிக்க மனிதர்களை வஞ்சிப்பதற்கு மனிதர்களின் வீழ்ந்துபோன நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டான். இந்தக் காரணத்தால்தான், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது” என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (மத். 6:24)
தேவனின் கொடுத்தல்
“நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்” (1 தீமோ. 6:17). நம் வாழ்க்கையிலுள்ள எல்லாப் பொருளாதாரக் காரியங்களும் அனுபவ மகிழ்ச்சியும் தோற்றத்துக்கு நிலையற்ற ஐசுவரியத்திலிருந்து வருகிறது, ஆனால் உண்மையில் அவை தேவனுடைய கொடுத்தலிலிருந்து வருகிறது என்பதை இந்த வார்த்தை நமக்குத் தெளிவாகக் காட்டி, மனிதனை மயக்க சாத்தான் செய்யும் சதியை அம்பலமாக்குகிறது. தேவனின் ஐசுவரியமான கொடுத்தலிலிருந்து அவை நமக்கு வழங்கப்படுகின்றன. ஆகவே, நாம் வஞ்சகமான, நிலையில்லா பொருட்செல்வத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல், நம் அனுபவமகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் கொடுக்கும் சாட்சாத்து தேவன்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.
கர்த்தருடைய கட்டளை
“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்…பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்” (மத். 6:19-20). கர்த்தரின் இந்த வார்த்தையைப் பொருட்செல்வத்தை சேர்த்து வைத்தல் என்ற கோணத்திலிருந்து நாம் பார்க்க வேண்டும். பொருட்செல்வத்தைச் சேர்த்து வைத்தல் என்றால் மனிதனின் வாழ்க்கையின் தேவைகள் சந்திக்கப்பட்ட பின்னர் மனிதனின் ஆதாயத்தில் மீதம் இருப்பதைச் சேமித்து வைப்பதாகும். இங்கு, இந்த மிகுதியான செல்வத்தைப் பூமியில் சேர்த்து வைக்காமல், பரலோகத்தில் சேர்த்து வைக்கும்படி, அதாவது, தேவையில் உள்ளவர்களுக்கு உதவிசெய்து, அதன் மூலம் அவர்களை நண்பர்களாக்குதல் (லூக். 16:9), கர்த்தரின் சுவிசேஷத்தை முன்னேற்றுதல் (பிலி. 1:3) போன்ற காரியங்களைச் செய்து, பரலோக பிதாவின்மீது அவற்றைச் செலவுசெய்யும்படி கர்த்தர் நமக்குக் கட்டளையிடுகிறார்.
கர்த்தரின் வாக்குத்தத்தம்
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்” (லூக். 6:38). இது கர்த்தரின் சொந்த வாயினால் பேசப்பட்ட ஒரு வாக்குத்தத்தம். நம் பொருட்செல்வத்தைத் தேவையுள்ளவர்களுக்குத் தேவனின் நிமித்தம் பகிர்ந்தளிக்க நாம் சித்தமாக இருந்தால், நிச்சயமாக அவர் ஐசுவரியமான ஏராளமானதை அமுக்கி, குலுக்கி சரிந்து விழும்படி நன்றாய் அளந்து நம் மடியில் தருவார். கஞ்சத்தனமானதையும் சிறிதளவானதையும் நம் கரங்களில் அவர் தரமாட்டார். என்னே இலாபகரமான ஒப்பந்தம் இது!
“சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6). மனிதனின் கண்களில், பொருட்செல்வத்தை ஏறெடுத்தல் என்பது, அவர்களது செல்வத்தைக் கொடுத்து விடுவதாகும். எனினும், தேவனின் கண்களில், இப்படிப்பட்ட ஏறெடுத்தல், ஒரு வகையான விதைத்தலாகும், அது அறுவடையை விளைவிக்கும். சிறிதளவு ஏறெடுப்பவன் சிறிதளவே அறுப்பான், அதிகமாக ஏறெடுப்பவன் அதிகமாக அறுப்பான். இந்தப் பிரமாணத்திலுள்ள கர்த்தரின் வாக்குத்தத்தை நாம் விசுவாசித்தாக வேண்டும்.
“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படி தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள், அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல். 3:10). “தசமபாகம்” என்பது பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலரின் அறுவடையிலிருந்து தேவன் கோரின சட்டப்படியான காணிக்கைத் தொகையாகும்….இந்த வார்த்தை தேவனுடைய வரம்பில்லா ஐசுவரியமான வாக்குத்தத்தத்தை மிக அபரிமிதமாகக் காட்டுகிறது. அது பழைய ஏற்பாட்டிலுள்ள இஸ்ரயேலர்களுக்குப் பேசப்பட்டபோதிலும், கோட்பாட்டில் அது புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கும் பொருந்துகிறது. சபை ஐசுவரியமான விதத்தில் நிரப்பீட்டைப் பெறுமாறு, நாம் தேவனுக்கு உரியதை தேவனுக்கு முழுவதுமாகச் செலுத்தினால், தேவன் வானத்தின் பலகணிகளை நமக்காகத் திறந்து, நமக்கு ஆசீர்வாதத்தை வருஷிப்பார், அந்த ஆசீர்வாதத்தைக் கொள்ளுவதற்கு இடமே போதாததாகிவிடும். இது சேனைகளின் கர்த்தரின் ஒரு தெளிவான வாக்குத்தத்தம். அவரை நிரூபிக்கும்படி அவரது வாக்குத்தத்தத்தின்படி நாம் அவருக்கு ஏறெடுக்கலாம்.
வழி
“நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:3-4). நாம் நம் பொருட்செல்வத்தை என்ன பயன்பாட்டுக்காக ஏறெடுத்தாலும், நாம் மனிதர்களால் மகிமைப்படுத்தப்பட்டு வெகுமதியடையுமாறு வேண்டுமென்றே மற்றவர்கள் காண்பதற்காக அதைச் செய்யக் கூடாது; அப்படிச்செய்தால், பரலோகத்திலிருக்கிற பிதாவிடமிருந்து நமக்கு வெகுமதி கிடைக்காது.
பொருள் காணிக்கைகளின்
முக்கியத்துவமும் மதிப்பும்
இத்தகைய காணிக்கையின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் நாம் காண வேண்டும். “அநீதியான உலகப்பொருள்” என்று, அதாவது, அநித்தியமான (லூக். 16:9), மயக்குகின்ற ஐசுவரியம் என்றும் (மத். 13:22), நிலையற்ற ஐசுவரியம் என்றும் (1 தீமோ. 6:17) தேவனால் கருதப்பட்ட ஒன்று, தேவனுக்கு உரியவர்களாகிய நம்மால் தேவனின் உபயோகத்திற்காக தேவனுக்கு ஏறெடுக்கப்படுவதன் மூலம் உண்மையில், பரிசுத்தவான்களுடனான நம் “ஐக்கியமாகவும்,” தேவனுக்குமுன் மனிதர்களிடமான நம் “நீதியாகவும்,” தேவனுக்கு ஏற்புடைய ஒரு “பலியாகவும்,” அவருக்கு நற்பிரியமான ஒரு “சுகந்த வாசனையாகவும்” ஆக முடியும். மனிதர்களை வஞ்சிக்கும், மனிதர்களைக் கறைப்படுத்தும், மனிதர்களை அழிக்கும் செல்வம், உண்மையில், நாம் தேவனுக்கு முன் கொண்டிருக்கும் இத்தகைய விஞ்சுகிற ஆசீர்வாதங்களாக ஆகிவிட முடியும்! இது எல்லாம் நாம் பொருட்செல்வத்தை ஏறெடுப்பதின் விளைவாகும். (Life Lessons, vol. 2, pp. 99-103, 105, 107)
Reference: Life Lessons, vol. 2, lsn. 24
இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்
அர்ப்பணம்—கர்த்தருக்கு யாவற்றையும் ஒப்புக்கொடுத்தல்
441
1 இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்,
யாவையும் அர்ப்பணித்தேன்;
தினம் அவர் பிரசன்னத்தில்,
தங்கி, நம்பி, நேசிப்பேன்.
யாவும் அர்ப்பணம்,
யாவும் அர்ப்பணம்.
நேச இரட்சகா உமக்கு,
யாவும் அர்ப்பணம்.
2 இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்,
அவர் பாதம் பணிந்தேன்,
லோக இன்பங்கள் துறந்தேன்;
ஏற்பீர் என்னை, இயேசுவே.
3 இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்,
நாதா, என்னை ஆட்கொள்ளும்;
தூயாவி நான் உணர்ந்து, நீர்
எனதென்றறியட்டும்.
4 இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்,
கர்த்தா, என்னையே தந்தேன்;
அன்பு, பெலத்தால் நிரப்பும்,
என்னை ஆசீர்வதியும்.
5 இயேசுவுக்கு எல்லாம் அர்ப்பணம்,
தூய ஜுவாலை உணர்ந்தேன்;
ஆ, முழு இரட்சை மகிழ்ச்சி,
மாட்சி, மாட்சி அவர்க்கே.