மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் பதின்மூன்று – தீர்க்கதரிசனம் உரைக்கும் கூடுகைகள்
1 கொரி. 14:23-24, 31—ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? 24எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். 31எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம்.
ஒன்று கொரிந்தியர் 14இன் வழியில்
தீர்க்கதரிசனம் உரைத்தல்
1 கொரிந்தியர் 14இன் வழியில் தீர்க்கதரிசனம் உரைப்பது, சபைக் கூடுகைகளில் நிறைவேற்றப்படுகிறது (வவ. 23-24). “சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து…” என்று வசனம் 23 கூறுகிறது” இது சபைக் கூடுகையையே குறிக்கிறது, ஒரு வீட்டுக் கூடுகையையோ, சிறுகுழுக் கூடுகையையோ குறிக்கவில்லை. மேலும், 1 கொரிந்தியர் 14இன் வழியில் தீர்க்கதரிசனம் உரைப்பது, சபையின் கட்டியெழுப்புதலுக்காக இருக்கிறது (வவ. 4-5). நம் அனுபவம் மற்றும் உற்றுக் கவனித்தலின்படி, சபையைக் கட்டியெழுப்புவதற்கான அதிசிறந்த வழி தீர்க்கதரிசனம் உரைப்பதே அதாவது, மக்களுக்குள் கிறிஸ்துவை ஊழியஞ்செய்து, பகிர்ந்தளித்து, கிறிஸ்துவுக்காகப் பேசுவதும், கிறிஸ்துவையே பேசுவதும் ஆகும். மற்றவர்கள் யாவரும் கவனிக்கையில் ஒரு மனிதன் பேசுவது, தீர்க்கதரிசனம் உரைத்தலின் ஒரு முறையாகும், ஆனால் இது ஒரு தவறான வழியில் நிறைவேற்றப்படுகிறது. நேர்த்தியான தீர்க்க தரிசனம் உரைத்தல், சபைக் கூடுகைகளிலுள்ள ஒவ்வொரு கலந்துகொள்பவராலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
சபையைக் கட்டியெழுப்புவதற்காக
ஒரு தேடும் இருதயமுள்ள நபரை
மேம்படச் செய்தல்
1 கொரிந்தியர் 14இன் வழியில் தீர்க்கதரிசனம் உரைத்தல், சபையின் கட்டியெழுப்புதலுக்கு ஒரு தேடும் இருதயமுள்ள நபரை மேம்படச் செய்கிறது. “நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குக் கட்டியெழுப்புதல் உண்டாகத்தக்கதாக அவற்றில் தேறும்படி [மேன்மையாதலுக்கு] நாடுங்கள்” என்று வசனம் 12 கூறுகிறது. அந்நியபாஷைகளில் பேசுவது நல்லது, ஆனால் அது மேன்மையானதல்ல. எனினும், ஒருவர் ஒரு சிறு செய்தியை ஒரு தீர்க்கதரிசனமாகக் கொடுப்பது மேன்மையாதலாகும். தீர்க்கதரிசனம் உரைப்பது, பேசுபவரை மேம்படச் செய்கிற அதி உயர்ந்த வரம். நாம் மேம்படுமாறு மட்டுமல்லாமல், சபை கட்டியெழுப்பப்படுமாறும் நாம் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.
தீர்க்கத்தரிசனம் உரைக்க எல்லாப்
பரிசுத்தவான்களுக்கும் திறனும், கடமையும், ஆவலான வாஞ்சையும் இருத்தல்
“…நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்க தரிசனஞ்சொல்லலாம்” என்று ஒன்று கொரிந்தியர் 14:31 கூறுகிறது. இந்த வசனம் முழு வேதத்திலுமுள்ள தெள்ளத்தெளிவான வசனங்களுள் ஒன்றாகும். எல்லா விசுவாசிகளுக்கும் தீர்க்க தரிசனம் உரைப்பதற்கான கொள்திறன் இருக்கிறது என்று இது கூறுகிறது. கொள்திறன் என்பது பிறப்பாலான ஓர் ஆற்றலைக் குறிக்கிறது. மனித மொழியைப் பேச நாய்களுக்குத் திறன் இல்லை; அவற்றுக்குள் குரைப்பதற்கான திறன் மட்டுமே இருக்கிறது. எனினும், மனிதர்களுக்குப் பேசுவதற்கான திறன் இருக்கிறது. கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகிய நாம் எல்லாரும் ஒவ்வொருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம். ரோமர் 12:6-8, தீர்க்கதரிசனம் உட்பட ஏழு வரங்களைக் குறிப்பிடுகிறது, இந்த வரங்கள் ஒவ்வோர் அவயவத்திற்கும் கொடுக்கப்பட்ட கிருபையின்படி வேறுபடுகின்றன என்று அது கூறுகிறது. எனினும், இந்த வசனங்கள் கூடுகைகளுக்கு வெளியே அந்த வரங்களைப் பயிற்சிசெய்வதைக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்துவின் சரீரத்தில், கூடுகைகளுக்கு வெளியே நமக்கு வெவ்வேறு வரங்களும், செயல்பாடுகளும் இருக்கின்றன. ரோமர் 12இல் உள்ள வரங்கள் கூடுகைகளில் பயிற்சிசெய்யப்படும் வரங்கள் அல்ல. கூடுகளைகளில் எல்லா அவயவங்களும் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும் (1 கொரி. 14:24, 31).
நம் மத்தியிலுள்ள பல பரிசுத்தவான்கள் தங்களைத் தவிர எல்லாரும் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும் என்பதுபோல் உணரக்கூடும். எனினும், எந்த விதிவிலக்குகளும் இல்லை. நாம் பேச்சாற்றல் மிக்கவர்களாக இல்லாதிருக்கலாம், ஆனால் நாம் இன்னும் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும். “நீங்கள் எல்லாரும் பேச்சாற்றல்மிக்க விதத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கலாம்” என்று வசனம் 31 கூறவில்லை. இந்த வசனத்தில் இப்படிப்பட்ட எந்த வினையடையும் இல்லை. “நீங்கள் எல்லாரும் தீர்க்க தரிசனம் உரைக்க முடியும்” என்று மட்டுமே அது கூறுகிறது. நாம் எவ்வாறு பேசுகிறோம் என்பது ஒரு பொருட்டல்ல; பேசுவது போதுமானது. நாம் எல்லாரும் பேசவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். (CWWL, 1990, vol. 2,“The Practice of Prophesying,” pp. 338-339)
References: CWWL, 1990, vol. 2, “The Practice of Prophesying,” ch. 1; Life-study of 1 Corinthians, msgs. 61, 63
கிறிஸ்துவைக் கொண்டு கூடும்போழ்
கூடுகைகள்—கிறிஸ்துவைக்
கண்காட்சியாகக் காண்பித்தல்
864
1 கிறிஸ்துவைக் கொண்டு கூடும்போழ்,
அவர் நிறைவின் மிகுதி,
தேவன் உண்ணப் படைத்து நாம்,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
கிறிஸ்துவைக் காண்பிப்போம்,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்;
சபைக்கு அவர் செல்வம் தந்து
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
2 நம் வாழ்க்கை, யுத்தம், உழைப்பு,
இராப்பகலாய் கிறிஸ்துவில்தான்,
அவர் நிறைவுடன் கூடி,
கிறிஸ்துவைக் காண்பிக்க.
3 நம் வாழ்க்கை, நபர், செயல்கள்
நம் மெய் சாரமும் கிறிஸ்துவே,
ஒவ்வோர் முறையும் கூடும்போழ்,
கிறிஸ்துவைக் காண்பிக்க.
4 கிறிஸ்துவைக் கூட்டங்களில் நாம்
பரஸ்பரமாய் பகிர்ந்து,
நாம் தேவனோடு மகிழ்ந்து
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
5 தேவன் திருப்தியடைய,
உயிர்த்து, பரமேறிய
கிறிஸ்துவை ஏறெடுத்து, நாம்
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
6 நம் கூட்டங்களின் மையமும்,
நிஜமும், சுற்றுச்சூழலும்,
ஊழியம், யாவும் இதற்கே—
கிறிஸ்துவைக் காண்பிக்க.
7 நம் சாட்சி, ஜெபம், ஐக்கியம்,
வரங்களின் பயன்பாடும்,
எதுவாயினும் கிறிஸ்துவை
காட்சியாக்க வேண்டும்.
8 பிதாவைக் கனப்படுத்த,
மகன் கிறிஸ்துவை உயர்த்தி,
கூடும் நோக்கம் நிறைவேற்றி,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.