மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் பன்னிரெண்டு – கர்த்தருடைய பந்திக் கூட்டம்
1 கொரி. 11:24-25—ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் 25போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
கர்த்தரை நினைவுகூருதல்—
கர்த்தரை மையமாகக்கொண்டு
அப்பம்பிட்கும் கூடுகையானது, கர்த்தரின் அனுபவமகிழ்ச்சிக்காகக் கர்த்தரை நினைவுகூருதலை அதன் மையமாகக்கொண்டு கர்த்தரை நினைவுகூருவதற்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை. இந்தக் கூடுகையிலுள்ள ஒவ்வொன்றும், அது பாடல்கள் பாடுதல், ஜெபித்தல், வேதம் வாசித்தல், அல்லது ஏவுதலின் வார்த்தைகள் பேசுதல் என்று எதுவாக இருந்தாலும், மற்றவர்கள் கர்த்தரையே நினைவுகூரும்படி அவர்கள் கர்த்தரின் நபர் மற்றும் வேலையையோ, அவரது அன்பு மற்றும் நற்பண்புகளையோ, பூமியில் அவரது வாழ்க்கை அல்லது பாடுகளையோ, அல்லது பரலோகத்தில் அவரது கனம் அல்லது மகிமையையோ பரிசீலிக்கும்படி அல்லது உணர்ந்தறியும்படி, அதைப் பற்றிப் பேசி, கர்த்தரையே மையமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கூடுகையில், நாம் கர்த்தரைப் பற்றி கிளர்ந்தெழுப்பப்படுமாறு, நம் இருதயங்களில் கர்த்தரை நினைக்க வேண்டும், நம் ஆவியில் கர்த்தரை நோக்கிப்பார்க்க வேண்டும். அப்போது முழுக் கூடுகையின் உணர்வும் கர்த்தருக்கு நேராக வழிநடத்தப்பட்டு எல்லோரும் கர்த்தரை நினைவுகூரும்படியாக, பாடல்கள், ஜெபங்கள், வேதம் வாசித்தல் அல்லது வார்த்தைகள் மூலமாக நாம் பெற்ற அகத்தூண்டுதலை வெளிப்படுத்துவோம். (Life Lessons, vol. 2, pp. 27-28)
கர்த்தரை நினைவுகூர்வதன்
நடைமுறைப் பயிற்சி
அப்பம் புசிப்பதன் மூலம்
கர்த்தரை நாம் நினைவு கூர்வதைப் பற்றிய அடுத்த மிக முக்கியமான குறிப்பு, கிறிஸ்துவின் பரம்புதிரான சரீரத்தில் ஐக்கியத்தை அனுபவித்து மகிழ நாம் அப்பத்தைப் புசிப்பதாகும். அப்பம் பிட்குதல் பிரதானமாக சிலுவையில் நமக்காக உடைக்கப்பட்ட கர்த்தரின் பெளதிக சரீரத்தை மறைவாகக் காட்டுகிறது. அப்பம் புசித்தல், அதாவது அப்பத்தை உட்கொள்ளுதல் பிரதானமாகக் கிறிஸ்துவின் பரம்புதிரான சரீரத்திலுள்ள ஐக்கியத்தை மறைவாகக் காட்டுகிறது (1 கொரி. 10:16-17).
பாத்திரத்தைப் பருகுவதன் மூலம்
நாம் பாத்திரத்தைப் பருகுவது, புது உடன்படிக்கையின் மீட்பை மறுஆய்வுசெய்வதற்காக இருக்கிறது. இந்தக் குறிப்புக்காக நாம் மத்தேயு 26:27-28ஐ வாசிப்பது நல்லதாக இருக்கும்: “பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.”
அப்பம் புசிப்பதென்றால், ஜீவனைப் பெறுவதாகும்; பாத்திரத்தைப் பருகுவதென்றால், ஆசீர்வாதத்தைப் பெறுவதாகும். வேதத்தில் அப்பம் ஜீவ அப்பம் என்று அழைக்கப்படுகிறது (யோ. 6:35), பாத்திரம் ஆசீர்வாதத்தின் பாத்திரம் என்று அழைக்கப்படு கிறது (1 கொரி. 10:16). எனவே, அப்பத்தைப் புசிப்பதென்றால், ஜீவ நிரப்பீட்டைப் பெறுதல் என்று பொருள், பாத்திரத்தில் பருகுவதென்றால் ஆசீர்வாதத்தைப் பெறுதல் என்று பொருள்.
ஒரே பாத்திரத்தில் பருகுவதில், நமக்கு ஓர் இணைந்த, பரஸ்பரமான பங்குபெறுதல் இருக்கிறது. புசித்தல், குடித்தல் ஆகிய இரண்டும் ஒருமையையும், ஐக்கியத்தையும், அதாவது கூட்டுறவையும் சுட்டிக்காட்டுகின்றன (1 கொரி. 10:16).
கர்த்தருடைய பந்தியில் நாம் கர்த்தருடைய மரணத்தை நினைவுகூறவில்லை, மாறாக கர்த்தருடைய மரணத்தை அறிவிக்கிறோம், பறைசாற்றுகிறோம், காட்சியாக்குகிறோம். “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” ஒன்று கொரிந்தியர் 11:26 கூறுகிறது.
கர்த்தர் வரும்வரை நாம் கர்த்தருடைய மரணத்தை அறிவிக்கிறோம் என்று ஒன்று கொரிந்தியர் 11:26 கூறுகிறது. நாம் கர்த்தருடைய மரணத்தை அறிவிக்கையில், கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்த நம் வாஞ்சையை நாம் வெளிக்காட்டுகிறோம்.
பிதாவைத் தொழுதுகொள்ளுதல்—
பிதாவை மையமாகக் கொண்டு
[அப்பம் பிட்டு, பாத்திரத்தில் பருகிய பிறகு], பிதாவை ஆராதிக்கும்படி கர்த்தர் நம்மை நடத்துவார். கர்த்தர் தம் சீஷர்களுடன் தம் இராப்போஜனத்தை முடித்த பிறகு, அவரும் சீஷர்களும் ஒரு பாடல் பாடினர் என்று கூறுகிற மத்தேயு 26:30இன் அடிப்படையில் இது இருக்கிறது. அந்தப் பாடல் தம் சீஷர்களுடன் கர்த்தரால் பிதாவிடம் பாடப்பட்டது. கர்த்தருடைய பந்தியில், பிதாவைத் துதிக்கவும், பிதாவை ஆராதிக்கவும் கர்த்தர் முன்னணி எடுக்கிறார். (CWWL, 1979, vol. 2, “Basic Lessons on Service,” pp. 19-22)
எபிரெயர் 2:12இன்படி, நாம் கர்த்தரை நினைவு- கூர்ந்து அப்பம்பிட்டபின்பு, பிதாவை ஆராதிப்பதற்காக நாம் கர்த்தரால் நடத்தப்பட வேண்டும். கூடுகையின் இந்தப் பகுதியில், நாம் பிதாவை மையமாக எடுத்துக்கொள்கிறோம், ஆங்கிலப் பாடல்கள், #52இல் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, பிதாவிடம் நாம் துதித்துப் பாடுவதெல்லாம், பிதாவுக்குத் துதிகளைப் பாடும்படி நம்மில் கர்த்தர் நம்மை நடத்துவதாகும். (Life Lessons, vol. 2, p. 36)
References: Life Lessons, lsns. 16, 17; CWWL, 1979, vol. 2, “Basic Lessons on Service,” chs. 2, 3, 5; Life- study of 1 Corinthians, msgs. 49, 50, 54—56
அப்பம், இரசத்தின் பந்திக்காய்
கர்த்தரைத் துதித்தல்—அவரை நினைவுகூருதல்
221
1 அப்பம், இரசத்தின் பந்திக்காய்,
கர்த்தாவே, ஸ்தோத்திரம்;
பந்தியில் அனுபவிப்போம்
தெய்வ அன்பின் விருந்தாய்.
நீர் தந்த உம் சரீரத்தின்
சின்னமாம் அப்பத்தையும்,
நீர் சிந்தின உம் இரத்தத்தின்
சின்னமாம் இரசத்தையும்.
பாரீர் தூய பந்தி!
பரிசுத்த சின்னம்;
அதின் உட்கருத்து
ஆராய முடியாது!
2 உம் ஜீவன் எம்முள் பகிர்ந்தீர்,
உம் மீட்பின் மரணத்தால்,
உம்மில் யாம் பங்கடைந்திட
உம்மை எமக்காய் ஈந்தீர்.
அப்பம், இரசத்தில் பங்குற்று,
உம் மரணம் காண்பிப்போம்;
உம்மையே உண்டு, பருகி,
அன்புடன் நினைக்கின்றோம்.
3 உம் புதிரான சரீரம்
ஒன்றென்று அப்பம் சாற்றும்,
உம் அங்கங்களுடன் ஐக்கியம்
ஒரே அன்பின் கட்டிலே.
நாம் துதிக்கும் தூய பாத்திரம்,
உம் இரத்தத்தின் ஐக்கியம்,
சுத்தர் யாவரோடும் கொண்ட
ஐக்கியம் என்று சாற்றுமே.
4 நீரே எம் நித்திய பங்கு,
இன்ப முன்சுவை இங்கு;
உம் அரசிற்காய் வாஞ்சித்து,
உம் வருகை நோக்குவோம்.
ஜெயங்கொண்ட சுத்தரோடு உம்
அரசில், வருகையில்,
உம் நேச மணவாட்டியாய்
உம்மையே விருந்துண்போம்.