மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் பதினொன்று – குழு கூடுகைகள்

எபே. 5:19—சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி

கொலோ. 3:16—கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி

பிலி. 2:1—ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,

குழுக் கூடுகைகள் சபை வாழ்க்கையின்
எண்பது சதவீதத்தைக் கட்டியமைத்தல்

[குழு கூடுகைகளைப் பயிற்சிசெய்வதை] பற்றிய என் ஊழியத்தில், நாம் வானங்களையும் பூமியையும் மறந்துவிடலாம், ஆனால் குழுக் கூடுகைகளை நாம் கைவிடக் கூடாது என்று நான் கூறினேன். சபை வாழ்க்கை எண்பது சதவீதம் குழுக் கூடுகைகளைச் சார்ந்திருக்கிறது என்றும் நான் எல்லாச் சபைகளுக்கும் கூறினேன்.

தேவன்-நியமித்த வழியின் ஒரு பகுதியாக, குழுக் கூடுகைகள் புதிய ஏற்பாட்டில் தெளிவாகத் திரைநீக்கப்பட்டுள்ளன….நடபடிகள் 2:46-ன்படி, புதிதாக இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் உடனடியாக அவர்களது வீடுகளில் கூடிவரத் துவங்கினர். நடபடிகள் 2:46 வீடுகள்தோறும் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. கிரேக்க மொழியின்படி, வீடுகள்தோறும் கூடிவந்த விசுவாசிகள் வீட்டைத் தங்கள் கூடுகைக்கான அடிப்படை அலகாக எடுத்துக்கொண்டனர் என்பதே இந்தச் சொற்றொடரின் பொருள்….எனவே, நம் ஒவ்வொருவருக்கும் நம் வீட்டில் ஒரு கூடுகை இருக்க வேண்டும் என்பதை புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது. நிச்சயமாக இந்த வீட்டுக் கூடுகைகள் நம் சொந்தக் குடும்பத்துடன் மட்டுமே இருக்கக் கூடாது; அவை மற்றவர்களையும் உள்ளடக்க வேண்டும். (CWWL, 1991-1992, vol. 3, “Fellowship concerning the Urgent Need of the Vital Groups,” p. 367)

குழுக் கூடுகையின் நடைமுறைப் பயிற்சி

சங்கீதங்கள், பாடல்கள், மற்றும்
ஆவிக்குரிய பாடல்களைப் பேசுதலும் பாடுதலும்

ஒரு குழுக் கூடுகையை நடத்துவதற்கான வழியை நாம் இப்போது பரிசீலிக்க வேண்டும். ஆவியில் நிரம்பும்படி எபேசியர் 5:18 நமக்குக் கூறுகிறது. கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிற, அவரது குறிக்கோளைத் தேடுகிற, அவரது மீட்டுத்திருப்புதலுக்காகப் பாரமாயிருக்கிற விசுவாசிகளான நாம் நாள் முழுவதும் நம் ஆவியில் நிரப்பப்பட்ட நபர்களாக இருக்க வேண்டும். இன்று நமக்குச் சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியாக இருக்கிற மூவொரு தேவனைக் கொண்டு நாம் நிரப்பப்பட வேண்டும். நாம் உள்ளாக நிரப்பப்படும்போது, நிச்சயமாக நம் ஆவியிலிருந்து வரும் ஏதோவொன்றை நாம் பேசுவோம். பேசி, பாடி நம் ஆவியில் நிரப்பப்படும்படி எபேசியர் 5 நமக்குக் கூறுகிறது. நாம் பேசுவதும் பாடுவதும் பொதுவான மொழியில் அல்ல. ஒரு நீண்ட கவிதையாகிய ஒரு சங்கீதத்தை நாம் பேசலாம் அல்லது பாடலாம். ஒரு சங்கீதத்தைவிட சற்று சிறியதான ஒரு பாடலை நாம் பேசலாம் அல்லது பாடலாம், அல்லது இன்னும் சிறிதான ஓர் ஆவிக்குரிய பாடலை நாம் பேசலாம் அல்லது பாடலாம்.

கூடுகைக்கு வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே இந்தச் சங்கீதங்களையும், பாடல்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நாம் பேசவும் பாடவும் வேண்டும். நம் வீட்டில்கூட பேசுவதும், பாடுவதும் மிக நல்லது. “இது என் கதை, இதென் பாடல், / வாழ்வெல்லாம் துதி…” என்று கணவன் கூறலாம். அப்போது, “இரட்சகருக்கே” என்று மனைவி மாறுத்தரமளிக்கலாம் (பாடல்கள், #308ஐக் காண்க). அல்லது அவள், “கிழிந்த திரை கடந்தேன். /மங்கா மகிமை நுழைந்தேன்” என்று கூறலாம். பின்பு கணவர், “அல்லேலூயா! அல்லேலூயா! / இராஜ சந்நிதியில் வாசம் செய்கிறேன்” என்று மாறுத்தரமளிக்கலாம் (பாடல்கள், #551ஐக் காண்க). நாம் ஆவியில் நிரப்பப்பட்டால், கூறுவதற்கு நம்மிடம் ஏதோவொன்று இருக்கும். சிறு குழு கூடுகை மாலை 7:30 மணிக்கு தொடங்கலாம், ஆனால் ஒரு தம்பதி மாலை 6:00 மணியளவில் இரவு உணவின்போது பாடத் துவங்கினால், அந்தச் சிறு குழுக் கூடுகை ஏற்கெனவே துவங்கியிருக்கும். அவர்கள் மற்ற பரிசுத்தவான்களுடன் கூடுகைக்கு வாகனத்தை ஓட்டிவரும்போது, இத்தகைய கூடுகை தொடரலாம். நான் அந்தக் கூடுகைக்குச் சென்று ஒருவரும் இன்னும் வந்துசேராவிட்டால், நான் அமைதியாக உட்கார்ந்து, மற்றவர்கள் வந்து சேர்வதற்காக காத்துக்கொண்டிருக்கக் கூடாது. நான் பேச, ஜெபிக்க, அல்லது பாடத் துவங்க வேண்டும். குறைந்தபட்சம் என்னுடன் ஒரு தேவ தூதன் இருக்கிறான், எனவே, நான் தனியாக இல்லை. பேதுரு சிறையில் இருந்து விடுதலையாகி மரியாளின் வீட்டிற்குச் சென்றபோது, இது அவனது தூதன் என்று சிலர் நினைத்தனர் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது (அப். 12:15). இராஜ்ஜியத்திலுள்ள சிறியவர்களுக்குக் கூட தேவதூதர்கள் இருக்கின்றனர் என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (மத். 18:10). பேசுதல், துதித்தல், அல்லது பாடுதல் மூலம் குழுக் கூடுகையானது மிகவும் புறத்தூண்டுதலற்ற விதத்தில் துவங்க முடியும்.

ஐக்கியம், பரிந்துபேசுதல், பரஸ்பர கரிசனை,
மற்றும் மேய்த்துப்பேணுதல்

புதிய ஏற்பாடு குழுக் கூடுகைகளின் விபரங்களை நமக்குத் தரவில்லை, ஆனால் [எபிரெயர் 10:24-25, 2 தீமோத்தேயு 2:2, மற்றும் எபேசியர் 4:12-13இல்] குழுக் கூடுகையின் நடைமுறையைக் காண்பதற்கான சில சிறிய “ஜன்னல்கள்” உள்ளன. பண்டைய நாட்களில் குழுக் கூடுகைகளில் என்ன நடந்தது என்பதைக் காண இவை நமக்கு உதவும். வார்த்தையைப் பரிசீலிப்பதன் மூலம், அதிக ஐக்கியமும், ஒருவருக்கொருவர் பரிந்துபேசுதலும், பரஸ்பர கரிசனையும், மேய்த்துப்பேணுதலும் இருந்தது என்பதை நாம் காண முடியும். ஐக்கியம் மற்றவரின் நிலைமையையும், சூழ்நிலையையும் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுவருகிறது. இது ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படி நடத்தும். இது, அதன் பிறகு நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக அக்கறைகொள்ளும்படி ஒருவரிடம் ஒருவர் நாம் செல்லும்படிச் செய்யும். ஒரு சகோதரருக்கு வாகன விபத்து நேர்ந்தது என்பதை ஐக்கியத்தின் மூலம் நமக்குத் தெரியவரலாம். இது அவருக்காகவும், அவரது குடும்பத்திற்காகவும் ஜெபிக்க நம்மை நடத்தலாம். அதன் பின்பு நாம் அவரது பொருளாதார தேவைகளைப் பரிசீலிக்கவும், அவரது ஆரோக்கியத்தின் தேவைகளுக்காக அக்கறைப்படவும் பாரப்படலாம். இவை எதுவும் ஒரு சம்பிரதாயமான விதத்தில் இருக்கக் கூடாது. இது ஆவியானவரின் புறத்தூண்டுதலற்ற விளைவாக இருக்க வேண்டும். இப்போதிலிருந்து நம் குழுக் கூடுகைகள் அனைத்தும் இப்படிப்பட்ட ஒரு ஜீவாதாரமான விதத்தில் இருக்க முடியும் என்று நான் எதிர்நோக்குகிறேன்.

பரஸ்பரமாகப் போதித்தில்

பரிசுத்தவான்களின் சீர்பொருத்துதலுக்காக, குழுக் கூடுகைகளில் போதிப்பதற்கான தேவை இருக்கிறது, குழுக் கூடுகைகளில் எல்லாரும் போதகர்களாக இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட போதகர் யாரும் இருக்கக் கூடாது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இரட்சிக்கப்பட்டவர் கூட ஒரு சிறிய போதகராக இருக்க முடியும். சிறுகுழுக் கூடுகையில், சிறிது ஐக்கியமும், பரிந்துபேசுதலும், பரஸ்பர கரிசனையும், ஆவியைப் பயிற்சிசெய்தலுடன் மேய்த்துப் பேணுதலும் நடைபெற்ற பிறகு, ஒரு சகோதரர் திடீரென ஒரு கேள்வி கேட்கலாம். தேவனுடைய பகிர்ந்தளித்தல் என்றால் என்ன என்று அவர் கேட்கலாம். எல்லாக் கண்களும் அந்தக் கூடுகையிலுள்ள மிகவும் மூத்தவரிடம் திரும்பக்கூடும், ஆனால் சமீபத்தில் இரட்சிக்கப்பட்டவர் அந்தச் சகோதரனுக்குப் பதிலளிப்பது சிறந்ததாக இருக்கக் கூடும். இது, பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கிறது. “தேவனுடைய பகிர்ந்தளித்தல் என்பது அவர் தம்மை நம் ஆவிக்குள் விநியோகிப்பதற்காக இருக்கிறது” என்று இந்தப் புதிதாக இரட்சிக்கப்பட்டவர் கூறலாம். இப்படிப்பட்டவர் இரட்சிக்கப்பட்டு, ஓரிரு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கக்கூடும். அவரது பேசுதலால் எல்லாரும் உற்சாகமடைவார்கள். ஒரே நபர் நீண்ட நேரம் பேசுவதைவிட ஆறு அல்லது ஏழு பேர் ஒரு சில நிமிடங்கள் பேசினால் அது மிகச் சிறந்தது. இவ்விதமான போதித்தல் ஐசுவரியமானது, சகலத்தையும்-உள்ளடக்கியது. அதன் பல அம்சங்கள் ஒரே ஒருவர் பேசுகிற ஒரு கூடுகையைவிட அதிகம் சிறந்தது. ஒவ்வொருவரும் பேசினால், எல்லாப் பரிசுத்தவான்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், எல்லாரும் கற்றுக்கொள்வார்கள். இதுவே எல்லாரும் சீர்பொருத்தப்படுவதற்கான வழி.
பரிசுத்தவான்கள் இவ்விதமான கூடுகைக்கு ஓர் ஆண்டுக்கு நாற்பத்து ஐந்து முறை வந்தால், அதிகமான போதனையை எல்லாரும் ஆதாயம் செய்வார்கள். புதியவர்கள் இவ்விதத்தில் சீர்பொருத்தப்படுவார்கள். மேலும், இது ஒரு குழுக் கூடுகையாக இருப்பதால், பல காரியங்கள் நிறைவேற்றப்படும். இவ்விதமான நடைமுறையே ஐக்கியப்படவும், பரிந்து பேசவும், பரஸ்பரமாகக் கரிசனை செலுத்தவும், மேய்த்துப்பேணவும், பரஸ்பர போதித்தலால் ஒருவரையொருவர் சீர்படுத்தவும் நேர்த்தியான வழி.

சபையின் சேவையை நிறைவேற்றுதல்

நாம் இப்படிப்பட்ட ஒரு கூடுகையின் ஐசுவரியங்களை அனுபவமாக்கினால், மக்களைச் சந்திக்க வெளியே செல்வதற்கான தேவன்-நியமித்த வழியின் முதற்படியை எடுக்க நாம் பாரத்தை எடுத்துக்கொள்ளக்கூடும். அடுத்து நாம் ஆதாயப்படுத்திய புதியவர்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். குழுக் கூடுகை சபையின் சேவையை எடுத்துச்செல்லும் என்பதே இதன் பொருள். இறுதியில், இது அந்தச் சிறுகுழுக் கூடுகையை சபை வாழ்க்கையின் ஒரு சிற்றுருவாக்கும். (CWWL, 1989, vol. 3, “The Exercise and Practice of the God-ordained Way,” pp. 414-416)

References: CWWL, 1991-1992, vol. 3, “Fellowship concerning the Urgent Need of the Vital Groups,” chs. 1, 2; CWWL, 1989, vol. 3, “The Exercise and Practice of the God-ordained Way,” ch. 24; CWWL, 1990, vol. 2, “The Practice of the Group Meetings,” ch. 2

WE HAVE FOUND THE CHRIST WHO’S ALL IN ALL

Experience of Christ— Enjoying Him – 1153

1 We have found the Christ who’s all in all;
He is everything to us;
O how blest upon His name to call,
How divine, how glorious!

It is joy unspeakable and full of glory,
Full of glory, full of glory;
It is joy unspeakable and full of glory,
And the half has never yet been told!

2 We have found that Christ the Spirit is
Who within our spirit dwells;
How available, how near He is,
And His sweetness all excels.

3 We have found the way to live by Christ—
Pray His Word and call His name!
This—the eating, drinking—has sufficed
And its worth we now proclaim.

4 We have found the local church, our home;
We are home and home indeed!
Nevermore in Babylon we roam;
In the church is all we need.

5 We have found that meeting with the saints
Is the greatest joy on earth;
’Tis by this our spirit never faints
And our lives are filled with worth.

Jump to section