மேய்த்துப்பேணுதல்

திரட்டு 6

சபை வாழ்க்கை

Jump to section

பாடம் பத்து – உயிர்த்துடிப்பான குழுக்கள்

அப். 2:46-47—அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து , வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே கூட்டிச்சேர்த்துவந்தார்.

உயிர்த்துடிப்பான குழுக்களை உருவாக்குதல்

மற்றவர்களுடனான உங்கள் தொடர்பில்
ஒரு முழுமையான மற்றும் அந்நியோன்யமான
ஐக்கியத்தைத் துவங்குதல்

உயிர்த்துடிப்பான குழுக்களாயிருப்பது, ஒருவித இயக்கமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. உயிர்த்துடிப்பாக இருப்பது, உயிர்த்துடிப்பாக்கப்படுவது, முற்றிலுமாக ஒரு தனிநபர் சார்ந்த காரியம். இந்தக் காரியத்தில் கர்த்தரைத் தவிப்பாகவும், முற்றும்முடியவும் ஆசையாய்ப் பின்தொடர கர்த்தரால் நீங்கள் அழுத்தப்பட்டால் மட்டுமே உயிர்த்துடிப்பாக்கப்படுவது சாத்தியம். உயிர்த்துடிப்பாகிய பிறகு, இந்தக் காரியத்தை ஓர் இயக்கமாக பரப்ப அல்லது பலவந்தமாய்ப் பரிந்துரைக்க பல பரிசுத்தவான்களை நீங்கள் திரட்டக் கூடாது.

உயிர்த்துடிப்பாக்கப்பட்ட பிறகு, இத்தனைப் பல பரிசுத்தவான்கள் மத்தியில் நீங்கள் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து கர்த்தரின் வழிநடத்துதலை நாடுவதே நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். ஒரு நேரத்தில் இரண்டு அல்லது மூன்றுபேரை மட்டும் தொடர்புகொண்டு, அவர்களுடன் ஐக்கியப்பட கர்த்தருடைய வழிநடத்துதலையும், அவரது வழிகாட்டுதலையும் நீங்கள் முற்றும்முடிய பின்பற்ற வேண்டும். உயிர்த்துடிப்பாகுதல் என்ற காரியத்தில் கர்த்தரைத் தேடும்படி நீங்கள் எவ்வாறு கர்த்தரால் அழுத்தப்பட்டிருக்கிறீர்கள் என்பது பற்றிய உங்கள் சாட்சியை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் தொடர்புகொள்கிற அந்த நபருடன் ஒரு முழுமையான அந்நியோன்யமான ஐக்கியத்தை நீங்கள் துவங்க வேண்டும், அது உங்களையும் நீங்கள் தொடர்புகொள்கிற அந்த நபரையும் கர்த்தரால் கனப்படுத்தப்படும் தவிப்பான ஜெபங்களுக்குள் கொண்டுசெல்லும்.

முழுமையான அறிக்கைகளையும்,
அர்ப்பணத்தையும் செய்தல்

நீங்கள் தொடர்புகொள்கிற நபர் கர்த்தரிடம் முழுமையான அறிக்கைசெய்யும்படி நீங்கள் நடத்தவும், நீங்கள் செய்திருக்கிறதுபோல எந்த விலையும் செலுத்த நீங்கள் அவருக்கு உதவவும் வேண்டும். இவ்விதத்தில், உயிர்த்துடிப்பானதும், ஜீவிக்கிறதும், கர்த்தருடைய ஆவலில் துடிப்பானதுமான ஒரு சிறு குழு புறத்தூண்டுதலன்றி உண்டாகும். இத்தகைய ஓர் உயிர்த்துடிப்பான குழுவின் எண்ணிக்கை பத்து அல்லது அதைவிட அதிகமாக அதிகரிக்கும்போது, நீங்கள் அதை இரண்டு குழுக்களாகப் பிரித்து, நீங்கள் எந்நேரமும் செய்துவந்திருக்கிறபடியே, அதே தடத்தில் உயிர்த்துடிப்பான தன்மையைப் பயிற்சிசெய்ய ஒவ்வோர் அங்கத்தினருக்கும் கட்டளையிட வேண்டும்.

இடைவிடாமல் ஜெபித்தல்

நீங்கள் உயிர்த்துடிப்பாக்கப்பட்டு, இப்படிப்பட்ட உயிர்த்துடிப்பான குழுக்களை எழுப்பியிருப்பதால், நீங்கள் சபைக்காகவும் வழிநடத்துகிறவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். கர்த்தர் வழிநடத்துகிறபடி, நீங்கள் சபைக் கூடுகைகளில் சாட்சி கொடுக்க வேண்டும், ஆனால் ஆக்கினைத்தீர்க்கிற, அல்லது பரப்புகிற அல்லது பலவந்தம் செய்கிற வழியில் இதைச் செய்யக்கூடாது. சபை கூடிவருகிற மற்றும் சேவிக்கிற விதத்தை மாற்றும் எண்ணத்தைத் தவிர்த்துவிடுங்கள். மாற்றம் ஏற்படுத்துவதற்கான எந்த இயக்கத்தையும் துவங்காதீர்கள். ஜெபம் தேவைதான், ஆனால் எந்தத் தீவிர மாற்றத்திற்கான எண்ணமும் தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் உயிர்த்துடிப்பானவுடன், எவரையும், விசேஷமாக வழிநடத்துகிறவர்களையும், மூத்தவர்களையும், மற்றவர்களுக்கு வழக்கமாக உதவுபவர்களையும் அசட்டை செய்யாதீர்கள். பலவீனமானவர்களையும், நிர்விசாரமானவர்களையும், ஆவிக்குரிய காரியங்களுக்கு எந்த அக்கறையும் இல்லாதவர்களாகத் தோன்றுகிறவர்களையும் தாழ்வாகப் பார்க்காதீர்கள். முடிவாக, சபை முற்றிலும் ஒரே விதமாக இருப்பதையும், உங்கள் பார்வை மற்றும் பயிற்சியின்படி ஒரேவிதமாக்கப்படுவதையும் காண எதிர்பார்க்காதீர்கள். சபை மனிதச் செயலாலான செயற்கையான ஒன்றல்ல, மாறாக விசுவாசிகளில் கிறிஸ்துவின் வளர்ச்சியுடன் தெய்வீக ஜீவனின் வளர்ச்சியில் ஜீவாதாரமானது. (CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” pp. 47-48)

Reference: CWWL, 1993, vol. 2, “1993 Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” ch. 7

I THIRSTED IN THE BARREN LAND OF BABYLON

The Church—As Our Home and Rest – 1234

1 I thirsted in the barren land of Babylon
And nothing satisfying there I found;
But to the blessed local church one day I came,
Where springs of living water do abound.

Drinking at the springs of living water,
Happy now am I,
My heart they satisfy;
Drinking at the springs of living water,
O wonderful and bountiful supply!

2 How sweet the living water from the hills of God,
It’s flowing in and flowing out of me;
O now I’ve found the place for which I long had sought,
Where there is life and life abundantly.

3 O brother, won’t you gather in the local church?
A fountain here is flowing deep and wide.
The Shepherd now would bring you to the local church,
Where thirsty spirits can be satisfied.

Jump to section