மேய்த்துப்பேணுதல்
திரட்டு 6
சபை வாழ்க்கை
பாடம் ஒன்பது – கர்த்தருடைய ஆடுகளை மேய்த்துப்பேணுதல்
யோ. 21:15—அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் செம்மறிக்குட்டிகளுக்கு உணவூட்டுவாயாக என்றார்.
கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில்
மேய்ப்பர்களுக்கான தேவை
மக்களைத் தொடர்புகொள்கிற ஒரு பழக்கத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். உன்னதப்பாட்டு 1:8இல், கர்த்தர் தம் பின்பற்றுபவர்களிடம், “மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு” என்று கூறினார். நாம் கர்த்தருக்குப் பின் ஓட வேண்டும் என்று இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. நாம் ஓடுகையில், நாம் சில இளையவர்களைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். மேய்ப்பர்கள் இருக்கிற இடமும், தேவனுடைய மக்கள் பிரதான மேய்ப்பரைச் சந்திக்கிற இடமுமான கூடாரங்களுக்கு நாம் அவர்களைக் கொண்டுவர வேண்டும்.
ஜீவனைப் பற்றிய சுவிசேஷமான யோவான் சுவிசேஷமும் மேய்த்துப்பேணுதலின் தேவையைப் பற்றிப் பேசுகிறது. அதிகாரம் 20இன் முடிவில் யோவான் சுவிசேஷம் உண்மையில் முடிவடைந்து விடுகிறது, ஆயினும் ஒரு பிற்சேர்க்கையாக இன்னும் கூடுதலான ஓர் அதிகாரமாகிய அதிகாரம் 21 இருக்கிறது. இந்தப் பிற்சேர்க்கையிலுள்ள பிரதானமான காரியம் பேதுருவை மேய்த்துப்பேண கர்த்தராகிய இயேசு நேரம் செலவழிப்பதாகும். பேதுரு ஒரு பெரிய அளவிலான தோல்வியைச் சந்தித்திருந்தான்.
ஆட்டு மந்தையாக மட்டுமல்லாமல்,
மேய்ப்பர்களின் மந்தையாகவும் இருத்தல்
கர்த்தர் பேதுருவை மீட்டுத்திருப்பியபோது, ஒரு மந்தையைப் பெறுவதற்கான தம் வாஞ்சையைக் குறித்து அவர் அவனுக்கு நினைப்பூட்டினார். 1 பேதுரு 5:4இல் பேதுரு கர்த்தராகிய இயேசுவை “பிரதான மேய்ப்பன்” என்று அழைக்கிறான். கிறிஸ்து பெரிய மேய்ப்பர் என்று எபிரெயர் 13:20 கூறுகிறது, யோவான் 10:11இல் கர்த்தர் தம்மை நல்ல மேய்ப்பன் என்று கூறினார். இவ்வாறு, அவர் பிரதான மேய்ப்பராகவும், பெரிய மேய்ப்பராகவும் நல்ல மேய்ப்பராகவும் இருக்கிறார். இந்தப் பிரதான மேய்ப்பர் நம் ஆத்துமாக்களின் மேய்ப்பராக இருக்கிறார் என்று ஒன்று பேதுரு 2:25 கூறுகிறது. நம் ஆத்துமா நம் நிஜமான நபராகிய நம் உள்ளார்ந்த ஆள்தத்துவமாகும். நம் கர்த்தர் பிரதானமாக, நம் உள்ளான ஆள்தத்துவத்தின் நலனுக்காக அக்கறைப்படுவதன் மூலமும், நம் நிஜமான நபரின் நிலைமைமீது அவரது கண்காணிப்பைப் பிரயோகிப்பதன் மூலமும் நம்மை மேய்த்துப்பேணுகிறார். ஆனால் ஆடுகளின் இத்தனை பல மந்தைகளைக் கர்த்தராகிய இயேசுதாமே மேய்த்துப்பேண முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பிரதான மேய்ப்பராக, அவருக்குக் கீழ் ஒரு மேய்ப்பர்களின்-மந்தை இருக்க வேண்டும். நாம் ஆட்டு மந்தைகள் மட்டுமல்ல, மேய்ப்பர்களின்-மந்தைகளும் கூட.
கர்த்தர் பேதுருவிடம், அவன் தம்மிடத்தில் அன்பாயிருக்கிறானா என்று கேட்டபோது, “ஆம் ஆண்டவரே நாம் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்று கூறி அவன் பதிலளித்தான் (யோ. 21:15-16). கர்த்தர் இதை அவனிடம் மூன்றாம் முறை கேட்டபோது, “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்” என்று மட்டுமே பேதுருவால் கூற முடிந்தது (வ. 17). பேதுருவின் மூன்று மாறுத்தரங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னர், “என் செம்மறிக்குட்டிகளுக்கு உணவூட்டுவாயாக…என் செம்மறிகளை மேய்ப்பாயாக…என் செம்மறிகளுக்கு உணவூட்டுவாயாக” என்று கர்த்தர் அவனிடம் கூறினார் (வவ. 15-17). சந்தேகமின்றி, பேதுரு ஒருபோதும் மறக்கமுடியாத ஒரு பலமான கருத்துப்பதிவை இது அவனுக்குக் கொடுத்தது. இந்தக் காரணத்தால்தான் அவன் தன் முதல் நிருபத்தில் மேய்த்துப்பேணுதல் என்ற காரியத்தைப் பற்றிப் பேசுகிறான். கிறிஸ்து பிரதான மேய்ப்பர் என்றும், தான் அந்தப் பிரதான மேய்ப்பரின் கீழுள்ள பல மேய்ப்பர்களுள் ஒருவன் என்றும் அவன் நமக்குக் கூறுகிறான். கர்த்தர் நம் ஆத்துவாவின், அதாவது நம் நிஜமான நபரின் மேய்ப்பர் என்றும் அவன் நமக்குக் கூறுகிறான். யோவான் 21இல் கர்த்தர் அவனை மீட்டுத்திருப்பியபோது, அதுதான் அவனது அனுபவமாக இருந்தது. (CWWL, 1993, vol. 2, “The Training and the Practice of the Vital Groups,” pp. 315-316)
பிதாவின் நேசிக்கிற மற்றும் மன்னிக்கிற
இருதயத்தையும், நம் இரட்சகராகிய கிறிஸ்துவின் மேய்த்துப்பேணுகிற தேடுகின்ற
ஆவியையும் கொண்டிருத்தல்
“சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்” என்று லூக்கா 15:1 கூறுகிறது கனவான்களும் நீதிமான்களும் அவருடன் சேர வில்லை, மாறாக வரிவசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடன் சேர்ந்துகொண்டனர். ஆகையால் பரிசேயர் மீண்டும் முறுமுறுத்து, புகார்கூறினர். அப்போது கர்த்தர் மூன்று உவமைகளைக் கூறினார். முதலாவது, ஒரே ஒரு தொலைந்துபோன ஆட்டைத் தேடுகிற ஒரு மேய்ப்பரைப் பற்றியது. நூறு ஆடுகளில், இது தொலைந்துபோன ஒன்று, ஆகையால் அந்த மேய்ப்பன் மனமார அவனுக்காக வந்தார். கர்த்தர் ஏன் பாவிகளும் வரி வசூலிப்பவர்களும் நிறைந்த ஒரு வீட்டிற்குச் சென்றார்? இது ஏனெனினில் அவர்களுக்கு மத்தியில் அவரது தொலைந்துபோன ஆடு ஒருவன் இருந்தான், அவனைத் தேடிக் கண்டடைய அவர் வந்தார். இரண்டாவது உவமை, தன் தொலைந்துபோன நாணயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு விளக்கைக் கொழுத்தி, வீட்டை பெருக்குகிற ஒரு பெண்ணைக் குறித்தது. மூன்றாவது உவமை ஊதாரி மகனைப் பற்றியது. குமாரனே இந்த மேய்ப்பன், ஆவியானவரே அந்தப் பெண், ஊதாரி மகனைப் பற்றிய உவமையில் பிதா இருக்கிறார். ஊதாரி மகன் திரும்பிவருகையில், தன் தகப்பனிடம் என்ன பேசுவது என்று அவன் தயார்செய்துகொண்டும், பரிசீலித்துக்கொண்டும் இருந்தான். “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று கூறும்படி அவன் தன்னை ஆயத்தப்படுத்தினான் (வ. 18-19). அவன் இவ்வாறு சிந்தித்துக்கொண்டே நடந்துவந்து கொண்டிருக்கையில், அந்தத் தகப்பன் அவனைப் பார்த்தான். “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்” என்று வசனம் 20 கூறுகிறது. தகப்பன் அந்த மகனை நீண்ட தூரத்திலேயே பார்த்தது தற்செயலானதல்ல. மகன் வீட்டை விட்டுச்சென்ற நேரத்திலிருந்து, அந்தத் தகப்பன் ஒவ்வொரு நாளும் வெளியே போய் அவன் திரும்பிவருவதற்காகப் பார்த்துக்கொண்டே காத்திருந்திருக்க வேண்டும். அவன் எத்தனை நாள் பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருந்தான் என்பது நமக்குத் தெரியாது. அந்தத் தகப்பன் அவனைக் கண்டபோது, அவனிடம் ஓடினான். இதுதான் பிதாவின் இருதயம். மகன் தான் ஆயத்தம்செய்துவைத்திருந்த வார்த்தையைப் பேசிக்கொண்டிருக்கையில் அந்தத் தகப்பன் குறுக்கிட்டார். மகன் தான் தயார் செய்த வார்த்தையைப் பேச விரும்பினான், ஆனால் அந்தத் தகப்பன் வஸ்திரத்தையும், மோதிரத்தையும், காலணிகளையும் கொண்டுவரவும், கொழுத்தக் கன்றை ஆயத்தம்செய்யவும் தன் வேலையாட்களிடம் கூறினான். முழு வேதத்திலும் தேவன் ஓடியதை நாம் ஒரே ஒரு இடத்தில், திரும்பிவருகிற ஊதாரி மகனை தகப்பன் பார்க்கிற இடமாகிய லூக்கா 15இல்தான் பார்க்க முடியும் என்று ஒரு பிரதரன் போதகர் எனக்குக் கூறினார். அவன் ஓடினான்; அவனால் காத்திருக்க முடியவில்லை. இதுதான் பிதாவின் இருதயம்.
அன்பு சகலத்தையும் மூடுதல்
நாம் இப்படிப்பட்ட அன்பு உடையவர்களாய், செயலற்று இருக்கும் அனைவரிடமும் சென்று சபை எவரையும் ஆக்கினைத்தீர்ப்பதில்லை என்பதையும், செயலற்று இருக்கும் அனைவரும் திரும்பிவருவதை சபை காண விரும்புகிறது என்பதையும் அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் எல்லாரும் திரும்பிவந்தால், நான் கர்த்தருக்கான நன்றிகூர்தலால் கண்ணீர் விட்டு அழுவேன். நான் எவரையும் ஆக்கினைத்தீர்க்கவில்லை என்பதற்கு கர்த்தர் எனக்குச் சாட்சிபகர முடியும். எவரையும் ஆக்கினைத்தீர்க்க நமக்கு எந்தத் தகுதியும் இல்லை. கர்த்தருடைய இரக்கம் இல்லாவிடில், நாம் செயலற்றவர்கள் இருக்கும் வண்ணமாகவே இருப்போம். ஆகையால், நாம் அவர்களை நேசித்தாக வேண்டும். “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்று ஞானமுள்ள இராஜா சாலொமோன் கூறியபடி எல்லாம் அன்பையே சார்ந்திருக்கிறது (நீதி. 10:12). நாம் மக்களை நேசிக்கிறோம். நாம் எதிர்க்கிறவர்களை நேசிக்கிறோம், நாம் தலையாய கலகக்காரர்களை நேசிக்கிறோம். இதை நிஜமாகவே கூறுகிறேன். நாம் அவர்களை நேசிக்கிறோம், அவர்களை வெறுக்கவில்லை. நான் யார்? நான் ஆக்கினைத்தீர்க்கவோ வெறுக்கவோ தகுதியுடையவனல்ல. நான் பூரணமானவனா? ஏசாயா தீர்க்கதரிசி கூட கர்த்தரைப் பார்த்தபோது, “ஐயோ! அதமானேன்! /நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்,/ அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்” என்று கூறினான் (ஏசா. 6:5). இன்று யார் சுத்தமானவர்கள்? நாம் மக்களை விமர்சித்து, அவர்களைப் பற்றி தீமையான ஒன்றைக் கூறினால், நாம் சுத்தமாக இல்லை. (CWWL, 1994-1997, vol. 5, “A Word of Love to the Co-workers, Elders, Lovers, and Seekers of the Lord,” pp. 20-21, 25)
References: CWWL, 1993, vol. 2, “The Training and the Practice of the Vital Groups,” ch. 7; CWWL, 1994-1997, vol. 5, “A Word of Love to the Co-workers, Elders, Lovers, and Seekers of the Lord,” ch. 2
HOW SWEET, HOW HEAV’NLY IS THE SIGHT
The Church—Her Fellowship 857
1 How sweet, how heav’nly is the sight,
When those who love the Lord
In one another’s peace delight,
And so fulfill His Word:
2 When each can feel his brother’s sigh,
And with him bear a part;
When sorrow flows from eye to eye,
And joy from heart to heart;
3 When, free from envy, scorn and pride,
Our wishes all above,
Each can his brother’s failings hide,
And show a brother’s love;
4 When love, in one delightful stream,
Through every bosom flows;
When union sweet, and dear esteem,
In every action glows.
5 Love is the golden chain that binds;
The saints Thy grace thus prove.
And he is glory’s heir that finds
His bosom glow with love.