மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் ஆறு – முப்பகுதி மனிதனைப் பூரிதமாக்க ஜீவனாக மூவொரு தேவன்

1 தெச. 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

கொலோ. 1:13—இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

சிருஷ்டிக்கப்படாத நித்திய ஜீவனாக
மூவொரு தேவன்

முதல் படம், படம் 1,…நித்திய ஜீவனை அடையாளப்படுத்துகிறது….தெய்வீக ஜீவன் மூவொரு தேவனே, இந்த ஜீவன் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் தானாக-இருக்கும், நித்தியமான, சிருஷ்டிக்கப்படாத, வரம்பற்ற ஜீவன் ஆகும்.

மனிதன் தேவனுக்காக
சிருஷ்டிக்கப்பட்ட பாத்திரம்

மூவொரு தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார் என்று படம் 2 அடையாளப்படுத்துகிறது. தேவன் தம்மை மனிதன் மூலம் வெளிக்காட்ட வாஞ்சிப்பதால், தேவன் மனிதனைச் சிருஷ்டித்தார். இந்த மனிதன் முதலாவது ஆதாம் (1 கொரி. 15:45), இவன் ஆரம்பமும் முடிவுமுள்ள சிருஷ்டிக்கப்பட்ட, வரம்புக்குட்பட்ட ஜீவன். இந்த ஜீவன், அது சிருஷ்டிக்கப்பட்ட விதத்தில், நல்லதாக, தூய்மையானதாக, பாவமற்றதாக இருந்தது.

தேவனை உள்ளடக்கும்படி தேவனால் ஒரு பாத்திரமாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கு மூன்று பகுதிகள்—ஆவி, ஆத்துமா, சரீரம்—உள்ளன (1 தெச. 5:23) என்று படம் 2 காட்டுகிறது. ஆவி என்பது ஆவியாயிருக்கிற தேவனை உள்ளடக்குவதற்கும், தொடர்புகொள்வதற்குமான உள்ளான உட்பொருளாக இருக்கிறது, சரீரம் என்பது பெளதிக உலகத்தைத் தொடர்புகொள்வதற்கான புறம்பான உருவமாக இருக்கிறது. உள்ளார்ந்த ஆவிக்கும் புறம்பான சரீரத்திற்கும் இடையே ஊடகமாக ஆத்துமா இருக்கிறது, இது மனிதனின் நபர்த்துவமாக இருக்கிறது. இந்த முப்பகுதி மனிதனிடம் எந்தப் பாவமும் இருக்கவில்லை.
படம் 3க்கு சிறிது விளக்கம் தேவை… ஒவ்வொரு பகுதியும் இருளடைந்துவிட்டது; இதுவே விழுந்துபோன ஆதாம். மனிதன் தேவனை உள்ளடக்கிக்கொள்வதற்கான ஒரு பாத்திரமாக உண்டாக்கப்பட்டான், ஆனால், தேவன் அவனுக்குள் வருவதற்குமுன், வேறு ஏதோவொன்று உள்ளே வந்தது. அதுதான் தேவனின் எதிரியான சாத்தான், நபராக்கப்பட்ட பாவம்.

மாம்சமாகி, சிலுவையிலறையப்பட்டு,
உயிர்த்தெழுந்த தேவ-மனிதன் நம் ஜீவனாகுதல்

முதல் ஆதாம் முதல் மனிதனாக இருந்தான், இவன் வீழ்ச்சியால் கறைபடுத்தப்பட்டான். இரண்டாவது மனிதன் கடைசி ஆதாம், இவர் கிறிஸ்து (1 கொரி. 15:45). கிறிஸ்து எப்படிப்பட்டவர்? கிறிஸ்து தேவ-மனிதன், நிஜமான மனிதன், எனினும், தேவனின் மாம்சமாகுதல்.
இந்த தேவ-மனிதன், சிலுவையிலே அறையப்பட்டபோது, பாவத்தைச் சுமப்பவராக ஆனார்…கிறிஸ்துவின் சிலுவைமரணத்திற்குபின், அவர் உயிர்த்தெழுந்தார், உயிர்த்தெழுதலில் அவர் என்றென்றும் வாழ்ந்துவருகிறார்…தம் உயிர்த்தெழுதலில், தெய்வீக சுபாவத்தைக் கொண்டு தம் முழு ஆள்தத்துவத்திலும் அவர் உருமாற்றமடைந்தார்.

மாம்சமாகி, சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்த இவரில், ஜீவன் இருக்கிறது…இந்த ஜீவன் கிறிஸ்துவைத் தவிர வேறொன்றுமல்ல (கொலோ. 3:4). ஒன்று யோவான் 5:11, “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்” என்று கூறுகிறது. இந்த குமாரன், நமக்கு ஜீவனாயிருக்கிற மாம்சமாகி, சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்த தேவ-மனிதனே.

சிலுவை மூலம் ஓர் இடமாற்றம்

படம் 4 எளிமையானதல்ல. ஒருபக்கம் ஆதாமின் கோளம், மறுபக்கம் கிறிஸ்துவின் கோளம் என்று இங்கு இரண்டு கோளங்கள் உள்ளன. ஆதாம் என்னும் கோளத்தில் பாவம் மற்றும் மரணத்தைத் தவிர எதுவுமில்லை, கிறிஸ்து என்னும் கோளத்தில் நித்திய ஜீவன் இருக்கிறது. இந்த இரண்டு கோளங்களுக்கு இடையில் சிலுவை இருக்கிறது. ஒருவன் சிலுவையின் இடது புறத்தில் இருந்தால், அவன் பாவம் மற்றும் மரணம் என்ற கோளத்தில் இருக்கிறான்; ஒருவன் சிலுவையினூடாகக் கடந்துசென்றிருந்தால், அவன் ஜீவனின் கோளத்தில் இருக்கிறான்.

நம் மனித ஆவியில் மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்

நாம் இப்போது நம் மனித ஆவியில் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறோம் (படம் 5). கர்த்தராகிய இயேசுவை நம் இரட்சகராகப் பெற்றுக் கொண்ட அதே கணமே, அவர் ஆவியானவராக நம் ஆவிக்குள் நுழைந்து, நமக்கு ஜீவனைக் கொடுத்தார். ஒன்று யோவான் 5:12, “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” என்று கூறுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நம்மிடம் குமாரன் இருந்தால், நம்மிடம் ஜீவன் இருக்கிறது, ஏனெனில் குமாரனே ஜீவன். எனினும், மறுபடி ஜெநிப்பிக்கப்பட்ட நேரத்தில், நாம் ஜீவனை ஒரு சிறிய அளவில்தான் பெற்றுக்கொண்டோம். நம் ஆள்தத்துவத்தில் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டுமே நாம் தெய்வீக ஜீவனைப் பெற்றோம்.

இருளிலிருந்து மகிமைக்குள் மறுரூபமாக்கப்படுதல்

நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, நாம் இருளிலிருந்து மகிமைக்குள் மறுசாயலாக்கப்பட வேண்டும் (படம் 6). இதற்காக, தெய்வீக ஜீவன் நம் முழு ஆள்தத்துவம் எங்கும் பரவ, நாம் ஒரு விசாலமான வழி கொடுக்க வேண்டும். எவ்வளவாய் தெய்வீக ஜீவன் பரவுகிறதோ, அவ்வளவாய் நாம் மகிமையிலிருந்து மகிமைக்கு மறுசாயலாக்கப்படுகிறோம் (2 கொரி. 3:18).

சில சமயங்களில், ரோமர் 8:11இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நம் சரீரத்தில் உள்ள தெய்வீக ஜீவனை உணர்ந்தறிந்து, நம் சரீர பலவீனங்களை ‍ஜெயங்கொள்கிறோம். பின்னர் கர்த்தர் திரும்பி வரும்போது, நம் முழு சரீரமும் மகிமையின் சரீரமாக இருக்க உருமாற்றப்படும், பழைய சிருஷ்டிப்பிலிருந்து புதிய சிருஷ்டிப்பாக மறுசாயலாக்கப்படும். அந்த நேரத்தில் நாம் அவரைப்போல் இருப்போம் (படம் 7). மாம்சமாகி, சிலுவையிலறையப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்து இருக்கும்வண்ணமாகவே துல்லியமாக நாம் இருப்போம் (1 யோ. 3:1-2). நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியும்—ஆவி, ஆத்துமா, சரீரம்—தெய்வீக ஜீவனைக் கொண்டு நிரப்பப்பட்டு, பூரிதமாக்கப்பட்டு, ஊடுருவப்பட்டு, கலந்திணைக்கப்படும். இது தேவனுடைய குமாரர்களின் வெளியரங்கமாக, வெளிப்பாடாக இருக்கும் (ரோ. 8:19). நாம் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் ழுமுவதும், முற்றுமுடிய கர்த்தர் கிறிஸ்துவைப்போலவே இருப்போம். இது அற்புதமானது!

நாம் எங்கு இருக்கிறோம், நாம் என்னவாக இருக்கிறோம், நமக்கு என்ன தேவை என்று நாம் அறியுமாறு, ஆவியானவர் நம்மை ஈர்ப்பாராக. (CWWL, 1963, vol. 3, “Basic Principles of the Experience of Life,” pp. 151, 154-159)

References: CWWL, 1963, vol. 3, “Basic Principles of the Experience of Life,” ch. 17; CWWL, 1994-1997, vol. 1, “The High Peak of the Vision and the Reality of the Body of Christ,” msgs. 1, 2

அற்புதமே! அதிசயமே!
உச்சநிலை வெளியரங்கம்—தேவனின் நித்தியக் குறிக்கோள்

1 அற்புதமே! அதிசயமே!
தேவனும் மனிதனும் இழைவது!
மனிதனை தேவனாக்க தேவன்
மனிதனான பொருளாட்சி!
அவர் உயர்நோக்கம் நிறைவேறும்,
அவர் இதயப் பிரியத்தால்.
அவர் உயர்நோக்கம் நிறைவேறும்,
அவர் இதயப் பிரியத்தால்.

2 நான் தேவனாகும் பிரியத்தினால்
முதல் தேவ-மனிதன் மாம்சமானார்;
ஜீவன் சுபாவத்தில் நாம் தேவ இனம்,
தேவத்துவமோ அவர்க்குமட்டும்.
அவர் குணங்கள் என் நற்பண்புகள்;
அவர் சாயல் என் வழி வீசும்.
அவர் குணங்கள் என் நற்பண்புகள்;

அவர் சாயல் என் வழி வீசும்.
3 வாழ்வது இனி நான் மட்டுமல்ல,
தேவனும் என்னோடு வாழ்கின்றார்.
மூவொரு தேவனில் சுத்தருடன்
கட்டுவார் வீடாய் அவர் நம்மை,
அவர்தம் ஜீவாதார சரீரம்
அவர்தம் கூட்டு வெளிப்பாடாம்.
அவர்தம் ஜீவாதார சரீரம்
அவர்தம் கூட்டு வெளிப்பாடாம்.

4 எருசலேம் முடிவாகும்,
தரிசனங்களின் நிறைவாகும்;
மூவொரு தேவனும் மனிதனும்—
நித்தியமாய் நேச ஜோடி—
மனிதனாய் தேவனாய் வாசம் செய்யும்,
பரஸ்பர வாசஸ்தலம்;
தேவ மகிமை மனுஷீகத்தில்
பிரகாசமாய் ஒளி வீசுதே!

Jump to section