மேய்த்துப்பேணுதல்
திரட்டு 5
சத்தியத்தை
அறிதல்
பாடம் நான்கு – மனித ஆவி
சக. 12:1 இஸ்ரயேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;
மனித ஆவி சிருஷ்டிக்கப்படுதல்
“மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது” என்று நீதிமொழிகள் 20:27 கூறுகிறது. ஆவி என்பதற்கான பொதுவான எபிரெய வார்த்தை ருவாக், ஆனால், ஆவி என்பதற்கு இங்குள்ள எபிரேய வார்த்தை நெஷாமா. நெஷாமா என்பது ஆதியாகமம் 2:7இல் சுவாசம் என்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வார்த்தை. இது, நீதிமொழிகள் 20:27இல் “ஆவி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது, தேவனால் மனிதனுக்குள் ஊதப்பட்ட ஜீவ சுவாசம் மனிதனின் ஆவி என்பதை நாம் இதன் மூலம் பார்க்கலாம். மனித ஆவி என்பது நம்மிலுள்ள, ஆனால் தேவனின் ஜீவனுக்கும் தேவனின் ஆவிக்கும் மிக நெருக்கமானதாக இருக்கிற ஏதோவொன்று. மனிதனின் ஆவி தேவனின் ஜீவனையும் தேவனின் ஆவியையும் பெற்றுக்கொண்டு அதை உள்ளடக்கிக் கொள்ளும் குறிக்கோளுக்காக சிருஷ்டிக்கப்பட்டது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், 1 கொரிந்தியர் 6:17, “அப்படியே கர்த்தரோடிணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (கிரே.) என்று கூறுகிறது. நம் ஆவி தேவனின் ஜீவனுக்கும் தேவ ஆவிக்கும் மிக நெருக்கமாயிருக்கும் ஜீவ சுவாசத்தைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால், அது கர்த்தரோடு ஒரே ஆவியாக முடியும்.
மனித ஆவியின் முக்கியத்துவம்
வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் என்று சகரியா 12:1 கூறுகிறது. இந்த மூன்று காரியங்கள்—வானங்கள், பூமி, மனிதனின் ஆவி—தேவனின் குறிக்கோளை நிறைவேற்ற அவரது சிருஷ்டிப்பில் முக்கியமானவை என்பதை நாம் மறுதலிக்க முடியாது. வானங்கள் பூமிக்காக சிருஷ்டிக்கப்பட்டன, பூமி மனிதனுக்காக சிருஷ்டிக்கப்பட்டது, மனிதன் தேவனுக்காக சிருஷ்டிக்கப்பட்டான்.
சகரியா, “மனுஷனை” குறிப்பிடவில்லை, மாறாக, “மனுஷனுடைய ஆவியை” குறிப்பிடுகிறது. இதற்குக் காரணம், மனிதனின் ஆவி என்பது தேவனின் ஜீவனையும் தேவனின் ஆவியையும் அனுபவித்து மகிழ்ந்து தேவ ஆவியோடு ஒன்றாயிருக்க, தேவனை எடுத்துக்கொள்ளக்கூடிய சாட்சாத்து உறுப்பாக இருக்கிறது. இதனால்தான், மனிதனின் ஆவி வானங்களோடும் பூமியோடும் தரவரிசைப்படுத்தப்படும் அளவுக்கு அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.
மனித ஆவியின் மூன்று பகுதிகள்
மனச்சாட்சி
மனச்சாட்சி ஆவியின் பகுதி என்று நேரடியாகக் காட்டும் வசனத்தையோ வசனங்களையோ எடுப்பது எளிதல்ல. நாம் ரோமர் 9:2ஐ 8:16உடன் ஒப்பிட வேண்டும். பரிசுத்த ஆவியில் நம் மனச்சாட்சி நம்மோடு சாட்சிபகர்கிறது என்று ரோமர் 9:2 கூறுகிறது, இப்படியிருக்க, ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் என்று 8:16 கூறுகிறது. நம் மனச்சாட்சி நம் ஆவியின் பகுதி என்று இந்த இரண்டு வசனங்களும் பலமாக நிரூபிக்கின்றன. 1 கொரிந்தியர் 5:3, 5இல், பாவமுள்ள ஒருவனை பவுல் தன் ஆவியில் நியாயந்தீர்த்தான். நியாயந்தீர்ப்பதென்றால் பாவத்தை ஆக்கினைத்தீர்ப்பதாகும், அது பெரும்பாலும் மனச்சாட்சின் செயல்பாடாக இருக்கிறது. “சரியான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என்று சங்கீதம் 51:10 கூறுகிறது (KJV). இது சரியாக உள்ள ஆவி. தவறிலிருந்து சரியானதை அறிவது மனச்சாட்சியோடு தொடர்புடையது, எனவே மனச்சாட்சி ஆவியில் இருக்கிறது என்று இந்த வசனம் காட்டுகிறது. மனச்சாட்சியின் செயல்பாட்டை ஆவியின் ஒரு பகுதியாகக் காட்ட நாம் பயன்படுத்தக்கூடிய மற்ற வசனங்கள், சங்கீதம் 34:18 மற்றும் உபாகமம் 2:30 ஆகும்.
ஐக்கியம்
நம் மனித ஆவியின் இன்னொரு பகுதி அல்லது செயல்பாடு, ஐக்கியம். யோவான் 4:24, “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” என்றார் என்று கூறுகிறது. இந்த ஆராதனை ஒரு வகையான ஐக்கியம், ஒரு வகையான தொடர்பு. ரோமர் 1:9 இல் பவுல், தான் தன் ஆவியில் தேவனைச் சேவித்ததாகவும் 7:6இல் தான் ஆவியின் புதுத்தன்மையில் தேவனைச் சேவித்ததாகவும் கூறுகிறான். எந்நேரமும் ஆவியில் ஜெபம் பண்ண எபேசியர் 6:18 கூறுகிறது. ஜெபிப்பதென்றால், தேவனோடு ஐக்கியம்கொள்வதுமாகும். லூக்கா 1:47இல் மரியாள் தன் ஆவி தேவனில் பேருவகை கொண்டது, களிகூர்ந்தது என்று கூறினாள். அது நிச்சயமாக ஒரு வகையான ஐக்கியம். நம் ஆவி கர்த்தரோடு ஒரே ஆவியாக இருக்கிறது என்று ரோமர் 8:16 மற்றும் 1 கொரிந்தியர் 6:17 காட்டுகின்றன. ஒருமையும்கூட ஒரு வகையான ஐக்கியமே. மேலே உள்ள எல்லா வசனங்களையும், நம் ஆவியில் ஐக்கியம் என்று அழைக்கப்படும் ஏதோவொன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கப் பயன்படுத்தலாம்.
உள்ளுணர்வு
உள்ளுணர்வும்கூட மனித ஆவியின் ஒரு பகுதி. மனிதனின் ஆவி மனிதனின் காரியங்களை அறிந்திருக்கிறது என்று ஒன்று கொரிந்தியர் 2:11 கூறுகிறது. ஆவியானது ஆத்துமா அறிய முடியாததை அறிய முடியும். ஆத்துமாவுக்குரிய மனிதன் தேவனின் காரியங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது, மாறாக ஆவிக்குரிய மனிதனால்தான் முடியும் என்று 14 மற்றும் 15ஆம் வசனங்கள் கூறுகின்றன. காரண காரியங்கள் அல்லது சுற்றுசூழலால் பாதிப்படையாமல், நம் ஆவியிலுள்ள நேரடி உணர்வே, உள்ளுணர்வு. உள்ளுணர்வு என்பது, தேவனின் நேரடி உணர்வாகும், தேவனிடமிருந்து வரும் நேரடி அறிவாகும். மாற்கு 2:8, 8:12, யோவான் 11:33 ஆகியவை, உள்ளுணர்வானது மனித ஆவியின் பகுதி என்பதைக் காட்டும் மற்ற வசனங்கள். தேவனையும் ஆவிக்குரிய காரியங்களையும் அறிந்துகொள்ள பகுத்தறியும் ஒரு நேரடி உணர்வு மனித ஆவியில் இருக்கிறது என்று இந்த வசனங்கள் காட்டுகின்றன. இந்த நேரடி உணர்வுதான் உள்ளுணர்வு.
இவ்வாறு, சரி தவறைப் பகுத்துணர மனச்சாட்சி செயல்படுகிறது, தேவனைத் தொடர்புகொள்ள ஐக்கியம் செயல்படுகிறது, தேவனை அறியவும் தேவனின் சித்தத்தை, தேவனின் நோக்கத்தை அறியவும் உள்ளுணர்வு செயல்படுகிறது என்று நம்மால் பார்க்க முடிகிறது.
[மனித ஆவியின் பகுதிகளைக் குறித்து முற்றுமுடிய புரிந்துகொள்ள தேவனுடைய பொருளாட்சி என்ற புத்தகத்தில் 6ம் அதிகாரத்தைப் பார்க்கவும்]
மனித ஆவியின் செயல்பாடு
தேவனைத் தொடர்புகொள்ள
தேவனைத் தொடர்புகொள்வதே மனித ஆவியின் செயல்பாடு என்று யோவான் 4:24 காட்டுகிறது.
தேவனைப் பெற
தேவன் நமக்கு ஒரு புதிய இருதயத்தையும் ஒரு புதிய ஆவியையும் தருகிறார் என்று எசேக்கியேல் 36:26 கூறுகிறது. புதிய இருதயம் தேவனை நேசிப்பதற்காக, தேவனை நாடுவதற்காக; புதிய ஆவி தேவனைப் பெற்றுக்கொள்வதற்காக.
தேவனை உள்ளடக்கிக்கொள்ள
“கர்த்தர் உன் ஆவியோடும் இருப்பாராக” என்று இரண்டு தீமோத்தேயு 4:22 கூறுகிறது. நம் ஆவி என்பது நமக்குள் தேவன் தங்கும் இடமாகும், எனவே, நம் ஆவி தேவனை உள்ளடக்கும் கொள்கலம்.
கர்த்தரோடு ஒரே ஆவியாக இருக்க
மனித ஆவி ஒரு குறிக்கோளுக்காக சிருஷ்டிக்கப்பட்டது. மனிதன் கர்த்தரோடு ஒரே ஆவியாக இருக்கக் கூடுமாறு, தேவன் மனிதனின் இந்த உறுப்பை சிருஷ்டித்தார். 1 கொரிந்தியர் 6:17, “அப்படியே கர்த்தரோடிணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” என்று கூறுகிறது. இது முழு வேதத்திலும் மிக முக்கியமான வசனமாக இருக்கலாம். தெய்வீக ஆவி நம் மனித ஆவியோடு சாட்சி கொடுக்கிறார் என்று ரோமர் 8:16 கூறுகிறது. இப்போது இந்த இரண்டு ஆவிகளும் ஒன்று.
ஆவியால் நடத்தலும்
ஆவியின்படி நடத்தலும்
கலாத்தியர் 5:16 மற்றும் 25, ஆவியால் நடக்கும் படி நமக்குக் கட்டளையிடுகின்றன, ரோமர் 8:4, நாம் ஆவிக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று கூறுகிறது. வெளிப்படுத்தல் 1:10, அப்போஸ்தலனாகிய யோவான் கர்த்தருடைய நாளில் தான் ஆவியில் இருந்ததாகக் கூறுகிறான். ஆவியில் வாழும் ஒரு வாழ்க்கை நம்மிடம் இருக்க வேண்டும் என்று இது காட்டுகிறது. யோவான் ஆவியிலுள்ள ஒரு மனிதனாக இருந்தான். நாம் ஆவியில் வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
மனித ஆவியைக் குறித்து ஒரு பலமான புரிந்துகொள்ளுதல் நம் எல்லாருக்கும் தேவை. மனித ஆவி குறித்த சத்தியம் கர்த்தரின் மீட்டுத்திருப்புதலிலுள்ள பல போதனைகளுக்கான அடிப்படை மூலக்கூறாக இருக்கிறது. மனித ஆவியைக் குறித்து போதுமான அறிவுக்குள் பரிசுத்தவான்கள் கொண்டு வரப்படாவிட்டால், அவர்கள் எல்லா ஆவிக்குரிய காரியங்களையும் குறித்த புரிந்துகொள்ளுதலில் சற்றேறக்குறை பெலவீனமாக இருப்பார்கள். (CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” pp. 583-587)
References: CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” ch. 16; CWWL, 1964, vol. 3, “The Economy of God,” ch. 6; CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” chs. 1, 2
GOD’S GLORIOUS SUBSTANCE SPIRIT IS
Experience of God— By Exercising the Spirit – 611
- 1. God’s glorious substance Spirit is,
His essence, holy and divine;
To contact God and Him enjoy,
His Spirit I must touch with mine. - 2. The spirit is the innermost,
The part of man most deep and real;
If he would contact God in life,
‘Tis with the spirit he must deal. - 3. The worship which the Father seeks
Is in the spirit’s strength alone;
His Spirit into man’s would come,
That His and man’s may thus be one. - 4. When Spirit unto spirit calls
The two commingle and are one;
Man’s spirit is the Spirit’s home,
The Spirit doth man’s life become. - 5. Man’s spirit must God’s Spirit touch
If in God’s fulness he would live;
‘Tis only with the spirit thus
That he to God may worship give. - 6. In ministry and fellowship
Man to the spirit we must bring;
All ministry should turn to prayer,
Spirit to spirit answering. - 7. In spirit we must pray and serve,
In spirit touch the life divine,
In spirit grow, in spirit build,
That Christ thru us may fully shine. - 8. Lord, to the spirit I would turn
And learn to truly contact Thee;
Thy Spirit thus will flow with mine
And overflow eternally.