மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் மூன்று – முழுநிறைவடைந்த ஆவி

யோ. 7:39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் ஆவி இன்னும் இல்லை (கிரே.).

புதிய ஏற்பாட்டில் ஆவியானவரின் முழுநிறைவேற்றம்

புதிய ஏற்பாட்டின் ஆரம்பத்தில், கிறிஸ்து கருவாகிப் பிறந்தபோது, முதல்முறை பரிசுத்த ஆவி குறிப்பிடப்படுகிறார் (மத். 1:18-20). கிறிஸ்துவின் கருத்தரித்தல், பிறப்பு முற்றிலும் பரிசுத்த ஆவியாலானது. இங்கு பரிசுத்த ஆவி பலமாக வலியுறுத்தப்படுகிறார். இந்த ஆவியானவரால் கிறிஸ்து கருவானார், அவர் ஆவியானவர்மூலம் பிறந்தார்.

கர்த்தர் முப்பது ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார்; பின்னர், மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். அவர் ஆவியானவரால் பிறந்தார், தேவ ஆவியின்முலம் வேலைசெய்தார். பின்னர், யோவான் 7இல், கிட்டத்தட்ட அவரது முப்பத்து மூன்றரை ஆண்டுகால ஊழியத்தின் முடிவில், தாகமுள்ளவர்களை, தம்‍மிடம் வந்து பருகும்படி அழைத்தார், அதோடு, அவர்களது உள்ளான ஆள்தத்துவத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் பாய்ந்தோடும் என்றும் கூறினார் (வவ. 37-38). கர்த்தர் இங்கு, தேவ ஆவியைக் குறித்தோ பரிசுத்த ஆவியைக் குறித்தோ அல்ல, மாறாக ஆவியானவரைக் குறித்து—விசுவாசிகள் பெற இருந்த ஆவியானவரைக் குறித்து பேசினார் என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறான்; “ஏனெனில்”‍…“பரிசுத்த ஆவி இன்னும் இல்லை” (கிரே.) என்று யோவான் கூறுகிறான். தேவ ஆவியானவர் ஆதியாகமம் 1இல் இருந்தார், பரிசுத்த ஆவி மத்தேயு 1இல் இருந்தார். அப்படியிருந்தும், இந்தப் பூமியில் கிட்டதட்ட கர்த்தரின் ஊழியத்தின் முடிவில், விசுவாசிகள் பெற இருந்த ஆவியானவர் “இன்னும் இல்லை” என்று யோவான் கூறுவது ஏன்?

ஜீவன்-தரும் ஆவி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமும் உயிர்த்தெழுதலிலும் உற்பத்திசெய்யப்பட்ட ஆவியானவராக இருத்தல்

…கிறிஸ்துவின் ஆவியில்…ஆண்ட்ரு முரே, “பெந்தெகொஸ்தே நாளன்று ஊற்றப்பட்ட தேவ ஆவி உண்மையில் புதிதானவரே” என்று எழுதினார். இந்த ஆவியானவர், அதாவது யோவான் 7:39ல் உள்ள ஆவியானவர், ஆண்ட்ரு முரேயின்படி தேவ ஆவி, யெகோவாவின் ஆவி, தேவனுடைய பரிசுத்தத்தின் ஆவி மற்றும் பரிசுத்த ஆவியை விட அதிகமான ஏதோவொன்றாக இருக்கிறார். பரிசுத்த ஆவியில்கூட, தேவ ஆவி முழுவதும் முழுநிறைவடையவில்லை; அப்போதுகூட அவர் முழுவதும் முழுமையடையவில்லை. ஆவியானவர் கிறிஸ்துவின் மகிமையடைதல் வரை முழுநிறைவடையவில்லை. லூக்கா 24:26இன்படி, கிறிஸ்துவின் மகிமையடைதல் என்பது அவரது உயிர்த்தெழுதலே. கிறிஸ்து உயிர்த்தெழுதலுக்குள் நுழைந்தபோது, அவர் மகிமையடைந்தார். அவரது தெய்வீக ஜீவனோடுடனான அவரது தெய்வீக சுபாவம் விடுவிக்கப்பட்டது. கிறிஸ்துவின் மகிமையடைதல் ஒரு மலர் மலர்தலைப்போல் இருந்தது. ஒரு மலர் மலரும்போது, அது மகிமையடைகிறது; அதன் ஜீவன் மற்றும் சுபாவத்தின் உள்ளடங்கங்கள் யாவும் விடுவிக்கப்பட்டு வெளிக்காட்டப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் உள்ளடக்கங்கள் உண்மையில் தம் பரிசுத்த சுபாவம் மற்றும் பரிசுத்த ஜீவனுடன்கூடிய தேவனே. தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குமுன், இந்த உள்ளடக்கங்கள் கிறிஸ்துவின் மனுஷீகம் என்னும் ஓட்டில் மறைக்கப்பட்டிருந்தன. அவர் ஊழியம் செய்த மூன்றரை ஆண்டு காலத்தின்போது, ஒருமுறை மறுரூப மலையிலே, கிறிஸ்துவின் சீஷர்களில் மூன்று பேர் தங்கள் கண்களுக்குமுன் அவர் மறுரூபமாவதை, அல்லது உருமாற்றமடைவதைப் பார்த்தனர். திடீரென, அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவரது வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று (மத். 17:2). அது அவரது மகிமையடைதலாக இருந்தது, ஆனால் அது ஒரு குறுகிய காலமே நீடித்தது. அவர் உயிர்த்தெழுதலுக்குள் பிரவேசித்தபோது, தமக்குள் இருந்த தேவனை தேவனுடைய சுபாவம் மற்றும் தேவனுடைய ஜீவனோடு விடுவிப்பதன் மூலம், அவர் முழுவதும் மகிமையடைந்தார். அந்த நேரம் வரை, ஆவியானவர் இன்னும் இல்லை. அந்த நேரத்தில்தான், ஆவியானவர் உற்பத்திசெய்யப்பட்டார். “கடைசி ஆதாம் [கிறிஸ்து] ஜீவன்-தரும் ஆவியானார்” என்று ஒன்று கொரிந்தியர் 15:45 நமக்குக் கூறுகிறது. இந்த ஜீவன்-தரும் ஆவியே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமும் உயிர்த்தெழுதலிலும் உற்பத்திசெய்யப்பட்ட ஆவியானவர்.

மூவொரு தேவன் எல்லா வழிமுறைகளினூடாகக் கடந்துசென்றதின் மூலம் ஜீவன்-தரும் ஆவியாக முழுநிறைவடைதல்

எல்லா வழிமுறைகளினூடாக—மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சகலத்தையும்-உள்ளடக்கிய மரணம், சகலத்தையும்-விடுவிக்கும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றினூடாக—கடந்துசென்றதன்மூலம் முவொரு தேவன், அதாவது தெய்வீகத் திரியேகத்துவத்திலுள்ள தேவன், ஒரே ஆவியாக, அதாவது, ஜீவன்-தரும் ஆவியாக முழுநிறைவடைந்தார். இந்த ஜீவன்-தரும் ஆவி முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் முழுமொத்தம் ஆவார். இது புதிய ஏற்பாட்டிலுள்ள தெளிவான வெளிப்பாடு ஆகும். முதலாவதாக, தேவன் ஒரு மனிதனானார். அந்த மனிதன் மாம்சத்திலுள்ள தேவ-மனிதனான இயேசு கிறிஸ்துவே. அவர் தேவனாக இருந்தார், ஆனால், ஒரு நாள் அவர் மனிதனைத் தரித்துக்கொண்டார். இவ்வாறு, அவர் மாம்சத்தை தம் மீது தரித்துக்கொண்டு, தெய்வீகம் மற்றும் மனுஷீகம் ஆகிய இரண்டுமாக ஆனார். அவர் சிலுவையிலறையப்பட்டபோது, அவர் இந்த மனிதனை, அதாவது, அவரது மனுஷீகத்தைச் சிலுவைக்குக் கொண்டு வந்து, மனுஷீகத்தை முடிவுகட்டும்படி அங்கே மரித்தார். பின்னர் தம் மனுஷீகத்தைத் தெய்வீகத்திற்குள் கொண்டு வர அவர் உயிர்த்தெழுந்தார். இந்த உயிர்த்தெழுதல்மூலம் அவருடைய மனுஷீகம் தெய்வீகமாக்கப்பட்டது (ரோ. 1:5), அதோடு, அவர் தேவனின் முதற்பேறான குமாரனாயிருக்கும்படி பிறந்தார் (அப். 13:32-33; ரோ. 8:29). இப்படிப்பட்டவர், தம் உயிர்த்தெழுதலிலும் தம் உயிர்த்தெழுதலைக் கொண்டும், ஜீவன்-தரும் ஆவி ஆனார். இந்த ஆவியானவரே மூவொரு தேவனின் முழுநிறைவேற்றம். (CWWL, 1994-1997, vol. 1, “Living a Life according to the High Peak of God’s Revelation,” pp.185-187)

தேவனுடைய பொருளாட்சியின் பிரயோகித்தல் முழுநிறைவடைந்த ஆவியானவரோடு இருத்தல்

முழுநிறைவடைந்த ஆவியானவரைக் குறித்து நாம் இன்னும் அதிக ஆழமாகப் பார்க்க வேண்டும். நான் ஐக்கியப்பட விரும்பும் முக்கிய குறிப்பு இதுதான்…. ஆதியாகமம் 1 தேவ ஆவியைக் குறிப்பிடுகிறது, ஆனால், அது முழுநிறைவடைந்த ஆவி அல்ல; யெகோவாவின் ஆவி மற்றும் பரிசுத்த ஆவிகூட முழுநிறைவடைந்த ஆவி அல்ல. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான், பிதா, குமாரன், மற்றும் ஆவியானவரின் முழுநிறைவடைந்த ஆவி வெளிப்படுத்தப்பட்டார். இந்த ஆவியானவர், ஆதியாகமத்திலுள்ள தேவ ஆவி, பழைய ஏற்பாட்டிலுள்ள யெகோவாவின் ஆவி மற்றும் மத்தேயு 1இல் உள்ள பரிசுத்த ஆவியிலிருந்து வித்தியாசமானவர். இந்த ஆவியானவர் முழுநிறைவடைந்த ஆவியானவர். தேவனுடைய பொருளாட்சி நிறைவேற்றப் பட்டுவிட்டது, அது இப்போது பிரயோகிக்கப்பட வேண்டும். பிரயோகித்தல் முழுநிறைவடைந்த ஆவியானவரிடம் இருக்கிறது—வெறுமனே முழு மொத்தமான ஆவியானவரில் அல்ல, மாறாக உச்ச நிலையாக முழுநிறைவடைந்த ஆவியானவரிடம் இருக்கிறது.

ஜீவன்-தரும் ஆவி முழுநிறைவடைந்த
ஆவியானவராக இருத்தல்

இன்று கிறிஸ்தவத்தில் வெகு சிலரே இந்தக் காரியத்தைப் பார்த்திருக்கின்றனர்; இதற்கு மாறாக, சிலர் 1 கொரிந்தியர் 15:45 கூறுவதை முழுமையாக விசுவாசிப்பதில்லை: “கடைசி ஆதாம் ஜீவன்தரும் ஆவியானார்.” எனினும், இது நாம் விசுவாசிக்க வேண்டிய, வேதத்திலுள்ள ஒரு வார்த்தை. இத்தனை ஆண்டுகளில் கர்த்தர் இந்தக் குறிப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக நமக்குத் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பதற்காக அவருக்கு நன்றி. இன்று இந்த ஜீவன்-தரும் ஆவியே முழுநிறைவடைந்த ஆவியானவர். ஆகவேதான், ஆவியானவர் இன்னும் இல்லை, ஏனெனில் இயேசு இன்னும் உயிர்த்தெழுதலில் மகிமையடையவில்லை என்று யோவான் 7:39 கூறுகிறது. நிச்சயமாக, பரிசுத்த ஆவி இருந்தார், ஆதியாகமம் 1இல் தேவ ஆவியானவர்கூட இருந்தார், இப்படியிருக்கையில், ஆவியானவர் இன்னும் இல்லை என்பது எவ்வாறு இருந்திருக்க முடியும்? இதற்குக் காரணம், கிறிஸ்து இன்னும் உயிர்த்தெழாததால், அந்த நேரத்தில் புதிய சிருஷ்டிப்பு இல்லாமல் பழைய சிருஷ்டிப்பு மட்டுமே இருந்தது. பின்னர், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் புதிய சிருஷ்டிப்பு ஆரம்பித்தபோது, ஆவியானவர் உண்டானார். ஆதியில் தேவ ஆவியாக இருந்தவர், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் ஆவியானவராக ஆகிவிட்டார். இது 2 கொரிந்தியர் 3:17இல் குறிப்பிடப்படுகிறது: “கர்த்தரே ஆவியானவர்.” 2 கொரிந்தியர் 3இல் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆவியானவர், விசுவாசிகளில் மறுசாயலாக்கும் வேலையைச் செய்து வருகிறார். நமக்குள் கர்த்தர் ஆவியானவராக இருப்பதால், நாம் மறுசாயலாக்கப்பட்டு வருகிறோம். இதனால்தான், 2 கொரிந்தியர் 3:18, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே நாம் மறுசாயலாக்கப்பட்டு வருகிறோம் என்று கூறுகிறது. (CWWL, 1994-1997, vol. 1, “A General Outline of God’s Economy and the Proper Living of a God-man: A Fellowship with the Elders from Taiwan, Hong Kong, and Malaysia,” pp. 503-505)

ஆவியும் மணவாட்டியும் “வா!” என்கிறார்கள்

இறுதியில், முழுநிறைவடைந்த ஆவியாக, அவர் ஆவிக் கிறிஸ்துவின் நிஜமாகவும் நிஜமாக்குதலாகவும் இருப்பதற்கும், கிறிஸ்துவின் வருகையை அறிவிக்கும்படி ஆட்டுக்குட்டியின் (கிறிஸ்துவின்) மணவாட்டியோடு ஒன்றாயிருக்க பதனிடப்பட்டு முழு நிறைவடைந்த மூவொரு தேவனின் முழுநிறைவேற்றமாக இருப்பதற்கும் ஆவியானவராக ஆகிறார்.

“ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று வெளிப்படுத்தல் 22:17 கூறுகிறது. இந்த வசனத்தில் ஆவி என்ற பட்டப்பெயர், மூவொரு தேவனின் யாவும் பதனிடப்பட்டு முழுநிறைவடைந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்போது ஆவியானவராக அவர், மணவாட்டியான நம்மோடு ஒன்றாயிருக்க நமக்குள் மூவொரு தேவனைக் கொண்டுவருகிறார். இந்த முழுநிறைவடைந்த ஆவியானவர், தம்மை மணவாட்டியுடன் இணைத்துக்கொள்கிறார். எனவேதான், வெளிப்படுத்தலின் முடிவில் ஆவியும் மணவாட்டியும் “வா!” என்று சேர்த்து சொல்கின்றனர். (CWWL, 1993, vol. 3, “Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” pp. 124, 136)

References: CWWL, 1994-1997, vol. 1, “Living a Life according to the High Peak of God’s Revelation,” ch. 3; CWWL, 1994-1997, vol. 1, “A General Outline of God’s Economy and the Proper Living of a Godman: A Fellowship with the Elders from Taiwan, Hong Kong, and Malaysia,” ch. 2; CWWL, 1993, vol. 2, “Blending Conference Messages concerning the Lord’s Recovery and Our Present Need,” ch. 6

மூவொரு தேவன் நம்முள் வாழ வந்தார்
ஆவியானவரின் நிறைவு—உள்ளுறையும் ஆவியானவராக

1113
1 மூவொரு தேவன் நம்முள் வாழ வந்தார்
நம்மில் அற்புத ஆவியாக.
கர்த்தரோடொன்றாய் நாம் கலந்திணைந்தோம்
நம்மில் ஜீவன் தரும் ஆவியாய்.

ஓ! நம்மில் அற்புத ஆவி அவர்,
நம்மில் அற்புத ஆவி அவர்!
தேவன் சுதனில், சுதன் ஆவி இப்போழ்
நம்மில் அற்புத ஆவி அவர்!

2 “அப்பா பிதா” வென்று ஆழ்ந்து அழைப்போம்
நம்மில் அற்புத ஆவியோடு.
அழைப்பது குமாரனின் ஆவியே
நம்மில் ஜீவன் தரும் ஆவியாய்.

3 கர்த்தர் இயேசு கிறிஸ்து இப்போழ் வாழ்கிறார்
நம்மில் அற்புத ஆவியாக.
நாம் இன்புற உருமாறினாரே,
நம்மில் ஜீவன் தரும் ஆவியாய்.

4 நிஜத்தின் ஆவியானவர் இப்போது
நம்மில் அற்புத ஆவியாக.
கிறிஸ்துவுக்குரியவை யாவும் நிஜம்
நம்மில் ஜீவன் தரும் ஆவியால்.

5 ஆழ்கொடை இதனை அனல் மூட்டுவோம்
நம்மில் அற்புத ஆவியாக.
“கர்த்தர் இயேசு” என்றால் நம் ஆவிகள் பொங்கும்
ஜீவன் தரும் இவ்வாவியோடு!

Jump to section