மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பதினைந்து – வேதாகமத்தின் ஜீவ-ஆய்வு

யோ. 5:39-40 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.. 40அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.

ஜீவ-ஆய்வுகளின் சிறப்பம்சங்கள்
மைய கருப்பொருளையும் அதன் எல்லா
அம்சங்களையும் சுட்டிக்காட்டுதல்

வேதம் ஒரு விசேஷமான இலக்கியப் படைப்பு. அது எந்தவொரு குறிப்பிட்ட தலைப்பின் மீதும் குவிமையம் கொள்ளாதபோதும், எல்லாம் உள்ளடக்கிய, பல காரியங்களை தன்னகத்தே கொண்ட ஒரு மைய கருப்பொருள் இதற்கு இருக்கிறது. வேதத்தை வாசிப்பவர்களுக்கு காலகாலமாக உள்ள மாபெரும் பிரச்சனை, வேதத்தின் மைய ஒளியை, அதன் ஒளியின் எல்லாம் உள்ளடக்கிய தன்மையைப் பார்ப்பது சிரமம் என்பதே. ஆகவே, வேதத்தைப் பற்றிய அவர்களது புரிந்துகொள்ளுதல், துண்டு துண்டாக இருக்கிறது, மையத்திலல்லாமல் விளிம்பில் இருக்கிறது. அவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில குறிப்புகளைப் புரிந்துகொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு முழுமையான புரிந்துகொள்ளுதலைப் பெற முடிய வில்லை. வேதத்தைப் பற்றிய ஒரு முழுமையான புரிந்துகொள்ளுதல் நமக்கு வேண்டுமானால், வேதத்திற்கு ஒரே ஒரு மையம் மட்டுமே இருக்கிறது என்றும், இந்த மையம் பல விஷயங்களை உள்ளடக்குகிறது, அது எல்லாம்-உள்ளடக்கியது என்றும் நாம் பார்த்தாக வேண்டும்.

இந்தக் கோட்பாட்டின் கீழ், ஜீவ ஆய்வுகளுக்கும் ஒரு மையம் உள்ளது. அவற்றில் பல்வேறு காரியங்களின் விளக்கங்களும் வரையறைகளும் உள்ளன, எனவே அவையும்கூட எல்லாம்-உள்ளடக்கியவையே. எனவே, நாம் ஜீவ-ஆய்வுகளைப் படிக்கும்போது, அவற்றிலிருந்து நாம் எப்போதும் ஜீவ போஷாக்கைப் பெற முடிகிறது, சத்தியத்தின் அறிவையும் சிறிது ஆதாயம்பண்ண முடிகிறது.

மையக் கருப்பொருளையும் அதன் எல்லா
அம்சங்களையும் பார்த்தல்

நாம், யாத்திராகமத்தின் ஜீவ-ஆய்வை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். எவ்வாறு கிறிஸ்து நமக்கு எல்லாமுமாக ஆகிறார் என்பதே யாத்திராகமத்தின் மையக் கருப்பொருள். முதலில், அவர் நம் பஸ்கா ஆட்டுக்குட்டியாக ஆனார். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம், நம் பாவ மன்னிப்பிற்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தை மாதிரியாகக் காட்டுகிறது (மத். 26:28; யோ. 19:34; 1 பேது. 1: 18-19). அங்கு, இறைச்சியும்கூட இருக்கிறது, இது நம் நிரப்பீடாகவுள்ள கிறிஸ்துவின் பிறப்பிக்கும் ஜீவனை மாதிரியாகக் காட்டுகிறது (யோ. 6:53, 55). அடுத்து, புளிப்பில்லா அப்பம் இருக்கிறது, இது நம் ஜீவ போஷாக்காகவும் நம் பாவகரமான, அசுத்தமான காரியங்கள் எல்லாவற்றையும் எடுத்துப்போடுகிற கிறிஸ்து இயே-சுவை மாதிரியாகக் காட்டுகிறது (1 கொரி. 5:7-8). கடைசியாக, கசப்பான கீரைகள் உள்ளன, இவை நாம் பாவமான காரியங்கள் குறித்து வருந்தி மனம்திரும்ப வேண்டும் என்றும், அவை நமக்கு கசந்துவிட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த மாதிரிகளோடு நம் நடைமுறை
அனுபவத்தைப் பரிசோதித்தலும், அவற்றை நம் அனுதின வாழ்க்கைக்குப் பிரயோகித்தலும்

இந்தக் காரியங்களை ஒன்றாகச் சேர்த்தால், அவை எல்லாம்-உள்ளடக்கியவை, அவை எந்த ஒரே அம்சத்தின் வரம்பிற்கும் உட்பட்டவை அல்ல. மேலும், இவற்றை நம் கிறிஸ்தவ அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இங்குள்ள மாதிரிகளை நம் சொந்த அனுபவங்களோடு ஒப்பிட்டுப் பாராமல், அவற்றைக் குறித்து வெறுமனே வாசித்து, உபதேசங்களை வெறுமனே படித்தால், யாத்திராகமத்தைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்காது. எனினும், நாம் நம் அனுபவங்களை இந்த மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை புரிந்துகொள்வதற்கு மிக எளிதானவை, காரணம், அவை நம் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையையே விவரிக்கின்றன.

ஜீவ-ஆய்வு செய்திகளின் நன்மைகள்
வேதத்தின் சத்தியங்களுக்குள் நுழைதல்

நாம் ஜீவ-ஆய்வு செய்திகளையே வாசிக்கிறோம், வேதத்தை வாசிப்பதில்லை என்று சிலர் நம்மை விமர்சிக்கின்றனர். இப்படிப் பேசுபவர்கள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். ஜீவஆய்வு செய்திகளின் இலக்கு, மக்களை வேதத்தின் சத்தியங்களுக்குள் அழைத்துச் செல்வதே. கடந்த காலத்தில் மக்கள் வேதத்தை வாசித்தபோது, அவர்கள் அதற்குள் நுழைவதற்கான வழியைக் காண முடியவில்லை, எனவே, அவர்கள் அதைப் புரிந்துகொள்ள எந்த வழியும் இருக்கவில்லை. இது மக்கள் நுழைய அனுமதிக்கும்படி நுழைவாயில் இல்லாத, வாசல் இல்லாத, ஜன்னல்கள் இல்லாத ஒரு வீடு இருப்பதைப் போன்றது. ஜீவ-ஆய்வு செய்திகள், மக்கள் வீட்டிற்குள் நுழைந்து உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் அனுபவித்துமகிழுமாறு, ஒரு வழியை வகுக்கிற, ஒரு வாசலைக் கட்டுகிற, ஒரு ஜன்னலைத் திறக்கிற வேலையைச் செய்கின்றன.

ஜீவனைத் தொட மக்களை நடத்துதல்

ஜீவ-ஆய்வு செய்திகளின் இன்னொரு செயல்பாடு, மக்களை ஜீவனுக்குள் நடத்துவதாக இருக்கிறது. ஜீவ-ஆய்வு செய்திகள், வேதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தத்துவ நூலோ அல்லது உயர்-இலக்கியப் படைப்போ அல்ல. ஜீவ-ஆய்வு செய்திகள் வேதத்தை வெறுமனே வியாக்கியானம் செய்து, சத்தியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அதன் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்ந்து அனுபவமாக்க மக்களைச் சத்தியத்திற்குள்ளும் நடத்துகின்றன…உள்ளாக ஜீவனைத் தொட்டு, அனுபவித்துமகிழும்படி ஜீவ-ஆய்வு செய்திகள் நம்மை வேதத்தின் ஆழங்களுக்குள் அழைத்துச்‍செல்கின்றன (ஒப். யோ. 5:39-40).

ஐசுவரியமான கூடுகைகளுக்கான ஒரு காரணி

ஜீவ-ஆய்வு செய்திகளைத் தங்கள் உள்ளடக்கமாகக் கொண்ட கூடுகைகளே மிக ஐசுவரியமான கூடுகைகள். ஒவ்வொரு கர்த்தருடைய நாளும் நம் ஐக்கியத்தின் உள்ளடக்கமாக இரண்டு ஜீவ-ஆய்வு செய்திகளை நாம் எடுத்துக்கொள்வோமானால், கூடுகை மிக ஐசுவரியமாக இருக்கும்.

அதிஉயர்ந்த, அதிஆழமான சத்தியங்களைப் பேச ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதல்

தேவனுடைய பொருளாட்சி, தேவனுடைய பகிர்ந்தளிப்பு, சாராம்சரீதியான ஆவியானவர், பொருளாட்சி ரீதியான ஆவியானவர் ஆகியன நிச்சயமாக மிக ஆழமான பதங்கள்தான், ஆனால், புதிய விசுவாசிகளுக்கு, விசேஷமாக இளையவர்களுக்கு, அவை நீண்ட காலத்திற்கு ஆழமானதாகத் தோன்றாது. இந்தப் புதியவர்களுக்கு இந்தப் பதங்கள் படிப்படியாகப் பரிச்சயமாகிவிடும், அப்போது அவர்கள் அவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். நாம் நம் கருத்துக்களை மாற்ற சித்தமாயிருக்க வேண்டும், அதிஉயர்ந்ததும் அதிஆழமானதுமான சத்தியங்களைக் கற்றுக்கொள்ள இளையவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். நாம் அவ்வாறு செய்தால், எதிர்காலத்தில் பரிசுத்தவான்கள் ஒருவரோடொருவர் பேசும்போது, அவர்கள் சுவிசேஷம் பிரசங்கிக்கும்போதுகூட, அவர்களது பேசுதல் அதிஉயர்ந்த தரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். (CWWL, 1984, vol. 5, “Truth, Life, the Church, and the Gospel—the Four Great Pillars in the Lord’s Recovery,” pp. 359-361, 363-364)

Reference: CWWL, 1984, vol. 5, “Truth, Life, the Church, and the Gospel—the Four Great Pillars in the Lord’s Recovery,” ch. 1

O LIVING WORD OF GOD, GOD’S IMAGE TRUE

Study of the Word— The Function of the Word – 801

1. O living Word of God, God’s image true,
Thou art the content of God’s written word:
God in Thee we have met, God’s fulness found.
And in the Scripture we Thyself have heard.

2. No man has e’er seen God, apart from Thee.
Without the Scripture Thee we’d hardly see;
Thou to the human race God hast declared,
And thru the Scripture Thou art shown to me.

3. Perfect embodiment Thou art of God,
A portrait full the Scripture gives of Thee;
In Thee we comprehend God’s image true,
And thru the Scripture Thou art real to me.

4. Life-giving Spirit Thou, as well as Word,
Now e’en the Spirit in the Word Thou art;
When thru the Spirit giv’n, I touch the Word,
Fulness divine to me Thou dost impart.

5. In Thee I may with God have fellowship,
And thru the Scripture I on Thee may feed;
Thru study of the Word with prayer to God
Thy glorious riches fully meet my need.

6. Teach me to exercise my spirit, Lord,
Thy Word to study, so to contact Thee,
That Thou, the living Word, with Scripture, too,
As one my daily manna e’er may be.

 

Jump to section