மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பதினான்கு – பாடல்களை அறிந்துகொள்ளுதல்

எபே. 5:19—சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி

கொலோ. 3:16—கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;

பாடல்களின் பொருளடக்கத்திலுள்ள
முக்கியமான குறிப்புகள்

பாடல்களை அறிந்துகொள்ள, அந்தப் பாடல்களின் பொருளடக்கத்தைக் குறித்த சில முக்கியமான குறிப்புகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். முதலாவதாக, மூவொரு தேவனின் ஆசீர்வாதம் மற்றும் அனுபவத்தைக் குறித்த சில பாடல்களை நாம் அறிந்துகொண்டாக வேண்டும். இங்கு ஆசீர்வாதம் என்ற வார்த்தை, மூவொரு தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் நன்மையான காரியங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படாமல், நாம் அவருக்கு ஏறெடுக்கும் துதியை, அதாவது, ஆசீர்வாதத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. மூவொரு தேவனின் ஆசீர்வாதத்தைப் பற்றிய ஒரு நல்ல பாடலுக்கு உதாரணம், பாடல் #7—”மகிமை மகிமை பிதாவுக்கு”, மூவொரு தேவனின் அனுபவத்தைப் பற்றிய ஒரு நல்ல பாடலுக்கு உதாரணம், பாடல் #608—“மறைபொருளே பிதா, சுதன், ஆவி.” பிதாவைத் தொழுதுகொள்ளுதல், கர்த்தரைத் துதித்தல் குறித்த பாடல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பாடல்களின் உள்ளடக்கங்களைக் குறித்து இன்-னொரு அதிமுக்கியமான குறிப்பு, ஆவியானவரின் நிரப்புதல். சிலர் ஆவியானவரின் நிறைவு என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆவியானவரின் நிரப்புதலுக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன என்று வேதம் வெளிப்படுத்துகிறது, ஒன்று, ஜீவனுக்கான உள்ளான நிரப்புதல், மற்றொன்று, வல்லமைக்கான புறம்பான நிரப்புதல். பிலெரூ என்ற கிரேக்க வார்த்தை, உள்ளான நிரப்புதலைக் குறிக்கிறது, பிலெதோ என்ற கிரேக்க வார்த்தை புறம்பான நிரப்புதலைக் குறிக்கிறது.

கிறிஸ்துவோடு ஒன்றித்துக்காணப்படுவதைப் பற்றிய பாடல்களையும்கூட நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒன்றித்துக்காணப்படுதல் என்பது சேர்க்கை என்பதனைவிட அதிக சிறப்பான ஒரு வார்த்தை என்று நான் உணர்கிறேன். நாம் வெறுமனே கிறிஸ்துவோடு சேர்த்து இணைக்கப்படவில்லை, உண்மையில் நாம் கிறிஸ்துவோடு ஒன்றாக இருக்கிறோம். நம் பாடல் புத்தகத்தில் இந்தப் பகுதியிலுள்ள பல பாடல்கள், கிறிஸ்டியன் அண்ட் மிஷனரி அலயன்ஸ் என்ற நிறுவனத்தின் ஸ்தாபகரான A. B சிம்சனால் எழுதப்பட்டன. A. B சிம்சனால் எழுதப்பட்ட இந்த ஆழமான, மிகச் சிறந்த பாடல்கள் பல கிறிஸ்டியன் அண்ட் மிஷனரி அலயன்ஸ் சபைகளின் இன்றைய பாடல் புத்தகங்களில் பார்க்க முடியாது, ஆனால் நாம் அவற்றை நம் பாடல் புத்தகத்தில் சேர்த்திருக்கிறோம்.
கிறிஸ்துவை அனுபவித்தல் என்பது, பாடல்களின் உள்ளடக்கத்தின் இன்னொரு அதிமுக்கியமான குறிப்பு. பாடல்கள், #499—“என்னே ஜீவன்! சமாதானம்!”, பாடல்கள் #501—”மகிமை கிறிஸ்தென் இரட்சகர்”—ஆகியன இந்த வகையில் மிகச் சிறந்த பாடல்கள். உள்ளான ஜீவன், சபை, இரட்சிப்பின் நிச்சயம், அர்ப்பணிப்பு, பாடுகளில் ஆறுதல் ஆகிய முக்கியமான குறிப்புகளைப் பற்றிய பாடல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆவிக்குரிய யுத்தம், சுவிசேஷம், கூடுகைகள், மகிமையின் நம்பிக்கை, உச்சநிலை வெளியரங்கம் ஆகிய முக்கியமான குறிப்புகளைப் பற்றிய பாடல்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். (CWWL, 1988, vol. 1, “Speaking Christ for the Building Up of the Body of Christ,” pp. 210-211)

[பாடல்களில் முப்பது வகைகள்]

பாடல்களின் பொருளடக்கம் மொத்தம் முப்பது வகைப்படும், அவை: திரியேகத்துவத்தின் ஆசீர்வாதம், பிதாவ‍ைத் தொழுதுகொள்ளுதல், கர்த்தரைத் துதித்தல், ஆவியின் நிறைவு, இரட்சிப்பின் நிச்சயமும் மகிழ்ச்சியும், ஏக்கங்கள், அர்ப்பணிப்பு, கிறிஸ்துவுடனான சேர்க்கை, கிறிஸ்துவை அனுபவித்தல், தேவனை அனுபவித்தல், சிலுவையில் மேன்மைபாராட்டுதல், சிலுவைப் பாதை, உயிர்த்தெழுந்த ஜீவன், உற்சாகமூட்டுதல், பாடுகளில் ஆறுதல், உள்ளான ஜீவனின் பல்வேறு அம்சங்கள், தெய்வீக சுகமளித்தல், ஜெபம், வார்த்தையைப் படித்தல், சபை, கூடுகைகள், ஆவிக்குரிய யுத்தம்,‍ சேவை, சுவிசேஷம் பிரசங்கித்தல், ஞானஸ்நானம், கர்த்தருடைய நாள், இராஜ்ஜியம், மகிமையின் நம்பிக்கை, இறுதி வெளியரங்கம், மற்றும் சுவிசேஷம். (Hymns, pp. iii-vii)

பாடல்களின் உணர்வு

பாடல்களின் உணர்வை அறிய நாம் கற்றுக்கொண்டால், நாம் அவற்றின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். அந்த உணர்வு, அந்தப் பாடலின் கருத்திலிருந்து வருகிறது. நாம் ஒரு கூடுகைக்கு ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கும்போது, பாடலின் கருத்தின் அடிப்படையிலுள்ள நம் உணர்வின்படி நாம் இதைச் செய்தாக வேண்டும். ஒரு பாடலின் உணர்வு என்பது அதன் சுவையையும் குறிக்கிறது. குறிப்பிட்ட சில உணவுகள் ருசியாக இருக்கிறதா இல்லையா என்பது, அவற்றின் சுவையிலிருந்து தீர்மானிக்கப்படுகிறது. பாடல்களை புறம்சார்ந்த ரீதியில் மட்டுமல்ல, அவற்றை ருசிக்கக் கற்றுக் கொள்வதன் மூலம் அகம்சார்ந்தரீதியிலும்கூட நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

பாடல்களின் இராகம்

பாடல்களின் இராகமும்கூட, நாம் பாடல்களை அறிந்துகொள்வதற்கு ஒரு முக்கிய அம்சம். பல நல்ல பாடல்கள் ஒரு மோசமான இராகத்தின் காரணமாகக் கொல்லப்பட்டுவிடுகின்றன. நாங்கள் நம் பாடல் புத்தகத்தைத் தொகுத்தபோது, பாடல்களுக்கான நேர்த்தியான ‍உயர்த்தப்பட்ட இராகத்தை அமைக்க வேண்டும் என்ற இந்த முக்கிய குறிப்புக்குக் கவனம் செலுத்தினோம். நாங்கள் தேர்ந்தெடுத்த இராகங்கள் அந்தந்தப் பாடல்களின் கருத்திற்கும் உணர்விற்கும் பொருந்துகின்றனவா என்று பார்க்க நாங்கள் அவற்றைக் கவனித்துக் கேட்டோம். நம் பாடல் புத்தகத்துக்காக நம்மால் எழுதப்பட்ட புதிய பாடல்கள் யாவும், ஏற்கனவே இருந்த பழைய இராகங்களுக்கு ஏற்பவே அமைக்கப்பட்டன. நாம் எந்தவொரு புதிய ‍இராகமும் அமைக்கவில்லை. “என்னே ஜீவன்! சமாதானம்!” சார்லஸ் வெஸ்லியின் “ஆண்ட் கேன் இட் பி தேட் ஐ ஷுட் கெய்ன்” என்ற புகழ்பெற்ற பாடலின் இராகத்துக்கு ஏற்ப எழுதப்பட்டது. பாடல்கள், #499க்கான இந்த இராகம் மக்களின் வாஞ்சையையும் உணர்வையும் கிளர்ந்தெழுப்புகிறது. கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் இயற்றப்பட்ட பல இராகங்களை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வெளிவந்த பெரும்பாலான இராகங்கள் முந்தைய புனிதமான இராகங்களுக்கு இணையாக முடியாது. உதாரணத்திற்கு, “பிளவுண்ட மலையே” (பாடல்கள், #1058) மற்றும் “என் ஆத்தும நேசர், இயேசுவே” (பாடல்கள் #1057) என்பதற்கான இராகங்கள் மிகத் திடமானவை. பாடல்களை இயற்றுவதில் அந்த வகையான இசை நயத்தை நாம் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

நம் கூடுகைகளில் பாடல்களைப் பேச கற்றுக்கொள்ளுதல்

முடிவுரையாக, வேதத்தின் வழியின்படி நாம் கூடிவருவதாக இருந்தால், நாம் பாடல்களை அறிந்திருக்க வேண்டும். பாடல்களின் உள்ளடக்கத்திலுள்ள முக்கியமான குறிப்புகள், பாடல்களின் தரம், பாடல்களின் உணர்வு, பாடல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், பாடல்களின் இராகம் ஆகியவற்றை நாம் அறிந்திருக்க வேண்டும். பாடல்கள் பாடுவதற்கு மட்டுமல்ல, அதைவிட அதிகமாக, கூடுகைகளில் பேசுவதற்கும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நேர்த்தியான பாடல்களை ஒருவருக்கொருவர் நாம் பேசுவதும், அவற்றைக் கர்த்தருக்குப் பாடுவதும், கூடுகைகளை ஐசுவரியமாக்கும், உயிர்ப்பிக்கும், உயர்த்தும், புத்துயிரூட்டும், பலப்படுத்தும்.

நம் கூடுகைகளில் பாடல்களைப் பேச நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இந்தப் பயிற்சி, புத்துயிரூட்டுவதாகவும், போஷிப்பதாகவும், பக்திவிருத்தியடையச் செய்வதாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருக்கிறது. கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள பரிசுத்தவான்கள் எல்லாரும் கூடுகைகளில் பாடல்களைப் பேசுவதை நடைமுறைப்படுத்தினால், கூடுகைகள் ஜீவிப்பதாகவும், புத்துயிரூட்டுவதாகவும், ஐசுவரியமாகவும் இருக்கும். இது எல்லா பரிசுத்தவான்களும் தங்கள் அனுபவமகிழ்ச்சியை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ள ஒரு வழியைக் கொடுக்கும். பாடல்களைப் பேசுவதற்கான பாரத்தை நாம் எடுத்துக்கொண்டு, அதை நம் உள்ளூர்களில் செயல்படுத்தப் பிரயாசப்பட வேண்டும். (CWWL, 1988, vol. 1, “Speaking Christ for the Building Up of the Body of Christ,” pp. 214-215, 219)

References: CWWL, 1988, vol. 1, “Speaking Christ for the Building Up of the Body of Christ,” ch. 7; Hymns

WITHIN MY HEART A PRAISE O’ERF LOWING

Assurance and Joy of Salvation—Satisfied with Christ – 8255

1. Many weary years I vainly sought a spring,
One that never would run dry;
Unavailing all that earth to me could bring,
Nothing seemed to satisfy.

Drinking at the Fountain that never runs dry,
Drinking at the Fountain of life am I;
Finding joy and pleasure
In abounding measure,
I am drinking at the Fountain of life.

2. Through the desert land of sin I roam no more,
For I find a living Spring,
And my cup of gladness now is running o’er,
Jesus is my Lord and King.

3. Here is sweet contentment as the days go by,
Here is holy peace and rest;
Here is consolation as the moments fly,
Here my heart is always blest.

4. Here I find a never ending, sure supply,
While the endless ages roll;
To this healing Fountain I would ever fly,
There to bathe my weary soul.

Jump to section