மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பன்னிரண்டு – புதிய ஏற்பாட்டு புத்தகங்களின் கருப்பொருட்கள்

2 பேது. 1:20-21—வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது; 21தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

மத்தேயு: இராஜ்ஜியத்தின் சுவிசேஷம்—இயேசு கிறிஸ்து இராஜ-இரட்சகர் என்று நிரூபிக்கிறது.

மாற்கு: தேவனுடைய சுவிசேஷம்—இயேசு கிறிஸ்து அடிமை-இரட்சகர் என்று நிரூபிக்கிறது.

லூக்கா: பாவ மன்னிப்பின் சுவிசேஷம்—இயேசு கிறிஸ்து மனித-இரட்சகர் என்று நிரூபிக்கிறது.

யோவான்: ஜீவனின் சுவிசேஷம்—இயேசு கிறிஸ்து தம்மைப் பரப்புவதற்கு ஜீவனாக வருகிற இரட்சகராகிய தேவன் என்று நிரூபிக்கிறது.

நடபடிகள்: தேவனுடைய இராஜ்ஜியமாகிய சபை-களை உற்பத்திசெய்வதற்காக தம் பரமேறுதலில், ஆவியானவரால், சீஷர்கள்மூலம், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரவுதல்.

ரோமர்: தேவனுடைய சுவிசேஷம்—இது, உள்ளூர் சபைகளாக வெளிக்காட்டப்படும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியமைப்பதற்கு பாவிகளைத் தேவனுடைய குமாரர்களாக்க.

1 கொரிந்தியர்: சபையிலுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்குமான தீர்வாகக் கிறிஸ்துவும், அவருடைய சிலுவையும்.

2 கொரிந்தியர்: புதிய உடன்படிக்கையின் ஊழியமும், அதின் ஊழியக்காரர்களும்.

கலாத்தியர்: கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை தம்மைக்கொண்டு இடமாற்றுவதும், மதத்துக்கும் பாரம்பரியத்துக்கும் எதிராக இருத்தலும்.

எபேசியர்: சபை—கிறிஸ்துவின் பரம இரகசியம், கிறிஸ்துவின் நிறைவாகிய கிறிஸ்துவின் சரீரம், தேவனுடைய நிறைவாகுதல்.

பிலிப்பியர்: கிறிஸ்துவை அனுபவித்தல்—கிறிஸ்துவை நம் வாழ்க்கை, முன்மாதிரி, இலக்கு, வல்லமை, மற்றும் இரகசியமாக எடுத்துக்கொள்ளுதல்.

கொலோசெயர்: கிறிஸ்து—சகலத்தையும் உள்ளடக்கிய இவர் தேவனுடைய பரம இரகசியமும் ஊனுருவுமாக, சபையின் தலையும் ஆக்கக்கூறுமாக, பரிசுத்தவான்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்கும், ஜீவனும், ஆக்கக்கூறும், நம்பிக்கையுமாக, மற்றும் நேர்மறையான எல்லாக் காரியங்களின் பொருளுமாக எல்லாவற்றிலும் முதலிடம் வகித்தல்.

1 தெசலோனிக்கேயர்: சபை வாழ்க்கைக்கான ஒரு பரிசுத்த வாழ்க்கை—ஜீவிக்கும் தேவனைச் சேவித்தலும், பரிசுத்தமான முறையில் நடந்துகொள்ளுதலும், கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருத்தலும்.

2 தெசலோனிக்கேயர்: சபை வாழ்க்கைக்கான பரிசுத்த வாழ்க்கை குறித்து உற்சாகப்படுத்துதலும், சரிசெய்தலும்.

1 தீமோத்தேயு: சபையைக் குறித்து தேவனுடைய பொருளாட்சி.

2 தீமோத்தேயு: சபையின் சரிவுக்கு எதிரான தடுப்பூசி.

தீத்து: சபையில் ஒழுங்கைப் பராமரித்தல்.

பிலேமோன்: புதிய மனிதனில் விசுவாசிகளின் சம அந்தஸ்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எபிரெயர்: யூத மதத்தையும், அதனுடன் தொடர்புடைய எல்லாவற்றையும்விட கிறிஸ்து மேலானவராக இருத்தலும், அவர் முழுநிறைவாக்கிய புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையைவிட சிறந்ததாக இருத்தலும்.

யாக்கோபு: நடைமுறைக்குரிய கிறிஸ்தவப் பூரணம்.

1 பேதுரு: தேவனுடைய அரசாங்கத்தின்கீழ் கிறிஸ்தவ வாழ்க்கை.

2 பேதுரு: தெய்வீக வழங்குதலும், தெய்வீக அரசாங்கமும்.

1 யோவான்: தெய்வீக ஜீவனின் ஐக்கியம்.

2 யோவான்: துர்உபதேசத்தில் பங்குபெறுவதற்கு எதிரான தடை.

3 யோவான்: சத்தியத்தில் பிரயாசப்படும் உடன்வேலையாட்களுக்கான உற்சாகப்படுத்துதல்.

யூதா: விசுவாசத்திற்காகப் போராடுதல்.

வெளிப்படுத்தல்: தேவனுடைய நித்தியப் பொருளாட்சியின்படி தேவனுடைய நிர்வாகத்தின் மையமாக கிறிஸ்து.

Reference: Recovery Version of the Bible

ஒப்பில்லாரைக் கண்டுகொண்டேன்
கிறிஸ்துவை அனுபவித்தல்—எல்லாமுமாக
510

1 ஒப்பில்லாரைக் கண்டுகொண்டேன்,
உள்ளம் கொண்டாடுதே;
கிறிஸ்தென்னில் உள்ளதால் மனம்:
மகிழ்ந்து பாடுவேன்!

2 என் கிறிஸ்து தேவாட்டுக்குட்டி,
பூரண இரட்சகர்;
நீதியின் சூரியன் அவர்,
செட்டையில் சுகமுண்டு.

3 என் கிறிஸ்து, ஜீவ விருட்சம்,
இன் கனிகள் நிறைந்தவர்;
என் பசியை நிறைவாய்த் தீர்ப்பவர்;
நான் தினமும் புசிப்பவர்.

4 என் கிறிஸ்து பிளவுண்ட பாறை
ஜீவத்தண்ணீர் ஓடை;
என் இதயத்தில் தண்ணீர் ஊற்றாய்,
என் தாகம் தீர்ப்பவர்.

5 கிறிஸ்தென் ஜீவன், ஒளி, வழி,
ஆரோக்கியம், ஆறுதல்,
மகிழ்ச்சி, ஓய்வு, நம்பிக்கை,
என் மகிமை, ஐசுவரியம்.

6 கிறிஸ்து என் ஞானம், வல்லமை,
மேன்மை, நீதி, எல்லாம்,
என் வெற்றி, நிச்சய மீட்பு,
சத்தியம், பரிசுத்தம்.

7 கிறிஸ்தென் மீட்பர், மேய்ப்பர், கர்த்தர்,
பரிந்துரைப்பவர்,
ஆலோசகர், தேவன், பிதா,
அன்பர், சகோதரர்.

8 கிறிஸ்தென் தலைவர், காவலர்,
போதகர், வழிகாட்டி,
மணாளன், எஜமான், என் தலை,
என்னில் வசிப்பவர்.

9 கிறிஸ்து என் தீர்க்கதரிசி,
பார்வை நிறைந்தவர்,
தேவனுக்கு முன் ஆசாரியர்;
ஆள்கின்ற என் இராஜா.

10 ஆரம்பித்தார் என் விசுவாசம்,
பூர்த்தியும் ஆக்குவார்,
என் மத்தியஸ்தர், அச்சாரம்,
உண்மையுள்ள சாட்சி.

11 கிறிஸ்தென் நித்ய உறைவிடம்,
நிறைவான கானான்;
என் கோட்டை, துருகம், மறைவிடம்,
நான் அவர்மேல் நிற்கின்றேன்.

12 கிறிஸ்தென் ஓய்வுநாள், திருவிழா,
என் காலை, நண்பகல்,
என் யுகமும், என்றும் ஒழியாத
நித்தியமும் அவர்.

13 கிறிஸ்தென் ஆசை, என் நம்பிக்கை,
சம்பூர்ண அழகுள்ளார்,
என் தேவை அனைத்தும் நிரப்பி என்,
மனம் நிறைப்பவர்.

14 எல்லாம் தம்முள் கொண்டவரை,
என்னென்று சொல்லுவேன்?
ஆதியோடந்தம் கிறிஸ்துவே,
எல்லார்க்கும் எல்லாமும்.

15 என் உள்ளம் மகிழ்ந்து பாடுவேன்,
நான் மீண்டும் பாடுவேன்;
இந்தப் பொக்கிஷம் என் சொந்தம்;
என்னே கிறிஸ்தென்னிலே!

 

Jump to section