மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பதினொன்று – பழைய ஏற்பாட்டு புத்தகங்களின் கருப்பொருட்கள்

சங். 12:6—கர்த்தருடைய சொற்கள்/ மண் குகையில் ஏழுதரம் உருக்கி,/ புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

119:140—உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

ஆதியாகமம்: தேவன் சிருஷ்டித்தார், சாத்தான் சீரழித்தான், மனிதன் விழுந்தான், யெகோவா இரட்சிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார்.

யாத்திராகமம்: தேவனும் அவருடைய மக்களும் ஒருவரையொருவர் சந்திக்கவும், தொடர்புகொள்ளவும், பரஸ்பரமாக வசிக்கவும், அவர்கள் கிறிஸ்துவில் தேவனோடு சேர்த்துக் கட்டியெழுப்பப்படுமாறு, கிறிஸ்து தேவனுடைய மக்களின் மீட்பாகவும், இரட்சிப்பாகவும், நிரப்பீடாகவும், தேவனை ஆராதிப்பதற்கும் சேவிப்பதற்குமான வழிவகையாகவும் இருக்கிறார்.

லேவியராகமம்: கிறிஸ்துவே, தேவனுடைய மீட்கப்பட்டவர்களின் ஐக்கியத்திலும், சேவையிலும், வாழ்க்கையிலும் எல்லாமுமாக இருக்கிறார்.

எண்ணாகமம்: கிறிஸ்துவே தேவனுடைய மக்களின் வாழ்வின் அர்த்தம், சாட்சி, மையம், மற்றும் அவர்களுடைய பயணம் மற்றும் யுத்தத்தின் தலைவர், வழி, இலக்கு.

உபாகமம்: தேவனுடைய மக்கள் பரலோக எல்லைக்குள் நுழைந்து அவரது ஐசுவரியங்களில் பங்குபெறக் கூடுமாறு, கிறிஸ்துவே தேவனுடைய மக்களின் அறிவுரையாளர் மற்றும் தலைவர்.

யோசுவா: தேவனுடைய பொருளாட்சியைச் செயல்படுத்துவதற்காக இஸ்ரயேலர்கள் நல்ல நிலத்தை ஆக்கிரமித்தலும், சுதந்தரித்தலும்.
நியாயாதிபதிகள்: இஸ்ரயேல் தேவனைக் கைவிடுதல், அவர்களது எதிரிகளிடம் தோல்வியடைதல், சீரழிந்துபோதல்.

ரூத்: புறவினப் பாவிகள், கிறிஸ்துவுடனான தங்கள் சேர்க்கையில் தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகிய இஸ்ரயேலோடுகூட, கிறிஸ்துவின் மீட்பின் மூலம் தெய்வீகச் சுதந்திரத்திற்குள் கொண்டுவரப்படுவதைப் பற்றிய முழுமையான ஒரு முன்னடையாளம்.

1 & 2 சாமுவேல்: தேவன் அருளிய நல்ல தேசத்தை அனுபவித்து மகிழ்வதற்கான வழியைப் பற்றிய எடுத்துக்காட்டுகள்.

1 & 2 இராஜாக்கள்: இராஜாக்கள் பூமியில் தெய்வீக அரசத்துவத்துக்குக் கொண்டுவந்த நாசம் மற்றும் சீரழிவுக்கு எதிராக தேவனுடைய பொருளாட்சியில் தேவனுடைய அரசாங்கரீதியான இடைப்படுதலும், தேவனுடைய நியாயமான இடைபடுதலினால் ஏற்படும் சோகமான விளைவும்.

1 & 2 நாளாகமம்: ஆதாமிலிருந்து சாமுயேல் வரையிலான காலகட்டம் முதல் சிறையிருப்பிலிருந்து இஸ்ரயேல் திரும்பிவருதல் வரையிலான மனிதனின் வரலாற்றில் தேவனின் நகர்வின் முழு காலவரிசை பட்டியலும், அதோடுகூட, யூதாவின் இராஜாக்களோடு தேவனின் இடைபடுதலின் சில முக்கிய விவரங்களின் பதிவேடும்.

எஸ்றா: தேவனின் பொருளாட்சியின்படி பூமியில் அவருடைய சாட்சிக்காக அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மத்தியில் அவருடைய மீட்டுத்திருப்புதலின் தொடக்கமாக இஸ்ரயேல் மக்கள் தங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்புதலும், தேவனுடைய வீட்டைத் திரும்பக்கட்டுதலும்.

நெகேமியா: தேவனின் பொருளாட்சியின் நிறைவேற்றத்திற்கென்று, அவருடைய சாட்சிக்காக அவரது தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மத்தியிலான மீட்டுத்திருப்புதலின் தொடர்ச்சியாக எருசலேம் நகரத்தின் மதில் திரும்பக்கட்டப்படுதல்.

எஸ்தர்: இஸ்ரயேலரைத் தம் தெரிவாகத் தெரிந்துகொண்ட தேவன், அவர்கள் புறவின தேசங்களில் சிறைப்பட்டிருந்தபோது அவர்களை இரகசியமாகப் பராமரிக்கவும், இரகசியமாகச் செயல்பட்டு அவர்களை வெளியரங்கமாக இரட்சிக்கவும் அவர்களுக்கு மறைவான தேவனாக மாறுதல்.

யோபு: தேவன் தம் பரிசுத்தவானுடன் இடைபடுவதின் குறிக்கோள்.

சங்கீதம்: தங்கள் துதிகள், ஜெபங்கள், போற்றிப் புகழ்ந்து பாடுதல் ஆகியன மூலம், தேவனை நாடி தொடர்புகொள்கிற தேவத்தன்மை மிக்க மனிதர்களின் உணர்ச்சிகள், உணர்வுகள், உளப்பதிவுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் வெளியாக்கங்கள்.

நீதிமொழிகள்: மக்கள் தங்கள் மனித வாழ்வில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், தங்கள் குணத்தை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்றும் போதிக்கும் ஞான வார்த்தைகள்.

பிரசங்கி: சீர்கெட்ட உலகத்தில் மனித வாழ்க்கை என்பது காற்றைப் பிடிக்க அதை விரட்டிக்கொண்டு ஓடுவது போன்ற ஒரு மாயை என்று காண்பிக்கும் சாலொமோனின் போதனைகள்.

உன்னதப்பாட்டு: ஓர் உன்னத திருமணத்தில் காணப்படும் காதல் சரித்திரம், இது, ஒரு தனிப்பட்ட விசுவாசி கிறிஸ்துவோடுகொள்ளும் அன்பான ஐக்கியத்தில் படிப்படியாக முன்னேறுகிற அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

ஏசாயா: மனிதமாம்சமாகி, சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து, பரமேறி, வரப்போகிற கிறிஸ்துவின்மூலம் யெகோவாவின் இரட்சிப்பு.

எரேமியா: இஸ்ரயேலோடும், தேசங்களோடும் தேவன் இடைபடுவதில், கிறிஸ்து, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு, அவர்களின் மையமாகவும் சுற்றுவட்டமாகவும், யெகோவாவின் நீதியாக்கப்படுதல்.

புலம்பல்: பரிசுத்த நகரத்தின்மேலும், தேவனுடைய பரிசுத்த மக்கள்மேலும் எரேமியாவின் துக்கம், அன்பு ஆகியவற்றின் வெளியாக்கம்.

எசேக்கியேல்: தேவன் மகிமையோடு மனிதனுக்குத் தோன்றுதலும், தேவனுடைய மக்கள் மற்றும் தேசங்களின்மீது அவரது நியாயத்தீர்ப்பும், அவர் தமக்கான மற்றும் தம்முடைய ஒரு பரஸ்பர வசிப்பிடமாகவும், முழுமையான வெளியாக்கமாகவும் ஒரு குடியிருக்கும் ஸ்தலத்தைக் கட்டியெழுப்புவதற்காக தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை மீட்டுத்திருப்புதலும்.

தானியேல்: தேவனால் இஸ்ரயேலுக்குப் பகுத்துக்கொடுக்கப்பட்ட விதி—எழுபது வாரங்களின் உள்ளடக்கம்.

ஓசியா: வேசியும், விசுவாசத்துரோகியுமான இஸ்ரயேலை திரும்ப ஏற்றுக்கொள்வதிலும், அவளை ஆதிநிலைக்குத் திரும்பக் கொண்டுவருவதிலும் அவளுக்கு இரட்சிப்பாக இருக்கும் யெகோவா.

யோவேல்: நான்கு நிலைகளில் மனித அரசாங்கத்தால் இஸ்ரயேல்மேல் வரும் பாழாக்குதலும், பாழாக்கியவர்களை கிறிஸ்து அழித்தலும், மறுசீரமைப்பில் இஸ்ரயேலர்கள் மத்தியில் கிறிஸ்துவின் ஆளுகையும்.

ஆமோஸ்: இஸ்ரயேல்மேலும், அதைச் சுற்றியுள்ள தேசங்கள்மேலும் (மறுசீரமைப்பை விளைவிக்கும்) யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள்.

ஒபதியா: ஏசாவுடன் யெகோவாவின் இடைபடுதலும், யெகோவாவின் இராஜ்ஜியத்திற்காக யாக்கோபின் வெற்றியும்.

யோனா: புறவின நகரமாகிய நினிவே வரை யெகோவாவின் இரட்சிப்பு சென்றடைதல்.

மீகா: இஸ்ரயேலை யெகோவா கடிந்துகொள்ளுதலும், இஸ்ரயேலை ஆதிநிலைக்கு அவர் மறுசீரமைத்தலும்.

நாகூம்: பொல்லாத அசீரியா நாட்டின் தலைநகரான நினிவேமீது கெயோவாவின் நியாயத்தீர்ப்பு.

ஆபகூக்: முதலில் கல்தேயர்களால் இஸ்ரயேல்மேலும், பின்னர் தேசங்களால் கல்தேயர்மேலும் தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பு.

செப்பனியா: இஸ்ரயேல்மீதும், தேசங்கள்மீதும் யெகோவாவின் நியாயத்தீர்ப்பும், புறஜாதிகளுக்கும் இஸ்ரயேலுக்கும் அவருடைய இரட்சிப்பும்.

ஆகாய்: தம் வீட்டைக் கட்டுவதற்காக திரும்பிவந்த சிறைப்பட்டவர்களோடு யெகோவாவின் இடைபடுதல்.

சகரியா: யெகோவாவால் சிட்சிக்கப்பட்ட தெரிந்துகொள்ளப்பட்டோருக்கு, அவர்களின் சிறையிருப்பின்போது, தம் தாழ்ச்சியில் அவர்களோடு பாடுபடும் தோழராக மாறியவராகிய கிறிஸ்துவின் மீட்பின் மூலம், யெகோவாவின் இதயப்பூர்வமான ஆறுதலும் வாக்குத்தத்தமும்.

மல்கியா: (இஸ்ரயேலர்கள் மத்தியில் ஆசாரியர்களாகிய) லேவியின் குமாரர்களோடும், (இஸ்ரயேல் மக்களாகிய) யாக்கோபின் குமாரர்களோடும் யெகோவாவின் இடைபடுதல்.

Reference: Recovery Version of the Bible

LORD, THE ANCIENT TYPES AND SYMBOLS

Praise of the Lord— His All-Inclusiveness – 196

1. Lord, the ancient types and symbols
As our all Thyself portrayed;
As was shadowed in those figures,
Real to us Thou now art made.
Contemplating such a picture,
As we on its wonders gaze,
How we marvel at Thy riches
And our song of worship raise.

2. Lord, Thou art our true Passover,
God passed over us thru Thee;
By Thyself and Thy redemption
We with God have harmony.
Thou, the Lamb of God, redeemedst us
With Thyself and with Thy blood;
We apply Thy blood, our ransom,
Eating Thee, our real food.

3. Lord, Thou art the Bread from heaven,
The unleavened Bread of life;
Eating Thee, with Thee we mingle,
Ceasing from our sin and strife.
Lamb and Bread are both Thy figures,
Showing Thou art life to us;
Feasting on Thee at Thy table,
We enjoy Thy riches thus.

4. Lord, Thou art the Heav’nly Manna,
As our daily food supply;
Strengthening and energizing,
All our need to satisfy.
Living Rock Thou also art, Lord,
Cleft for us with life to flow;
Drinking of this living water,
Thirst is quenched, Thy life we know.

5. Lord, Thou art the Land of Canaan-
Elevated, rich and good,
Flowing with both milk and honey
In a glorious plenitude.
By Thy surplus God we worship,
In Thy fellowship we move;
Thus in love we’re joined together
And God’s building we will prove.

 

Jump to section