மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் பத்து – புதிய எருசலேம்

வெளி. 21:2—யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

முழு ‍தெய்வீக வெளிப்பாட்டின்
உச்சநிலை நிறைவேற்றம்

புதிய எருசலேம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள முழு தெய்வீக வெளிப்பாட்டின் உச்சநிலை முழு நிறைவேற்றமாக இருக்கிறது. வேதத்தின் அறுபத்து ஆறு புத்தகங்களின் முடிவுரையும், புதிய எருசலேமைக் குறித்த அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருக்கிறது. புதிய எருசலேம் அறுபத்து ஆறு புத்தகங்களின் உச்சநிலை “விளைவாக” இருக்கிறது. வேதத்தின் அறுபத்து ஆறு புத்தகங்கள் பற்பல காரியங்களை வழங்குகின்றன, அவை யாவும் ஒரு காரியத்தில்—புதிய எருசலேமில்—முழுநிறைவடையும். வேதத்திலுள்ள எல்லா நேர்மறையான காரியங்களுக்கும் ஒரே விளைவு இருக்கிறது, அது புதிய எருசலேம். (CWWL, 1984, vol. 3, “God’s New Testament Economy,” p. 354)

ஒரு பெளதிக நகரம் அல்ல

வெளிப்படுத்தல் புத்தகம் அடையாளங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கடைசி அடையாளமான புதிய எருசலேம் ஒரு பெளதிகமான, நிஜமான நகரம் என்று நீங்கள் கூறினால், இந்தப் புத்தகத்திலுள்ள முதல் அடையாளமான குத்துவிளக்கைப் பற்றி என்ன கூறுவது? 1ஆம் அதிகாரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்கள் நிஜமான நட்சத்திரங்களா? ஆட்டுக் குட்டி பற்றி என்ன? தேவ ஆட்டுக்குட்டியான கிறிஸ்து நான்கு கால்களும் ஒரு சிறிய வாலும் உடைய ஓர் ஆட்டுக்குட்டி என்றா நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? யூதா கோத்திரத்தின் சிங்கம் ஒரு மிருகக் காட்சி சாலையில் இருப்பது போன்ற ஒரு சிங்கமா? வெளிப்படுத்தல் புத்தகத்திலுள்ள இந்த அடையாளங்களை இவ்வாறு வியாக்கியானம்‍ செய்வது பொருத்தமானதல்ல. புதிய எருசலேம் ஓர் அடையாளம். இது ஓர் மெய்யான, நிஜமான, பெளதிக நகரமல்ல. மகா பாபிலோனும்கூட போலிசபைக்கு ஓர் அடையாளம். மகா பாபிலோனும் புதிய எருசலேமும் வெளிப்படுத்தல் புத்தகத்தின் முடிவிலுள்ள இரண்டு அடையாளங்கள். ஒரு நகரம் போலி-சபைக்கான அடையாளம், மற்ற நகரம், அதாவது பரிசுத்த நகரம் தூய சபையின் உச்சநிலை நிறைவேற்றத்தை அடையாளப்படுத்துகிறது. மகா பாபிலோன் மகா வேசி என்று அழைக்கப்படுகிறது. புதிய எருசலேம் ஆட்டுக்குட்டியானவரின் மனைவி என்று அழைக்கப்படுகிறது. வெளிப்படுத்தல் அடையாளங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகம் என்பதால், புதிய எருசலேம் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது; இதுவும் ஓர் அடையாளமாகத்தான் இருந்தாக வேண்டும். (CWWL, 1984, vol. 2, “Elders’ Training, Book 2: The Vision of the Lord’s Recovery,” p. 134)

மனிதனோடு மூவொரு தேவனின் கலந்திணைதல்

தேவனின் நித்திய கட்டிடமாக தேவனோடு ஒன்றாகக் கட்டப்பட்ட பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு காலகட்டத்தின் எல்லா மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பரிசுத்தவான்களின் தொகுப்பாகிய புதிய எருசலேம், பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனைக் கொண்டு மீட்கப்பட்டு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட எல்லா முப்பகுதி மனிதர்களின் கலந்திணைதலாகவும் இருக்கும். மனிதர்களோடு, அதாவது, தம் ‍தெரிந்துகொள்ளப்பட்ட மக்களோடு ஒன்றாயிருக்கும்படி மூவொரு தேவன் மாம்சமாகுதல், சிலுவைமரணம், மற்றும் உயிர்த்தெழுதலில் பதனிடப்பட்டு முழுநிறைவடைந்திருக்கிறார். தேவனின் எல்லாக் காலக்கட்டங்களின் எல்லா தலைமுறைகளினூடாக, முப்பகுதி மனிதர்கள் வரும்-நித்தியத்தில் தம் நேர்பாதியாகவும் குடியிருப்பாகவும் வெளியாக்கமாகவும் இருக்கும்படி அவர்களைக் கடந்த நித்தியத்தில் தெரிந்துகொண்ட மூவொரு தேவனோடு ஒன்றாயிருக்கும்படி மீட்கப்பட்டு, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

நித்தியத்தில் தம் வெளியாக்கத்திற்காக
பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் உச்சநிலை வெளியரங்கம்

இவையெல்லாவற்றுக்கும் கூடுதலாக, புதிய எருசலேமானது, நித்தியத்திற்கும் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட மனுஷீகத்தில் மூவொரு தேவனின் வெளியாக்கத்திற்காக பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் உச்சநிலை வெளியரங்கமாக இருக்கும். (The Conclusion of the New Testament, pp. 2694-2695)

References: CWWL, 1984, vol. 3, “God’s New Testament Economy,” ch. 26; CWWL, 1984, vol. 2, “Elders’ Training, Book 2: The Vision of the Lord’s Recovery,” chs. 5—13; The Conclusion of the New Testament, msgs 254—264; CWWL, 1994-1997, vol. 3, “The Application of the Interpretation of the New Jerusalem to the Seeking Believers,” ch. 1

புது வானம் பூமியில்
இறுதி வெளியரங்கம்—புதிய எருசலேம்
978

1 புது வானம் பூமியில்
புது எருசலேம்
தேவ மா ஒளி வீசி
தேவனின்றிறங்குதே.

தேவ சாயல் காணுதே
தேவ மாட்சி வீசுதே!
தேவ மா நகரில்
தேவன்தாம் வீற்றுள்ளாரே!

2 நகரமோ பசும்பொன்,
வாயில்களோ முத்துக்கள்,
வீதியும் பசும்பொன்னே,
அஸ்திபாரம் மாணிக்கம்.

3 ஜீவ நதி பாய்ந்தோடி,
நிரப்பீடு நல்குதே;
ஜீவ தரு வளர்ந்து,
தேவைகள் நிரப்புதே.

4 ‘உள்ளேன்’ என்ற மா தேவன்,
உள்ளார் வீசும் ஒளியாய்;
செம்மறியாம் விளக்கில்,
இராக்காலம் அங்கில்லை.

Jump to section