மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

Jump to section

பாடம் ஒன்பது – கிறிஸ்து மீண்டும் வருதல்

மத். 24:21—ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.

தேவனால் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டிருத்தல்

இன்று நாம் இருக்கும் யுகம் கிருபையின் யுகம்…இந்த யுகம் கிறிஸ்துவின் முதல் வருகையோடு ஆரம்பித்தது, அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு முடிவடையும். கிறிஸ்து திரும்பி வரும்போது, அவர் இந்த யுகத்தை முடிவுகட்டி, இராஜ்ஜியத்தின் யுகத்தைக் கொண்டுவருவார். இந்த யுகத்தின் முடிவு, முழுநிறைவேற்றம்…கடைசி ஏழு ஆண்டுகள் நீடிக்கும். எனவே, கிறிஸ்து திரும்பி வருதலை நாம் புரிந்துகொள்ள விரும்பினால், தற்போதைய யுகத்தின் கடைசி ஏழு ஆண்டுகளைக் குறித்து ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதல் நமக்கு இருந்தாக வேண்டும். இந்த ஏழு ஆண்டுகள்…தானியேல் 9:24-27இல் பதிவு செய்யப்பட்டுள்ளன. [இந்த வசனங்களில், ஒவ்வொரு வாரமும் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது.]

கடைசி வாரத்தின் ஆரம்பத்தில், அந்திக்கிறிஸ்து ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலோடு ஓர் உறுதியான உடன்படிக்கையை ஏற்படுத்துவான்; இந்த ஏழு ஆண்டுகளின் நடுவில் அவன் உடன்படிக்கையை மீறி, இஸ்ரயேல் தேவனுக்குச் செலுத்தும் பலிகளையும் காணிக்கைகளையும் ஒழியப் பண்ணுவான், தேவனுக்குப் பயந்தவர்களைத் துன்புறுத்துவான் என்று வேதம் தெளிவாக வெளிப்படுத்துகிறது (தானி. 9:27, வெளி. 12:13-17). ஆலயத்தில் தேவனின் இடத்தை ஆக்கிரமிக்க அருவருப்பின் விக்கிரகத்தை அவன் ஏற்படுத்துவதோடு, கிறிஸ்து பூமிக்கு வரும்வரை, பாழாக்குதலை ஏற்படுத்த மகா அழிவை நடப்பிப்பான் (மத். 24:15). பின்னர், கிறிஸ்து தம் வாயின் சுவாசத்தால் அந்திக்கிறிஸ்துவை அழித்து, தம் வருகையின் பிரசன்னத்தால் அந்திக்கிறிஸ்துவை நாசமாக்குவார் (2 தெச. 2:8, வெளி. 19:19-20).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்
அந்திக்கிறிஸ்துவின் தோன்றுதல்

மத்தேயு 24:15இல், “மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக் கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது” என்று கர்த்தர் கூறினார். தற்போதைய யுகத்தின் கடைசி மூன்றரை ஆண்டுகளில், அதாவது, கடைசி வாரத்தின் இரண்டாம் பாதியான மகா உபத்திரவ காலத்தில் இது திட்டவட்டமாக நிறைவேறும். அந்த நேரம் அந்திக்கிறிஸ்துவின் உருவம் தேவனுடைய ஆலயத்தில் ஒரு விக்கிரகமாக ஏற்படுத்தப்படும்.

வெளிப்படுத்தல் 13:1 ஒரு மிருகத்தைச் சுட்டிக்காட்டுகிறது, இது மத்திய தரைக் கடலிலிருந்து எழுந்து வரப்போகும் அந்திக் கிறிஸ்துவை அடையாளப்படுத்துகிறது. இந்த மிருகத்திற்கு ஏழு தலைகளும் ஏழு கொம்புகளும் உள்ளன. வெளிப்படுத்தல் 17:8-11 இந்த மிருகத்தின் பிறப்பிடத்தை நமக்குச் சொல்கிறது. மிருகத்தின் ஏழு தலைகள் ரோமப் பேரரசின் ஏழு சீசர்கள் ஆவர். வரலாற்றுப் பதிவுகளின்படி, ரோமப் பேரரசிற்கு மொத்தம் பன்னிரண்டு சீசர்கள் இருந்தனர், ஆனால், அவர்களின் ஆறு பேர்தான் வெளிப்படுத்தலில் குறிப்பிடப்படுகின்றனர், காரணம், இந்த ஆறு பேரும் “விழுந்தார்கள்” [வ. 10]; அதாவது, அவர்கள் எல்லோரும் இயற்கைக்கு மாறான முறையில் மரித்தனர்—ஒன்று அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் அல்லது படுகொலை செய்யப்பட்டனர், அவர்களுடைய சிங்காசனம் கைபற்றப்பட்டது. ஏழாவது சீசரான அந்திகிறிஸ்து வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளான், அவன் மத்தியத் தரைக்கடலைச் சுற்றியுள்ள புறவின தேசங்களுள் ஒன்றிலிருந்து வருவான். அவனுக்குப் பத்து ராஜாக்களின் ஆதரவு இருக்கும், அவர்கள் ஒரு மாபெரும் பேரரசை உருவாக்க இணைவார்கள், அது புத்துயிரடைந்த ரோமப் பேரரசாக இருக்கும்.

இஸ்ரயேல் மறுசீரமைக்கப்படுதல்

மத்தேயு 21:19இல் கர்த்தராகிய இயேசு எருசலேமுக்குக் கடைசியாக சென்றபோது, ஒரு அத்தி மரத்தை, அதில் அவர் ஒரு கனியும் காணாததால், சபித்தார். அத்தி மரம் இஸ்ரயேல் தேசத்தின் சின்னம் (எரே. 24:2, 5, 8). இஸ்ரயேல் இறுமாப்பாகவும் கலகத்தனமாகவும் இருந்ததால், தேவனைத் திருப்திப்படுத்த எந்தக் கனியும் இல்லாததால், அவள் தேவனால் நிராகரிக்கப்பட்டாள். “இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்” என்று கர்த்தர் உரைத்த தீர்க்கத் தரிசனத்தின்படி (மத். 24:2), கி.பி. 70இல், ரோம இளவரசனான தீத்து, ஒரு மாபெரும் சேனை‍யோடு வந்து எருசலேமையும் ஆலயத்தையும் அழித்தான். அந்நேரம் முதல் இஸ்ரயேல் மக்கள் தேசங்கள் மத்தியில் சிதறிப்போனார்கள். அவர்களது தேசம் விழுந்துபோனது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் தாயகத்தையும் இழந்தனர். மனுஷீகரீதியில் பேசினால், இஸ்ரயேல் தேசம் மறுபடி உருவாவதற்கான எந்த நம்பிக்கையும் உண்மையாகவே இல்லை. எனினும், சபிக்கப்பட்டு காய்ந்துபோன அந்த அத்தி மரம் ஒரு நாள் துளிர்விட்டு அதில் இ‍லைகள் வரும் என்று கூறும் ஒரு தீர்க்கதரிசனம் வேதத்தில் இருக்கிறது. [இது நிறைவேறிவிட்டது.]

ஆலயம் மறுபடிகட்டப்படுதல்

ஆலயம் மறுபடி கட்டப்படுவது குறித்து, முதலில் நாம் அந்தக் கடைசி வாரத்தின் இரண்டு பாதிகளைப் பார்க்க வேண்டும். முதல் மூன்றரை ஆண்டுகளில், அந்திக்கிறிஸ்து இஸ்ரயேல் மக்களை ஆதரித்து, தேவனை சுதந்திரமாக ஆராதிக்க அவர்களை அனுமதிப்பான்; பிந்தைய மூன்றரை ஆண்டுகளில், பலியையும் காணிக்கையையும் நிறுத்தி, அவற்றை தன் சொரூபத்தைக்கொண்டு இடமாற்றுவான் (தானி. 12:7; 9:27). மத்தேயு 24:15இல் அந்திக் கிறிஸ்துவின் உருவச் சிலை நிற்கப்போகிறதான பரிசுத்த ஸ்தலம், ஆலயத்திற்குள் உள்ள தூயகத்தைக் குறிக்கிறது (சங். 68:35, எசே. 24:24, 21: 2), அதோடு, அருவருப்பு என்பது, விக்கிரகமாக உள்ள அந்திக் கிறிஸ்துவின் சொரூபத்தைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில், கிறிஸ்து தம் வருகையின் பிரசன்னத்தால் அந்திக் கிறிஸ்துவை அழிக்கும்வரை, அந்த விக்கிரகம் ஆலயத்தில் மூன்றரை ஆண்டுகள் நீடிக்கும். எனவே, முதல் ஆலயம் மறுபடிகட்டப்பட்டாக வேண்டும்; பின்னர், இஸ்ரயேல் மக்கள் தேவனை ஆராதிக்கவும் அவருக்குப் பலிகளைச் செலுத்தவும் முடியும், அப்போது, அந்திகிறிஸ்து தன் சொரூபத்தை அங்கே வைக்க முடியும்.
தீத்து ஆலயத்தை அழித்த ஆண்டான கி.பி. 70 முதல், அந்த ஆலயம் மறுபடி கட்டப்படவே இல்லை. இஸ்ரயேல் எருசலேமை மறுபடி உடமையாக்கிக் கொண்டதோடு, ஆலயம் மறுபடி கட்டுவதற்காக ஆயத்த வேலைகளை மும்முரமாகச் செய்துவருகிறது. ஆலயத்தை மறுபடி கட்டுவதற்காகத் தேவைப்படும் எல்லாப் பொருட்களும் பலிகளுக்காகத் தேவைப்படும் எல்லாப் பாத்திரங்களும் வேதத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி ஆயத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் ஏற்ற நேரத்திற்காகக் காத்திருக்கின்றனர், ஆலயம் மறுபடி கட்டப்படுதல் முழுமையடையும்.

மகா உபத்திரவம்

கடைசி வாரத்தின் இரண்டாம் பகுதி, அதாவது, இந்த யுகத்தின் கடைசி மூன்றரை ஆண்டுகள், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மகா உபத்திரவ காலமாகும். (மத். 24:21). இந்தக் காலகட்டம், ஏழு முத்திரைகளுள் ஆறாம் முத்திரையில் நிகழும் இயற்கைக்கு மாறான பேரழிவுகளோடு ஆரம்பித்து (‍வெளி. 6:12-17), ஏழு கலசங்களுள் ஏழாவது கலசத்தில் முடிவடையும் (16:1-21). அது “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலமாக” இருக்கும் (3:10). இந்த மகா உபத்திரவம் மூன்று திசைகளிலிருந்து—தேவனிடமிருந்தும், அந்திக்கிறிஸ்துவிடமிருந்தும், சாத்தானிடமிருந்தும்—பூமியெங்கும் குடியிருக்கும் அனைவர்மீதும் வரும் (லூக். 21:35).

பரிசுத்தவான்கள் எடுத்துக்கொள்ளப்படுதல்

மகா உபத்திரவத்திற்குமுன் ஜெயங்கொள்பவர்கள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள், இன்னும் முதிர்ச்சியடையாத பெரும்பாலான விசுவாசிகள் பூமியிலே மகா உபத்திரவத்தினூடாகக் கடந்து செல்ல விடப்படுவார்கள். மத்தேயு 24:40-41, “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்” என்று கூறுகிறது. உலகப்பிரகாரமான மக்கள், வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்து எந்த உணர்வும் இல்லாமல், பொருள் ரீதியான காரியங்களால் மயங்கிக்கிடக்கையில், தெளிவாயிருக்கும், விழித்திருக்கும் சில விசுவாசிகள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று இது சுட்டிக்காட்டுகிறது. மயங்கி உணர்வற்று இருக்கும் மக்களுக்கு, இது கிறிஸ்துவின் வருகைக்கு ஓர் அடையாளமாக இருக்க வேண்டும். நம் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும் (லூக். 21:34), எடுத்துக்கொள்ளப்படுதலை தவறவிட்டு லோத்தின் மனைவியைப்போல் ஆகாதபடிக்கும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (CWWL, 1990, vol. 3, “The Up-todate Presentation of the God-ordained Way and the Signs concerning the Coming of Christ,” pp. 572, 574-578)

References: CWWL, 1990, vol. 3, “The Up-to-date Presentation of the God-ordained Way and the Signs concerning the Coming of Christ,” ch. 6; Life Lessons, vol. 3, lsns. 35, 36; Life-study of Revelation, msgs. 29, 30

என் இராஜா வேகம் வருவார்
மகிமையின் நம்பிக்கை—ஏக்கமும் ஜெபமும்
960

1 என் இராஜா வேகம் வருவார்,
வானம் நிரம்பிடும்;
பிரபஞ்சம் மீட்கப்பட்டிடும்
அவர் ஒளி காணும்.
கர்த்தர் தம் திட்டம் முடிப்பார்,
காலடி கேட்குதே;
மாட்சி மங்கலாய்க் காண்கின்றேன்
தோன்றத் தொடங்குதே.

2 தம் பிரசன்னம் ஏங்குகின்றேன்
சோம்பலாய் நான் இரேன்;
தம் வருகை நாடி, தம்மைக்
காண ஏங்குகிறேன்.
விஸ்வாசம் காட்சியாய் மாறும்
வருகை நம்பிக்கை;
வேறு சந்தோஷம் இங்கில்லை
இதயம் மகிழ.

3 என் உள்ளம் அவரோடென்றும்,
என் கண்கள் விண் நோக்கும்,
அவரை சந்திப்பதல்லால்
உதடென்ன சொல்லும்.
அவர் வருகை சமீபம்,
வருகை எனக்காய்;
அவர் வாக்குத்தத்தம் உண்மை
நிறைவேறும் காண்பேன்.

4 என் இரட்சகா உம் வார்த்தைகள்
ஐயத்திற்கு அப்பால்;
வார்த்தையால் ஊக்கமாகின்றேன்,
உண்மையாய் இருப்பேன்.
உம் மாட்சி வேகம் தோன்றட்டும்,
பகைவன் அழிவான்;
உம் வாக்கு உண்மையாகிடும்,
உம் ஆசனம் சேர்வோம்.

5 உம் காக்கும் கரம் இரட்சகா,
எனக்கடைக்கலம்;
தந்தையாய் நீர் காக்கின்றீரே
உம்மில் நம்புவோரை.
ஆடும் மேய்ப்பனும் ஒன்றுதான்,
தலை, உடல், ஒன்றே;
உம் கரம்விட்டு யார் பிரிப்பார்,
நம்பும் உம் பிள்ளையை?

6 ஆயிரம் கண்கள், கைகளும்,
தடுத்திடாதென்னை;
பாதை முட்கள் உதவிடும்
பரிசிற்காய் செல்ல.
என் ஆவி, உள்ளமே, எழு,
உலகைக் கைவிடு;
ஜீவ கர்த்தர் எடுப்பாரே,
அவரிடம் என்னை.

7 நீர் குணமாக்கும் சூரியன்!
உம் கதிர் நேசிப்பேன்.
நீதி கர்த்தர், மாட்சி ராஜா!
பணிந்து, ஜெபித்தேன்:
விரைந்து(உ)ம் ஆசனம் ஏறும்,
உம் முகம் காட்டிடும்;
எல்லார்க்கும் க்ருபை தந்திடும்
உம் இராஜ்ஜியம் வரட்டும்.

8 சத்யம் வெல்லட்டும் இராஜாவாய்,
சுதந்திரம் இராணியாய்;
ஆனால் பொய்மை சீறிடுதே
லோகத் தலைவனால்.
சத்யமே, விரைந்து வாரும்
உம் ஒளி தந்திடும்;
சத்ரு நசுக்கப்படும்போழ்,
மைந்தர், உம் மடியில்.

 

Jump to section