மேய்த்துப்பேணுதல்

திரட்டு 5

சத்தியத்தை
அறிதல்

பொருளடக்கம்

  1. பதனிடப்பட்ட மூவொரு தேவன்
  2. சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து
  3. முழுநிறைவடைந்த ஆவி
  4. மனித ஆவி
  5. தெய்வீக மற்றும் நித்திய ஜீவன்
  6. முப்பகுதி மனிதனைப் பூரிதமாக்க ஜீவனாக மூவொரு தேவன்
  7. சபை
  8. பரலோக இராஜ்ஜியத்தின் மூன்று அம்சங்கள்
  9. கிறிஸ்து மீண்டும் வருதல்
  10. புதிய எருசலேம்
  11. பழைய ஏற்பாட்டு புத்தகங்களின் கருப்பொருட்கள்
  12. புதிய ஏற்பாட்டு புத்தகங்களின் கருப்பொருட்கள்
  13. வேதாகமத்தின் மீட்டுத்திருப்புதல் படிவம்
  14. பாடல்களை அறிந்துகொள்ளுதல்
  15. வேதாகமத்தின் ஜீவ-ஆய்வு
  16. காலை புத்துயிருக்கான பரிசுத்த வார்த்தை

 

முகவுரை

புதிய விசுவாசிகளை மேய்த்துப்பேணுவதற்கான அடிப்படை செய்திகளை வழங்கும் ஆறு சிறு புத்தகங்கள் கொண்ட தொடரில் இதுவும் ஒன்று. இந்தச் சிறு புத்தகம் முற்றிலும் வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ-யின் செய்திகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் சில புத்தகத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அந்தந்தக் கருப்பொருளைக் குறித்து இன்னும் அதிகம் இந்தப் புத்தங்களில் வாசிக்கலாம். கவனிக்கவும்: CWWN மற்றும் CWWL முறையே, வாட்ச்மேன் நீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், விட்னெஸ் லீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. வேத வசனங்களும் அடிக்குறிப்புகளும் இந்திய வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. சில வசனங்கள் அதிக துல்லியமான புரிந்துகொள்ளுதலுக்காக மூல மொழிகளாகிய எபிரேயு கிரேக்கு ஆகியவற்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட வசனங்கள் பெரும்பாலும் (எபி.) அல்லது (கிரே.) என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எல்லா செய்தி குறிப்புகளும் விட்னெஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ-யின் எழுத்துவடிவ ஊழியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுக் கூறப்படாத பட்சத்தில், ஊழியத்தின் பகுதிகள் யாவும் விட்னெஸ் லீ-யின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை, இவை, லிவிங் ஸ்டீரிம் மினிஸ்டீரியால் வெளியிடப்பட்டவை. அடைப்புக்குக் குறிக்குள் இருக்கும் பகுதிகள் [ ] தொகுப்பாளர்களால் மொழிபெயர்ப்பாளர்களால் சேர்க்கப்பட்டவை.