மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் எட்டு – ஜீவனின் ஐக்கியம்

1 யோ. 1:2-3—அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 3நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

ஜீவனின் ஐக்கியத்தின் ஊற்று

ஜீவனின் ஐக்கியம் எங்கிருந்து வருகிறது? அதை ஏற்படுத்துவது எது? அது எதிலிருந்து வருகிறது? ஒன்று யோவான் 1:2-3, “நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் [அப்போஸ்தலர்கள்]…சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு [விசுவாசிகளுக்கு] அறிவிக்கிறோம். நீங்களும் எங்களோடே ஐக்கிய- முள்ளவர்களாகும்படி…எங்களுடைய ஐக்கியம் பிதா- வோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது” என்று கூறுகிறது. நாம் “ஐக்கியம்” கொள்ளக்கூடுமாறு, அப்போஸ்தலர்கள் நமக்கு “நித்திய ஜீவனை” பிரசங்கித்தனர் என்று இந்த வசனங்கள் காண்பிக்கின்றன. (CWWL, 1953, vol. 3, “The Knowledge of Life,” p. 48)

ஜீவனின் ஐக்கியத்திற்கு
விசுவாசிகளின் பொறுப்புகள்

நாம் கர்த்தருடைய ஜீவனின் ஐக்கியத்தில் தொடர்ந்துசெல்ல விரும்பினால் நாம் அபிஷேகத்தின் போதனையின்படி கர்த்தரில் தங்கியிருந்தாக வேண்டும் (1 யோ. 2:27).…அபிஷேகத்தின் போதனையே நம்மில் பரிசுத்த ஆவியின் கிரியை செய்தலாக உள்ளது. நம்மிலுள்ள பரிசுத்த ஆவியின் கிரியைசெய்தலுக்கு நாம் கீழ்ப்படிந்து, இந்தக் கிரியைசெய்தலின்படி கர்த்தரில் தங்கியிருந்தாக வேண்டும். இவ்விதமாக நாம் குறுக்கீடு இன்றி கர்த்தருடைய ஜீவனின் ஐக்கியத்தில் வாழ முடியும். எனினும் பரிசுத்த ஆவியின் கிரியைசெய்தலுக்கு நாம் கீழ்ப்படியாமல் போனவுடனே கர்த்தருடன் உள்ள நம் ஐக்கியம் முறிந்துவிடும்.
நாம் கர்த்தருடைய ஜீவனின் ஐக்கியத்திலே வாழ்ந்தால், உண்மையில் நாம் ஜீவ ஒளியில் இருக்கிறோம். இந்த ஜீவ ஒளியானது, நாம் நம் பாவங்களைப் பார்க்கும்படிச் செய்கிறது. நாம் நம் பாவங்களைப் பார்த்தவுடனே, அதாவது நாம் ஜீவ ஒளியின் ஐக்கியத்திலே அவற்றைப் பற்றி உணர்வுள்ளவர்களாக ஆனவுடனே நாம் நம் பாவங்களை தேவனிடம் அறிக்கைசெய்தாக வேண்டும். நாம் தேவனிடம் நம் பாவங்களை அறிக்கைசெய்ய சித்த- மாயிருந்தால், நாம் தேவனால் மன்னிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுவோம். அப்போது நாம் கர்த்தருடைய ஜீவனின் ஐக்கியத்திற்குள் இன்னும் அதிக ஆழமாகக் கொண்டுவரப்படுவோம். நாம் நம் பாவங்களை அறிக்கைசெய்யாவிட்டால், அவை நம்மோடு நிலைத்திருக்கும், அவை கர்த்தருடனான நம் ஐக்கியத்தை முறித்துவிடும் (1:7, 9).

ஜீவனின் ஐக்கியத்தின் விளைவுகள்
தேவனுடைய ஒளியைப் பெறுதல்

தேவன் ஒளியாயிருக்கிறார். நாம் அவரோடு ஐக்கியப்பட்டால் நம்மிடம் அவரது ஒளி இருக்கும். ஆகவே நாம் அவரது ஒளியைப் பெறுமாறு ஜீவனின் ஐக்கியம் நம்மை தேவனுடைய ஒளிக்குள் கொண்டு வருகிறது. ஜீவனின் ஐக்கியமும், தேவ- னுடைய ஒளியும் பிரிக்கப்பட முடியாது. நாம் ஜீவனின் ஐக்கியத்தில் இருந்தால், நாம் தேவனுடைய ஒளியில் இருக்கிறோம். நாம் தேவனுடைய ஒளியில் இல்லாவிட்டால், நாம் ஜீவனின் ஐக்கியத்தை இழந்துவிட்டோம்.

இரத்தத்தின் சுத்திகரிப்பைப் பெறுதல்

ஜீவனின் ஐக்கியத்தில், நாம் நம் பாவங்களைப் பார்க்கும்படி கர்த்தருடைய ஒளியால் பிரகாசிப்பிக்கப்பட்டு அதன்பின் அவற்றை தேவனிடம் அறிக்கை செய்தால், கர்த்தருடைய இரத்தம் நம் பாவங்களினின்று நம்மைச் சுத்திகரிக்கிறது (வ. 7).

கர்த்தர் நம்மில் தங்கியிருக்கப் பெறுதல்

நாம் கர்த்தருடைய ஜீவனின் ஐக்கியத்திலே வாழ்ந்தால் நாம் கர்த்தரில் தங்கியிருக்கிறோம், நாம் கர்த்தரில் தங்கியிருக்கும் போது கர்த்தர் நம்மில் தங்கியிருப்பதைப் பெறுகிறோம் (யோ. 15:4-5). கர்த்தர் நம்மில் தங்கியிருக்கும் போது நாம் நம் நடை- முறைக்குரிய அனுபவத்தில் அவரையும் அவரது ஜீவனின் ஐசுவரியங்கள் யாவற்றையும் அனுபவித்து- மகிழக் கூடுமாறு அவர் நம் ஜீவனாகவும், வல்லமையாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவும் ஆகிவிடுகிறார்.

தேவனை மகிமைப்படுத்தும்படி
மிகுந்த கனி கொடுத்தல்

ஒரு கிளை தனக்கும் திராட்சைசெடிக்கும் நடுவே எந்த தடைகளும் இன்றி திராட்சைசெடியில் தங்கியிருக்கும் போது, அது தாவர உயிர்ச்சாறின் ஐசுவரியமான நிரப்பீட்டைப் பெற்றுகொண்டு மிகுந்த கனி கொடுக்கிறது. அது போலவே, நாம் கர்த்தரில் தங்கியிருந்து அவரோடு ஐக்கியங்கொள்ளும்போது, நாம் அவரது ஜீவனின் நிரப்பீட்டைப் பெற்றுகொண்டு மிகுந்த கனி கொடுக்கிறோம் (வவ. 4-5). (CWWL, 1932-1949, vol. 3, “Crucial Truths in the Holy Scriptures, Volume 2,” pp. 389-392)

References: CWWL, 1953, vol. 3, “The Knowledge of Life,” ch. 6; CWWL, 1932-1949, vol. 3, “Crucial Truths in the Holy Scriptures, Volume 2,” ch. 22; ஜீவ பாடங்கள், திரட்டு 3, பாடம் 31

நித்ய ஜீவன் தரும்
உள்ளான ஜீவனின் பல்வேறு அம்சங்கள்—ஜீவனின் ஐக்கியம்

737
1 நித்ய ஜீவன் தரும்
ஜீவ ஐக்கியமே,
ஆவியினில் ஐக்கியம்,
பூசல் நீக்குமே.

2 நித்ய ஜீவன் தரும்
தெய்வீக ஐக்கியம்;
கர்த்தர் ஆவியாக,
நம்மோடிழைவார்.

3 ஆவியில் ஜீவன்தான்,
இவ்வைக்கியம் தரும்;
ஆவியினில் ஐக்கியம்
கிருபை அளிக்கும்.

4 ஜீவனின் ஆற்றலால்,
ஐக்கியப்படுவோம்;
ஆவியினில் ஐக்கியம்
ஒளி ஈந்திடும்.

5 சுத்திகரித்தலால்,
ஐக்கியம் காப்போம் நாம்;
அபிஷேகித்தலால்
ஐக்கியம் நிறைவோம்.

6 மரணக் குருசால்
ஐக்கியம் ஆழமாம்;
ஆவியின் மூச்சினால்
ஐக்கியம் உயரும்.

7 பாவ சுயம் விட்டு,
ஐக்கியம் காத்திடும்;
நம்மை தேவனுக்குள்
ஐக்கியம் கொணரும்.