மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பாடம் ஏழு – ஜீவ உணர்வு
எபே. 4:19—உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
ரோ. 8:6—மாம்சத்தின்மேல் பொருத்தப்பட்ட மனம் மரணம்; ஆவியின்மேல் பொருத்தப்பட்ட மனமோ ஜீவனும் சமாதானமுமாம்.
நாம் கிறிஸ்துவில் விசுவாசித்து, ஜீவனில் அவரோடு இணைக்கப்படுகிறபோது, நம்மில் அவரது ஜீவன், ஒரு ஜீவ உணர்வை உற்பத்திசெய்கிறது; அவரோடு இணைக்கப்பட்டுள்ள, அவரோடு ஒரே ஆவியாக உள்ள, அவரை அனுபவிக்கிற நாம், நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் இதற்குக் கவனம் செலுத்தவும் கீழ்ப்படியவும் வேண்டும். (ஜீவ பாடங்கள், திரட்டு 3, ப. 53)
மரண உணர்வு
ஜீவ உணர்வானது எதிர்மறையான பக்கத்தில் மரண உணர்வாக, ஒரு விதமான எதிர்மறையான உணர்வாக உள்ளது. இது ரோமர் 8:6இல் திட்டவட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ரோமர் 8:6, மாம்சத்தின் மீது பொருத்தப்பட்ட மனம் மரணம் என்று கூறுவதால் அது முற்றிலும் புலனுணர்வைப் பற்றிய ஒரு வசனமாக உள்ளது என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். இது ஓர் உண்மை மட்டுமல்ல, இது உணர்ச்சியைப் பற்றிய, அதாவது உணர்வைப் பற்றிய ஒரு காரியமும்கூட. நீங்கள் உங்கள் மனதை மாம்சத்தின் மீது பொருத்தும்போது, உங்களிடம் மரண உணர்வு உள்ளது. அங்கு மரணம் இருப்பதை நீங்கள் உணர்கிறீர்கள்.
மரணத்தின் உணர்வானது—எதிர்மறையான பக்கத்தில்—பலவீனம், வெறுமை, சஞ்சலம், ஓய்- வின்மை, மனஅழுத்தம், வறட்சி, இருள், வேதனை ஆகியவற்றாலான உள்ளான உணர்வாக உள்ளது (வ. 6). நீங்கள் பலவீனமாகவும், வெறுமையாகவும், சஞ்சலமாகவும், ஓய்வின்மையாகவும், மன அழுத்தமாகவும், வறட்சியாகவும், இருளடைந்தும், உள்ளுக்குள் வேதனையிலும் இருப்பதை நீங்கள் உணரும்போது, இது, அங்கே மரணம் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மரணம் நிலவும்போது, இதன் அர்த்தம் நீங்கள் உங்கள் மனதை மாம்சத்தின் மீது பொருத்தியிருக்கிறீர்கள் என்பதே. மாம்சத்தின் மீது மனதைப் பொருத்துவது என்றால் மாம்சத்தில் வாழ்வது என்றே அர்த்தம். மனதுதான் நம் அன்றாட நடையின் திறவுகோல். நாம் வழியிலே நடப்பதற்கான வாயிற்கதவைத் திறவுகோல் திறக்கிறது. மாம்சத்தின் மீது மனதைப் பொருத்துவது என்றால், மாம்சத்தின் வாயிற்கதவைத் திறந்து, மாம்சீக வழியில் நடப்பது என்றே அர்த்தம். இவ்வாறு, மரணம் நிலவுதை நீங்கள் உணரும் போது, நீங்கள் மாம்சத்தில் வாழ்ந்துகொண்டு, நடந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தறிய வேண்டும். இதுவே ஜீவ உணர்வின் எதிர்மறையான செயல்பாடு.
ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு
நேர்மறையான பக்கத்தில் ஜீவ உணர்வானது பின்வரும் நேர்மறையான விஷயங்களைப் பற்றிய ஓர் புலனுணர்வை நமக்குக் கொடுப்பதற்குச் செயல்படுகிறது—பலம், திருப்தி, சமாதானம், ஓய்வு, விடுதலை, உற்சாகம், நீர்ப்பாய்ச்சுதல், பிரகாசம், ஆறுதல் ஆகியன (வ. 6). பலவீனமாக இருப்பதற்குப் பதிலாக நாம் பலமாக இருக்கிறோம். வெறுமையாக இருப்பதற்குப் பதிலாக நாம் திருப்தியாக இருக்கிறோம். சஞ்சலத்திற்கும் ஓய்வின்மைக்கும் பதிலாக நம்மிடம் சமாதானமும் ஓய்வும் இருக்கிறது. மனஅழுத்தத்திற்குப் பதிலாக நம்மிடம் விடுதலையும் உற்சாகமும் இருக்கிறது. உற்சாகம் என்பது ஜீவிக்கும்தன்மையின் ஒரு விதமான நிலைமை ஆகும். வறட்சிக்கு முரணான நீர்ப்பாய்ச்சுதலின் உணர்வும், இருளுக்கு முரணான பிரகாசத்தின் உணர்வும், வேதனைக்கு முரணான ஆறுதலின் உணர்வும் நம்மிடம் உள்ளது. இவை யாவும் ஜீவ உணர்வின் செயல்பாட்டிலிருந்து நாம் பெறும் நேர்மறையான உணர்வுகள் ஆகும். நம்மிடம் இவ்விதமான உணர்வுகள் இருக்கும் போது, இது ஜீவ உணர்வின் கிரியை செய்தல் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்.
இவ்வாறு, ஜீவ உணர்வே ரோமர் 8:6இல் மறைவாய்க் காட்டப்பட்டுள்ள முக்கியமான விஷயம். ஆவியின் மீது மனதைப் பொருத்துதல் ஜீவனும் சமாதானமும். இது முற்றிலும் உணர்வு மற்றும் புலனுணர்வு பற்றிய ஒரு காரியம். இந்த உணர்வே ஜீவ உணர்வு. அது நம்மை வழிநடத்துவதற்கு மட்டுமல்லாமல் நம்மை ஆளுகைசெய்வதற்கும், நம்மைக் கட்டுப்படுத்துவதற்கும், நமக்குத் திசைக்காட்டுவதற்கும் செயல்படுகிறது. மரணத்தின் உணர்வு, ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு ஆகியவை ஜீவ உணர்வின் அர்த்தத்தின் இரண்டு அம்சங்களாக உள்ளன.
மனச்சாட்சியின் உணர்வோடு தொடர்புடையது
எதிர்மறையான பக்கத்திலும் நேர்மறையான பக்கத்திலும், ஜீவ உணர்வு எப்போதும் மனச்சாட்சி- யின் உணர்வோடு தொடர்புடையதாக உள்ளது. எபேசியர் 4:19, அவிசுவாசிகள் “உணர்வில்லாதவர்களாய்” உள்ளனர் என்று கூறுகிறது. இங்குள்ள உணர்வு, முக்கியமாக ஒருவரின் மனச்சாட்சியின் உணர்வைக் குறிக்கிறது. பொதுவாக அவிசுவாசிகள் தங்கள் மனச்சாட்சியின் உணர்வுக்கு அக்கறைப்படுவதில்லை. தங்கள் உள்ளான உணர்வைக் குறித்து மிகவும் கவனக்குறைவான மக்களே அதிக பாவகரமானவர்கள். நல்ல நபர்களாக இருக்க பெறுமுயற்சி செய்யும் அவிசுவாசிகள் நிச்சயமாகத் தங்கள் உள்ளான உணர்வுக்குக் கவனஞ்செலுத்து- வார்கள். வெறுமனே சட்டத்தால், காவலர்களால் ஆளுகைசெய்யப்படுவது ஒழுக்கநெறி தரத்திற்கு ஏற்றது அல்ல. அவிசுவாசிகளைப் பொறுத்தவரை கூட, அவர்களின் ஒழுக்கநெறி தரம் அவர்களின் மனச்சாட்சியின் உள்ளான உணர்வின்படி இருந்தாக வேண்டும். கண்டிப்பாக ஒரு விசுவாசிக்கு, ஜீவ உணர்வு என்பது வெறும் மனச்சாட்சியைப் பற்றிய காரியம் மட்டுமல்ல, மாறாக அது ஜீவ உணர்வின்படியான, அதாவது தேவனுடைய ஜீவனின்படியான மனச்சாட்சியின் தன்னுணர்வோடு தொடர்புடையது.
ஜீவ உணர்வின் செயல்பாடு
நாம் நம் வாழ்க்கையின் ஊற்றை அறியும்படிச் செய்தல்
நாம் இயற்கையான ஜீவனில் வாழ்ந்து கொண்டிருந்தால், ஏற்படும் உணர்வு மரணத்திற்குரியதாக இருக்கிறது, இது முற்றிலும் எதிர்மறையான பக்கத்தில் உள்ளது. அப்போது எல்லா எதிர்மறையான குறிப்புகளோடுகூடிய மரண உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நாம் தெய்வீக ஜீவனில் வாழ்ந்துகொண்டிருந்தால் ஏற்படும் உணர்வு ஜீவனுக்குரியதாக உள்ளது, அது முற்றிலும் நேர்மறையான பக்கத்தில் உள்ளது. அப்போது எல்லா நேர்மறையான குறிப்புகளோடுகூடிய ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நாம் இயற்கையான ஜீவனில் வாழ்கின்றோமா அல்லது தெய்வீக ஜீவனில் வாழ்கின்றோமா என்பதை ஜீவனின் உணர்வு நாம் அறியும்படிச் செய்கிறது. ஜீவனின் உணர்வு நம்மை வழிநடத்தி, நம்மை ஆளுகைசெய்து, நம்மைக் கட்டுப்படுத்தி, நமக்குத் திசைக்காட்டுகிறது. இந்தச் சத்தியம் இன்றைய கிறிஸ்தவத்தில் முற்றிலும் தொலைந்துவிட்டது. இன்றைய கிறிஸ்தவத்தின் போதனைகளில் பெரும்பாலானவை ஒழுக்கநெறி மீதும், நன்நடத்தைமீதும் குவிமையம் கொண்டுள்ளது. நாம் இயற்கையான ஜீவனில் வாழ்கின்றோமா அல்லது தெய்வீக ஜீவனில் வாழ்கின்றோமா என்பதை நாம் அறியும்படிச் செய்கின்ற இந்த உள்ளான ஜீவ உணர்வுக்கு அவர்கள் அக்கறைப்படுவதில்லை. நாம் கிறிஸ்துவை நம் ஜீவனாக நாடித் தேடிக் கொண்டிருப்பதால், நாம் இந்த ஜீவ உணர்வுக்கு அக்கறைச் செலுத்தியாக வேண்டும். பலம், திருப்தி, சமாதானம், ஓய்வு, விடுதலை, உற்சாகம், நீர்ப்பாய்ச்சுதல், பிரகாசம், ஆறுதல் போன்ற நேர்மறையான உணர்வுகள் நம்மிடம் இல்லையென்றால், நாம் தெய்வீக ஜீவனில் வாழவில்லை என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும்; அப்படியென்றால், நாம் இயற்கையான ஜீவனில்தான் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்.
நாம் மாம்சத்தில் வாழ்கின்றோமா அல்லது ஆவியில் வாழ்கின்றோமா என்பதை நாம் அறியச்செய்தல்
ஜீவ உணர்வின் செயல்பாடு, நாம் இயற்கையான ஜீவனில் வாழ்கின்றோமா அல்லது தெய்வீக ஜீவனில் வாழ்கின்றோமா என்று நாம் அறியச்செய்வதும் ஆகும். இயற்கையான ஜீவனில் வாழ்வது வேறு, மாம்சத்தில் வாழ்வது வேறு. இவை ஒன்றே என்று நீங்கள் கருதக்கூடும், ஆனாலும் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. மாம்சம் எப்போதும் கெட்டது. நல்ல மாம்சம் என்று எதுவும் இல்லை. ஆனால் இயற்கையான ஜீவன் சில சமயங்களில் நல்லதாக இருக்கக் கூடும். இயற்கையான ஜீவன் தெய்வீக ஜீவனுக்கு எதிராக உள்ளது, மாம்சம் ஆவிக்கு எதிராக உள்ளது.
ஆகவே ஜீவ உணர்வின் செயல்பாட்டைக் குறித்து இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது அம்சம், நீங்கள் தெய்வீக ஜீவனில் வாழ்கின்றீர்களா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதாகும், இரண்டாவது அம்சம், நீங்கள் உங்கள் ஆவியில் வாழ்கின்றீர்களா என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதாகும். எதிர்மறையாகப் பேசுவதானால், அது நீங்கள் ஓர் இயற்கையான நபராக இயற்கையான ஜீவனில் வாழ்கின்றீர்களா என்பதையும், நீங்கள் மாம்சத்தில் வாழ்கின்றீர்களா என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. நம் அனுபவத்தில் நாம் எப்போதும் இந்த இரண்டு விஷயங்களை வேறுபடுத்திக் காண முடியும். நாம் மாம்சத்தில் வாழ்கிறோம், நடக்கிறோம், செயல்படுகிறோம் என்ற உணர்வு நமக்குப் பல வேளைகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில் நாம் அவ்வளவு மாம்சீகமாக இல்லாவிட்டாலும், நாம் இன்னும் தெய்வீக ஜீவனில் அல்லாமல் நம் இயற்கையான ஜீவனில், நம் இயற்கையான மனிதனில் நடக்கிறோம் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
இந்தக் குறிப்புகளுக்குள் நுழைய நமக்கு அதிக ஜெபம் தேவை. இந்தப் பாடம் எழுத்தின்படி வெறும் அறிவுக்குரிய ஓர் உபதேசமாக இருக்கக்கூடாது. அது நம் அனுபவத்திலிருந்து வரும் ஜீவனுக்குரிய ஏதோவொன்றாக இருந்தாக வேண்டும். ஜெபித்து நம்மையே ஜீவ உணர்வுக்குள்ளாக கொண்டுசெல்ல நமக்கு அதிக ஜெபம் தேவை. அப்போது…நம் செய்தி, எவ்வாறு நாம் இந்த விஷயங்களை அனுபவித்திருக்கிறோம், எவ்வாறு இந்த ஜீவ உணர்வு நமக்கு அவ்வளவு நிஜமானதாகவும் நடைமுறைக்குரியதாகவும் உள்ளது, எவ்வாறு நாம் நாளுக்கு நாள் நமக்கு உள்ளிருக்கும் இவ்விதமான கட்டுப்படுத்துகின்ற, வழிநடத்துகின்ற, திசைகாட்டுகின்ற மூலக்கூறின் கீழ் இருக்கிறோம் என்று மக்களுக்குச் சொல்லுகின்ற ஒரு விதமான ஐக்கியமாக இருக்கும். (CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” pp. 544-546, 548-549)
References: ஜீவ பாடங்கள், திரட்டு 3, பாடம் 32; CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” ch. 11
THERE IS A CERTAIN SENSE OF LIFE
Various Aspects of the Inner Life— The Sense of Life – 738
1. There is a certain sense of life
With life of every kind;
And in th’ eternal life in us
It is a sense divine.
2. The higher any life may be,
The better is its sense;
The life divine the highest is
And has the highest sense.
3. It is the sense of life in us,
It is the sense of God;
‘Tis in our spirit made alive,
And more than sense of good.
4. It is the inner sense in us,
The inmost consciousness,
Discerning matters inwardly,
God’s will to thus express.
5. ‘Tis by this sense that God we know,
The sense of inner life;
‘Tis pow’rful and spontaneous,
And not of any strife.
6. The greater is our growth in life,
The keener is this sense;
The more we walk and act in life,
The more it is intense.
7. The sense of life when exercised
Will make our spirit bold,
And by this inner sense of God
True fellowship we hold.