மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பாடம் ஆறு – துதி
எபி. 13:15—ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
ஒரு பரிசுத்தவானின் ஆவிக்குரிய
வாழ்க்கையின் அதிஉயர்ந்த வெளியாக்கம்
துதியே தேவனுடைய பிள்ளைகளால் செய்யப்படும் அதிஉயர்ந்த வேலை. ஒரு பரிசுத்தவானின் ஆவிக்குரிய வாழ்க்கையின் அதிஉயர்ந்த வெளியாக்கம், தேவனுக்கான அவனது துதிதான் என்று நாம் கூறலாம். தேவனுடைய சிங்காசனமே பிரபஞ்சத்திலுள்ள அதிஉயர்ந்த ஸ்தானம் ஆகும், எனினும் அவர் “இஸ்ரயேலின் துதிகளின் மீது சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டவராக” உட்கார்ந்திருக்கிறார் (சங். 22:3). தேவனுடைய நாமமும், தேவன்தாமே கூட துதி மூலமாக உயர்த்தப்படுகிறார்.
ஆவிக்குரிய வெற்றி துதியைச் சார்ந்திருத்தல்
நீங்கள் ஜெபிக்கும்போது நீங்கள் இன்னும் உங்கள் சூழ்நிலையின் மத்தியில்தான் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் துதிக்கும்போது நீங்கள் உங்கள் சூழ்நிலைக்கு மேலாக உயரப் பறக்கிறீர்கள்….அநேக வேளைகளில், ஜெபம் தோல்வியுறும் இடத்திலே, துதி வேலைசெய்கிறது. இது ஒரு மிகவும் அடிப்படையான கோட்பாடு. உங்களால் ஜெபிக்க முடியாவிட்டால், துதித்துப் பாருங்களேன்? உங்கள் வெற்றிக்காகவும், நீங்கள் வெற்றியிலே மேன்மை பாராட்டுவதற்காகவும் கர்த்தர் உங்கள் கரங்களில் இன்னொரு விஷயத்தை வைத்திருக்கிறார்.
நாம் இந்த மேலோங்குகின்ற ஆவியை, அதாவது எல்லாத் தாக்குதல்களையும் விஞ்சுகிற இந்த ஆவியைப் பராமரித்துப் பேணுவதற்குக் கற்க வேண்டும். ஜெபங்கள் நம்மைச் சிங்காசனத்திற்குக் கொண்டுவராதிருக்கக்கூடும், ஆனால் துதி எச்சம- யத்திலும் நம்மைச் சிங்காசனத்திற்கு நிச்சயமாகவே கொண்டுவருகிறது. ஜெபங்கள் ஒவ்வொரு முறையும் ஜெயங்கொள்ள நமக்குத் திறனளிக்காதிருக்கக்கூடும், ஆனால் துதி ஒருமுறை கூட தோல்வியுறுவதில்லை….துதியைப் போல் வேறு எதுவும் கர்த்தருடைய கரத்தை அவ்வளவு துரிதமாக நகர்த்துவதில்லை. ஜெபம் கர்த்தருடைய கரத்தை நகர்த்து- வதற்கான அதி வேகமான வழி அல்ல; துதியே அதி வேகமான வழி.
ஆவிக்குரிய வெற்றி யுத்தத்தை அல்ல, துதித்- தலையே சார்ந்துள்ளது. நாம் நம் துதியின் மூலம் சாத்தானை ஜெயங்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். நாம் ஜெபத்தால் மட்டுமல்ல, துதியாலும் சாத்தானை ஜெயங்கொள்கிறோம். பலர் சாத்தானின் கொடூரத்தையும் தங்கள் சொந்த பலவீனத்தையும் அறிந்துள்ளனர், எனவே போராடி ஜெபிப்பதற்குத் தீர்மானிக்கின்றனர். எனினும், இங்கு ஒரு மிக ஒப்பற்ற கோட்பாட்டைக் காண்கிறோம்: ஆவிக்குரிய வெற்றி யுத்தத்தை அல்ல, துதியையே சார்ந்துள்ளது.
துதியின் நடைமுறைப் பயிற்சி
நாம் தேவனிடம் ஜெபிப்பது மட்டுமல்லாமல், அதைவிட அதிகமாக, தேவனைத் துதிப்பதற்குக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். நாம் நம் கிறிஸ்தவ நடையின் தொடக்கம் முதற்கொண்டே துதியின் உட்கருத்தைப் பார்க்க வேண்டும். நாம் தேவனை இடைவிடாமல் துதித்தாக வேண்டும். தாவீது ஒரு நாளைக்கு ஏழுதரம் துதிப்பதற்கு தேவனிடமிருந்து கிருபையைப் பெற்றுக்கொண்டான். ஒவ்வொரு நாளும் தேவனைத் துதிப்பது ஒரு நல்ல பயிற்சியும், ஒரு மிக நல்ல பாடமும், ஒரு மிக நல்ல ஆவிக்குரிய பழக்கமும் ஆகும். நாம் அதிகாலையில் விழித்தெழும் போது தேவனைத் துதிக்கக் கற்க வேண்டும். நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, நாம் ஒரு கூடுகையில் இருக்கும் போது, அல்லது நாம் தனியாக இருக்கும் போது, நாம் அவரைத் துதிக்கக் கற்க வேண்டும். நாம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஏழு முறையாவது தேவனைத் துதிக்க வேண்டும். தன் துதியில் தாவீது நம்மை முந்தும்படி விடாதீர்கள். ஒவ்வொரு நாளும் தேவனைத் துதிக்க நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், எபிரெயர் 13இல் பேசப்பட்டுள்ள விதமான துதி பலியைக் கொண்டிருப்பது கடினம். (CWWN, vol. 48, “Messages for Building Up New Believers,” pp. 247, 251-254, 249)
குழந்தைகள் பாலகர் வாயினால் கர்த்தர்
பெலன் (துதி) உண்டுபண்ணியிருக்கிறார்
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, கர்த்தர் தம்முடைய சத்துருக்களினிமித்தம் (சங். 8:2) குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் (துதி—மத். 21:16) உண்டுபண்ணியிருக்கிறார்.
குழந்தைகளும் பாலகர்களும்தான் மனிதர்கள் மத்தியில் இருப்பதிலேயே இளயவர்கள், சிறியவர்கள், பெலவீனர்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம், இது கர்த்தருடைய மீட்பில் அவருடைய வேலையின் அதி உயர்ந்த முழுநிறைவேற்றத்தைக் சுட்டிக்காட்டுகின்றது. தேவனுடைய இரட்சிப்பில் உச்சநிலை முழுநிறைவேற்றம் என்னவெனில், இருப்பதிலேயே சிறியவர்களையும் பெலவீனமானவர்களையும் தேவனைத் துதிக்கும்படி சீர்பொருத்துவதே ஆகும்.
கர்த்தரைத் துதித்தல் கிறிஸ்துவை அனுபவித்துமகிழும் நம் அனுபவமகிழ்ச்சியின்
அதி உயர்ந்த அனுபவமாக இருத்தல்
நாம் கிறிஸ்துவின் மீட்பை முற்றுமுடிய அனுபவித்துமகிழும்போது, கர்த்தரைத் துதிக்க நமக்கு தைரியம் இருக்கும். நாம் சோர்வடைந்து, ஏமாற்றமடையும் போது, நாம் அலுத்துக்கொள்ளவும், பெருமூச்சுவிடவும் கூடும். ஆனால் நாம் கர்த்தரைத் துதிக்கும்போது, இதுவே கிறிஸ்துவை அனுபவித்துமகிழும் நம் அனுபவமகிழ்ச்சியின் அதிஉயர்ந்த அனுபவம். கிறிஸ்துவை அனுபவித்துமகிழும் அனுபவமகிழ்ச்சியானது, கர்த்தருக்கு ஒரு முழுமையான மற்றும் ஒரு பூரணமாக்கப்பட்ட துதியை ஏறெடுக்கும் அளவிற்கு பலமானவர்களாக நம்மை ஆக்கிவிடும். எவ்வாறு துதிப்பது என்று நாம் அனைவரும் கற்றுகொள்ள வேண்டும். இதுவே, தேவன் தம் மீட்பில் கிறிஸ்துவின் மூலமாக செய்துமுடித்திருக்கும் அதி உயர்ந்த முழுநிறைவேற்றம்.
நாம் அனைவரும் சபை வாழ்க்கையில் குழந்தைகளாகவும் பாலகர்களாகவும் இருக்க வேண்டும். நாம் நம் பெளதிக வயதில் வயதானவர்களாக இல்லாதிருக்கக்கூடும், ஆனாலும் நம் கிறிஸ்தவ அனுபவத்தில் நாம் களைப்படைந்த, சோர்வடைந்த வயோதிகர்களைப் போன்று இருக்கக்கூடும். நாம் கர்த்தரில் இன்னும் இளமையாக இருந்தால், கூடுகைகளுக்குப் போகும் வழியிலே நாம் கர்த்தரைத் துதிப்போம். நாம் லாஸ் ஏஞ்சலஸில் உள்ள எல்டன் அரங்கத்தில் இருந்தபோது, ஒரு குறிப்பிட்ட சகோதரன் ஒரு கூடுகைக்குச் செல்ல வண்டி ஓட்டிகொண்டிருக்கையில் அவன் கர்த்தருக்கு உரத்த சத்தமாகத் துதிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். ஒரு காவல்துறை அதிகாரி அவனைப் பார்த்து, அவனைப் பின்தொடர்ந்து, வண்டியை நிறுத்தும்படி கூறினார். அவனுக்கு என்ன நேரிட்டது என்று இந்தச் சகோதரனிடம் அந்தக் காவலர் கேட்டார். அதற்கு இந்தச் சகோதரன், “நான் இயேசுவைத் துதித்துக் கொண்டிருந்தேன்!” என்று கூறினான். அப்போது அந்தக் காவலர் அவனைப் போக அனுமதித்துவிட்டார். இதுவே கூடுகைக்கு வருவதற்கான சரியான வழி. நாம் கூடுகைக்குச் செல்ல வண்டி ஓட்டும்போது நாம் பாடித், துதித்து, “ஆமென்! அல்லேலூயா! ஆமென்! கர்த்தராகிய இயேசுவே! ஆமென்!” என்று உரக்கச் சத்தமிட வேண்டும். நாம் மிகவும் வயதானவர்களாக ஆகிவிட்டதால் நம்மில் அநேகர் இதைச் செய்ய மாட்டோம். வயோதிகராக இருப்பதென்றால் பெலவீனமாக இருப்பது என்று அர்த்தம். நாம் அதிகமாக உரக்க சத்தமிடவும், அதிகமாக அல்லேலூயா கூறவும், அதிகமாக ஆமென் கூறவும், அதிகமாகத் துதிக்கவும் வேண்டும். நம் கூடுகை ஆனந்தச் சத்தத்தினால் நிறைந்திருக்க வேண்டும்.
கர்த்தர் தம் சத்துருக்களினிமித்தம் இத்தகைய ஒரு முழுநிறைவான வேலையைச் செய்கிறார். அவர் சாத்தானை அவமானப்படுத்த இதைச் செய்கிறார். “சாத்தானே, நீ அந்த அளவிற்குச் செய்துவிட்டாய். எவ்வளவு அதிகமாய் என்னால் செய்ய முடியும் என்பதை நான் உனக்குக் காண்பிக்- கட்டும். என்னால் அதிகமாக, உன்னால் செய்ய முடிவதைவிட மிக அதிகமாகச் செய்ய முடியும். என் பிள்ளைகள் எல்லோரையும் இப்போது உற்றுப் பார். அவர்கள் அனைவரும் என்னைத் துதிக்கின்ற குழந்தைகளாகவும் பாலகர்களாகவும் இருக்கின்றனர்” என்று தேவன் கூறுவதுபோல் தோன்றுகிறது. இந்தத் துதித்தல் சாத்தானின் வாயை அடைத்துப்போடுகிறது. எதிரியின் பேசுதலானது நம் துதித்தலால் நிறுத்தப்படுகிறது. கர்த்தர் (உள்ளே இருக்கும்) சத்துருக்களினிமித்தமும், (வெளியே உள்ள) பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போடுவதற்காகவும் நம் வாய்களிலிருந்து பெலன் உண்டுபண்ணுகிறார், துதியைப் பூரணப்படுத்துகிறார்.
நம் துதி பூரணப்படுத்தப்பட வேண்டியிருத்தல்
கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தரைத் துதிக்கக் கூடும், ஆனால் நம் துதி பூரணப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வானங்களுக்கு மேலான அவரது மகத்துவத்திற்காகவும் பூமியின்மீது அவரது மேன்மைக்காகவும் நாம் அவரைத் துதிக்க வேண்டும். அடுத்து, அவர் நம்மைச் சந்திக்க வருவதற்கான அவரது மாம்சமாகுதலுக்காக நாம் அவரைத் துதிக்கலாம். அடுத்து, இதைத் தொடர்ந்து, நாம் அவரது மனித வாழ்க்கைக்காக, அவரது மரணத்திற்காக, அவரது உயிர்த்தெழுதலுக்காக, அவரது பரமேறுதலுக்காக, அவரது இராஜ்ஜியத்திற்காக அவரைத் துதிக்க வேண்டும். நாம் இந்தக் காரியங்கள் எல்லாவற்றைக் கொண்டும் அவரைத் துதிக்க வேண்டும். அப்போது நம் துதிகள் பூரணப்படுத்தப்படும், முழுமையாக்கப்படும். இந்தத் துதியே, குழந்தைகள் பாலகர் வாயிலிருந்து வரும் பெலன். இத்தகைய பூரணப்படுத்தப்பட்ட துதியே மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், இந்தப் பூமியில் ஆளுகைசெய்ய திரும்பிவருதல் ஆகிய கர்த்தருடைய வேலையின் உச்சநிலை முழுநிறைவேற்றம் ஆகும்.
நாம் கர்த்தருடைய பந்திக்கு வரும்போது, நாம் எல்லா விதமான மனித பேசுதலையும் மனித செய்கையையும் நிறுத்திவிடுகிறோம். நாம் நம் வேலையை நிறுத்திவிடுகிறோம். நாம் பந்தியில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்வதற்காக—அவரைத் துதிப்பதற்காக மட்டுமே—இருக்கிறோம். துதிப்பதற்கு, நாம் நம் வேலையை நிறுத்தியாக வேண்டும். இவ்வாறு, கர்த்தருடைய பந்தியில், நாம் எல்லாரும் நிஜமான குழந்தைகளாகவும் பாலகர்களாகவும் இருக்கிறோம். இங்கு நாம் கர்த்தரைத் துதிக்கும்படி நம் செய்கைகள் எல்லாவற்றினின்றும் நிறுத்தப்பட்டு கொண்டு இருக்கையில், சத்துருக்கள், பகைஞன், பழிகாரன் யாவரும் தோற்கடிக்கப்படுகின்றனர். இது தேவனுடைய எதிரிக்கு ஓர் அவமானம்.
நாம் கர்த்தருடைய பந்தியின் நிலைமையிலும் ஆவியிலும் நிலைத்திருக்க வேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்க்கை கர்த்தருடைய பந்தியைப் போன்று இருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய பந்திக்குப் பிறகு வீட்டிற்குச் செல்லும்போது, நாம் கர்த்தரைத் துதிப்பதைத் தொடர வேண்டும். நாம் மிகையாகச் செய்யாதிருக்கக் கற்றுகொள்ள வேண்டும். மறு பக்கத்தில், நாம் சோம்பலாக இருக்கக் கூடாது. குறிப்பு என்னவென்றால், நாம் நம் மனித செய்கைகளை நிறுத்திவிட்டு, வெறுமனே கர்த்தரைத் துதிப்பவர்களாக இருக்க வேண்டும். (Life-study of the Psalms, pp. 60-61, 69)
References: CWWN, vol. 48, “Messages for Building Up New Believers,” ch. 16; Life- study of the Psalms, msg. 5
கர்த்தரை நாம் புகழ்ந்தால்
கர்த்தரைத் துதித்தல்—
அவரது வெற்றியும், உயர்த்தப்படுதலும்
1095
1 கர்த்தரை நாம் புகழ்ந்தால்
அவர் மாட்சி கொள்வார்,
நம் குரல் உயர்த்தினால்
தூதர்கள் கேட்பாரே;
உலகோர் குரல் கேட்டு
தேவனைப் புகழ்வர்,
சாத்தான் சேனை நடுங்கி
நம் முன் ஓடிப் போமே.
2 நம் மௌனம் நம்மை வீழ்த்தும்
பிசாசு நகைப்பான்;
யுத்தம் தொடங்கி முற்றும்
சாத்தான் துரத்துவோம்.
“துதியின் பலிகளால்”
வெற்றி முழக்கத்தால்—
தேவன் தெரிந்த பேதையாய்
நம் முகம் மாறட்டும்!
3 நம் இரட்சகரைப் போற்ற
உலகு உதவாது,
மகிமை அவர்க்குத் தர
ஓர் வார்த்தை கூறாது;
விண்ணேறினோரை போற்ற
ஒப்புதல் தேவையா?
ஆவி விடுவி, கூவி!
கிருபை அருள்வார்!
4 சகோதரா சகோதரி!
ஆர்ப்பரித்திடுங்கள்!
நம் சத்தம் தேவ வெற்றி,
ஆசீரும், சொல்லட்டும்.
இது துதியின் நேரம்,
எவ்விலையாயினும்!
தம் பரிவில் மேன்மைகொள்,
இரட்சிப்பில் மகிழு!