மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் ஐந்து -பாடல்கள் பாடுதல்

எபே. 5:18-19—துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியில் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் 19ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி (கிரே.).

ஒரு பாடலின் திசை
தேவனை நோக்கி

பெரும்பாலான பாடல்கள் தேவனை நோக்கியே ஏறெடுக்கப்படுகின்றன. இந்தக் கவிதையின் உட்- பொருள் தேவனே. சங்கீதப் புத்தகத்திலே உள்ள பெரும்பாலான சங்கீதங்கள் தேவனை நோக்கி ஏறெடுக்கப்படும் கவிதையாக இருக்கின்றன. சங்- கீதம் 51, தேவனைநோக்கி ஜெபிக்கும் ஒரு பிரபலமான ஜெப-சங்கீதம் ஆகும். துதிப்பாடல்கள், நன்றிகூரும் பாடல்கள், ஜெபப்பாடல்கள் ஆகிய எல்லாப் பாடல்களும் தேவனை நோக்கியே பாடப்படுகின்றன.

மனிதர்களை நோக்கி

மற்ற சங்கீதங்கள் மனிதர்களை நோக்கிப் பாடப்படுகின்றன. சங்கீதம் 37 மற்றும் 133, இப்படிப்பட்ட சங்கீதங்களின் எடுத்துக்காட்டுகள். இவ்விதமான பாடல் மனிதர்களுக்குப் பிரசங்கிக்கிறது அல்லது தேவனிடம் செல்ல மனிதர்களை உற்சாகப்படுத்துகிறது. சுவிசேஷப் பாடல்கள், புத்திசொல்லும் பாடல்கள் அனைத்தும் மனிதர்களுக்குப் பாடப்படுகின்றன.

ஒருவன் தன்னையே நோக்கி

இன்னும் வேதாகமத்தில் ஒரு மூன்றாம் வித-மான பாடல் உள்ளது—நமக்குநாமே பாடும் பாடல்கள் உள்ளன. சங்கீதப் புத்தகத்தில் பல பகுதி- களில், என் ஆத்துமாவே! என்ற சொற்றொடர் இருக்கிறது. இந்தப் பாடல்களெல்லாம் தன்னைத்தானே நோக்கிப் பாடப்படுகின்றன.

ஒருவரையொருவர் நோக்கி

கொலோசெயர் 3:16 மற்றும் எபேசியர் 5:19, பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் பாடுவதைக் குறித்து பேசுகிறது. இந்தப் பரஸ்பர பாடுதலில், ஒரு சகோதரன் பாடிய பிறகு, இன்னொரு சகோதரன் பாடி மாறுத்தரம் அளிக்கிறான். முதல் சகோதரன் மீண்டும் பாடக்கூடும், இந்த மற்ற சகோதரன் மீண்டும் மாறுத்தரம் அளிக்கக்கூடும். அல்லது பல சகோதரர்கள் பாடக்கூடும், இன்னொரு குழு சகோதரர்கள் பாடி மாறுத்தரம் அளிக்கின்றனர். (CWWN, vol. 48, “Messages for Building Up New Believers,” pp. 241-243)

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட
பாடுவதின் மூலம் நம் ஆவியைப் பயிற்சிசெய்தல்

நீங்கள் உங்கள் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும். நீங்கள் உங்கள் ஆவியைப் பயிற்சிசெய்து உங்கள் ஆவியைப் பயன்படுத்தும் போது, பரிசுத்த ஆவி உங்கள் ஆவியை நிரப்புவார். ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான அதி சிறந்த வழி ஜெபிப்பதும் பாடுவதுமே. (CWWL, 1985, vol. 4, “Meeting to Speak the Word of God,” p. 279)

சங்கீதங்களிலும், கீர்த்தனைகளிலும்,
ஆவிக்குரிய பாடல்களிலும்
கிறிஸ்துவைப் பேசுதல்

எபேசியர் 5:18-19 இல் பவுல், “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியில் நிறைந்து சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி” என்று கூறுகிறான். நாம் சகலத்தையும்-உள்ளடக்கிய, முழு நிறைவேற்றமடைந்த ஆவியாகிய மூவொரு தேவனைக் கொண்டு நம் ஆவியில் நிரப்பப்- பட வேண்டும். பொதுவான, உலகத்திற்குரிய மொழியில் பேசி அல்ல, மாறாக சங்கீதங்களிலும், கீர்த்தனைகளிலும், ஆவிக்குரிய பாடல்களிலும் ஒருவரோடொருவர் பேசுவதின் மூலம்தான் இந்த நிரப்புதல் நிகழ்கிறது. நம் பாடல் புத்தகத்தில், சத்தியத்தால் நிறைந்த அநேக நல்ல பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், குறிப்பாக, நம்மால் எழுதப்பட்ட ஒவ்வொரு பாடலும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களால் நிறைந்த ஒரு நல்ல செய்தி ஆகும். உதரணத்திற்கு, பாடல்கள், #501 நித்தியத்தில் வரம்பற்ற தேவனாக இருந்த கிறிஸ்து தேவனுடைய ஒளிர்வீசும் வெளியாக்கமாக எவ்வாறு காலத்தில் வரம்புக்குட்படுத்தப்பட்ட ஒரு வரம்புள்ள மாந்தனாக ஆனார் என்பதை விவரிக்கிறது. தேவனுடைய சாட்சாத்து வெளியாக்கமாக, அவர் தம் மாம்சத்தில் மீட்பை நிறைவேற்ற நமக்காக மரித்தார். அதன்பின் அவர் நம்மோடு ஒன்றாக இருக்க ஜீவன்-தரும் ஆவியானார். நாம் பாடல்களைக் கொண்டு கிறிஸ்துவைப் பேச கற்றாக வேண்டும். (CWWL, 1985, vol. 3, “The Divine Speaking,” p. 287)
புதிய ஏற்பாட்டின்படி சங்கீதங்களும், கீர்த்தனைகளும், ஆவிக்குரிய பாடல்களும் பாடுவதற்கு மட்டு மல்லாமல் பேசுவதற்கும் ஏற்றவை. சில நேரங்களில், நாம் பாடுவதின் மூலம் ஊக்கமடைகிறோம். ஆனால் மற்ற தருணங்களில், நியூமாவால் நிரப்பப்பட்ட பேசுதலானது பாடுவதை விட அதிக ஊக்க- மூட்டுவதாக இருக்கக்கூடும். நாம் நியூமாவில் குறைவுபட்டு, மந்தமாக இருந்தால், நம் பேசுதல் ஊக்கமளிக்காது. ஆனால் நாம் நியூமாவால் நிறைந்து இருந்தால் நம் பேசுதல் தாக்கத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஊக்கமூட்டும். இது சரளமாகப் பேசுவதல்ல; இது தாக்கத்தோடு கூடிய பேச்சு. (Life-study of Ephesians, pp. 434-435)

References: CWWN, vol. 48, “Messages for Building Up New Believers,” lsn. 15; CWWL, 1985, vol. 4, “Meeting to Speak the Word of God,” msg. 3; CWWL, 1985, vol 3, “The Divine Speaking,” ch. 2; Life-study of Ephesians, msg. 51; CWWL, 1987, vol. 2, “Words of Training for the New Way,” msg. 11

பாடுவோம் கர்த்தரை நம் ஆவியில்
கிறிஸ்துவை அனுபவித்தல்—ஆவியில்

1141
1 பாடுவோம் கர்த்தரை நம் ஆவியில்,
பாடுவோம் கர்த்தரை உள்ளத்தில்,
பாடுவோம் இயேசுவுக்கு அல்லேலூயா!
கிறிஸ்துவோடு ஒன்றாய் இழைவோம்.

2 பல்லாண்டுகள் மதத்தில் இருந்தோம்,
பல்லாண்டு மனதில் அலைந்தோம்,
பல்லாண்டு உணர்ச்சியில் திரிந்தோம்,
தேடியும், என்றும் கண்டிலோம்.

3 கற்கிறோம் நம் ஆவிக்குத் திரும்ப,
கிறிஸ்துவை ஜீவனாய்க் கொண்டிட;
இயேசுவை விருந்தாகப் புசிக்க
போராட்டம் இல்லை, விடுதலையே!

4 அல்லேலூயா! உள்ளில் புதிதானோம்,
ஆவியானவரில் ஜீவனால்,
ஆவிக்கு மனதைத் திருப்புவோம்,
அவர் செல்வங்கள் அனுபவிப்போம்.