மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பாடம் நான்கு – ஆவியைப் பயிற்சிசெய்தல்
2 தீமோ. 1:6-7—இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
நம் மனித ஆவியைப் பயிற்சிசெய்தல்
இன்று நேர்மறையானரீதியில் நாம் நம் ஆவியில் செய்கிற அனைத்துமே ஒரு விதமான பயிற்சியாக உள்ளது. பயிற்சிசெய் என்பதற்கான கிரேக்க வார்த்தை ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையின் அடிப்படை. ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கெடுப்- பதற்கு, ஒருவன் தன் பெளதிக ஆள்த்தத்துவம் முழுவதையும் பயிற்சி செய்ய தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தியாக வேண்டும். நாம் அதே விதத்தில் நம் ஆவியைப் பயிற்சி செய்தாக வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் முழுவதும், நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய நமக்கு உதவுவதில்லை. அதன் உத்தேசமெல்லாம் நம்மைச் சோர்வாக வைக்க வேண்டும் என்பதே. இந்த முழுச் சூழ்நிலையும் தொடர்ந்து பிரயாசப்பட நமக்கு உதவுவதில்லை. சோம்பலாக இருப்பதற்கே நமக்கு உதவுகிறது; நாம் பின்மாற்றம் அடைவதற்கே அது உதவுகிறது. அது ஒரு கீழ்நோக்கியப் போக்கு. கீழ்நோக்கிச் செல்வதற்கு மட்டுமே இந்தக் கீழ்நோக்கிய போக்கு நமக்கு உதவுகிறது. உண்மையில், இந்தப் போக்கு உங்களை அடித்துச் செல்கிறது. ஆனால் நீங்கள் மேல்நோக்கிச் செல்ல வேண்டுமென்றால், நீங்கள் பயிற்சிசெய்ய வேண்டும், போராட வேண்டும். (CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” p. 598)
கர்த்தர் நம் ஆவியுடனேகூட இருக்கிறார், நாம் அத்தகைய நம் ஆவியைப் பயிற்சிசெய்து
தெய்வத்தன்மைக்கேதுவாக பயிற்சிசெய்தல்
ஒன்று தீமோத்தேயு 4:7, “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு [பயிற்சிசெய்]” என்று கூறுகிறது. இரண்டு தீமோத்தேயு 1:7, “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” என்று நமக்குச் சொல்லுகிறது. அதன்பின் 2 தீமோத்தேயு 4:22, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக” என்று கூறு- கிறது. நாம் இந்த வசனங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்த்தால், தெய்வத்தன்மைக்கு ஏதுவான பயிற்சிசெய்தல் என்பது, கர்த்தர் இருக்கக் கூடிய இந்த ஆவியைப் பயிற்சிசெய்வதையே சார்ந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம். நீங்கள் தெய்வத்தன்மைக்கேதுவாகப் பயிற்சிசெய்வதாக இருந்தால், உங்கள் ஆவியை எவ்வாறு பயிற்சிசெய்வது என்பதை நீங்கள் அறிந்தாக வேண்டும், ஏனெனில் சாட்சாத்து தேவன் உங்கள் ஆவியில் இருக்கிறார். இந்த வசனங்கள், ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான வேத ஆதாரமாகும். (CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” p. 273).
ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான வழி
கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுதல்
நம் ஆவியைப் பயிற்சிசெய்வதின் இரகசியங்களுள் ஒன்று, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுதல். கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுதலை நம் ஆவியைப் பயிற்சிசெய்வதின் அதிசிறந்த இரகசிய- மாக நாம் கருதலாம்.…ஒருவேளை நீங்கள் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது உங்கள் மனதிலே இருக்கிறீர்கள்; ஆனால் ஜெபிப்பதில் அதிக பயிற்சிக்குப் பிறகு நீங்கள் படிப்படியாக ஆவியில் இருப்பீர்கள். இன்னும் அதிக பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் நீங்கள் உங்கள் ஆவியிலும் உங்கள் ஆவியோடும் ஜெபிக்கிற ஒரு நிலையை அடைவீர்கள். ஜெபம் என்பது தேவனிடம் விண்ணப்பிப்பதற்காக இருப்பது மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாக தேவனைத் தொடர்புகொள்வதற்காகவும் அவரோடு ஐக்கியப்படுவதற்காகவும் உள்ளது. ஆகவே, ஜெபிப்பதற்கான அதி சிறந்த வழி கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதே. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் என்று கூட வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது (1 தெச. 5:17). இடைவிடாமல் ஜெபிப்பதற்கான ஒரே வழி கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதே. (CWWL, 1984, vol. 1, “The Four Crucial Elements—Christ, the Spirit, Life, and the Church,” p. 200)
தேவனுடைய வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்தல்
ஜெபத்தோடும் ஜெபத்தாலும் வார்த்தையை வாசிப்பதே, அதாவது ஜெப-வாசிப்பு செய்வதே வார்த்தையை வாசிப்பதற்கான அதிசிறந்த வழி ஆகும். வெறுமனே வாசிப்பதற்கு நம் கண்களும், நம் புரிந்துகொள்ளுதலும், அதாவது, நம் புத்தியும் மட்டுமே தேவை. ஆனால் தேவனுடைய வார்த்- தையை நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களுக்குள் பெற்றுக்கொள்ளுவதற்கு நம் ஆவி தேவை, நம் ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான மேலோங்குகின்ற வழி ஜெபிப்பதே. நாம் ஜெபிக்கும் போதெல்லாம், நாம் புறத்தூண்டுதலின்றி நம் ஆவியைப் பயிற்சி- செய்கிறோம். அப்போது நாம் நம் கண்களால் வாசித்து, நம் புத்தியில் புரிந்துகொள்வது நம் ஜெபத்தின் மூலமாக நம் ஆவிக்குள் சென்றுவிடும். வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் ஜெப-வாசிப்பு தேவை. (CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” p. 375)
ஜெபிப்பதின் மூலம் ஆவியைப் பயிற்சிசெய்தல்
ஜெபிப்பது என்பது கோட்பாட்டிலே, ஆவியிலுள்ள ஏதோவொன்றாக இருப்பதால், ஜெபிப்பதின் மூலம் நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்யத் துவங்க வேண்டும் (எபே. 6:18). நாம் நம் கண்களைப் பயிற்சி செய்வதாக இருந்தால், நாம் பார்க்க வேண்டும். நாம் நம் கால்களைப் பயிற்சிசெய்வதாக இருந்தால், நாம் நடக்க வேண்டும். எவ்வளவாய் நாம் நடக்கிறோமோ, அவ்வளவாய் நாம் நம் கால்களைப் பயிற்சி செய்கிறோம். இதே விதத்தில், நாம் நம் ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான அதிசிறந்த வழி, ஜெபிக்கக் கற்பதே ஆகும். (CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” p. 275)
References: CWWL, 1979, vol. 1, “Basic Lessons on Life,” ch. 18; CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” ch. 10; CWWL, 1984, vol. 1, “The Four Crucial Elements—Christ, the Spirit, Life, and the Church,” ch. 7; CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” ch. 8
EXERCISE THE SPIRIT (PRAYER)
Prayer—Exercising the Spirit – 781
1. Exercise the spirit,
Pray in every way!
I have prayed too little,
Keen my spirit, nay.
Even when I prayed, my
Spirit seldom proved
Even just to follow
As Thy Spirit moved.
2. Now I’d pray in spirit
As Thy Spirit groans;
Pray by the anointing,
Not as memory owns.
Not the mind applying,
But with spirit pray,
Praising or beseeching,
Spirit-led alway.
3. Not just by myself my
Spirit exercise,
But with others praying
I would do likewise;
Praying in the spirit,
As the spirit wants,
For ’tis in the inmost
Spirits have response.
4. When we serve together,
We thru prayer would move,
Fellowship in spirit,
Not in word to prove.
Never pray together,
Shouting, crying much,
Yet the fellowship in
Spirit never touch.
5. Exercise the spirit
Here and everywhere,
Few or many present,
Caring not who’s there.
Not a place or person
Will influence me,
In all kinds of meetings
I’ll my spirit free.
6. Thus my spirit lifted
Gives the Lord His way;
Thus, my spirit strengthened,
I’ll be used each day.
In the spirit’s flowing
Living water see;
Thus the saints are mingled,
Built the church will be.