மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் மூன்று – ஆவிக்குரிய கூட்டாளிகள்

2 தீமோ. 2:22—பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைக் கூப்பிடுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

தம் நகர்வைச் செயல்படுத்த தேவன்
வாலிபர்களை அழைத்தல்

கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் வாலிபர்களாக இருப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு யுகத்திலும் தலைமுறையிலும் தேவன் தம் நகர்வின் நிறைவேற்றத்திற்காக வாலிபர்களிடம் வந்திருக்கிறார். தேவன் வாலிபர்களைப் பயன்படுத்த விரும்பு- கிறார் என்பதை வேதாகமமும் சபை வரலாறும் நமக்குக் காட்டுகின்றன. ஆதாம் அப்போதுதான் சிருஷ்டிக்கப்பட்டிருந்தான் என்பதால் தேவன் ஆதாமுடன் இருந்த காலத்தில் அவன் மிகவும் இளமையாக இருந்தான் என்று நாம் கூறலாம். ஜீவனின் கோட்டில் மனிதனுடைய இரண்டாம் தலைமுறையாகிய ஆபேல், கர்த்தருக்குப் பலிகளை ஏறெடுத்தபோது அநேகமாக அவனும் இளமையாகத்தான் இருந்திருப்பான் (ஆதி. 4:2, 4). ஏனோக்கு தேவனுடைய பிரசன்னத்திலே நடக்க ஆரம்பித்த போது அவன் இளமையாக இருந்தான். அவன் தேவனோடு நடக்க ஆரம்பித்தபோது அவன் அறுபத்து-ஐந்து வயதுள்ளவனாக இருந்தான் ஆனாலும் அவனது காலத்தில், ஒரு அறுபத்து-ஐந்து வயது மனிதன் இன்னும் இளைஞனே. அவன் முந்நூறு ஆண்டுகள் தேவனோடு நடந்தான், முந்நூற்று அறுபத்து-ஐந்தாவது வயதிலே அவனை தேவன் எடுத்துக்கொண்டார் (5:21-22).

தீமோத்தேயு ஒரு வாலிபனாக இருந்தபோதே கர்த்தருடைய சாட்சியைத் தொடர்ந்து எடுத்துசெல்வதற்கான ஓர் அப்போஸ்தலனாகிவிட்டான் என்று வேதம் நமக்குக் கூறுகிறது (1 தெச. 1:1; ஒப். 2:6) 2 தீமோத்தேயு 2:22இல் பவுல், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி” என்று எழுதினான். இது, அந்த நிருபத்தின் பெறுநர் இன்னும் ஒரு வாலிபனாகத்தான் இருந்தான் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நான் ஒரு பதின்மவயதினனாக இருந்த போது தேவனால் அழைக்கப்பட்டேன் என்பதற்காக நான் மகிழ்கிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நேர்த்தியான சபை வாழ்க்கையை மீட்டுத்திருப்பிய கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலின் ஆரம்ப நிலையில் இருந்த அனைவருமே தங்கள் இருபதுகளிலுள்ள வாலிபர்களாகதான் இருந்த- னர். வெகு சிலரே இருபத்து-ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். பெரும்பாலானோர் மேல்நிலைப் பள்ளியில் அல்லது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தனர்.

தீட்டுப்படாமல் இருக்கும்படி
நம் இருதயத்தைப் பொருத்துதல்

தானியேல் ஒரு வாலிபனாக சிறைபிடிக்கப்பட்டான். யூதாவின் பிள்ளைகளாக இருந்த அவனும் அவனது மூன்று நண்பர்களும், கற்பிக்கப்படும்படி இராஜாவின் அரண்மனைக்குள் வருவதற்குத் தெரிந்தெடுக்கப்பட்டனர். அங்கே இவர்கள், விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தாங்கள் சாப்பிடுவதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. அந்த இறைச்சி இனியும் வெறும் உணவாக இருக்கவில்லை; அது பேய்களுடன் தொடர்புடையதாக ஆகியிருந்தது. அதைச் சாப்பிடு- வது ஒரு சிறிய காரியம் அல்ல. தீட்டுப்படுத்தப்படாமல் இருக்கவும், அந்தத் தீட்டுப்படுத்துகின்ற மூலக்கூறில் எந்தப் பங்கும் பெறாமல் இருக்கவும் தானியேலும் அவனது மூன்று நண்பர்களும் தங்கள் இருதயத்தைப் பொருத்தினார்கள் (தானி. 1:8).

தானியேலும் அவனது மூன்று நண்பர்களும் இராஜாவின் போஜனத்தைப் புசியாமல் இருப்பது என்பது, விக்கிரக ஆராதனையின் போக்குக்கு விரோதமாக எதிர்ப்பதும், தேவனுடைய சாட்சியாக இருப்பதுமாகும். இது தேவனுடைய பார்வையிலும், பிசாசின் பார்வையிலும் கூட ஒரு மாபெரும் காரியமாக இருந்தது. இது ஓர் ஆவிக்குரிய யுத்தத்தில் சண்டையிடுவதாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியேல், தேவனால் பிடிக்கப்பட்ட ஒருவனாக இருந்தான். அவனது இளமைப் பருவம் முதற்கொண்டே அவன் தேவனால் அழைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டு, முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டான். இறுதியில், சிறையிருப்பிலிருந்து திரும்பிவருதலைக் கொண்டுவந்தது அவனே. பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் பெர்சிய சாம்ராஜ்ஜியமாக ஆகிவிட்ட பிறகு தரியு, கோரேஸ் ஆகியோரின் ஆளுகையின்போது தானியேல் இன்னும் உயிரோடு இருந்தான் (9:1-2; 1:21). சிறையிருப்பு எழுபது ஆண்டுகளுக்குப் பின் முற்றுப்பெறும் என்று எரேமியா மூலமாகக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை அவன் வாசித்தபோது, அவன் தேவனுடைய மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தான் (தானி. 9:1-19). கோரேஸ் ராஜாவின் ஆட்சியின் முதலாம் வருஷத்தில் அவனது ஆணை கொடுக்கப்பட்டது முதற்கொண்டு ஆரம்பித்த சிறையிருப்பிலிருந்து இஸ்ரயேல் புத்திரர்களின் திரும்பிவருதலின் நிறைவேற்றத்தை அவனது ஜெபம் ஏற்படுத்தியது (எஸ்றா 1:1-3).

கூட்டாளிகளுக்கான தேவை

விலகியோடுகின்ற மற்றும் ஆசையாய்ப் பின்தொடர்கின்ற இத்தகைய ஒரு வாழ்க்கை நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். எனினும் விலகியோடி ஆசையாய்ப் பின்தொடர நீங்கள் பெருமுயற்சி செய்யும்போது, உங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள். பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, கிறிஸ்துவை ஆசையாய்ப் பின்தொடர்வதற்கான வழி 2 தீமோத்- தேயு 2:22இன் கடைசிப் பகுதியில் உள்ளது. இந்த வசனம், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, ஒரு தூய்மையான இருதயத்திலிருந்து கர்த்தரைக் கூப்பிடுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் ஆசையாய்ப் பின்தொடர்” என்று கூறுகிறது (கிரே.). “தூய்மையான இருதயத்திலிருந்து கர்த்தரைக் கூப்பிடுகிறவர்கள்” உங்களுக்குத் தேவை. உங்களில் நீங்கள் போதுமானவர்கள் அல்ல. “கூப்பிடுகிறவர்களுடனே” இருப்பதுதான் இங்குள்ள திறவுகோல். ஒரு வாலிபனாக நீங்கள் மிகவும் பலமானவனாக இருக்கக் கூடும், ஆனாலும் உங்களது பெலன் என்பது ஒன்றுமில்லை. உங்களை விட எதிரியாகிய சாத்தான் பலமானவன், ஆனால் தேவனுடைய இறையாண்மையான வழங்கீட்டின்கீழ் உங்களுக்கு அந்தக் “கூப்பிடுகிறவர்கள்” இருக்கின்றனர். நீங்கள் “ஒரு தூய்மையான இருதயத்திலிருந்து கர்த்தரைக் கூப்பிடுகிறவர்களுடனே” ஆசையாய்ப் பின்தொடர்ந்- தாக வேண்டும்.

கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்வதில் நிஜமான கூட்டாளிகளை நாடித்தேடுதல்

வாலிபர்கள், தங்களோடு சிலரைக் கூட்டாளி- களாகத் தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் செய்தே- யாக வேண்டும். தானியேலுக்கு அவனது மூன்று நண்பர்கள் இருந்தனர். கர்த்தராகிய இயேசுவின்கீழ், புதிய ஏற்பாட்டில் இருந்த சீஷர்கள் ஒருவரும் தனிநபர்களாக இருக்கவில்லை. அவர்கள் இரண்டிரண்டு பேராக அனுப்பப்பட்டனர்; அவர்கள் எல்லாருக்கும் கூட்டாளிகள் இருந்தனர். பேதுருவும் அந்திரேயாவும், யாக்கோபும் யோவானும் சுவிசேஷங்களில் இரண்டிரண்டு பேராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் (மத். 4:18, 21).

வாலிபர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு கூட்டாளி- யாவது தேவை. கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்வதில் உங்களுக்கு ஒரு நிஜமான கூட்டாளி இருக்கிறாரா என்பதை நீங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பரிசீலித்தாக வேண்டும். காலேப் தன் கூட்டாளியாக இருந்தான் என்று யோசுவா கூறியிருக்கலாம், யோசுவா தன் கூட்டாளியாக இருந்தான் என்று காலேப் கூறியிருக்கலாம். எனினும் மூன்று அல்லது நான்கு கூட்டாளிகளைக் கொண்டிருப்பது இன்னும் சிறந்தது. இந்த ஆபத்துகள்நிறைந்த நாட்களின் காரணமாக, நமக்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் கூட்டாளிகள் தேவை. ஒவ்வொரு திசையிலிருந்தும் நமக்கு ஆதரவு அளிக்க நமக்கு நான்கு கூட்டாளிகள் இருந்தால் எந்த விதமான புயல் வந்தாலும் சரி, நாம் விழுந்துபோக மாட்டோம். ஒருவன் தானாகவே நின்றால் அவன், பெரும்பாலும், எதிரியால் கைப்பற்றப்பட்டுவிடுவான். மேல் நிலைப் பள்ளி முதலாண்டு படிக்கும் நான்கு அல்லது ஐந்து வாலிபர்கள் கூட்டாளிகளாகக் கூடிவருவது அதிசிறந்தது. இளம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக இருப்பார்களாக, இளம் சகோதரிகள் ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக இருப்பார்களாக.

நாம் நாமாகவே நிற்பதற்கு மிகவும் பெலவீனமாக இருக்கிறோம் என்பதால் மட்டுமல்ல, நாம் அனைவரும் மிகவும் இயற்கையானவர்களாக இருக்கிறோம் என்பதாலும் நமக்குக் கூட்டாளிகள் தேவை. நம் இயற்கையான பிறவிக்குணத்தின்படி, கூட்டாளிகளைக் கொண்டிருப்பது என்பது நம்மைப் பொறுத்தவரை மிகவும் கடினம். நம் தனித்துவம் நமக்கு ஓர் இன்பமாக உள்ளது. நாம் நமது தனித்துவத்தை மிகவும் அதிகமாக அனுபவித்துமகிழ்கிறோம். ஒரு சகோதரனோ சகோதரியோ நம்மைப் போன்று இல்லை என்பதால் நாம் அவர்களுக்காக அக்கறைப்படாமல் இருக்கக்கூடும். மற்றவர்கள் நம்மைப் போன்று இருக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம். மக்கள் நம்மைப் போன்று இருக்க வேண்டும் என்று விரும்புவது பேய்த்தனமானது. நாம் கர்த்தரை நேசித்தால், அவர்கள் எதைப் போன்றவர்கள் என்பதற்கெல்லாம் அக்கறைப்படாமல், நாம் எந்த வாலிப சகோதரனிடமும் அல்லது சகோதரியிடமும் கூட்டாளியாக முடிய வேண்டும். அவர்கள் மெதுவானவர்களாக அல்லது துரிதமானவர்களாக, மந்தமானவர்களாக அல்லது சாமர்த்தியசாலிகளாக, உங்களைப் போன்றவர்களாக அல்லது உங்களிலிருந்து நூறு சதவீதம் வித்தியாசமானவர்களாக இருக்கக்கூடும். நாம் எல்லா வித்தியாசங்களையும் மறந்துவிட வேண்டும். நமக்குக் கூட்டாளிகள் இருந்தாக வேண்டும். வாலிபர்கள் இவ்விதமாக குழுக்களாக ஆக்கப்படுவார்கள் எனில் சாத்தான் அவமானப்படுத்தப்படுவான். இது ஒரு மாபெரும் காரியம்.
ஏனோதானோவென்று கூட்டாளிகளைக் கொண்- டிருக்காதீர்கள். உங்களுக்கு ஒரு சகோதரனைப் பிடிக்கும் என்பதால் அவனை ஒரு கூட்டாளியாக ஏற்றுக்கொள்ளவும், உங்களுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்பதால் நாளைக்கு அவனை நிராகரிக்கவும் செய்யாதீர்கள். அவன் ஒரு சகோதரனாக இருந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இது உங்களைக் கீழ்ப்படுத்தி, உடைத்துவிடும். நீங்கள் உடைக்கப்பட வேண்டும். உங்களை யார் உடைப்பார்? மனைவிகள் நல்ல “உடைப்பவர்களாக” இருக்கின்றனர், ஆனாலும் மனைவிகள் கணவர்களை முழுவதுமாக உடைத்துவிடுவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கில்லை. எந்தச் சகோதர சகோதரிகளோடு உங்களை நீங்களே குழுவாக ஆக்கிக்கொள்கிறீர்களோ அவர்கள்தான் நல்ல “உடைப்பவர்கள்.”

பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு
விலகியோடுதலும், கூட்டாளிகளுடன்
கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்தலும்

நான்கு அல்லது ஐந்து கூட்டாளிகளைப் பெற வாலிபர்கள் கர்த்தரை நோக்கிப் பார்த்தாக வேண்டும். உலகத்திலுள்ள மக்கள் கூட, ஒற்றுமையே பலம் என்று கூறுகின்றனர். நான் தனியாக அநேக விஷயங்களைச் செய்யத் துணிய மாட்டேன், ஆனால் எனக்கு நான்கு கூட்டாளிகள் இருக்கும்போது நான் எதையும் செய்யத் துணிவேன். இந்த ஐந்து கூட்டாளிகள் எப்போதும் ஒன்றுசேர்ந்து கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட வேண்டும் (2 தீமோ. 2:22). அவர்கள் ஐக்கிப்படவும், ஜெப-வாசிக்கவும், ஜெபிக்கவும், புதியவர்களைக் கவனித்துக் கொள்ளவும் எப்போதும் ஒன்றுசேர்ந்து கூடிவர வேண்டும். ஒரு சகோதரன் மேய்த்துப்பேணும் அவனுடைய புதியவர்கள் இன்னொரு சகோதரனின் புதியவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்விதத்தில் இந்த ஐந்து பரிசுத்தவான்களாலான ஒரு குழுவிற்கு, தங்களது பராமரிப்பின் கீழ் பதினைந்து புதியவர்கள் இருப்பார்கள். இந்தப் புதியவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ள பரிசுத்தவான்களுக்கான கோட்பாடாக இருந்தது என்னவெனில் இவர்கள் ஒன்றுசேர்த்து ஒரு குழுவாக ஆனார்கள் என்பதே. வாலிபர்கள் பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, சில கூட்டாளிகளுடன் கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர வேண்டும். (CWWL, 1975-1976, vol. 1, “Fellowship with the Young People,” pp. 3-4, 6-10)

Reference: CWWL, 1975-1976, vol. 1, “Fellowship with the Young People,” ch. 1

BLEST BE THE TIE THAT BINDS

The Church—Her Fellowship 860

1. Blest be the tie that binds
Our hearts in Christian love;
The fellowship our spirit finds
Is like to that above.

2. Before our Father’s throne,
We pour our ardent prayers;
Our fears, our hopes, our aims are one-
Our comforts and our cares.

3. We share our mutual woes;
Our mutual burdens bear;
And often for each other flows
The sympathizing tear.

4. When we asunder part,
It gives us inward pain;
But we shall still be joining in heart,
And hope to meet again.

5. From sorrow, toil, and pain,
And sin we shall be free;
And perfect love and oneness reign
Through all eternity.